புது வரவு :
Home » , , , » TNPSC - குரூப் 1 தேர்வில் கவுன்சிலிங் அறிமுகம்

TNPSC - குரூப் 1 தேர்வில் கவுன்சிலிங் அறிமுகம்

வணக்கம் தோழர்களே. குரூப் 1 பற்றிய செய்தி இது.ஏனோ தெரியவில்லை டி.என்.பி.எஸ்.சி தேர்வெழுதும் தோழர்களில் பெரும்பான்மையோர் குரூப் 1 தேர்வை எழுத ஆர்வம் காட்டிக்கொள்வதில்லை.துணை கலெக்டர் உள்ளிட்ட அதிகாரமிக்க பதவிகளைத் தந்தாலும் அத்தேர்வை எழுத நீங்கள் தயங்க இரண்டு காரணங்கள் உண்டு 

1.தேர்வு மிகக் கடினமாக இருக்கும் 
2.பணியிடங்களுக்கான எண்ணிக்கை மிகக்குறைவு.




அதிகாரமிக்க பணியில் சேரவேண்டும் என்றால் கடினமாகத்தான் இருக்கும்.காலியிடங்களும் குறைவாகத்தானிருக்கும்.தேவாஓம் என்ற நம்பிக்கையோடு படிப்பவர்கள் ஐ.ஏ.எஸ் தேர்விலேயே எளிதாக வெல்கிறார்கள்.எனவே எண்ணிக்கை பற்றியெல்லாம் கவலை படக்கூடாது.ஒரு காலியிடம் என்றாலும் அது எனக்குத்தன் எனற வகையில் தேர்வுக்கு படியுங்கள்.வரும் காலங்களில் குரூப் 1 தேர்வையும் எழுதுங்கள்.

குரூப் 1 தேர்வில் வென்றவர்கள் தங்களுக்கு பிடித்தமான பதவியை தேர்வு செய்து கொள்ளும் வகையில் குரூப்–1 தேர்வில் முதல் முறையாக கவுன்சிலிங் முறை அறிமுகப்படுத்தப்படுகிறது. புதிய முறையில் முதலாவது கவுன்சிலிங் சென்னையில் உள்ள டி.என்.பி.எஸ்.சி. அலுவலகத்தில் நாளை (வியாழக்கிழமை) நடக்கவிருப்பதாக தேர்வாணையம் தெரிவித்திருக்கிறது.

துணை கலெக்டர், போலீஸ் டி.எஸ்.பி., ஊரக வளர்ச்சி உதவி இயக்குனர், கூட்டுறவு சங்கங்களின் துணை பதிவாளர், மாவட்ட வேலைவாய்ப்பு அதிகாரி உள்ளிட்ட உயர் பதவிகளில் 131 காலி இடங்களை நிரப்புவதற்காக குரூப்–1 மெயின் தேர்வு கடந்த ஆண்டு ஜூலை மாதம் நடத்தப்பட்டது. டி.என்.பி.எஸ்.சி. நடத்திய இந்த தேர்வை ஏறத்தாழ 2,620 பேர் எழுதினார்கள்.இந்த நிலையில், மெயின் தேர்வு முடிவு வெளியிடப்பட்டு அடுத்த கட்ட தேர்வான நேர்முகத்தேர்வுக்கு 262 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். நேர்முகத்தேர்வு கடந்த 1–ந்தேதி முதல் 5–ந்தேதி வரை சென்னையில் உள்ள டி.என்.பி.எஸ்.சி. அலுவலகத்தில் நடந்தது.


இதைத்தொடர்ந்து, நேர்முகத்தேர்வுக்கு சென்றவர்களின் மதிப்பெண் விவரம் (எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு) 5–ந்தேதி இரவு வெளியிடப்பட்டது. அதன்பிறகு 131 பேர் கொண்ட இறுதி தேர்வுபட்டியலை டி.என்.பி.எஸ்.சி. கடந்த 7–ந் தேதி வெளியிட்டது. வழக்கமாக, தேர்வர்களின் மதிப்பெண், விருப்பம், இடஒதுக்கீடு ஆகியவற்றின் அடிப்படையில் பணி ஒதுக்கீடு செய்யப்பட்டு இறுதி தேர்வு பட்டியலின் போது வெளியிடப்பட்டு விடும்.ஆனால், இந்த ஆண்டு முதல் முறையாக பணிகளை ஒதுக்கீடு செய்வதற்கு கவுன்சிலிங் முறை அறிமுகப்படுத்தப்படுகிறது. அதன்படி, தேர்வர்கள் மெரிட் அடிப்படையில் கவுன்சிலிங் அடிப்படையில் அழைக்கப்படுவார்கள். அப்போது அவர்கள் தங்களுக்கு விருப்பமான பணியை (காலியாக இருக்கும் பட்சத்தில்) தேர்வு செய்து கொள்ளலாம்.

‘‘எவ்வித ஒளிவு மறைவு இல்லாமல் வெளிப்படையாக பணிகளை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்பதற்காக குரூப்–1 தேர்விலும் கவுன்சிலிங் முறையை அறிமுகப்படுத்த உள்ளோம். பழைய முறையில் தேர்வர்கள் விரும்பாத பதவியோ, அல்லது அவர்கள் அவசர அவசரமாக விண்ணப்பத்தில் குறிப்பிட்ட பதவியோ ஒதுக்கப்பட்டிருக்கக்கூடும். தற்போது கவுன்சிலிங் நடத்துவதால் தங்களுக்கு விருப்பமான பதவியை தேர்வு செய்து திருப்தியாக பணியை மேற்கொள்ளலாம்’’ என்று டி.என்.பி,எஸ்.சி. செயலாளர் மா.விஜயகுமார் ‘தினத்தந்தி’ நிருபரிடம் நேற்று தெரிவித்தார்.

குரூப்–1 பணி ஒதுக்கீட்டிற்காக கவுன்சிலிங் சென்னையில் உள்ள டி.என்.பி.எஸ்.சி. அலுவலகத்தில் நாளை (வியாழக்கிழமை) காலை 9 மணிக்கு நடைபெறுகிறது. இதில் 131 பேர் கலந்து கொள்கிறார்கள். இதற்கிடையே, இந்த ஆண்டு குரூப்–1 பணிகளில் 25 காலி இடங்களை நிரப்புவதற்காக முதல் நிலைத்தேர்வு 16–ந்தேதி (சனிக்கிழமை) நடைபெறுகிறது. தமிழகம் முழுவதும் ஒரு லட்சத்து 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பட்டதாரிகள் தேர்வு எழுத இருக்கிறார்கள். இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் டி.என்.பி.எஸ்.சி. செய்துள்ளது.

எனவே தேர்வெழுதும் தோழர்கள் எண்ணிக்கை குறைவுதானே என்பதை மறந்துவிட்டு வெல்வோம் என்ற நம்பிக்கையோடு தயாராகுங்கள் தேர்வில் வெற்றி பெறுங்கள்..
Download As PDF
Share this article :
புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

2 comments:

  1. வணக்கம் மது மதி அவர்களே அஞ்சா சிங்கம் செல்வின் தங்களைப் பற்றி என்னிடம் கூறியது முதல் தங்கள் வலைப்பூவை வாசிக்க ஆரம்பித்தேன் அன்று முதல் இன்று வரை தவறாமல் கவனித்து வருகிறேன்.
    ஆனாலும் எனக்கு ஒரு மனக்குறை என்னவென்றால் சென்னையின் பிற பகுதி மாணவர்களுக்கும் வட சென்னை பகுதியில் உள்ள கல்லூரி மாணவர்களுக்கும் எதிர்காலம் பற்றிய தெளிவு மிகக் குறைவாகவே உள்ளது. அவர்களின் நலனுக்காக என்னவெல்லாம் செய்ய முடியுமோ எங்களால் முடிந்த மட்டும் செய்துவருகிறோம் எனக்கோ ஆங்கில அறிவு குறைவு கணினி பயன் படுத்துவதில் சிறு தடுமாற்றம் உண்டு.
    தப்போ சரியோ என்னுடைய முயற்ச்சியால் ஓரளவு தயாராகி வருகிறேன். நான் எனக்குள்ள அறிவுடன் கவனிக்கையில் எங்கள் பகுதி மாணவர்களுக்கு மாணவர்களுக்கு ஒரு தாழ்வு மனப்பான்மை இருப்பது தெரிகிறது அதாவது என்னவென்றால் ஆங்கிலம் சரளமாக பேச முடியவில்லை யாரிடமும் உடனடியாக பேசிப்பழக தயக்கம், சுயநலமாக தன தேவை மட்டுமே குறிக்கோளாக அப்பா அம்மா அவர்களின் தியாகம் அறிவு உழைப்பை அறியாமை, தன தேவைக்கு கூட யாருடைய துணையும் இல்லாமல் எந்த அலுவலகமும் மற்றும் யாரையும் அணுகுவதில்லை படித்ததும் என்ன வேலைக்கு செல்வது என்ற முடிவைக் கூட எடுக்க துணிவு இல்லை. மேற்கொண்டு என்ன படிக்கலாம் என்று தெரியவில்லை, யாரிடமும் கேட்டுத் தெரிந்துகொள்ளவும் தயக்கம், ஆனாலும் எல்லாம் எனக்கு தெரியும் என்ற மமதை .

    இப்படிப்பட்ட எங்கள் பகுதி மாணவர்களுக்காக புத்தக வங்கியை நடத்திவருகிறோம் தன்னம்பிக்கை நிகழ்ச்சி நடத்திவருகிறோம் ஆயினும் இது போதாது என்றே தோன்றுகிறது IAS பயிற்சி TNPSC கோச்சிங் VAO தேர்வுக்கு என்று நடத்திட ஏற்பாடு செய்தோம் ஆனாலும் பயன்பெறும் மாணவர்கள் மிக குறைவு. அவர்களது ஆர்வத்தை தூண்டவேண்டும்.

    இந்த பகுதியில் இருந்து மட்டும் சுமார் 4000 மாணவர்கள் கல்லூரிக்கு செல்கிறார்கள் அவர்களுக்கு நல்ல வழி காட்டவேண்டும் என்பது எங்களது ஆவல்

    இந்த ஆண்டு கோடை விடுமுறை முதல் ஆங்கிலம் பேச தமிழ் தட்டச்சு வரைகலை ஒளிப்படக் கலை போன்ற பயிற்ச்சிகள் நடத்திட ஏற்பாடு செய்து வருகிறோம் இதற்க்கு கட்டணம் பெறாமல் பயிர்ச்சியளிக்க ஆசிரியர்களையும் தயார் செய்திருக்கின்றோம்

    எங்களது இந்த கவலைக்கும் ஆவலுக்கும் தங்களது அனுபவங்களையும் ஆலோசனைகளையும் வேண்டுகிறோம் மேலும் மாதாந்திர பயிற்சி கூட்டத்தில் கலந்து உங்களது கருத்துக்களை மாணவர்களுக்கு விளக்கட வேண்டுமாய்க் கேட்டுக் கொள்கிறோம்.
    --
    www.vitrustu.blogspot.com
    VOICE OF INDIAN
    256 TVK Qts TVK Nagar,
    Sembiyam,
    Perambur,
    Chennai 600019

    ReplyDelete
    Replies
    1. தாமதமான பதிலுக்கு மன்னிக்கவும்..இது குறித்து எந்த வகையில் உதவிட வேண்டுமென்றாலும் நான் தயார்.எனது அலைபேசி எண் 9894124021..எப்போது வேண்டுமானாலும் என்னைத் தொடர்பு கொள்ளலாம்..

      Delete

கருத்துரைப் பெட்டியில் இடும் கருத்துகளுக்கு கருதிட்டவரே பொறுப்பாவர்..

Search This Blog

Email Subscribers

புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

Followers

Popular Posts

Google+

Tips Tricks And Tutorials

TNPSC - முக்கிய வினா-விடைகள்

எழுதிய மாத நாவல்கள் சில

 
Support :
Written by Madhumathi Published by www.madhumathi.com