புது வரவு :

விஸ்வரூபம் - ஒரு பார்வை

இன்றைய நாளில் மிக முக்கியமான செய்தியாக விஸ்வரூபம் திரைப்பட செய்தியே அனைத்து செய்தித்தாள்கள் மற்றும் தொலைக்காட்சி செய்திகள் பத்திரிக்கை இணையம் என அனைத்திலும் முன்னணி வகிக்கிறது.பிரம்மாண்ட பொருட்செலவில் கமலஹாசனால் இயக்கி தயாரிக்கப்பட்ட படமான விஸ்வரூபத்தில் இசுலாமியர்கள் தீவிரவாதிகளாக சித்தரிக்கப்பட்டிருக்கிறார்கள் எனவே இப்படம் வெளியாவதை தடுக்க வேண்டும் என்று  இஸ்லாமிய அமைப்பினர் போர்க்கொடி தூக்கியதால் சட்டப் பிரச்சனைகள் நேரும் என்று தமிழக அரசு தமிழகத்தில் இப்படம் வெளிவர தடை விதித்தது.அந்தத்தடையை நீக்கக் கோரி கமலஹாசனும் மனு கொடுத்துள்ளார்.ஆனால் குறிப்பிட்ட தேதியில் தமிழகம் தவிர மற்ற இடங்களில் படம் வெளியாகியிருக்கிறது.

படங்களை வெளியிட அனுமதி அளிப்பது தொடர்பான விஷயத்தில், தணிக்கைக்குழுவின் கருத்து மற்ற அனைத்தையும் கட்டுப்படுத்தும் என சுப்ரீம் கோர்ட்டு ஏற்கனவே பிரகாஷ் ஜா (இந்திப்பட டைரக்டர்) வழக்கில் தீர்ப்பு அளித்துள்ளது.


ஒரு படத்தை தடை செய்வது என்பது மாநில அரசின் அதிகார வரம்பில் வரவில்லை. குறிப்பாக தணிக்கைக்குழு அனுமதி அளித்த பிறகு, ஒரு படத்தை தடை செய்வதற்கு மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை.

அரசியல் சாசனச் சட்டத்தின் பிரிவு 246, ஏழாவது அட்டவணை, பட்டியல் ஒன்று, பதிவு 1, சினிமா படங்களை திரையிடுவதற்கு சான்றிதழ் அளிக்கும் அதிகாரத்தை மத்திய அரசுக்கு வழங்கியுள்ளது. எனவே ஒரு முறை மத்திய தணிக்கைக்குழு, படத்தை திரையிட அனுமதி அளித்த பிறகு, பிற அனைத்தையும் அது கட்டுப்படுத்தும்.

பிரகாஷ் ஜா வழக்கில், திரைப்பட காட்சி சட்டத்தின் அனைத்து வழிவகைகளையும் சுப்ரீம் கோர்ட்டு ஆராய்ந்தது. இந்த (தணிக்கைக்குழுவின்) அதிகாரத்தை, அரசியல் சாசனச்சட்டம் மாநில அரசுகளுக்கு வழங்கியுள்ள சட்டம்–ஒழுங்கு அதிகாரத்துக்கு எதிர் நிலையில் வைத்துள்ளது.

எனவே, தமிழக அரசு இதில் ஒரு முடிவு எடுக்கும் முன்பாக, பிரகாஷ் ஜா வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு ஏற்கனவே அளித்துள்ள தீர்ப்பை மிகக் கவனமாக ஆராய வேண்டும். ஏனெனில், ஏற்கனவே சுப்ரீம் கோர்ட்டு வழங்கியுள்ள தீர்ப்புக்கு எதிராக அது மோதுகிற வகையில் அமைந்துவிடக்கூடாது.தணிக்கைக்குழு அனுமதி அளித்த நிலையில், விஸ்வரூபம் படத்துக்கு விதித்த தடையை மறுபரிசீலனை செய்யுமாறு தமிழக அரசுக்கு  மத்திய தகவல், ஒலிபரப்புத்துறை மந்திரி மணிஷ் திவாரி டெல்லியில் பேட்டி அளித்து இருந்தார்.

கமல்ஹாசன் கலைத்துறையிலும் தனிப்பட்ட முறையிலும் மதச்சார்பின்மை கொள்கையை உயர்த்தி பிடித்து வருபவர். கடந்த காலத்தில் அவருடைய செயல்பாடுகள் இதற்கான சாட்சியாக அமைந்துள்ளது. உச்சநீதிமன்றம் கடந்த காலங்களில் திரைப்பட தணிக்கை துறை ஒரு படத்தை தணிக்கை செய்து வெளியிட்ட பிறகு அதை தடை செய்வது சரியல்ல என்று உறுதிபட தெரிவித்திருக்கின்றது.இந்தநிலையில் விஸ்வரூபம் திரைப்படத்தை திரையிட தமிழக அரசு தடை விதித்திருப்பது சட்ட பூர்வமாகவும் தார்மீக ரீதியிலும் நியாயமானதல்ல. எனவே விஸ்வரூபம் திரைப்படத்திற்கான தடையை உடனடியாக விலக்கி கொள்ள வேண்டுமென தமிழக அரசை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வலியுறுத்துவதாக   ஜி.ராமகிருஷ்ணன்  அறிக்கை வெளியிட்டார்.


என்னை வாழவைக்கும் தெய்வங்களான தமிழ் மக்களுக்கு என் வணக்கத்தை தெரிவித்து கொள்கிறேன். கடந்த சில நாட்களாக ‘விஸ்வரூபம்’ திரைப்பட பிரச்சினைகளை அறிந்து மிகவும் வேதனைப்படுகிறேன்.

கமல், எனது 40 ஆண்டு கால நண்பர். யாருடைய மனதையும் புண்படுத்தும்படியாக நடந்து கொள்ளாதவர் என்பதை நன்கு அறிவேன். இந்த திரைப்படம் தணிக்கையான பிறகு தியேட்டர்களில் வெளியிடுவதற்கு முன்பே, இஸ்லாமிய சகோதரர்களின் வேண்டுகோளை ஏற்றுக்கொண்டு அவர்களுக்கு திரையிட்டு காண்பித்ததில் இருந்தே இஸ்லாமிய சமூகத்தின் மீது கமல் கொண்டுள்ள மதிப்பையும், மரியாதையையும் தெள்ளத்தெளிவாக காட்டுகிறது.மேலும் கமல்ஹாசன் இந்த படம் தயாரிக்க சுமார் 100 கோடி ரூபாய் முதலீடு செய்வதற்கு என்னென்ன சிரமங்கள் அனுபவித்திருக்கிறார் என்பதை அறியும்போது, என் மனம் கலங்குகிறது.

கமல் ஒரு சாதாரண கலைஞன் அல்ல. தமிழ் சினிமாவை உலக அளவில் கொண்டு செல்வதற்கு ஒரு காரணமாக உள்ள மகா கலைஞன். இதையெல்லாம் மனதில் கொண்டு இந்த படத்தை முழுசா தடை செய்யணும் என்ற கருத்தில் இருந்து மாறி, கமல் வந்த பிறகு கலந்து பேசி, கதைக்கு பாதிப்பு வராத வகையில் சரி செய்து படத்தை வெளியிட உறுதுணையாக இருக்குமாறு மிலாது நபி வாழ்த்துக்களுடன் இஸ்லாமிய சகோதரர்களை கேட்டுக்கொள்கிறேன். ஜெய்ஹிந்த். இவ்வாறு அந்த அறிக்கையில் ரஜினிகாந்த் கூறியிருந்தார்.

ஒரு கலைஞன் என்பவன் யாருக்கும் வளைந்து கொடுக்காமல், நெஞ்சுறுதியோடு பாரதியைப் போல் சமூக விழிப்புணர்வுக்கு போராடுபவன். எழுத்தாளராகட்டும், கவிஞனாகட்டும், திரைப்பட கலைஞனாகட்டும், எந்த துறையின் விமர்சகனாகட்டும், ஒரு படைப்பாளியாக, துணிச்சலுடன் தன் கருத்தை இந்த சமூகத்தில் பதிவு செய்பவனாக இருக்க வேண்டும். அதுதான் அவன் பொதுவாழ்வின் சமூக கடமை.

பயந்து ஒளிபவன் கலைஞனாக, எழுத்தாளனாக, படைப்பாளியாக இருக்க முடியாது. ஆனால், தங்களை படைப்பாளிகள், கலைஞர்கள் என்று கூறிக்கொள்ளும் எங்கள் திரையுலக சகோதரர்கள், ஏன் இந்த விஸ்வரூபம் எடுத்திருக்கும் ஒரு தமிழ் கலைஞன் கமல்ஹாசன் விஷயத்தில், வாய் மூடி மவுனிகளாக இருக்கிறார்கள்? என்று தெரியவில்லை. திரையுலகில் ஒரு சிலர் மட்டும்தான் ஆதரிக்க வேண்டுமா? அவர்கள் மட்டும்தான் கலைஞர்களா? திரை உலகில் இத்தனை அமைப்புகள் இருந்தும், அமைப்புகள் பிளவுபட்டு கிடப்பதாலோ, அல்லது தனிப்பட்ட மன மாச்சரியங்களாலோ யாரும் வாய் திறக்க மறுக்கிறார்கள் என்று எண்ண தோன்றுகிறது.

இன்று விஸ்வரூபத்துக்கு வைத்த தடை, தமிழ் கலைஞனாக உள்ள கமலுக்கு மட்டும் வைத்த தடை இல்லை. இந்தியாவில் உள்ள எல்லா கலைஞனுக்கும், படைப்பாளிகளுக்கும் வைக்கப்பட்ட தடையாக கருதுகிறேன். கமல் என்ற தமிழ் கலைஞன், வியாபாரத்துக்காக தன்னை ஒருபோதும் அடகு வைத்தவன் அல்ல. சமூக பொறுப்புள்ளவன். மூட நம்பிக்கையை முறியடிக்க வேண்டும் என்ற தத்துவத்தில், திரையுலகில் மீசை வைக்காத பாரதியார். அவன் இந்த சமூகத்தில் குழப்பம் விளைவிக்க வேண்டும் என்று படம் எடுப்பானா?

உலகில் நடந்த நிகழ்வுகளை, பார்த்ததை, கேட்டதை, உணர்ந்ததை, வாழ்க்கையில் அனுபவித்ததை ஒரு சமூக வலியோடு பூடகமாக திரையில் சொல்லுவது, ஒரு படைப்பாளியின் தார்மீகமான படைப்பு சுதந்திரம். ஒரு நல்ல கலைஞனை, ஒரு தமிழ் கலைஞனை, தமிழ் திரையுலகிற்காக தன்னையே அர்ப்பணித்துக்கொண்ட ஒரு கலைஞனை, ஏதோ ஒரு சில காரணங்களுக்காக அவனை காயப்படுத்தி, அதில் வழியும் ரத்தத்தை ருசி பார்க்க எண்ணாதீர்கள். ‘‘என் இனிய தமிழ் மக்களே, நீங்கள் யோசிக்க தெரிந்தவர்கள். சிந்தித்து பாருங்கள். நியாயத்துக்கு போராடி, ஒரு நடுநிலை கலைஞனுக்கு கை கொடுக்க வேண்டியது உங்களின் தார்மீக கடமை. தவறுகள் இல்லா தமிழன் என்று சொல்லுவோம். தலை நிமிர்ந்து நிற்போம்.’’ இவ்வாறு அறிக்கையின் வாயிலாக பாரதிராஜா கூறியிருந்தார்.

‘‘என் நாட்டில், நான் முஸ்லிம்களுக்கு ஆதரவாளன் என்று பேசப்பட்டு இருக்கிறேன். அவர்களை என் சகோதரர்களாக ஏற்றுக் கொண்டிருக்கிறேன். ஒரு சிறு கூட்டம், எதை சொன்னாலும் அதை மாற்று கருத்தாக எடுத்துக்கொண்டு செயல்படுகிறது.

நான், தனி மனிதன். அரசாங்கம் அல்ல. ‘விஸ்வரூபம்’ படம் தொடர்பாக ஏற்கனவே முஸ்லிம்களுடன் பேசியிருக்கிறேன். மீண்டும் அவர்களுடன் பேச தயாராக இருக்கிறேன்.’’ விஸ்வரூபம்’ படத்தை ஹாலிவுட் நடிகர்–நடிகைகளுக்கு திரையிட்டு காண்பிப்பதற்காக கமல்ஹாசன் அமெரிக்கா சென்று இருக்கிறார்.லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருந்தார்.

விஸ்வரூபம் படப்பிரச்சினையில் இன்று(திங்கட்கிழமை) சென்னை ஐகோர்ட்டில் தீர்ப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுவதால், சென்னையில் முன் எச்சரிக்கையாக போலீசார் உஷார் படுத்தப்பட்டுள்ளனர். சென்னையில் நேற்று மாலை போலீஸ் கமிஷனர் ஜார்ஜ், அவசரமாக உயர் போலீஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.சென்னையில் நேற்று இரவில் இருந்து முக்கியமான பாலங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. கோட்டை உள்பட அரசு அலுவலகங்கள் மற்றும் ஐகோர்ட்டை சுற்றிலும் போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டனர். இதுபோல தமிழ்நாடு முழுவதும் போலீசார் உஷார் படுத்தப்பட்டுள்ளதாக செய்திகள் சொல்கின்றன.

இதற்கிடையில் விஸ்வரூபம் படம் நேற்று முன்தினம் ஒரு குறிப்பிட்ட இணையதளத்தில் வெளியாகி விட்டதாக தெரியவந்தது. உடனே அதை தடுத்து நிறுத்தும்படி, சைபர் கிரைம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சைபர் கிரைம் போலீசாரும் அதை தடுத்து நிறுத்த உடனடி நடவடிக்கை மேற்கொண்டனர்.திருட்டு வி.சி.டி. மூலம் விஸ்வரூபம் படம் வெளியாகி விட்டதாக ஒரு தகவல் வெளியானதால், நேற்று சென்னையில் திருட்டு வி.சி.டி. தடுப்பு போலீசார் பல்வேறு இடங்களில் அதிரடி சோதனை நடத்தினார்கள். ஆனால் விஸ்வரூபம் திருட்டு வி.சி.டி எதுவும் சிக்கவில்லை என்று போலீசார் தெரிவித்திருக்கின்றனர்.

ஆனால் பெரும்பான்மையாக கருத்து என்னவெனில் சம்பந்தப்பட்ட இசுலாமிய அமைப்பினரோடு கமலாஹாசன் பேசி சர்ச்சைக்குரிய பகுதிகளை நீக்கிவிட்டு படத்தை வெளியிடலாம் என்பதுதான். இது குறித்து பலர் பலவிதமாக கருத்துக்களைச் சொன்னாலும் தமிழக அரசு இன்று வெளியிடும் தீர்ப்பை எதிர்பார்த்து இசுலாமிய அமைப்புகளும் கமலஹாசனும் தமிழக மக்களும் எதிர்பார்த்திருக்கின்றனர்.
Download As PDF
Share this article :
புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

2 comments:

  1. நண்பரே நீங்க கலைஞன் வளைந்து கொடுக்கக்கூடாதுனு பேசுறதெல்லாம் நல்லாத்தான் இருக்கு. ஆனால்..We all compromise in our life! Being adamant in your view is STUPIDITY!

    Kh did whatever he thinks as right in his personal life. Couple of divorces and now he has a live-in partner who has a good understanding.

    "This is my product. I can do anything I want" This is what he said when he tried to do the DTH release before the movie hit the big silver screen. He ended up with a FIASCO!

    You are an atheist. How the hell are you going to understand religious sentiments? You CAN NOT and YOU WILL NOT! I am talking about you, not Kh. So, at this situation, you can not judge your creativity! You should let other believers to judge! That is what the problem we have now in the name of "viswaroopam"

    Moreover Kh is licking Americans foot now! WHY???!!! Is he bribing them for winning an oscar? May be.

    Let me stop here!

    ReplyDelete
    Replies
    1. தோழரே வணக்கம்.. கமலஹாசன் குறித்து நீங்க சொன்னதை மறுக்க முடியாது.விஸ்வரூபம் குறித்து கடந்த நாட்களில் நடந்ததையும் அது குறித்து ஏனையோர் சொன்ன கருத்துகளையும் தொகுத்து இங்கு சொல்லப்பட்டிருக்கிறதே தவிர கமலஹாசனை ஆதரித்தோ இசுலாமிய தோழமைகளின் உணர்வுகளை புண்படுத்தியோ கூறப்படவில்லை.நான் நாத்திகவாதி என்றாலும் மத உணர்வுகளை புரிந்து கொள்ளத் தெரியாதவன் அல்ல.இப்பதிவின் இறுதியில் கமலஹாசன் இசுலாமிய அமைப்பினரோடு பேசி சர்ச்சைகளை களைந்து படத்தை வெளியிடவேண்டும் என்றூ குறிப்பிட்டிருக்கிறே.இதுதான் எனது நிலைப்பாடும்.உங்கள் கருத்துக்கு நன்றி..

      Delete

கருத்துரைப் பெட்டியில் இடும் கருத்துகளுக்கு கருதிட்டவரே பொறுப்பாவர்..

Search This Blog

Email Subscribers

புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

Followers

Popular Posts

Google+

Tips Tricks And Tutorials

TNPSC - முக்கிய வினா-விடைகள்

எழுதிய மாத நாவல்கள் சில

 
Support :
Written by Madhumathi Published by www.madhumathi.com