புது வரவு :
Home » , , , , » சூப்பர் சிங்கரில் ரஜினி சுற்றுக்கு பதிலாக பாரதியார் சுற்றா?

சூப்பர் சிங்கரில் ரஜினி சுற்றுக்கு பதிலாக பாரதியார் சுற்றா?

          சூப்பர் சிங்கரில் ரஜினிகாந்த் சுற்றுக்கு பதிலாக பாரதியார் சுற்றா! சார் என்ன சொல்றீங்கன்னு நீங்க அதிர்ச்சி அடையறது தெரியுது. டிசம்பர் மாதம் ஆரம்பத்திலேயே ரஜினிகாந்தின் பிறந்தநாளைக் கொண்டாட தொலைக்காட்சிகளும் பத்திரிக்கைகளும் தயாராகிவிட்டன. சில தொலைக்காட்சிகளில் ரஜினிகாந்த் குறித்த நிகழ்ச்சிகளுக்கும் திட்டமிட்டு அரங்கேறி வருகிறது. ரஜினிகாந்திற்கு பிறந்தநாள் வாழ்த்துக்களைச் சொல்லி தொலைக்காட்சிகள் பூரித்துப்போய் இருக்கின்றன. நிகழ்ச்சி தொகுப்பாளர்கள் கூட ரஜினிகாந்த பற்றிய நிகழ்வுகளை புத்தகம் வாங்கி மனப்பாடம் செய்து நிகழ்ச்சி தொகுப்பின் போது அதைச் சொல்லி பெருமிதம் அடைந்து வருகின்றனர்.

            ஆனால் நேற்று மகாகவி பாரதியின் பிறந்தநாளை தொலைக்காட்சிகளும் பத்திரிக்கைகளும் எப்படி கொண்டாடின என்பதை நாம் அறிவோம்.

சூப்பர் சிங்கர்:

                 தமிழகத்தின் பிரபலமான தொலைக்காட்சி விஜய் தொலைக்காட்சி. அதில் சூப்பர் சிங்கர் என்ற இசை நிகழ்ச்சி உலக அளவில் வாழும் தமிழர்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற நிகழ்ச்சி. அந்நிகழ்ச்சியைப் பற்றி பலபேர் பலவிதமாக விமர்சனம் செய்தாலும், நல்ல திறமை மிக்க பல இளம் பாடகர்களை அடையாளம் காட்டியிருக்கிறது என்பதை யாராலும் மறுக்க முடியாது. அதில் பங்கேற்று பாடும் குழந்தைகள் பின்னணி பாடகர்களுக்கு சவால் விடும் விதத்தில் பாடி வருகிறார்கள்.

                    அந்த வகையில் இளைஞர்களுக்காக சூப்பர் சிங்கர் சீனியர் எனவும் குழந்தைகளுக்காக சூப்பர் சிங்கர் ஜூனியர் எனவும் இரண்டு வகையாக நிகழ்ச்சிகள் நடந்தன. ஒரு நிகழ்ச்சி ஒரு வருடத்தைக் கடந்தபின்பே  முடியும்.அந்தளவிற்கு விளம்பரதாரர்களால் வருமானம் கொழிக்கும் நிகழ்ச்சி இது. நிகழ்ச்சியை ஒரு வருடம் கொண்டு செல்வதற்காகவே அந்த சுற்று இந்த சுற்று என்று ஏராளமான சுற்றுகள் நடத்தப்பட்டு வருகின்றன.உதாரணத்திற்குச் சொல்ல வேண்டுமானால் ஏதாவது ஒரு பிரபல நடிகர் நடித்த படம் வெளியீடு என்றால் கூட அந்த நடிகரை அரங்கத்திற்கு அழைத்து வந்து அந்தப் படத்தின் பாடல்களைப் போட்டியாளர்களைப் பாட வைப்பார்கள்.. இந்த நிகழ்ச்சிக்கு பிரபல பாடகர்கள் நடுவர்களாக இருக்கிறார்கள்.
             இப்போது சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி முடிந்து விட்டது. விரைவில் சீனியர்களுக்கான நிகழ்ச்சி தொடங்கப்படவுள்ளது. அதுவரைக்கும் வேறு நிகழ்ச்சியை அந்த நேரத்தில் ஒளிபரப்பலாம்.ஆனால் இந்த நிகழ்ச்சிக்கு வரும் விளம்பர வருமானம் வேறெந்த நிகழ்ச்சிக்கும் வராது என்பதால் ஏற்கனவே போட்டிகளில் பங்கேற்றவர்களைக் கொண்டு தற்போது ஒரு நிகழ்ச்சி நடந்து வருகிறது.அதிலும் பாருங்கள் பல வகையான சுற்றுகள்.. அதுவும் இந்த ரெண்டு வாரமாக நடிகர் ரஜினிகாந்தின் பிறந்த நாளை முன்னிட்டு ரஅதைக் கொண்டாடி மகிழும் வண்ணம் ரஜினிகாந்த் ரவுண்டு ஓடிக்கொண்டு இருக்கிறது. ..சரி அதுதான் எல்லோருக்கும் தெரியுமே இப்ப என்ன சொல்ல வர்றீங்கன்னு கேட்கிறீங்க.. சொல்றேன்..
                   இசைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி இசைக் கலைஞர்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்கிறது என்பதில் ஐயமில்லை. சூப்பர் சிங்கரில் நடந்த கர்நாடக சங்கீத பாடல் சுற்றுக்கு வெளிநாட்டில் வாழ்ந்து வரும் பாரதியாரின் மகனை நடுவராக வரவழைத்து மரியாதை செலுத்தியது குறிப்பிடத்தக்கது.

                   என்னென்ன சுற்றுக்களை வைக்கலாம் என்று யோசித்து சில சம்பந்தமில்லாத சுற்றுக்களை வைக்கும் இந்நிகழ்ச்சிக்கு பெரிய இசைஞானம் கொண்டு எட்டயபுர மன்னரால் பாரதி என்று பட்டம் சூட்டப்பட்ட மகாகவியின் பிறந்தநாள் ஏனோ மறந்து போய்விட்டது. ஒரு இசை நிகழ்ச்சி இந்த இசைக்கவிஞனுக்காக ஒரு சுற்று கொண்டு வந்து பாரதியின் திரைப்பாடல்களைப் பாட வைத்து வெளிநாட்டில் வாழ்ந்துவரும் பாரதியின் வாரிசை நடுவராக அமர்த்தி பாரதிக்கு மரியாதை செலுத்தியிருக்கலாமே ஏனோ தெரியவில்லை அப்படியேதும் செய்யவில்லை.பாரதியின் எத்தனைப் பாடல்கள் இசையாகவே கிடைக்கிறது.அவரின் எத்தனைப் பாடல்கள் திரைப்படத்திலே இடம் பெற்றிருக்கிறது.அவற்றையெல்லாம் தொகுத்து போட்டியாளர்களைப் பாட வைத்திருக்கலாம்.

      ரஜினிகாந்த் சுற்றை வெகு விமரிசையாக நடத்தும் சூப்பர் சிங்கர் பாரதியார் சுற்று என்று ஒன்றை நேற்று ஒரு நாளாவது அறிவித்து அவரது பாடல்களைப் பாட வைத்திருக்கலாம்.அப்படி செய்யாதது சின்ன வருத்தமே.வரும் காலங்களில் அவ்வாறு செய்யும் என நம்புவோம்..

 பாரதியின் திரைப்பாடல்கள் சில..இத்தோடு என் மகள் பாரதியார் வேடம் போட்ட காணொளி


               
Download As PDF
Share this article :
புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

1 comment:

  1. :( வருத்தமான ஒன்று தான். காசு கிடைத்தால் தான் பாரதியும் இங்கு மேடை ஏறுவாரா?

    ReplyDelete

கருத்துரைப் பெட்டியில் இடும் கருத்துகளுக்கு கருதிட்டவரே பொறுப்பாவர்..

Search This Blog

Email Subscribers

புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

Followers

Popular Posts

Google+

Tips Tricks And Tutorials

TNPSC - முக்கிய வினா-விடைகள்

எழுதிய மாத நாவல்கள் சில

 
Support :
Written by Madhumathi Published by www.madhumathi.com