வணக்கம் தோழர்களே.. தேர்வுக்கு தங்களை தயார் படுத்திக்கொண்டு இருப்பீர்கள் என நம்புகிறேன். தங்களின் வெற்றிக்கு இந்த தளமும் உறுதுணையாக இருப்பதில் மகிழ்ச்சி.கடந்த மாதங்களில் முடிவுகள் வெளியான குரூப் 4 குரூப் 2 போன்ற தேர்வுகளில் வெற்றி பெற்றவர்களில் ஏழெட்டு பேர் என்னைத் தொடர்பு கொண்டு தேர்வில் வெற்றி பெற்று இருப்பதாக சொன்னார்கள். அது மிக்க மகிழ்ச்சியைத் தந்தது. நம் தளம் மட்டுமே வெற்றியைத் தரவில்லை.நம் தளமும் ஒரு காரணம் என்று சொன்னார்கள்.
இந்த வருடத்திற்கான தேர்வுகளையும் தேர்வு நடைபெறும் தேதியினையும் அரசு அறிவித்துவிட்டது.எனவே தாமதிக்காமல் தொடர்ந்து படிக்க ஆரம்பியுங்கள். ஒவ்வொன்றையும் ஆழ்ந்து படியுங்கள்.சரியான விடைகளைத் தேர்ந்தெடு மாதிரியான வினாக்களை முதலில் படிக்க வேண்டாம்.கட்டுரை வடிவில் முதலில் படித்துவிட்டு பிறகு தங்களை சோதிக்கும் விதமாக இந்த முறையிலான வினாக்களை வாசியுங்கள்.ஏனென்றால் கூற்று போன்ற வினாக்களைக் கேட்கும்போது கொடுக்கப்பட்டிருக்கும் விடைகள் உங்களை குழப்பத்தில் தள்ளும்.எனவே அவற்றையும் கவனத்தில் கொண்டு முழுமையாக வாசியுங்கள்.
தமிழகம், தமிழக வரலாறு பற்றிய வினாக்கள் இனி அதிகமாக கேட்கப்படலாம். எனவே தமிழக வரலாறு எனும் பாடத்தை விளக்கமாக பதிவிடலாம் என்றிருக்கிறேன். தமிழக வரலாற்றில் தேர்வுக்கு சம்பந்தப்பட்ட பகுதிகளை மட்டும் தொகுத்து உங்களுக்கு பகிர்கிறேன்.பதிவுகள் இடைவிடாமல் வெளியாகும்.
தமிழக வரலாறு பகுதியில் சோழர்கள், சேரர்கள், பாண்டியர்கள், களப்பிரர்கள், பல்லவர்கள், விஜயநகரபேரரசு, நாயக்கர் ஆட்சி, மராத்திய ஆட்சி, சேதுபதிகள், தொண்டைமான்கள், நவாப்கள் போன்றோரைப் பற்றி விளக்கமாக பதிவிட இருக்கிறேன். பதிவிட்ட அன்றே அதை முழுமையாகப் படித்துவிட்டாலே போதும் அது மனதில் நின்றுவிடும்.அவ்வப்போது புரட்டிப் பார்த்தால் நிரந்தரமாக மனதில் தங்கிவிடும்.எனவே பதிவுகளை சேர்த்து வைக்காமல் அவ்வப்போதே படித்துவிடுங்கள்.
தளத்தை ஏற்கனவே தொடர்ந்து கொண்டிருப்பவர்களுக்கு பிரச்சனையில்லை. ஏனென்றால் புதிய பதிவுகள் அவர்களை சென்றடையும். தளத்திற்கு புதிதாக வந்திருக்கும் தோழர்களுக்கு புதிய பதிவுகள் உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலுக்கு வரவேண்டும் என்றால் தங்கள் மின்னஞ்சலை தளத்தில் இணைத்துக்கொள்ளுங்கள்.
அது மட்டுமின்றி பல தோழர்கள் மாதிரி வினாக்கள் பதிவிடும்படி கேட்டதால் முதற்கட்டமாக பிரபல தினசரிகளில் வெளியான மாதிரிவினாத்தாள்களை இப்போது பதிவிட்டு வருகிறேன்.மாதிரி வினாக்களைககாண இங்கே செல்லவும்.
பொதுத்தமிழ் மற்றும் தமிழக விளக்கம் பகுதிகளின் மொத்த பதிவுகளும் வேண்டுவோர் admin@madhumathi.com என்ற மின்னஞ்சலுக்கு தொடர்பு கொள்ளவும்.
பொதுத்தமிழ் மற்றும் தமிழக விளக்கம் பகுதிகளின் மொத்த பதிவுகளும் வேண்டுவோர் admin@madhumathi.com என்ற மின்னஞ்சலுக்கு தொடர்பு கொள்ளவும்.
வீடியோ பதிவுகள் தயாராகிக்கொண்டிருக்கிறது. இன்னும் இரண்டு நாட்களில் வீடியோ பதிவுகளும் தொடர்ந்து வெளியாகும்.நன்றி.
அடுத்த பதிவு:
சோழர் காலம்
சேவை தொடர வாழ்த்துக்கள்...
ReplyDeletenandri
ReplyDeleteஉங்கள் நற்பணி தொடரட்டும்!
ReplyDelete