வணக்கம் பதிவர்களே.. கடந்த ஆகஸ்டு மாதம் 26 ம் நாள் யாரும் எதிர்பார்க்காத வகையில் சென்னை மேற்கு மாம்பலத்தில் பிரமாண்டமான முறையில் மாபெரும் பதிவர் சந்திப்பு நடந்தேறியது.பிறர் எதிர்பார்த்ததை பொய்யாக்கி மிகச் சிறப்பாக வெற்றிகரமாக இச்சந்திப்பானது நடந்து முடிந்தது.மீண்டும் இது போல் ஒரு நிகழ்வு நடக்குமா எனத் தெரியவில்லை.பதிவர்களின் ஒற்றுமைதான் அதற்குப் பதிலைச் சொல்ல வேண்டும்..
நாளைய பதிவர்களும் இந்தச் சந்திப்பைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கோடு இந்த நிகழ்வை படம் பிடித்திருந்தோம்.ஆனால் அதை உடனே வெளியிடவில்லை.அன்றைய நாளே உலகில் வெவ்வேறு நாடுகளில் வசிக்கும் பதிவுலகத் தோழமைகள் காணும் வண்ணம் 'வலையகம்' திரட்டி நிகழ்வை நேரடி ஒளிபரப்பு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
சென்னை பதிவர் சந்திப்பு நடந்து முடிந்து 4 மாதங்கள் ஆகிவிட்டன.இச்சந்திப்பு குறித்து பலவேறு பதிவுகள் வெளியாயின. பதிவர் சந்திப்பு குறித்த புகைப்படங்களையோ படப்பதிவையோ இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை.இருப்பினும் சில பதிவர்கள் தங்கள் தளங்களில் புகைப்படங்களை பகிர்ந்தனர்.மொத்த புகைப்படங்கள் விரைவில் வெளியாகும்.
பதிவர் சந்திப்பில் கலந்து கொண்ட ஒவ்வொரு பதிவரும் மேடையேறி சுய அறிமுகம் செய்து கொள்ள வேண்டும் என்பதே இச்சந்திப்பின் முக்கிய நோக்கமாக இருந்தது.அதைப் போல நிகழ்வுக்கு வந்திருந்த பல பதிவர்கள் மேடையேறி தங்களை அறிமுகம் செய்து கொண்டார்கள்.
பதிவர் சந்திப்பு நிகழ்வு காணொளியைக் காண உலகம் முழுவதும் உள்ள பதிவர்கள் ஆர்வமாக இருப்பீர்கள்.காணொளி சில காரணங்கள் தயாராக தாமதம் ஆகிவிட்டது.இப்போது முழுமையாக தயாராகியிருக்கிறது.
பதிவர் சந்திப்பில் பங்கேற்க விருப்பமுள்ளவர்கள் தங்களின் பெயரை பதிவு செய்யச் சொல்லியிருந்தோம்.அந்த வகையில் பெயரைப் பதிவு செய்த தோழர்களை எளிதாக அடையாளம் காண முடிந்தது.எனவே அந்தப் பதிவர்கள் மேடையில் தோன்றும்போது அவரது பெயரும் ஊரும் வலைப்பெயரும் காணொளில் தோன்றும்.
ஒரு நாள் நிகழ்வை முழுவதும் ஒரே காணொளியாக பதிவேற்றுவது சிரமம் என்பதால் பல பிரிவுகளாக அதைப் பிரித்து யூடிபில் பதிவேற்றி வருகிறோம்.. பார்த்து மகிழுங்கள் தோழர்களே..
பல்வேறு ஊர்களிலிருந்து காலை 9 மணிக்கு அரங்கத்திற்குள் நுழைந்த பதிவர்கள் ஒவ்வொரு பதிவரையும் பார்த்து பேசி அகமகிழ்ந்து பூரித்த காட்சிகள் முதல் பாகத்தில் இடம் பெற்றிருக்கிறது.முதல் பகுதியாதலால் அந்தக் கானொளியை இங்கே பகிர்ந்திருக்கிறேன்.பார்த்து மகிழுங்கள் பதிவர்களே..
அடுத்தடுத்த பகுதிக்கான இணைப்புகளை கீழே தருகிறேன்
முதல் பாகம்-நெகிழ்ச்சியான தருணம்
பிரிவு-1
பிரிவு-2
(பதிவர்கள் சுயவிபரம்)
பிரிவு-3
(மூத்த பதிவர்கள் பாராட்டு)
நல்ல முயற்சிக்கு வாழ்த்துக்கள்.நான் இந்த அருமையான நிகழ்ச்சியில் பங்குபெற முடியவில்லையே .அத்தனை பதிவர்களுக்கும் எனது வாழ்த்துக்கள்
ReplyDeleteமகிழ்ச்சி.அடுத்த சந்திப்பில் கலந்து கொள்ளுங்கள்..
Deleteஅருமையான பகிர்வு நண்பரே...
ReplyDeleteவாழ்த்துக்கள் தங்களின் அன்பான பகிர்விற்கு....
மகிழ்ச்சி தோழரே..
Deleteபதிவர் சந்திப்பு குடிச்சிட்டு வராதீங்க, அங்க வரும் பெண் பதிவர்கள் கிட்ட லந்து பண்ணாதீங்க.......... இதையெல்லாம் சொல்லித்தான் தெரிஞ்சுக்கணும்கிற நிலையில் தான் பதிவர்கள் உள்ளார்களா?
ReplyDeleteபதிவர் சந்திப்பு முடியும் வரை கூட ஒண்ணா இருந்திட்டு, இப்போ ஒரு முன்னணி பதிவரை யூத்து பதிவர்கள் என சொல்லிக்கிட்டு திரியும் சிலர் ரவுன்டு கட்டி அடிக்கிறாங்க, இத்தனைக்கும் அவர் யாரிடமும் வம்புக்கு போவதில்லை, மதம், சினிமா அரசியல் என யாரையும் தாக்குவதில்லை, சக பதிவர்களைக் கூட நக்கல் செய்வதில்லை, மாறாக அவர்களை தன்னுடைய தளத்தில் அறிமுகப் படுத்துகிறார், எழுத அனுமதிக்கிறார், உங்கள மாதிரி இருக்கிறவங்க கேட்க மாட்டீங்களா சார்?
லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வந்திருக்கு வீடியோ...வாழ்த்துக்கள்
ReplyDeleteநல்லதொரு முயற்சி.வாழ்த்துகள்.வலைப்பதிவர்கள் ஒற்றுமையுடன் ஈண்டும் மிண்டும் இப்படிப்பட்ட சந்திப்புகள் நிகழ வேண்டும்.
ReplyDeleteரொம்ப நாளா எதிர்பார்த்த ஒரு இனிய தருணத்தின் மறு ஒளிபரப்பு. பகிர்வுக்கு நன்றி சகோ. எனக்கு ஒரு டிவிடி காப்பி வேணும்ன்னு கேட்டிருந்தென் மறக்காதீங்க.
ReplyDeleteமிக்க நன்றி... பார்க்க மிக ஆவலாக உள்ளேன்...
ReplyDeleteமிக மிக ஆவலுடன் எதிர்பார்த்த நிகழ்வின் காணொளி இல்ல விழாவினை கண்டு மகிழ்வதைப்போல ஆவலுடன் பார்த்துக்கொண்டிருக்கிறோம். என்றென்றும் மனதில் நிற்கும் அற்புதமான நிகழ்வு நன்றி சகோ.
ReplyDeleteநன்றி மதுமதி.....புதுசா வருகிற பதிவர்களுக்கும் பயன்படும்.....
ReplyDeleteநன்றி மதுமதி....
ReplyDeleteநெகிழ்ச்சியான தருணங்களை அருமையான பதிவாக்கியதற்கு பாராட்டுக்கள்..
ReplyDeleteரொம்ப ரொம்ப ரொம்ப நன்றி :)
ReplyDeleteவிழாவை காண முடியாதவர்கள் கானொளியில் காண ஒரு நல்ல வாய்ப்பு. கண்டவர்களும் மீண்டும் நினைத்து மகிழ உதவும். நன்றி !
ReplyDelete
ReplyDeleteமீண்டும் ஒரு முறை பார்க்க ஆவல் வருகிறது .. பகுதி பகுதியாக பிரித்து அளித்ததற்கு மிக்க நன்றி சார்...
மகிழ்ச்சியான பகிர்வு.
ReplyDeleteவாழ்த்துகள்.
தங்கள் கடின உழைப்பிற்கு நன்றிகளும், வாழ்த்துகளும்.
ReplyDeleteஐயா!தங்களது பதிவொன்றை இன்று வலைச்சரத்தில் அறிமுகம் செய்துள்ளேன். வாருங்கள்!http://blogintamil.blogspot.in/2012/12/blog-post_21.html நன்றி!
ReplyDeleteஅன்பின் மதுமதி - எந்த ஒரு பதிவர் சந்திப்பிலும் இல்லாத நிகழ்வுகளும் செயல்களூம் இப்பதிவர் சந்திப்பில் நடந்தேறியது. மக்கள் சந்தை நிறுவனர், புதிய தலைமுறையின் பிரதிநிதி ஆகீயோர் கலந்து கொண்டு பேசியது - பதிவர்களின் கவி அரங்கம் - மூதத பதிவர்களைப் பாராட்டி சிறப்பாக பொன்னாடையும், கேடயமும் அளித்தது - கலந்து கொண்ட ஒவ்வொரு பதிவரையும் சுய அறிமுகம் செய்ய வைத்தது - இத்த்னைக்கும் மேலாக அத்தனை நிகழ்வுகளையும் நேரடி ஒளிபரப்பு செய்தது - அத்த்னை நிக்ழ்வுகளையும் காணொளியாக்கி இணைய தளத்தில் வெளீயிட்டது - ஏறத்தாழ எண்பதுக்கும் மேற்பட்ட காணொளிகள். இத்தனை சிறப்புகள் நிறைந்த பதிவர் சந்திப்பினை சிறப்புடன் நடத்தியது நிர்வாகத்தினரின் கடும் உழைப்பினையும் முழு ஈடுபாட்டினையும் பறை சாற்றுகிறது.
ReplyDeleteகடும் மின் தடை, இன்வெர்ட்டர் தாக்குப் பிடிக்க இயலாமை, தொலைக்காட்சியா - கணினியா - மிக்ஸியா - கிரைண்டரா - ஏதேனும் ஒன்றுதான் ஒரே நேரத்தில் போட இயலும் - இதற்கு துணைவியாரிடம் வேண்டாத விவாதம் - மெயினில் இருந்து இன்வெர்ட்டரும் இன்வெர்ட்டரில் இருந்து மெயினும் மாறும் போதெல்லாம் மோடம் கோபித்துக் கொண்டு அணைந்துவிடுவதும் - அதன் காரணமாக கணினியில் செய்த வேலை பாதியில் அழிவதும் - ஒன்றும் சொல்வதற்கில்லை
இதுவரை 3 நாட்களீல் முதல் நாள் போட்ட பதிவில் 28 காணொளிகள் கண்டு மகிழ்ந்து - பதிவர்களின் பெயர், தளத்தின் பெயர், ஊர் ஆகியவர்ரின் பட்டியல் தயாரித்தேன். வலைச்சர ஆசிரியப் பொறுப்பிற்குத் தேர்ந்தெடுக்க உதவும். இன்னும் 53 காணொளிகள் காண வேண்டி உள்ளன். என்று முடியும் தெரியவில்லை.
அன்பின் மதுமதி - சென்னையில் பதிவர் சந்திப்பு இவ்வளவு பிரமாண்டமாக, சிறப்பாக நடைபெற உழைத்த அனைத்து நல்லுள்ளங்களுக்கும் நன்றி.
நல்வாழ்த்துகள்
நட்புடன் சீனா
அன்பின் மதுமதி - ஒரு வழியாக இங்குள்ள அனைத்துச் சுட்டிகளையும் சுட்டி, சென்று பார்த்து, கேட்டு மகிழ்ந்து, நிகழ்வுகளைச் சிறப்பாக அரங்கேற்றிய நண்பர்களைப் பாராட்டி மகிழ்கிறேன். பாகம் 50ம் 51ம் பாட்டி சொன்ன கதைகள் ருக்குமணி அவர்களைப் பற்றிய பாராட்டுரையாக இருக்கிறது. 51ம் பாகத்திற்கான சரியான சுட்டியினைத் தரவும். காண ஆவலாக உள்ளேன். நல்வாழ்த்துகள் மதுமதி - நட்புடன் சீனா
ReplyDeleteஅன்பின் மதுமதி - பாகம் 50 , 51 பற்றிய ஒரு மறுமொழி இட்டிருந்தேன். அது மட்டுறுத்தலுக்காகக் காத்திருக்கிறதென நினைக்கிறேன். வெளியிடுக. நல்வாழ்த்துகள் -நட்புடன் சீனா
ReplyDelete