வணக்கம் தோழர்களே.. டி.என்.பி.எஸ்.சி. குரூப்–2 தேர்வு மூலம் புதியதாக தேர்வு செய்யப்பட்ட வருவாய் உதவியாளர்களுக்கு கோபி ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் பயிற்சி அளிக்கப்பட்டது. வருவாய் உதவியாளர்கள்
தமிழகம் முழுவதும் நகராட்சி கமிஷனர், இளநிலை வேலைவாய்ப்பு அதிகாரி, சார்ப்பதிவாளர், வருவாய் உதவியாளர்கள் உள்பட பல்வேறு துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்காக கடந்த 2011–ம் ஆண்டு டி.என்.பி.எஸ்.சி. மூலம் குரூப்–2 தேர்வு நடத்தப்பட்டது.
இந்த தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு டி.என்.பி.எஸ்.சி. அலுவலகத்தில் கவுன்சிலிங் நடத்தப்பட்டு, பணி நியமன உத்தரவு வழங்கப்பட்டது. அதைத்தொடர்ந்து கோபிசெட்டிபாளையம் கோட்டத்துக்கு உள்பட்ட கோபி, பவானி, சத்தியமங்கலம் ஆகிய தாலுகா அலுவலகங்களுக்கு வருவாய் உதவியாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
பயிற்சி முகாம்
அதன்படி கோபிசெட்டிபாளையம் தாலுகா அலுவலகத்துக்கு 5 பேரும், பவானி தாலுகா அலுவலகத்துக்கு 3 பேரும், சத்தியமங்கலம் தாலுகா அலுவலகத்துக்கு 5 பேரும், கோபிசெட்டிபாளையம் ஆர்.டி.ஓ. அலுவலகத்துக்கு 2 பேரும் என மொத்தம் 18 பேர் வருவாய் உதவியாளர்களாக நியமிக்கப்பட்டு உள்ளனர்.
புதியதாக நியமிக்கப்பட்டவர்கள், கடந்த மாதம் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணிகளில் சேர்ந்தனர். அவர்களுக்கு முதல் கட்டமாக கடந்த 7–ந் தேதி முதல் கோபிசெட்டிபாளையம் ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் அலுவலக நடைமுறைகள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
கோப்புகளை கையாளுவது எப்படி?
இந்த பயிற்சி முகாமில் வருவாய்த்துறை ஊழியர்களுக்கு அலுவலக நடைமுறைகள், கோப்புகளை கையாளுவது எப்படி? உயர் அதிகாரிகளுக்கு கடிதங்களை அனுப்புவது எப்படி? அவசர காலங்களில் கோப்புகளை தயாரிப்பது எப்படி? ஆகியவை குறித்து கோபி ஆர்.டி.ஓ. பழனிச்சாமி பயிற்சி அளித்தார்.இவ்வாறு தினத்தந்தி செய்தித்தாளில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
பயனுள்ள தகவல்...நன்றி கவிஞரே....
ReplyDeleteதோழா புதிய காலியிட அறிவிப்பு ஏதேனும் உண்டா ?
ReplyDeleteவிரைவில்..
ReplyDelete