புது வரவு :
Home » , , , » ரஜினிகாந்த் பிறந்தநாள்-பாரதியார் பிறந்தநாள்-ஒரு பார்வை

ரஜினிகாந்த் பிறந்தநாள்-பாரதியார் பிறந்தநாள்-ஒரு பார்வை

        ணக்கம் தோழர்களே.. இன்று இந்தத் தலைப்பின் கீழ் பதிவெழுத வேண்டிய கட்டாயம்.. ஆகவே எழுதியிருக்கிறேன்.. இன்று 12.12.12 என்ற தேதியில் அமைந்த நாள் அவ்வளவுதான்.இந்தத்தேதியும் எல்லாத் தேதிகளைப் போல அடுத்த நூற்றாண்டுதான் வரும்.நாள் மாதம் வருடம் மூன்றும் ஒரே எண்ணை கொண்டிருப்பதுதான் சிறப்பே தவிர உலக அளவில் இந்த நாளுக்கு தனிச் சிறப்பென்று ஒன்றுமில்லை.சரி அதை விடுங்கள்.தமிழகத்தில் இந்தத் தேதிக்கு எப்போதுமே தனிச்சிறப்பு. இந்தத்தேதியில்தான் தமிழகம் மாநிலம் உருவாக்கப்பட்டதா? அல்லது ஆங்கிலேயர் ஆதிக்கத்திலிருந்து தமிழகம் விடுபட்ட நாளா? என்று கேட்கிறீர்களா? என்னங்க ஒண்ணுமே தெரியாத பச்ச மண்ணாட்டம் இருக்கீங்க? போங்க.. போய் ஏதாவது ஒரு டிவியை போட்டுப் பாருங்க இன்னைக்கு என்ன நாளுன்னு உங்களுக்கு தெரிஞ்சிடும். ஆமாங்க இன்னைக்கு தமிழ் சினிமா நடிகர் ரஜினிகாந்தோட பிறந்தநாள் தான். அதனாலதான் எல்லாம் டிவிகளும் போட்டி போட்டுட்டு அவரோட சிறப்புக்கள எடுத்தியம்பிக்கிட்டிருக்குது.

             மற்ற எந்த சினிமா நடிகர் பிறந்த நாளையும் இப்படி தொலைக்காட்சிகளும் பத்திரிக்கைகளும் போட்டி போட்டுக்கொண்டு கொண்டாடியதா? சரித்திரமே இல்லை.அந்தளவுக்கு ரஜினிகாந்த் என்ன பண்ணினார்ன்னு கேட்குறீங்களா? எல்லா நடிகரைப் போலவும் சினிமாப் படம் தான் நடிச்சார்.. வேறொண்ணுமில்ல.அப்ப அது போதுங்கிறீங்களா? மற்ற நடிகர்களைக் காட்டிலும் ரஜினிகாந்த மக்கள காந்தம் மாதிரி ஈர்த்திருக்காரு அதனால்தான் எல்லாம் கொண்டாடுறாங்க.. இதுல தப்பு ஒண்ணும் இல்லையேன்னு நீங்க கேட்கலாம். அதையேதான் நானும் சொல்றேன்.. ரஜினிகாந்த பிறந்தநாளைக் கொண்டாடுவது தப்பில்லைதான்.தப்பென்று எங்கும் சொல்லவில்லை..

             ஆனால் நேற்று 11.12.12 தமிழ் பெருமையை உலகளவில் பறைசாற்றிக்கொண்டிருக்கும் தமிழின் மகாகவி பாரதியார் பிறந்தநாள். மிக விமரிசையாகக் கொண்டாடாவிட்டாலும் அந்த நாளையாவது அனைத்து பத்திரிக்கைகளும் தொலைக்காட்சிகளும் ஞாபகப் படுத்திருக்கலாம். மணிக்கணக்காக ரஜினியின் புகழைப் பாடும் தொலைக்காட்சிகள் நேற்று பாரதியாருக்கென ஒரு மணி நேரம் ஒதுக்கியிருக்கலாம்.அதைச் செய்யவில்லை.தொலைக்காட்சிகளையும் தப்பு சொல்லமுடியாது.பாரதியின் நிகழ்ச்சிகளை ஒளிபரப்பினால் எந்த நிறுவனமும் விளம்பரம் கொடுக்க முன் வராது.மக்கள் அதைப் பார்க்க முன் வரமாட்டார்கள்.தொலைக்காட்சியின் டி.ஆர்.பி குறைந்து போகும்.அதையும் தாண்டி பாரதிக்கென ஒரு மணிநேரம் ஒதுக்கினால் சொந்த காசைத்தான் தொலைக்காட்சிகளும் செலவு செய்ய வேண்டி வரும். என்ன செய்வது? நம் மக்களின் நாடி அறிந்தே தொலைக்காட்சிகள் நிகழச்சிகளை ஒளிபரப்புகின்றன. சரி விடுங்கள்.. என் மனதில் இருந்த ஆதங்கம் இது. இங்கே பகிர்ந்து கொண்டேன்.யாரையும் புண்படுத்தவோ விமர்சிக்கவோ இல்லை.நானும் ரஜினி ரசிகன் தான். எனக்கும் ரஜினியைப் பிடிக்கும் அதற்கு மேலாக பாரதியைப் பிடிக்கும். பாரதியின் முக்கியத்துவத்தைக் குறைத்துவிட்டு தனது பிறந்தநாளை தமிழகம் விமரிசையாகக் கொண்டாடுகிறது என்று நினைத்து ரஜினிகாந்த் அவர்களே வருத்தப்பட்டாலும் படுவார்.

                 இந்த நேரத்தில் என் நண்பரும் திரைப்பட பாடலாசிரியருமான கவிஞர் புண்ணியா எழுதிய கவிதை வரிகள் ஞாபகம் வருகின்றன்.

ஏ.. பாரதி
அமைதியாக கல்லறையில் 
உறங்கிக்கொண்டிருக்கிறாய்..
எழுந்து வந்து
நாட்டை மாற்றிவிட்டு போ..
இல்லையெனில்-உன்
பாட்டை மாற்றிவிட்டு போ..

பாரதியார் மற்றும் ரஜினிகாந்த் - வாழ்க்கைக்குறிப்பு

         இந்த மாதத்தில் பிறந்த முக்கிய இருவரின் வாழ்க்கைக் குறிப்பைப் பற்றி பார்ப்போம்..

பாரதியார்

       சுப்பிரமணிய பாரதி (திசம்பர் 11, 1882 - செப்டம்பர் 11, 1921). இவர் பாரதியார் என்றும், மகாகவி என்றும் அழைக்கப்படுகிறார். பாரதி, ஒரு கவிஞர், எழுத்தாளர், பத்திரிக்கையாசிரியர், விடுதலை வீரர், சமூக சீர்திருத்தவாதி என பல்வேறு பரிமாணங்கள் கொண்டவர். சுப்பிரமணியன் என்ற இயற்பெயர் கொண்டவர்.
 
      தமிழின் கவிதை மற்றும் உரைநடையில் தன்னிகரற்ற புலமை பெற்ற பேரறிவாளர். தம் எழுத்துக்களின் வாயிலாக மக்களின் மனதில் விடுதலை உணர்வை ஊட்டியவர். இந்திய வரலாற்றின் திருப்பங்கள் நிறைந்த காலகட்டத்தில் வாழ்ந்தவர். இவரின் சமகாலத்தைய மனிதர்கள் மகாத்மா காந்தி, பால கங்காதர திலகர், உ. வே. சாமிநாதையர், வ. உ. சிதம்பரம் பிள்ளை மற்றும் மகான் அரவிந்தர் ஆகியோர்.

      தமிழ், தமிழர் நலன், இந்திய விடுதலை, பெண் விடுதலை, சாதி மறுப்பு மற்றும் பல்வேறு சமயங்கள் குறித்து கவிதைகளும் கட்டுரைகளும் எழுதியுள்ளார். இவருடைய கவித்திறனை மெச்சி பாரதி என்ற பட்டம் எட்டப்ப நாயக்கர் மன்னரால் எட்டயபுரம் அரசசபையால் வழங்கப்பட்டது.

பாரதியின் முக்கிய நூல்கள்:

குயில் பாட்டு
கண்ணன் பாட்டு  
பாஞ்சாலி சபதம்
புதிய ஆத்திச்சூடி   
பாரதி அறுபத்தாறு
ஞானப் பாடல்கள்
தோத்திரப் பாடல்கள்
விடுதலைப் பாடல்கள்
சந்திரிகையின் கதை

இளைய தலைமுறையை உற்சாகப்படுத்த பாரதி சொன்னவை

"தேடிச் சோறுநிதந் தின்று
  பல சின்னஞ் சிறுகதைகள் பேசி
  மனம் வாடித் துன்பமிக உழன்று
  பிறர் வாடப் பல செயல்கள் செய்து
  நரை கூடிப் கிழப்பருவம் எய்தி
  கொடுங் கூற்றுக் கிரையெனப்பின் மாயும்
  பல வேடிக்கை மனிதரைப் போலே
  நான் வீழ்வே னென்று நினைத்தாயோ?’’

ரஜினிகாந்த்

      ரஜினிகாந்த், டிசம்பர் 12 1950 அன்று இந்தியாவின் கர்நாடகத்தில் ராமோசி ராவ் காயக்வாடுக்கும் ரமாபாய்க்கும் நான்காவது குழந்தையாக பிறந்தார். அவருக்கு ஐந்து வயதான போது தன் தாயை இழந்தார். பெங்களூரில் உள்ள ஆசாரிய பாடசாலை, மற்றும் விவேகானந்த பாலக சங்கம் ஆகியவற்றில் கல்வி கற்றார்.படித்து முடித்தவுடன் பெங்களூரில் பேருந்து நடத்துனராக பணியாற்றினார். இந்த காலகட்டத்தில் பல மேடை நாடகங்களில் பங்கு கொண்ட ரசினிகாந்தின் மனதில் நடிக்கும் ஆவல் வளர்ந்தது.ரஜினிகாந்தின் திரைப்படங்களுக்கு தமிழகத்தில் மாபெரும் வரவேற்பு கிடைக்கிறது. அவருடைய திரைப்படங்கள் தயாரிப்பாளர்களுக்கும், வெளியீட்டாளர்களுக்கும் நல்ல லாபத்தை ஈட்டிக் கொடுக்கிறது. ரசினிகாந்துக்கு தமிழகத்தில் பல்லாயிரக்கணக்கான ரசிகர் மன்றங்கள் உள்ளன. இது தவிர அவருக்கு ஜப்பானிலும் பல ரசிகர்கள் உள்ளனர்.

ரஜினிகாந்த் நடித்த முக்கிய படங்கள்:

தளபதி               
அண்ணாமலை         
எஜமான்              
பாட்சா          
முத்து,
அருணாசலம்    
படையப்பா    
சந்திரமுகி    
சிவாஜி   
எந்திரன்

இளைஞர்களை உற்சாகப்படுத்த ரஜினிகாந்த் சொன்னவை

'ஒரு தடவை சொன்னா நூறு தடவை சொன்ன மாதிரி'

'கூட்டி கழிச்சுப் பாரு கணக்கு சரியா வரும்'

'என் வழி தனி வழி சீண்டாதே'

               
Download As PDF
Share this article :
புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

3 comments:

 1. அன்றைய கவிஞர் இன்றைய தலைவர் அருமை பேஷ் பேஷ்

  ReplyDelete
 2. மகாகவியை ஊடகங்கள் மறந்தது மகாதவறு...
  இந்தியாவில் மட்டுமல்ல இலங்கையிலும் மறந்துவிட்டார்கள்

  ReplyDelete
 3. குறிப்பிட்ட காலத்திற்குப்பின் ரஜினியை மறந்து போக வாய்ப்பு இருக்கிறது.மகாகவி என்றும் நிலையாய் நிற்பவன்.
  மகாகவி பாரதி –நிலையாய் நிற்பவன்

  ReplyDelete

கருத்துரைப் பெட்டியில் இடும் கருத்துகளுக்கு கருதிட்டவரே பொறுப்பாவர்..

Search This Blog

Email Subscribers

புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

Followers

Popular Posts

Google+

Tips Tricks And Tutorials

TNPSC - முக்கிய வினா-விடைகள்

எழுதிய மாத நாவல்கள் சில

 
Support :
Written by Madhumathi Published by www.madhumathi.com