புது வரவு :
Home » , , , , » வாக்கென டாக்கென ராக்கென ராஜகுமாரன்

வாக்கென டாக்கென ராக்கென ராஜகுமாரன்

தமிழ் சினிமாவின் 75 ஆண்டுகால வரலாற்றில் பாரதிராஜா, ராமராஜன், பாக்கியராஜ், பார்த்திபன், பாண்யராஜன், ராஜ்கிரண், லிவிங்ஸ்டன், எஸ்.ஜே சூர்யா உள்ளிட்ட பல இயக்குனர்கள் படங்களை இயக்கியதோடு பல படங்களில் நாயகனாக வலம் வந்து பல முன்னணி ஹீரோக்களின் வயிற்றில் புளியைக் கரைக்க வைத்தவர்கள்.அந்த வரிசையில் முன்னணி நாயகர்களை மட்டுமல்லாது ரசிகர்களின் வயிற்றில் புளியைக் கரைக்கவும் அதிரடியாக திரையில் தோன்றி அதிரடி நாயனாக ரசிகர்களின் இதயத்தில் இடத்தைப் பிடிக்கவும் தயாராகி வரும் இயக்குனர் பிரபல பெரியத்திரை சின்னத்திரை நாயகி தேவயானியின் கணவர் ராஜகுமாரன் தான்.இவரை இன்னும் தேவயானியின் கணவர் என்றுதான் ஊடகங்கள் வெளிக்காட்டிக்கொண்டிருக்கின்றன. ஆனால் பிரபல இயக்குனராகத்தான் அவர் தேவயானியை திருமணம் செய்தார்.ஆனாலும் தேவயானியைச் சொல்லாமல் இவரைச் சொன்னால் இன்றைய ரசிகர்களுக்கு ஏனோ தெரியாமற்போகிறது.



இயக்குனர் விக்கிரமனின் உதவியாளராக இருந்து 'நீ வருவாய் என' திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி பரபரப்பாக பேசப்பட்டவர் ராஜகுமாரன்.அதில் நாயகியாக நடித்த தேவயானியை காதலித்து திருமணம் செய்து அதே கதையை விக்ரமையும் சரத்குமாரையும் நாயனாக வைத்து இயக்கிய 'விண்ணுக்கும் மண்ணுக்கும்' படம் மண்ணைக்கவ்வ அத்தோடு அவரது சொந்த முகவரியை இழந்து தேவயானியின் முகவரியோடு ஒட்டிக்கொண்டார் என்பதை அவரே மறுக்க முடியாது.

கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் கழித்து மீண்டும் தமிழ் சினிமாவை தன் பக்கம் ஈர்க்க வருகிறார்.இயக்குனர் என்பதையும் தாண்டி அதிரடியான ஹீரோவாக களமிறங்கப்போகிறார்.இப்படி அதிரடியான நாயகனாகத்தான் அரங்கை கலக்கப் போகிறார் என்ற செய்தியை  அந்தப் படத்தின் புகைப்படங்களின் வாயிலாக தமிழக ரசிகர்கள் மட்டுமல்லாது உலக ரசிகர்களும் அறிந்துகொண்டனர்.அவர் நாயகனாக நடிக்க இருக்கும் படத்தை தயாரிக்க யாரும் முன்வராத பட்சத்தில் தேவயானி (வேறுவழியில்லாமல்) சம்மதித்து இருக்கிறார்.இவரது படக் கம்பெனியின் பெயர் ரா.தே புரொடக்‌ஷன்ஸ்.கேள்விப்பட்டிருப்பீர்களே. இந்நிறுவனம் ஏற்கனவே அப்பாஸ், முரளி,   தேவயானி நடித்து ராஜகுமாரன் இயக்கிய 'காதலுடன்' என்ற படத்தை தயாரித்து போட்ட பணத்தை எடுக்க முடியாமல் பல பிரச்சனைகளை சந்தித்திருந்தது குறிப்பிடத்தக்கது.அந்தப் படப் பிரச்சனை தேவயானிக்கு பல பிரச்சனைக்களைக் கொண்டு வந்து நிறுத்தியது.

ஆனாலும் மீண்டும் தைரியமாக தன் கணவனை நாயனாக்கி அவரை இயக்க வைத்து 'திருமதி தமிழ்' இப்படத்தை தேவயானி தயாரிக்கிறார் என்றால் அதன் பின்னணி பற்றியும் யோசிக்கத்தான்வேண்டும். எப்பேர்ப்பட்ட கதையாக இருந்தாலும் ராஜகுமாரனை நாயகனாகவும் மெகா சீரியலில் நாயகியாக கண்ணீர்விட்டு கதறிய ரிடையர்டு நடிகை தேவயானியை நாயகியாகவும் 70 mm திரையில் பார்ப்பது சவலான விசயமாகவேப் படுகிறது. வாழ்க்கையில் ஒவ்வொருவரும் சவாலை சந்தித்துதானே தீரவேண்டும்.

ஐய்ய..இன்னொரு பவர் ஸ்டார் கிடைச்சுட்டார் என்று சமூக வலைத்தளங்கள் சந்தோஷிக்க ஆரம்பித்துவிட்டன.அவரது புகைப்படங்கள் பல தளங்களிலும் ஜொலிக்க ஆரம்பித்துவிட்டன.பத்திரிக்கைகளில் வரும் விளம்பரங்களில் 'செல்வ லட்சுமி வர்றா' 'வீரலட்சுமி வர்றா' 'தைரிய லட்சுமி வர்றா' 'ஐய்வர்ய லட்சுமி வர்றா' போன்ற விளம்பரங்கள் தேவயானியின் ரசிகைகளை உசுப்பேத்தும் என்பது தேவயானியின் நம்பிக்கை.தேவயானியின் 75 வது படம் என்பதையும் விளம்பரங்கள் சொல்லத் தவறவில்லை.

நல்ல இயக்குனர் இயக்குவதோடு இருந்திருக்கலாம்.நல்ல நடிகை தேவயானி படத்தை தயாரிப்பதோடு இருந்திருக்கலாம்.நாயகன் நாயகியாக நடித்திருப்பது விஷப்பரீட்சையாகவேப் படுகிறது.இவ்வாறு கோடம்பாக்க வட்டாரங்கள் பேசும் பேச்சுகள் காதில் பட்டுக்கொண்டுதானிருக்கிறது.


திருமதி தமிழ் என்ற படம் எனக்கு திருப்புமுனையாக அமையும் என்று நடிகை தேவயானி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.படம் விரைவில் வெளிவர உள்ளது. இது நான் நடிக்கும் 75வது படம் ஆகும். இந்த படத்தை என்னுடைய கணவர் ராஜகுமாரன் இயக்கி நடிக்கிறார். எஸ்.ஏ.ராஜ்குமார் இசை அமைக்கிறார். இது தவிர ஏராளமான முன்னணி நடிகர், நடிகைகள் இந்த படத்தில் நடித்து உள்ளனர்.நல்ல கதையை மையமாக வைத்து இந்த படம் எடுக்கப்பட்டு உள்ளது. இந்த படத்தில் மாறுபட்ட கதாபாத்திரத்தில் நான் நடிக்கிறேன். நீண்ட இடைவெளிக்கு பிறகு திருமதி தமிழ் படத்தில் நடிக்கிறேன். இந்த படம் எனக்கு திருப்பு முனையாக அமையும் என்று   கூறியுள்ளார்.

படத்தின் இயக்குனரும், தேவயானியின் கணவருமான ராஜகுமாரன் கூறுகையில், திருமதி தமிழ் நான் இயக்கும் 4வது படம் ஆகும். இதற்கு முன் நான் இயக்கிய நீ வருவாய் என, விண்ணுக்கும் மண்ணுக்கும், காதலுடன் ஆகிய வெற்றி படங்களை இயக்கி உள்ளேன். இந்த வரிசையில் திருமதி தமிழ் சினிமா வெற்றிபடமாக அமையும். சட்ட பிரச்னையை மையமாக இந்த படம் உருவாக்கப்பட்டு உள்ளது. பொதுமக்களின் வாழ்க்கையில் பயன்படும் சட்டத்தை ஒழுங்குபடுத்தும் வகையில் இந்த படத்தின் கரு அமைந்து உள்ளது. ஆக்ஷன் நிறைந்த படம் ஆகும். கனல் கண்ணன் சண்டை பயிற்சி அமைத்து உள்ளார். எஸ்.ஏ.ராஜ்குமாரின் இசையில் பாடல்கள் நன்றாக வந்துள்ளன. இந்த படம் வெளியிடுவதற்கு தயாராக உள்ளது என்கிறார்.

திருமதி தமிழ் திரைப்படத்தை 400 திரையரங்குகளில் வெளியிட திட்டமிட்டுள்ளனர்.அதில் ராஜகுமாரனின் தோற்றம் குறித்து பலரும் கிண்டலாகப் பேசிவரும் சூழலில், அந்தப் படத்தை தமிழகத்தில் மட்டும் 400 அரங்குகளில் வெளியிட கணவனும் மனைவியும் ஏற்பாடு செய்து வருகின்றனர். ராஜகுமாரன் ஹீரோவாக நடித்துள்ள இந்த படத்தில் தேவயானி, கீர்த்தி சாவ்லா ஆகியோர் நடித்துள்ளார். படம் கண்டிப்பாக வெற்றிபெறும் என்ற நம்பிக்கையில் இவ்வளவு பிரம்மாண்டமாக ரிலீஸ் செய்கிறோம் என்கிறார் இயக்குனர் ராஜகுமாரன்.
Download As PDF
Share this article :
புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

9 comments:

  1. "இந்நிறுவனம் ஏற்கனவே அப்பாஸ், முரளி, தேவயானி நடித்து ராஜகுமாரன் இயக்கிய 'உன்னுடன்' என்ற படத்தை தயாரித்த "


    அண்ணே அது " காதலுடன் " . . .



    சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த இக்கட்டுரையில்



    பிழைகள் இருக்கலாமா . . .?

    ReplyDelete
    Replies
    1. அட ஆமாம் தோழரே..எவ்வளவு பெரிய வரலாற்று பிழை பாருங்கள்.இது கூட எனக்கு எப்படி தெரியாமற்போயிற்று,ஆயினும் பிழையை திருத்தச் செய்த உங்களுக்கு என நன்றி!

      Delete
  2. ராமராஜனின் தம்பி மாதிரி இல்லே ராஜகுமாரன்...?

    ReplyDelete
    Replies
    1. உத்துப் பாத்தீங்களோ?

      Delete
  3. இதுவும் கடந்து போகும்! வேறென்ன சொல்ல! பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete
  4. அட ஆண்டவா நீ உலகத்த காபாத்த வேண்டாம் அட்லிஸ்ட் தமில்லன் நி யாவது காப்பத்து காப்பத்து காப்பத்து காப்பத்து காப்பத்து காப்பத்து காப்பத்து

    ReplyDelete
  5. அட ஆண்டவா நீ உலகத்த காபாத்த வேண்டாம் அட்லிஸ்ட் தமில்லன் நி யாவது காப்பத்து காப்பத்து காப்பத்து காப்பத்து காப்பத்து காப்பத்து காப்பத்து

    ReplyDelete
  6. ஆண்டவா தமிழணை காப்பத்து காப்பத்து காப்பத்து காப்பத்து காப்பத்து காப்பத்து காப்பத்து காப்பத்து

    ReplyDelete
  7. நல்ல வேளை, பட நிறுவனத்தின் பெயரை ரா.தே புரொடக்‌ஷன்ஸ் என்று வைத்தார்கள். மாற்றி தே.ரா புரொடக்‌ஷன்ஸ் என்று வைத்திருந்தால், படம் தேறுமா தேறாதா என்று அவர்களுக்கே சந்தேகம் வந்தது போலாகியிருக்கும்! பண்டரிபாய், சாவித்திரி, வெ.ஆ. நிர்மலா என்று சொந்தப்படம் எடுத்து கஷ்டப்பட்ட நடிகைகளின் வரலாற்றைப் பார்த்தாவது நல்ல புத்தி வந்திருக்கலாம் தே.ரா ஜோடிக்கு! :-)

    ReplyDelete

கருத்துரைப் பெட்டியில் இடும் கருத்துகளுக்கு கருதிட்டவரே பொறுப்பாவர்..

Search This Blog

Email Subscribers

புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

Followers

Popular Posts

Google+

Tips Tricks And Tutorials

TNPSC - முக்கிய வினா-விடைகள்

எழுதிய மாத நாவல்கள் சில

 
Support :
Written by Madhumathi Published by www.madhumathi.com