குரூப்–II பதவிகளில் காலியாக உள்ள 630 பணி இடங்களை நிரப்புவதற்காக 2–வது கட்ட கவுன்சிலிங் 7–ந் தேதி நடைபெறுகிறது. இதுதொடர்பாக டி.என்.பி.எஸ்.சி. செயலாளர் மா.விஜயகுமார் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:–
2–வது கட்ட கவுன்சிலிங்
2009–2011–ல் அடங்கிய காலி இடங்களை நிரப்புவதற்கான குரூப்–2 தேர்வு கடந்த 30.7.2011 அன்று நடத்தப்பட்டது. அதில் வெற்றிபெற்றவர்களுக்கு 20.6.2012 முதல் 27.7.2012 வரை நேர்முகத்தேர்வு நடந்தது. நேர்காணல் அல்லாத பதவிகளுக்காக 3,171 பேர்களை தேர்வுசெய்யும் பொருட்டு 22.11.2012 முதல் 1.12.2012 முதல்கட்ட கவுன்சிலிங் கவுன்சிலிங் நடத்தப்பட்டது. அதில் 2,541 விண்ணப்பதாரர்கள் மட்டுமே வெவ்வேறு பதவிகளுக்கு பணி ஒதுக்கீடு செய்யப்பட்டனர்.
இந்த நிலையில், நிரப்பப்படாமல் காலியாக உள்ள 630 பதவிகளுக்கு விண்ணப்பதாரர்களை தேர்வு செய்யும் வகையில் 2–வது கட்ட கவுன்சிலிங் 7–ந் தேதி அன்று சென்னையில் உள்ள டி.என்.பி.எஸ்.சி. அலுவலகத்தில் நடைபெற இருக்கிறது. இதற்கு அனுமதிக்கப்பட்ட 623 பேரின் பதிவு எண் அடங்கிய பட்டியல் டி.என்.பி.எஸ்.சி. இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது.
இதுவே கடைசி வாய்ப்பு
கவுன்சிலிங் நடைபெறும் நேரம் உள்ளிட்ட விவரங்கள் அடங்கிய கவுன்சிலிங் அழைப்புக்கடிதத்தை இணையதளத்தில் இருந்து டவுன்லோடு செய்துகொள்ளுமாறு தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள். மேற்குறிப்பிட்ட தேதியில் கவுன்சிலிங்கிற்கு வரத்தவறும் பட்சத்தில் விண்ணப்பதாரர்களுக்கு அதன்பிறகு கவுன்சிலிங்கில் பங்கேற்க வாய்ப்பு அளிக்கப்பட மாட்டாது. இவ்வாறு விஜயகுமார் கூறியுள்ளார்.

டி.என்.பி.எஸ்.சி - வீடியோ பதிவுகளைக் காண இங்கே செல்லவும்..
எனக்குத் தெரிந்த சகோதரி ஒருவர் இந்தத் தேர்வில்
ReplyDeleteதெரிவு செய்யாப்பட்டிருக்கிறார்..
கவுன்சிலிங் முடித்து வந்துவிட்டார்.
நல்ல உபயோகமான தகவல் தோழரே...
நல்ல தகவலுக்கு நன்றிங்க.
ReplyDeleteவணக்கம் ஐயா,
ReplyDeleteநான் TNPSC GR-2 விற்கு படித்துக்கொண்டிருக்கிறேன். எனக்கு பொதுத்தமிழ் பதிவுகள் அனைத்தையும் மின்னஞ்சலில் அனுப்பி உதவி செய்யுங்கள்.
மிக்க நன்றி.