வணக்கம் தோழமைகளே.. எப்படியிருக்கீங்க? தேர்வுக்கு படிக்க ஆயத்தமகிட்டீங்களா? என்னது இன்னும் இல்லையா? என்னங்க சொல்றீங்க.. கடைசி பத்து நாள் இருக்கும்போது படிச்சுக்கலாமுன்னு விட்டுட்டீங்களா.. அதான் நீங்க பண்ற முதல் தவறு.. தேர்வுக்கு படிக்கிறவங்க மூணு வகைப்படறாங்க..
1.எப்ப வேணாலும் தேர்வு நடக்கட்டும்..நான் படிச்சுக்கிட்டே இருக்கேன்
(இது ஒரு வகை)
2.தேர்வு நாளை அரசு அறிவிக்கட்டும் அப்புறம் படிக்க ஆரம்பிக்கிறேன்
(இது ஒரு வகை)
3.ஏற்கனவே படிச்சதுதானே கடைசி பத்துநாள் படிச்சா போதும்
(இது ஒரு வகை)
இதுல நீங்க எந்த வகைன்னு நீங்களே முடிவு பண்ணிக்குங்க.. எனக்குத் தெரிஞ்சு நீங்க முதல் வகையைச் சார்ந்தவரா இருந்தால் மட்டுமே அரசுப் பணி சாத்தியம்.
இரண்டாவது வகையைச் சார்ந்தவரா இருந்தா தேர்வாணையத்து மேலேயும் உங்க மேலேயும் நம்பிக்கையில்லாதவர்ன்னு அர்த்தம்.
மூணாவது வகையைச் சார்ந்தவரா இருந்தா உங்க மேல அதிக நம்பிக்கை வச்சிருக்கிறீங்கன்னு அர்த்தம்.அதாவது அதை ஆங்கிலத்துல ஓவர் கான்ஃபிடன்ஸ்ன்னு சொல்வாங்க..
கனவு காணுங்கள்ன்னு அப்துல்கலாம் சொல்வாரு.அந்த மாதிரி தமிழக அரசுப்பணியில் சேரணும்ன்னு கனவு கண்டா போதாது. அந்த கனவு நனவாகணும்ன்னு நினைக்கணும்..நினைச்சீங்களா.. அப்ப நீங்க கடுமையா உழைக்கணும்..கடுமையா உழைக்காம தன்னோடு லட்சியத்தை யாரும் அடைஞ்சதா சரித்திரமே இல்லை.மொதல்ல உங்க லட்சியம் என்னான்னு நீங்க முடிவு பண்ணீட்டீங்களா..அரசுப்பணிதானே உங்க லட்சியம்? அதுல தெளிவா இருக்கீங்கில்ல.அப்படி இருந்தவங்கதான் இதுவரைக்கும் தேர்வுல வெற்றி பெற்றவங்க.. சில பேரு சொல்வாங்க.. அப்ளை பண்ணிட்டோம்ன்னு சும்மா எழுதினேன் பாசாயிட்டேன்..விருப்பமில்லைதான்..ஆனாலும் வேலையில ஜாயின் பண்ணிட்டேன் என்று சொல்கிறவர்களை நம்பாதீர்கள்..தேர்வில் அவர்கள் வெற்றி பெற தலைகீழாக நின்று தண்ணீர் குடித்திருப்பார்கள்.ஆனால் பந்தாவாக அப்படி சொல்லிக்கொள்வார்கள்.
எனவே இதுதான் என் வாழ்க்கை இதுதான் என் லட்சியம் என நினைப்பவர்கள் தொடர்ந்து நேரம் கிடைக்கும்போதெல்லாம் படியுங்கள்.படித்ததை ஆங்காங்கு நினைவு கூறுங்கள்.உதாரணத்திற்கு பல்பை எரிய விடும்போது பல்பை கண்டுபிடித்தவர் யார்? மின்சாரம் கண்டுபிடிக்கப்பட்ட வருடம் போன்றவற்றை நினைவுகூறவேண்டும் இது குறித்து அதாவது பாடங்களை எப்படி மறக்காமல் இருப்பது எளிதாக நினைவில் வைத்துக்கொள்வது பற்றி தனியாக விரிவாக பதிவிடுகிறேன்..
தொடர்ந்து தேர்வு குறித்த பதிவுகள் வெளியாகும் புதிய தகவலை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற தங்கள் மின்னஞ்சலை தளத்தில் பதிவு செய்துகொள்ளுங்கள்.

nandri. I started studying. Spending one hour in online materials and one hour with books daily.
ReplyDelete