வடிவேலுவை வைத்து படம் இயக்கினால் படத்தை ரிலீஸ் செய்வதில் சிக்கலாமே என வடிவேலுவை சிபாரிசு செய்யும் இயக்குனர்களிடம் சொல்லி வேண்டாம் என முடிவு கட்டி விடுகிறார்களாம் பெரிய தயாரிப்பாளர்களும் புதிதாக படம் தயாரிக்க வரும் தயாரிப்பாளர்களும். "ஆமா என்னாச்சு வருசம் பத்து படம் நடிக்கிற வடிவேலு இப்ப எந்த படத்திலயும் நடிக்கலை போலிருக்கே"
என்று கேட்கும் கிராமத்து மனைவியிடம், "ஆமா அம்மணி போன எலெக்ஷன்ல அம்மாவை எதிர்த்து பிரசாரம் பண்ணினார். அதனால வடிவேலை வச்சு எடுக்கிற படத்துக்கு ஆளுங்கட்சியினால ஏதாவது சிக்கல் வரும்ன்னு யாரும் வடிவேல நடிக்க கூப்பிடறதில்லை" என்று சாதாரணமாக சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். ஒரு பக்கம் பார்த்தால் அது உண்மைதான்.ஏதோ ஒரு பயம் தயாரிப்பாளர்களுக்கும் இயக்குனர்களுக்கும் இருக்கத்தான் செய்கிறது.ஏதாவது சிக்கல் என்றால் படத்திற்கு கடன் வாங்கி செலவு செய்த தொகைக்கு வட்டி கட்ட முடியாதே என்ற அச்சம் தயாரிப்பாளர்களிடம் நிலவுவதாக இயக்குனர்கள் வட்டாரத்தில் பேசுவதைக் காணமுடிகிறது.

ஆனால் வடிவேல் நடிக்கும் படத்திற்கு அரசாலும், ஆளுங்கட்சியினராலும் சிக்கல் வரும் என்று சொல்வதை ஏற்றுக்கொள்ள் முடியாது. ஏனென்றால் நம்முடைய முதல்வரை தந்ததே திரைத்துறைதான்.அவருக்கு ஒரு சினிமா தயாரித்து வெளியிடுவது எத்தனை சிரமமானது என்பது தெரியும்.அப்படியானால் விஸ்வரூபத்திற்கு சிக்கல் வந்ததே என கேட்கலாம் அதன் பின்னணி வேறு.பலபேரை தேர்தல் நேரத்தில் விமர்சனம் செய்த நடிகர்களை பழிவாங்கியது என்பது இதுவரை நடந்ததில்லை.அதற்கு உதாரணமாக பலபேரைச் சொல்லலாம்.ஆனாலும் வடிவேலுவை வைத்து படம் இயக்குவதில் என்ன சிக்கல் என்று கேட்கலாம் ஆளுங்கட்சி ஆட்கள் படம் ஓடும் தியேட்டரில் ஏதாவது பிரச்சனை செய்தால் சட்டம் ஒழுங்கு பாதிக்கும் என படத்தை நிறுத்திவிட்டால் என்ன செய்வது என்ற பயம் தயாரிப்பாளர்களிடம் எழுகிறது.முதல்வரை பகைத்துக்கொண்ட ஒரு நடிகரை வைத்து படம் எடுத்தால் நாமும் முதல்வரை பகைத்தது போல ஆகாதா என்ற கேள்வியும் வடிவேலுவை சற்று சினிமாவை விட்டு தள்ளி வைத்திருக்கிறது.
ஆனாலும் வடிவேலு சோர்ந்து போகாமல்தான் இருந்தார்.பலரிடம் கதை கேட்டுக்கொண்டுதான் இருந்தார்.அவரே சொந்தப் படம் எடுக்கவிருப்பதாகவும் செய்திகள் வெளியாயின.அவரது மகனை வைத்து படம் இயக்குவதாகவும் செய்திகள் வெளியாயின.
இம்சை அரசன் 23ம் புலிகேசி படத்தின் வெற்றியை தொடர்ந்து அதன் 2ம் பாகமாக இம்சை அரசன் 23-ம் புலிகேசி பார்ட் -2 உருவாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பல்வேறு படங்களில் வடிவேலு, காமெடியில் அசத்தியிருந்தாலும் அவர் ஹீரோவாக களம் இறங்கி, அதில் முத்திரை பதித்து வெற்றியும் பெற்ற சூப்பர் டூப்பர் ஹிட் படம் இம்சை அரசன் 23ம் புலிகேசி. டைரக்டராக சிம்புதேவன் அறிமுகமான இப்படம் மாபெரும் ஹிட்டானது. மேலும் வடிவேலுவுக்கும் ஹீரோ அந்தஸ்த்தை பெற்று தந்தது. இருந்தும் வழக்கம் போல் தன்னுடைய காமெடியால் ரசிகர்களை கவர்ந்து, நம்பர்-1 காமெடியனாக வலம் வந்த வடிவேலு மீது யார் கண்பட்டதோ, தேவையில்லாமல் அரசியலில் பிரச்சாரம் செய்ய போய், இன்று ஒரு படம் கூட கையில் இல்லாமல், வடிவேலு என்ற ஒரு நபர் இருக்கிறாரா...? என்ற நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறார்.
எப்போதாவது நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் வடிவேலு, பத்திரிக்கையாளர்கள் கேட்கும் போதெல்லாம் நான் ஓடி ஒளியவில்லை. மீண்டும் சினிமாவில் நடிப்பேன், அதுவும் ஹீரோவாகத்தான் வருவேன் என்று கூறி வந்தார். அவர் கூறியது இப்போது உண்மையாக போகிறது. ஆம்! சமீபத்தில் சிம்புதேவனும், வடிவேலும் சந்தித்து பேசியுள்ளனர். இம்சை அரசன் 23ம் புலிகேசி பட வெற்றியின் தொடர்ச்சியாக அதன் 2ம் பாகமாக இம்சை அரசன் 23-ம் புலிகேசி பார்ட் -2 படத்தை உருவாக்க இருவரும் முடிவு செய்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது கதைக்கான பணிகளில் சிம்புதேவன் ஈடுபட்டு இருப்பதாகவும், விரைவில் இதுப்பற்றிய அறிவிப்புகள் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

அதுமட்டுமில்லாமல் வடிவேல் மீண்டும் ஒரு புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். அந்த படத்தின் பெயர், ‘தெனாலிராமன்’.. மதராச பட்டினம், எங்கேயும் எப்போதும், இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம், மாற்றான் உள்பட பல படங்களை தயாரித்த ஏ.ஜி.எஸ். நிறுவனம், இந்த படத்தை தயாரிக்கிறது. ‘போட்டா போட்டி’ படத்தை இயக்கிய யுவராஜ் டைரக்டு செய்கிறார். இதில், வடிவேல் இரட்டை வேடங்களில் நடிக்கிறார். தெனாலியாகவும், ராமனாகவும் அவர் 2 மாறுபட்ட நகைச்சுவை வேடங்களில் தோன்றுகிறாராம். இப்படம் உண்மையான தெனாலிராமன் வரலாற்றைக்கொண்டு எடுக்கப்படுகிறதா இல்லை படத்தின் தலைப்பிற்கேற்ப தெனாலி, ராமன் என்ற இருகதாபாத்திரத்தில் நடிக்கிறாரா என தகவல் ஏதும் இல்லை. அப்படி தெனாலிராமன் கதைதான் படம் என்றால் அவர் இருந்த அரசவையின் மன்னர் கிருஷ்ணதேவராயரும் கட்டாயம் இடம்பெறுவார். அப்படி இருக்கும் பட்சத்தில் அந்த வேடத்தையும் சேர்த்து வடிவேலே செய்வார் என எதிர்பார்க்கலாம். இதன் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்குகிறது என தெரிகிறது. வடிவேலுவின் படங்களை எதிர்பார்த்து ஏராளமான ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.. அவர்களை இன்னும் காக்க வைக்காமல் படத்தை விரைவில் முடித்து வெளியிடுவார்கள் என் எதிர்பார்க்கலாம்.தெனாலிராமன் படத்தை யாரும் தயாரிக்க முன்வராததால் வடிவேலுவே படத்தை தயாரிக்கிறார் என்று செய்திகள் வருகின்றன.படம் பற்றி அதிகாரப் பூர்வமான தகவல் வந்தால்தான் அது உண்மையா? பொய்யா? என்பது தெரியும்..
இந்த பயம் தேவையற்றது. சென்ற தேர்தலின்போது திரு வடிவேலு திரு விஜய்காந்த்தைதான் விமரிசனம் செய்தாரே ஒழிய, அதிமுகவையோ அல்லது அதன் தலைவியையோ அல்ல. இன்னும் சொல்லப்போனால் நத்தம் தொகுதியில் பிரசாரம் செய்ய சென்ற போது வாய் தவறி நத்தம் விஸ்வநாதனுக்குத்தான் வாக்கு கேட்டார்.
ReplyDeleteநல்ல திறமசாலி மீண்டு(ம்) வரனும்
ReplyDeleteவரட்டும்... மீண்டும் அனைவரையும் சிரிக்க வைக்கட்டும்...
ReplyDeleteஆளுங்கட்சிக்கு வேறு வேலையே இல்லைங்களா... அதுவும் சமீபத்தில் அவரே அதிமுக-வில் சேர இருபதாக முதல்வரை சந்தித்து இருக்கிறார். திரைத்துறையில் அவரை பிடிக்காதவர்கள் இப்படி பயத்தை கிளப்பி விட்டு இருக்கலாம்.. அனால் ஒன்று, வடிவேலு பின்னடைவால் பல நகைசுவை நடிகர்கள் திரையில் நம்மை கவர்ந்து இருக்கிறார்கள்..உதா: தம்பி ராமையா..
ReplyDelete