முகநூல முனகல்
பிறர் சொல்வதை
நாம் கேட்போம்..
நாம் சொல்வதையும்
பிறர் கேட்பர்..
எழுத முயல்வோம்
இல்லையேல்
பிறர் எழுதியதை
வாசிக்க முயல்வோம்..
நம்மைப்பற்றி
நாமே சொன்னது போதும்..
நம்மைப்பற்றி
பிறர் சொல்ல வாழ்வோம்..
தனக்காகத்தான் வாழ்கிறோம்..
உறுதியாய் நம்பினாலும்
பிறருக்காகத்தான் வாழ்கிறோம்
என்பதையும் மறுப்பதற்கில்லை..
நினைத்தவுடன்
மீட்டெடுக்கும் நினைவுகளை
நினைத்தவுடன்
விட்டொழிக்க முடிவதில்லை..
யோசித்து பேசும்போது
பேசும் பேச்சில்
கொஞ்சமாய்
பொய் கலந்துவிடுகிறது..
காதலுக்கு வேண்டுமானாலும்
பொய் இனிப்பாக இருக்கலாம்
வாழ்க்கைக்கென்னவோ
பொய் கசப்புதான்..
முடிந்தவரை
மனிதனாக இருப்போம்..
விலங்கினத்துக்கு
உதராணமாகிவிடப்போகிறோம்..
முக நூல் முனகல் மிக மிக அருமை
ReplyDeleteதாங்கள் முனகல் எனச் சொன்னாலும்
எம் மனத்துள் மிக மிகச் சத்தமாகத் தான் விழுகிறது
மனம் கவர்ந்த பதிவு
தொடர வாழ்த்துக்கள்
அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள் மதுமதி. :-)
ReplyDeleteபோய் பேசியே பெருசை வல்ந்தவரில்லை நண்பரே
ReplyDeleteசிறப்பான ஆக்கம் .எண்ணியதெல்லாம் ஈடேற இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் உங்களுக்கும் உறவினர்கள் நண்பர்கள் அனைவருக்கும் உரித்தாகட்டும் சகோ !:...
ReplyDeleteகடைசி வரி அருமை! தங்களுக்கு எனது புத்தாண்டு வாழ்த்துக்கள்!
ReplyDelete//யோசித்து பேசும்போது
ReplyDeleteபேசும் பேச்சில்
கொஞ்சமாய்
பொய் கலந்துவிடுகிறது..//
உண்மை
அன்பின் மதுமதி - முகநூல் முனகல் அருமை - சிந்தனை நன்று - நினிய புத்தாண்டு நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
ReplyDelete
ReplyDeleteஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்!
கவிஞா் கி. பாரதிதாசன்
பிரான்சு
01.01.2013
நினைத்தவுடன்
ReplyDeleteமீட்டெடுக்கும் நினைவுகளை
நினைத்தவுடன்
விட்டொழிக்க முடிவதில்லை..
நல்லவரிகள். உண்மைதான். பகிர்வுக்கு நன்றிங்க.
// முடிந்தவரை
ReplyDeleteமனிதனாக இருப்போம்..
விலங்கினத்துக்கு
உதராணமாகிவிடப்போகிறோம்..//
கவிதை நல்ல அறி(ற)வுரை! அழகு!
good work keep it up...
ReplyDelete