புது வரவு :
Home » , , » TNPSC-புதிய தலைவர் அட்வகேட் ஜெனரல் ஏ.நவநீதகிருஷ்ணன்

TNPSC-புதிய தலைவர் அட்வகேட் ஜெனரல் ஏ.நவநீதகிருஷ்ணன்

வணக்கம் தோழர்களே..தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் (டி.என்.பி.எஸ்.சி.) தலைவராக முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரி ஆர்.நட்ராஜ் அவர்கள் செயல்பட்டு வந்தார்.இவரின் பதவிக்காலம் தேர்வாணையத்தின் பொற்காலம் என்று பலராலும் பாராட்டப்படுகிரது.இவரின் பதவிக்காலம் நிறைவடைந்ததை அடுத்து தேர்வாணையத்தின் புதிய தலைவராக அட்வகேட் ஜெனரல் ஏ.நவநீதகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார். 18.5.1956 அன்று பிறந்த நவநீதகிருஷ்ணன், பி.எஸ்.சி. பி.எல். பட்டம் பெற்று 1981–ம் ஆண்டு வக்கீலாக பதிவு செய்தார். பின்னர் தஞ்சாவூர் மாவட்ட கோர்ட்டுகளிலும், சென்னை ஐகோர்ட்டு மற்றும் சுப்ரீம் கோர்ட்டில் வக்கீலாகவும், அரசு வக்கீலாகவும் பணியாற்றியுள்ளார்.


2004–ம் ஆண்டு முதல் 2006–ம் ஆண்டு வரை டி.என்.பி.எஸ்.சி. உறுப்பினராக பதவி வகித்தார். 2011–ம் ஆண்டு மே மாதம் அட்வகேட் ஜெனரலாக நியமிக்கப்பட்டார். இந்த நிலையில், டி.என்.பி.எஸ்.சி. தலைவராக நவநீதகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார்.

டி.என்.பி.எஸ்.சி. தலைவர் பதவி காலம் 6 ஆண்டுகள் அல்லது 62 வயது ஆகும். இரண்டில் எது முதலில் வருகிறதோ அது கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். அந்த வகையில், டி.என்.பி.எஸ்.சி. புதிய தலைவராக நியமிக்கப்பட்டு உள்ள நவநீதகிருஷ்ணனுக்கு தற்போது 56 வயது ஆவதால் அவர் 6 ஆண்டுகள் இந்த பதவியில் இருப்பார்.

தற்போது டி.என்.பி.எஸ்.சி. தலைவராக பணியாற்றி வரும் ஆர்.நட்ராஜ் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 24–ந்தேதி பொறுப்பேற்றார். ஓய்வுபெற்ற ஐ.பி.எஸ். அதிகாரியான அவருக்கு மார்ச் மாதம் 12–ந்தேதி 62 வயது பூர்த்தியாகிறது. எனவே, டி.என்.பி.எஸ்.சி. விதிமுறைகளின்படி தலைவர் பதவியில் இருந்து நட்ராஜ் வருகிற 12–ந்தேதி ஓய்வு பெறுகிறார்.

இதற்கிடையில் டி.என்.பி.எஸ்.சி.யில் நடந்த முறைகேடு குறித்து விசாரணை நடத்த தமிழக அரசுக்கு உத்தரவிடக்கோரி தொடரப்பட்ட வழக்கில், பதில் மனு தாக்கல் செய்யும்படி டி.என்.பி.எஸ்.சி. தலைவர் நட்ராஜூக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சென்னை புழுதிவாக்கத்தை சேர்ந்தவர் எம்.ராமசாமி. இவர் சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:–

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தில் (டி.என்.பி.எஸ்.சி.), 27 ஆண்டுகள் பணி செய்துள்ளேன்.டி.என்.பி.எஸ்.சி. தலைவராக ஓய்வு பெற்ற டி.ஜி.பி. ஆர்.நட்ராஜ் பதவி ஏற்றதும், உறுப்பினர்களின் கருத்துக்களை எதுவும் கேட்காமல் தன்னிச்சையாக எல்லா முடிவுகளையும் மேற்கொண்டார். இதனால் சில நிதி முறைகேடுகள் நடந்துள்ளது.மேலும், உறுப்பினர்களின் கருத்துக்களை கேட்காமல், கல்வி தகுதி இல்லாத பி.குமார் என்பவரை டி.என்.பி.எஸ்.சி. குரூப்–1 தேர்வில் வெற்றிப் பெற்றதாக அறிவித்து, போலீஸ் துணை சூப்பிரண்டு பதவி நியமன உத்தரவை வழங்கியுள்ளார்.அதே போல, விழுப்புரம் மாவட்ட கருவூலத்தில் சூப்பிரண்டாக இருக்கும் கல்யாணி மீது ஏராளமான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு இருந்த போதும் கல்யாணி தப்பிக்கும் விதமாக நட்ராஜ் உத்தரவுகளை பிறப்பித்துள்ளார்.

இவர் டி.ஜி.பி.யாக பணி செய்த போது, தமிழக சட்டம்–ஒழுங்கு டி.ஜி.பி.யாக தன்னை நியமிக்க வேண்டும் என்று மத்திய நிர்வாக தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தார். அப்போது நட்ராஜ் சார்பில் வக்கீல் என்.எஸ்.நந்தகுமார் ஆஜரானார்.இந்த நிலையில், டி.என்.பி.எஸ்.சி. தரப்பு வக்கீலாக என்.எஸ்.நந்தகுமாரை நியமித்தும், ஏற்கனவே வக்கீலாக இருந்த எழிலரசி என்பவரை நீக்கியும் நட்ராஜ் உத்தரவு பிறப்பித்தார்.
 
நட்ராஜூக்கு எதிராக தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக கவர்னரிடம் 27.12.2012 அன்று புகார் மனு கொடுக்கப்பட்டது. என் புகார் குறித்து தகுந்த நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு பணியாளர் மற்றும் சீர்திருத்தத்துறை முதன்மை செயலாளருக்கு 29.1.2013 அன்று பரிந்துரை செய்தார்.கவர்னர் பரிந்துரை செய்த என் புகாரின் அடிப்படையில், டி.என்.பி.எஸ்.சி. தலைவர் நட்ராஜூக்கு எதிராக விசாரணை நடத்தி தகுந்த நடவடிக்கை எடுக்க பணியாளர் மற்றும் சீர்த்திருத்தத்துறை முதன்மை செயலாளருக்கு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

இந்த மனு நீதிபதி எஸ்.ராஜேஸ்வரன் முன்பு  விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் வக்கீல் எத்திராஜூலு ஆஜராகி வாதம் செய்தார். டி.என்.பி.எஸ்.சி. சார்பில் ஆஜரான வக்கீல் சி.என்.ஜி.நிறைமதி, தனக்கு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் செயலாளர் எம்.விஜயகுமார் அனுப்பியுள்ள கடிதத்தை கோர்ட்டில் தாக்கல் செய்தார்.இதனடிப்படையில், நீதிபதி ராஜேஸ்வரன் பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:–

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் செயலாளர் எம்.விஜயகுமார், வக்கீல் சி.என்.ஜி. நிறைமதிக்கு ஒரு கடிதம் அனுப்பியுள்ளார்.அந்த கடிதத்தில், ‘நட்ராஜ் மீதான குற்றச்சாட்டு குறித்து உண்மை அறியும் கமிட்டி மூலம் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யும்படி தமிழக கவர்னர், தமிழ்நாடு அரசு பணியாளர் மற்றும் நிர்வாக சீர்த்திருத்தத்துறை முதன்மை செயலாளர் ஆகியோரால் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளேன். எனவே சர்ச்சைக்குரிய சம்பந்தப்பட்ட ஆவணங்கள் அனைத்தும் என் கட்டுப்பாட்டில்தான் உள்ளது. இதை ஐகோர்ட்டில் தெரிவிக்கவும்’ என்று கூறியுள்ளார்.இதை இந்த கோர்ட்டு பதிவு செய்துக்கொள்கிறேன். இந்த வழக்கு குறித்து பதில் மனு தாக்கல் செய்யும்படி டி.என்.பி.எஸ்.சி. தலைவர் ஆர்.நட்ராஜூக்கு நோட்டீசு அனுப்ப உத்தரவிடுகிறேன். இந்த வழக்கு விசாரணையை வரும் 14–ந் தேதிக்கு தள்ளிவைக்கிறேன்.இவ்வாறு நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.
Download As PDF
Share this article :
புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

Search This Blog

Email Subscribers

புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

Followers

Popular Posts

Google+

Tips Tricks And Tutorials

TNPSC - முக்கிய வினா-விடைகள்

எழுதிய மாத நாவல்கள் சில

 
Support :
Written by Madhumathi Published by www.madhumathi.com