வணக்கம் தோழர்களே.. கடந்த ஆகஸ்டு மாதம் சென்னையில் நடந்த பதிவர் சந்திப்பின்போது மூத்த பதிவர்களுக்கு பாராட்டு விழா காண திட்டமிட்டு அதன்படி சிறப்பாக நடத்தி முடித்திருந்தோம்.அதை நாளை வரும் பதிவர்கள் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக படம் பிடித்திருந்தோம்.அந்தக் காணொளி வெளியிடப்பட்டது. மூத்த பதிவர்களுக்கு நடந்த பாராட்டு விழா காணொளி தொகுப்பை இங்கே வெளியிட்டிருக்கிறேன்.
1.புலவர் கவிதைகள் என்ற வலைத்தளத்தில் எழுதி வரும் புலவர் இராமாநுசம் அவர்களுக்கு கரைசேரா அலை வலைத்தள பதிவர் அரசன் பொன்னாடை அணிவிக்க பட்டுக்கோட்டை பிரபாகர் நினைவுப்பரிசை வழங்குகிறார்.
2.நான்பேச நினைப்பதெல்லாம் என்ற வலைத்தளத்தில் எழுதி வரும் சென்னைப்பித்தன்
அவர்களுக்கு பதிவர் பிலாசபி பிரபாகரன் பொன்னாடை அணிவிக்க
பட்டுக்கோட்டை பிரபாகர் நினைவுப்பரிசை வழங்குகிறார்.
3. வலைச்சரம் என்ற வலைத்தளத்தை நடத்தி வரும் சீனா
அவர்களுக்கு பெண் எனும் புதுமை வலைத்தள பதிவர் கோவை சரளா பொன்னாடை அணிவிக்க
பட்டுக்கோட்டை பிரபாகர் நினைவுப்பரிசை வழங்குகிறார்.
4.நினைத்துப் பார்க்கிறேன் என்ற வலைத்தளத்தில் எழுதி வரும் நடனசபாபதி
அவர்களுக்கு திடங்கொண்டு போராடு வலைத்தள பதிவர் சீனு பொன்னாடை அணிவிக்க
பட்டுக்கோட்டை பிரபாகர் நினைவுப்பரிசை வழங்குகிறார்.
5.குறையொன்றும் இல்லை என்ற வலைத்தளத்தில் எழுதி வரும் லட்சுமி அம்மாள்
அவர்களுக்கு சிரிப்பு போலீஸ் வலைத்தள பதிவர் ரமேஷ் பொன்னாடை அணிவிக்க
பட்டுக்கோட்டை பிரபாகர் நினைவுப்பரிசை வழங்குகிறார்.
6.தீதும் நன்றும் பிறர்தர வாரா என்ற வலைத்தளத்தில் எழுதி வரும் ரமணி
அவர்களுக்கு பதிவர் கோவி பொன்னாடை அணிவிக்க
பட்டுக்கோட்டை பிரபாகர் நினைவுப்பரிசை வழங்குகிறார்.
7.பாட்டி சொன்ன கதை என்ற வலைத்தளத்தில் எழுதி வரும் புலவர் ருக்மணி சேஷசாயி
அவர்களுக்கு பதிவர் சங்கவி பொன்னாடை அணிவிக்க
பட்டுக்கோட்டை பிரபாகர் நினைவுப்பரிசை வழங்குகிறார்.
8.தமிழ்மறை என்ற வலைத்தளத்தில் எழுதி வரும் சுப்புரத்தினம்
அவர்களுக்கு பதிவர்(பெயர் தெரியவில்லை) பொன்னாடை அணிவிக்க
பட்டுக்கோட்டை பிரபாகர் நினைவுப்பரிசை வழங்குகிறார்.
9.பதிவர் ரஞ்சனி நாராயணன்
அவர்களுக்கு பதிவர் ரோஷ்விக் பொன்னாடை அணிவிக்க
பட்டுக்கோட்டை பிரபாகர் நினைவுப்பரிசை வழங்குகிறார்.
10.வேர்கள் என்ற வலைத்தளத்தில் எழுதி வரும் வில்லவன்கோதை
அவர்களுக்கு குகன் பக்கங்கள் வலைத்தள பதிவர் குகன் பொன்னாடை அணிவிக்க
பட்டுக்கோட்டை பிரபாகர் நினைவுப்பரிசை வழங்குகிறார்.
11.நாச்சியார் என்ற வலைத்தளத்தில் எழுதி வரும் வல்லிசிம்ஹன்
அவர்களுக்கு மயிலிறகு வலைத்தள பதிவர் மரு.மயிலன் பொன்னாடை அணிவிக்க
பட்டுக்கோட்டை பிரபாகர் நினைவுப்பரிசை வழங்குகிறார்.
12.ரேகா ராகவன்
அவர்களுக்கு மின்னல் வரிகள் வலைத்தள பதிவர் பாலகணேஷ் பொன்னாடை அணிவிக்க
பட்டுக்கோட்டை பிரபாகர் நினைவுப்பரிசை வழங்குகிறார்.
13.கணக்காயன் என்ற வலைத்தளத்தில் எழுதி வரும் புலவர் இராமாநுசம் அவர்களுக்கு பதிவர் ஃபாரூக் பொன்னாடை அணிவிக்க பட்டுக்கோட்டை பிரபாகர் நினைவுப்பரிசை வழங்குகிறார்.
மதுமதி! தங்களின் அயராத பணியைக் ,( கடந்த பத்து தினங்களுக்குமேல்)கண்டவன் என்பதால், என உளங்கனிந்த வாழ்த்துக்களை முதற்கண் தங்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன், வாழ்க தங்கள் வலையுலகத் தொண்டு!
ReplyDeleteசந்தித்தோம் பிரிந்தோம் என இல்லாமல் அழகாக தொகுத்து வழங்கும் விதம் மிகுந்த மன மகிழ்வைத் தருகிறது சகோ. தங்களின் ஆர்வமும் உழைப்பும் பதிவுகளில் தெரிகிறது. வாழ்த்துக்கள்.
ReplyDeleteதிரும்பவும் ஆகஸ்டு திங்களுக்கு அழைத்து சென்று, வரலாற்று சிறப்புமிக்க பதிவர் விழாவில் நடைபெற்ற நிகழ்வுகளை ‘நினைத்துப்பார்க்க’ காணொளி மூலம் உதவியமைக்கு நன்றி. பாராட்டுக்கள்!
ReplyDeleteஅன்புள்ள திரு மதுமதி அவர்களே!
ReplyDeleteபதிவர் திருவிழாவின் காணொளி கண்டு மட்டற்ற மகிழ்ச்சி.
அன்று சந்தித்தவர்களை மறுபடி கண்டு மகிழ ஒரு வாய்ப்பு கொடுத்துள்ளீர்கள்.
நன்றி!
அன்று பாராட்டியதோடு நிற்காமல், காணொளியின் இணைப்பை மின்னஞ்சல் செய்த உங்களின் பெருந்தன்மை நெகிழ வைக்கிறது.
வளர்க உங்கள் தொண்டு!
நல்ல முயற்சி...
ReplyDeleteவாழ்த்துக்கள் சகோ