உலகில் ஒவ்வொரு மதத்தினரும் ஒவ்வொரு இனத்தினரும் தங்கள் இனத்தையோ மதத்தையோ காத்துக்கொள்ளவும் மக்களை சீர்திருத்தவும் தங்களுக்கென ஒரு இயக்கத்தை ஆரம்பிப்பது வழக்கம்.அப்படி இந்தியப்பிரதேசத்தில் இசுலாமியர்கள் நீண்ட காலமாக மேனாட்டுக் கல்வி மற்றும் ஆங்கிலேய ஆட்சியின் தாக்கத்திலிருந்து சற்று விலகியே இருந்தனர். 19 ம் நூற்றாண்டின் பிற்பகுதியில்தான் இசுலாமிய சமூகத்தினரிடையே சமுதாய இயக்கங்கள் தோன்றின.நவீனக் கல்வி முறையைப் பரப்புவதும், இசுலாமிய சமூகத்தில் காணப்பட்ட பர்தா முறை மற்றும் பலதாரமணம் போன்றவற்றைக் களைவதும் அந்த இயக்கங்களின் நோக்கமாக இருந்தன.
1863 ன் ஆண்டு கொல்கொத்தாவில் முகமதியர் இலக்கியக்கழகம் என்ற அமைப்பை நவாப் அப்துல் லத்தீப் அன்பவர் ஆரம்பித்தார்.அக்கழகம் இசுலாமியரிடையே கல்வியைப் பரப்புவதில் முக்கியப் பங்காற்றியதுடன் வங்காளத்தில் பல பள்ளிகளை நிறுவியது.
இசுலாமியர்களிடையே நவீனக் கல்வி முறையையும், நவீன சீர்திருத்தங்களையும் பரப்பிய முக்கியமான இயக்கம் அலிகார் இயக்கம்.இதை ஆரம்பித்தவர் அகமதுகான் ஆவார்.அவர் ஆங்கில அரசின் நீதித்துறையில் பணியாற்றினார்.
1857 ம் ஆண்டு நடைபெற்ற இந்திய முதல் இந்திய சுதந்திரப் புரட்சியின் போது ஆங்கிலேயருக்கு விசுவாசமாக இருந்தார்.மேலும் ஆங்கில அரசுடன் இசுலாமியர்கள் ஒத்துழைக்க வேண்டும் என்றும் வற்புறுத்தினார்.எனவே அவர் இந்திய தேசிய காங்கிரசை எதிர்த்தார்.மேலும் ஆங்கிலேயருக்கு எதிராக முஸ்லீம்கள் போராடுவது அவர்களது நலன்களை பாதிக்கும் என நம்பினார்.
சையது அகமதுகான் இந்திய தேசியக் காங்கிரஸை எதிர்த்தாலும் இந்து முஸ்லீம் ஒற்றுமையை அவர் எப்போது வலியுறுத்தி வந்தார்.இந்துக்கள் இசுலாமியர் இவ்விருவரும் இந்தியர்கள் இவர்களின் ஒற்றுமையில்தான் நாட்டின் முன்னேற்றம் உளளது என்றும் கருதினார்.
1864 ம் ஆண்டு சர் சையது அகமதுகான் காசிபூரில் பள்ளி ஒன்றைத் தொடங்கினார்.பின்னாட்களில் அது அறிவியல் கழகம் என்று அழைக்கப்பட்டது.அக்கழகம் பல அறிவியல் நூல்களை உருது மொழியில் மொழிபெயர்த்து வெளியிட்டது.அவரின் மிகப்பெரிய சாதனை 1875 ம் ஆண்டு முகமதியன் ஆங்கிலோ ஓரியண்டல் கல்லூரியை நிறுவியதாகும். இக்கல்லூரி இந்திய இசுலாமியர்களின் முக்கிய கல்வி நிறுவனமாக மாறியது.சர் சையது அகமது கானால் தொடங்கப்பட்ட இயக்கம் அலிகார் இயக்கம் என்றானது.அவர் பெண்கள் முகத்திரை அணிவதை நீக்கவும் பெண்கல்வி வளரவும் சாதகமாகச் செயல்பட்டார்.அவர் தான் நடத்திய தாஹ்முல்-உத் அக்லாக்(ஒழுக்கச் சீர்திருத்தம்) என்ற பத்திரிக்கையின் மூலம் தம் கருத்துகளை பரப்பினார்.
இந்திய தேசியக் காங்கிரசின் தோற்றம் இசுலாமியர்களிடையே ஒருவித பயத்தை ஏற்படுத்த தங்களின் முன்னேற்றத்திற்கு போராட ஓர் அமைப்பு தேவை என படித்த இசுலாமியர்கள் கருத 1906 ம் ஆண்டு டாக்காவின் நவாபான சலிமுல்லா கான் என்பவரது தலைமையில் இந்திய முஸ்லீம் லீக் உருவானது.
முஸ்லிம் லீக் முஸ்லிம்களின் உரிமைகளைப் பாதுகாத்துக்கொள்வதை நோக்கமாகக் கொண்டு ஆங்கிலேயருக்கு விசுவாசமாக நடந்துகொண்டது.
இந்திய முஸ்லிம்கள் ஆங்கிலேயருக்கு எதிராக பல குறைபாடுகளைக் கொண்டிருந்தனர்.முதல் உலகப்போரின் போது துருக்கி ஜெர்மனியின் நட்பு நாடாகச் செயல்பட்டது.போரில் ஜெர்மனி தோல்வியடைந்தவுடன் துருக்கிய பேரரசு சிதைக்கப்பட்டது.அப்பேரரசின் பகுதிகளை பிரிட்டனும் பிரான்ஸூம் பங்கு போட்டுக்கொண்டன.துருக்கிய சுல்தான் அவமதிக்கப்பட்டார்.சுல்தான் முஸ்லிம்களுக்கு கலீபா மற்றும் சமயத்தலைவரும் ஆவார்.எனவே உலகம் முழுவதிலும் இருந்த முஸ்லிம்கள் ஆங்கில அரசுக்கு எதிராக கிலாபத் இயக்கத்தை தொடங்கினர்.1919 ம் ஆண்டு இந்தியாவில் முகமது அலி மற்றும் சவுகத் அலி சகோதரர்கள் தொடங்கினர்.காங்கிர கட்சி அவ்வியக்கத்தை ஆதரித்தது.இந்துக்களையும் முஸ்லிம்களையும் ஒன்று சேர்க்க அது ஒரு நல்ல சந்தர்ப்பம் என காந்திஜி எண்ணினார்.முஸ்லிம் லீக் கட்சியும்,காங்கிரசு கட்சியும் நெருங்கி வர கிலாபத் இயக்கம் வழிவகுத்தது.
thakavalukku nantri!
ReplyDelete