புது வரவு :
Home » , , , , , , , , , » வெற்றி நிச்சயம்-காணொளியில் டி.என்.பி.எஸ்.சி

வெற்றி நிச்சயம்-காணொளியில் டி.என்.பி.எஸ்.சி

    ணக்கம் தோழர்களே.. எப்படியிருக்கீங்க.. வலைத்தளத்தில் பதியும் எழுத்துக்கள் மூலமாக உங்களைச் சந்தித்து சில நாட்கள் ஆகிவிட்டன.நம் தளத்தை மின்னஞ்சல் வாயிலாக தொடர்ந்து வரும் பல தோழர்கள் மற்ற பதிவுகளைப் பதிவதோடு தேர்வுக்கான பதிவுகளையும் பதியலாமே என மின்னஞ்சல் வாயிலாக கேட்டு வருகின்றனர்.அது எனக்கு இன்னும் உற்சாகம் தருவதாக இருக்கிறது.அடுத்த தேர்வுக்கான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்று தெரிகிறது.இதுவரை நானும் சற்று ஓய்விலிருந்தேன்..நீங்களும் சற்று ஓய்வெடுத்திருப்பீர்கள்.இனி தொடர்ந்து தேர்வுக்கான பதிவுகளை பார்ப்போம்.மின்னஞ்சலை பதிவு செய்திருப்பவர்களுக்கு எப்போதும் போல புதிய பதிவுகள் தேடி வந்துவிடும்.புதிய வாசகர்களுக்கு பதிவுகள் தேவைப்பட்டால் கீழே இருக்கும் கறுப்பு நிறப்பெட்டியிலோ அல்லது வலது புறம் மேலே இருக்கும் பெட்டியிலோ தங்களின் மின்னஞ்சலை பதிவு செய்துகொள்ளுங்கள்..

    சில தோழர்கள் தொடர்ந்து இடைவெளியில்லாமல் படித்துக்கொண்டிருப்பீர்கள்.அதுவும் நல்ல விசயம்தான்.நான் அடிக்கடி சொல்வதைப் போல தேர்வுக்கு தயாராகும் அனைவரும் எல்லாவற்றையும் படிப்பார்கள்.ஆனால் மனதில் நிறுத்திக்கொள்கிறார்களா? என்று பார்த்தால் படிக்கும் தோழர்களில் 10 சதவீதம் பேரைச் சொல்லலாம்.இன்னும் சொல்லப்போனால் நேரத்தை ஒதுக்கி படிப்பது என்பது எளிதான விசயம்தான்.ஆனால் படித்ததை நினைவில் வைத்துக்கொள்வது என்பது சற்று கடினமான விசயம்தான்.ஆனால் படித்தவை எல்லாம் நினைவில் நின்றால் தேர்வில் எந்த வினா கேட்டாலும் விடையளித்து வெற்றி பெற்று விடலாம் என்பதை நினைவில் நிறுத்திக்கொள்ளுங்கள்.அப்படி செய்தவர்கள் தான் எழுதும் முதல் தேர்விலேயே வெற்றி பெற்று விடுகிறார்கள்..

          படித்ததெல்லாம் மறந்து போகாமல் இருக்க வேண்டுமென்றால் ஒரே ஒரு வழி மட்டுமே இருக்கிறது.அது என்னவென்றால் இதைத்தான் சென்ற மாதமே படித்துவிட்டோமே என்று விட்டுவிடாமல் திரும்பத் திரும்ப படிப்பதுதான்.உதாரணத்திற்கு வரலாற்று பாடத்தில் முக்கிய வருடங்களை ஞாபகம் வைத்துக்கொள்ள முடிவதில்லை என நிறைய பேர் சொல்கிறார்கள்..அதே பள்ளி கல்லூரிகளில் உங்களுடன் படித்த 100 மாணவர்களின் பெயரையாவது இன்னும் மறக்காமல் வைத்திருக்கிறீர்களே எப்படி? பெயரைச் சொல்லி சொல்லி திரும்பத் திரும்ப அவர்களை அழைத்ததாலும் அவர்களோடு பழகியதாலும் அவர்களது பெயர்கள் உங்களுக்குள் பதிந்துபோயிருக்கிறது.ஆகவே படித்ததை திரும்பத் திரும்ப சொல்லிப்பாருங்கள் வரலாற்று நாயகர்களோடு உரையாடுங்கள்.அந்த காலக்கட்டங்களில் வாழ்ந்து பாருங்கள்.. எதுவும் மறந்து போகாது.
 
 
  
    சரி தோழர்களே.. பொதுத்தமிழ் பகுதிகளில் நிறைய பேர் சந்தேகம் கேட்டு வருகின்றீர்கள்.. நானும் சொல்லிவருகிறேன். சிலர் புரிந்து கொள்கின்றனர்.சிலர் புரியவில்லை என்கின்றனர்..அதனால் ஒரு புதிய முயற்சியாக காணொளியில்(வீடியோ) டி.என்.பி.எஸ்.சி குறித்து பயிற்சி கொடுத்தால் என்ன என்றூ தோன்றியது.அதன் விளைவாக தற்போது வெற்றி நிச்சயம் என்ற தலைப்பில் ஒரு காணொளி தயாரித்து வெளியிட்டிருக்கிறேன்.அதைப் பாருங்கள்.பார்ப்பதோடு விட்டுவிடாமல் அது பயன் அளிக்கக்கூடியதாய் இருக்கிறதா என எனக்குச் சொல்லுங்கள்.அதிகபட்ச ஆதரவு இருந்தால் மட்டுமே தொடர்ந்து காணொளியின் வாயிலாக பயிற்சி கொடுக்க திட்டம்.பயன் அளிக்கக்கூடியதாக இல்லையென்றால் உங்களுக்கும் சரி எனக்கும் சரி நேர விரயம் அல்லவா? எனவே காணொளியைக் காணுங்கள்.இந்தக் காணொளி பயன்கொடுக்கக்கூடியதா.. இதை தொடர்ந்து வெளியிடலாமா வேண்டாமா என்பதை கூகுள் கணக்கு வைத்திருப்பவர்கள் கீழே உள்ள கருத்துப்பெட்டியின் மூலமாகவும் கூகுள் கணக்கு இல்லாதவர்கள் admin@madhumathi.com என்ற எனது மின்னஞ்சலுக்கும் உடனே தெரியப்படுத்துங்கள்..


வெற்றி நிச்சயம் முதல் காணொளி
இக்காணொளி குறித்து அவசியம் கருத்துகளை பகிர்ந்து கொள்ளுங்கள்..



நன்றி..

வெற்றி நிச்சயம்!
வெற்றி நமதே!


Download As PDF
Share this article :
புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

14 comments:

  1. கண்டிப்பாக தொடரவும்... நிச்சயம் பயனுள்ளவையாக அமையும்... மேலும் வகையில் தருவதையும் தொடர்ந்து தருவதும் நல்லது என்றே நினைக்கிறேன்..
    மிக்க நன்றி தோழரே...

    ReplyDelete
    Replies
    1. pdf வகையிலும் தொடர்ந்து அளிக்கவும்..

      Delete
  2. நன்றாக உள்ளது தொடருவும்

    ReplyDelete
  3. Very useful one of this ,
    good luck ,

    continue...!

    ReplyDelete
  4. அன்பின் மதுமதி - நிச்சயம் பயனளிக்கக் கூடிய காணொளி - சிரமம பாராது தொடர்க - நற்செயல் நற்பலனை விளைவிக்கும் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
  5. its very use full, thank u somuch

    ReplyDelete
  6. thank you sir awaiting for your nest class as soon as possible

    ReplyDelete
  7. மிகவும் பயனுள்ள புதிய வகை முயற்சி அண்ணா! என்னைப் போல் Couching Class சென்று படிக்க வாய்பில்லாதவர்கள் உங்கள் பதிவுகளால் மிகச் சிறப்பாக ஐடியாக்கள் கிடைக்கப் பெற்று விரைவில் நல்ல பதவியை அடைவோம் என்ற நம்பிக்கையைத் தூண்டுவனவாக உள்ளது இந்த காணொளி! (நான் தற்போது Group-4 Typist தேர்வில் 422-வது ரேங்க் பெற்று Kanyakumari District Revenue Department-ஐ தேர்வு செய்துள்ளேன்) மேலும் பல காணொளிகளை விரைவில் எதிர்பார்க்கிறோம்! நன்றி அண்ணா!

    ReplyDelete
  8. உங்கள் பதிவு மிகவும் பயனுல்லாத இருக்கிறது உங்கள் பதிவுகளை தொடருமாறு கேட்டுக்கொள்கிறேன்

    ReplyDelete
  9. உங்கள் பதிவு மிகவும் பயனுல்லாத இருக்கிறது உங்கள் பதிவுகளை தொடருமாறு கேட்டுக்கொள்கிறேன்

    ReplyDelete

கருத்துரைப் பெட்டியில் இடும் கருத்துகளுக்கு கருதிட்டவரே பொறுப்பாவர்..

Search This Blog

Email Subscribers

புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

Followers

Popular Posts

Google+

Tips Tricks And Tutorials

TNPSC - முக்கிய வினா-விடைகள்

எழுதிய மாத நாவல்கள் சில

 
Support :
Written by Madhumathi Published by www.madhumathi.com