பதிவுலகத் தோழமைகளுக்கு வணக்கம்.. நீண்ட நாட்களுக்குப் பிறகு உங்களைச் சந்திக்கிறேன். இன்று நான் எடுத்திருக்கும் தலைப்பு பதிவர்கள் குடும்ப உறவுகளா? இந்த ஆண்டும் பதிவர் சந்திப்பு அவசியமா? இதுதான். இந்தத் தலைப்பில் ஒரு பதிவு அவசியமா? என்றால் அவசியம்தான்.ஆகவே இப்பதிவை எழுதுகிறேன்.
பதிவர்கள் குடும்ப உறவுகளா?
இந்த வினாவிற்கு பல பதிவர்களுக்கு பதில் தெரியும் சில பதிவர்களுக்கு பெரும்பாலும் புதிய பதிவர்களுக்கு இது என்ன வினா? இது எப்படி சாத்தியம் என்றே தோன்றும். நம்மோடு பள்ளிகளில் படித்த நண்பர்களைச் சந்திக்கும்போது ஏற்படும் உற்சாகம், நம்மோடு கல்லூரியில் பயின்ற நண்பர்களை சந்திக்கும்போது ஏற்படும் உற்சாகம், பல வருடங்களுக்குப் பிறகு உறவினர்களை சந்திக்கும் போது ஏற்படும் உற்சாகம், இன்னும் எத்தனையோ சந்திப்புகள் உற்சாகத்தைக் கொடுக்கின்றன. ஆனால் வெறும் கணினித் திரையில் மின்னும் எழுத்துக்களை வாசித்து அதில் குறிப்பிட்டுள்ள பெயரில் அழைத்து, பின்னூட்டங்கள் வாயிலாக நட்புதனைப் பாராட்டி, அந்நட்பு வளர்ந்து, அடுத்தக் கட்டமாய் தொலைபேசியில் உரையாடி, இன்னும் ஒரு படி மேலே சென்று, ஒரு நாளைக் குறித்து, அவர்களை சந்திக்கும் போது ஏற்படும் உற்சாகம் மேற்கண்ட அனைத்தையும் தூக்கி எறிந்துவிடுகிறது.
இப்படி இரண்டு பதிவர்கள் சந்தித்துக் கொள்வது மட்டுமல்லாமல் அவர்தம் குடும்பங்களும் சந்தித்து உறவாடும் நிகழ்வுகளும் அவ்வப்போது நிகழ்ந்து பதிவர்களுக்கு புதிய உறவுகளைப் பெற்றுக்கொடுக்கிறது என்றால் அது மிகையாகாது.சாதரண ஒருவனுக்கு உலகில் பெரும்பாலான நாடுகளில் நட்புகள் கிடைப்பது என்பது இயலாத ஒன்று.ஆனால் ஒரு வலைப்பதிவனுக்கு கட்டாயம் உலக அளவில் குறைந்த பட்சம் 25 நண்பர்களாவது இருப்பார்கள்.இந்த வலையுலகம் தந்த உறவுகள் குடும்ப உறவுகள்தான் அதில் மாற்றமில்லை. வலையுலக குடும்ப உறவுகள் தான்.உதாரணத்திற்கு புலவர் ஐயாவைப் பார்க்க பதிவர்கள் சென்றால் ஐயாவின் மகள் உறவினர்களை போல பெயர் சொல்லி அழைத்தே உபசரிப்பார்.
சென்னையில் உள்ள பதிவர்கள் அடிக்கடி சந்தித்துக் கொள்வதுண்டு. காரணங்கள் என்று எதுவும் இல்லாத போதும் கூட சந்தித்து நட்புக்களை புதுப்பித்துக் கொள்வது உண்டு.ஆனால் மற்ற நகரங்களில் இவ்வாறு சந்திப்புகள் நடக்கிறதா எனத் தெரியவில்லை.உதாரணமாக கடந்த வாரங்களில் சொல்லும்படியாக இரண்டு சிறிய பதிவர் சந்திப்புகள் சென்னையில் புலவர்.சா.இராமாநுசம் ஐயா அவர்கள் வீட்டில் நடந்தது.
சந்திப்பு-1 ஜூன் 2 ஞாயிற்றுக்கிழமை
சினிமா சினிமா தளத்தில் எழுதி வரும் பதிவர் ராஜ் அமெரிக்காவில் இருந்து வந்திருப்பதாக தகவல் கூறி சென்னையில் உள்ள பதிவர்களை
சந்திக்க விரும்புவதாக திடங்கொண்டு போராடு சீனுவிற்கு பேஸ்புக்கில் மெஸேஜ் அனுப்பியிருந்தார், எங்காவது
கூடி சந்திக்கலாம் என்று நினைத்த சந்திப்பு மினி பதிவர் சந்திப்பாக
உருவெடுத்துவிட்டது.இதற்கான ஏற்பாடுகளை சீனு செய்ய பதிவர்கள் சந்தித்து மகிழ்ந்தோம்.
மேல் வரிசை : (இ.வ)- ஆரூர் மூனா செந்தில், ஜெய்குமார், பாலகணேஷ், சென்னைபித்தன், புலவர் இராமாநுசம்,மதுமதி
கீழ் வரிசை : (இ.வ)- சீனு, அரசன், ராஜ், சிவக்குமார் (ஸ்கூல் பையன் இடம்பெறவில்லை)
சந்திப்பு -2 ஜூன் 18 செவ்வாய்க்கிழமை
கதம்ப உணர்வுகள் என்ற தளத்தில் எழுதி வரும் அன்புச் சகோதரி மஞ்சுபாஷிணி சம்பத்குமார் அவர்கள் குவைத்திலிருந்து சென்னை வந்ததையொட்டி பதிவர்களை ஒருநாள் முழுவதும் சந்திக்க உரையாட இருப்பதாக கூறினார்.அதன்படி ஜூன் 18 செவ்வாய்க்கிழமை சிறிய அளவில் ஒரு பதிவர் சந்திப்பு நடைபெற்றது. இது குறித்து மின்னல் வரிகள் கணேஷ் தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.காலை பத்து மணிக்கு ஆரம்பித்த சந்திப்பு மாலை 6 மணிக்கு முடிந்தது. மதியம் உணவு ஏற்பாட்டையும் (யாருக்கு என்ன வேண்டும் எனக் கேட்டு) சகோதரியே மகிழ்ச்சியோடு செய்தார்.அதற்கு முன்னதாக மஞ்சுபாஷிணி அவர்களை சந்திக்க அவர்களின் தங்கை வீட்டிற்கு நான் என் மனைவி மகளோடு சென்றிருந்தேன். அந்நாள் முழுவதும் என் குழந்தை மஞ்சுபாஷிணியின் மடியிலிருந்து இறங்காமல் விளையாடியது.மதிய உணவைக்கூட மகளுக்கு அவர்கள்தான் ஊட்டி விட்டார்கள். அவர்களின் 10 வயது மகன் இபானேஷ் என்னோடு இரு சக்கர வாகனத்தில் பயணித்து மகிழ்ந்தது, சகோதரியின் கணவர் என்னைத்தொடர்பு கொண்டு குடும்பத்தோடு உங்கள் வீட்டிற்கு வருகிறோம் என்று சொன்னது என இந்த உன்னதமான உறவை கொடுத்தது இந்த வலையுலகம் என்றால் ஆச்சர்யமாக இருக்கிறது.
மேல்வரிசை : (இ.வ) - சசிகலா, கண்ணதாசன், பால கணேஷ், ஸ்கூல் பையன், மதுமதி
நடு வரிசை : (இ.வ) - சேட்டைக்காரன், புலவர் ஐயா, மஞ்சுபாஷிணி
கீழ் வரிசை : (இ.வ) -ரூபக்ராம், சீனு, கோவை ஆவி
வெளிநாடுகளில் இருந்து வரும் பதிவர்கள் தங்கள் குடும்பத்தாரை சந்திக்க கொடுக்கும் முக்கியத்துவத்தை சக பதிவர்களுக்கு கொடுக்கிறார்கள் என நினைக்கும் போது வலையுல நட்பை எண்ணி பிரமிக்க வேண்டியிருக்கிறது.
இந்த ஆண்டும் பதிவர் சந்திப்பு அவசியமா?
இந்தக் கேள்வியும் இந்நேரத்தில் அவசியமான ஒன்று. ஏனெனில் ஆயிரக்கணக்கான பதிவர்கள் தமிழில் எழுதுகின்ற போதிலும், பின்னூட்டம், வாயிலாக உறவு பாராட்டுகின்ற போதிலும் அனைவரும் ஓரிடத்தில் கூடி உறவு பாராட்ட முடிவதில்லை. அது சாத்தியமில்லைதான். ஆனாலும் விரும்புகிறவர்கள், சூழ்நிலை அமைகின்றவர்கள், அமைத்துக் கொள்கின்றவர்களால் ஒன்றுகூட முடியும். அப்படி கிட்டத்தட்ட 160 பதிவர்களை சென்னையில் ஒன்று கூடச் செய்ததுதான் இதுவரை நடந்த பதிவர் சந்திப்புக்களில் மிகப்பெரிய சந்திப்பு. அது கடந்த வருடம் ஆகஸ்டு 26 ம் நாள் பலத்த எதிர்ப்புக்களுக்கிடையேயும் எதிர்பார்ப்புக்களுக்கிடையேயும் மிகவும் சிறப்பாக நடந்தேறியது.
அந்தச் சந்திப்பில் கலந்துகொண்ட பெண் பதிவர்கள் தங்கள் பிறந்து வீட்டிற்கு சென்று வந்ததைப் போல உணர்ந்தோம் இதுபோல அடுத்த சந்திப்பில் கலந்து கொள்ள ஆர்வமாக இருக்கிறோம் என்று சொன்னது இன்றும் நினைவில் நிற்கிறது. இப்படி சந்தித்துக் கொள்ள ஆர்வமாக இருக்கும் அனைவரின் ஆவலையும் பூர்த்தி செய்ய வேண்டும் அல்லவா?
கடந்த ஆண்டு நிகழ்வை நடத்திய குழுவினரை சக பதிவர்கள் சந்திக்கும் போது இந்த வருட சந்திப்பு எப்போது என மறவாமல் கேட்கின்றனர்.பல பதிவர்கள்
எழுதுவதேயில்லை.. எல்லாம் முகநூலுக்குச் சென்று விட்டார்கள் இந்நிலையில் பதிவர் சந்திப்பு வைத்தால் பலர் கலந்துகொள்வார்களா? எனவும் சிலர் புலம்புவதைக் கேட்க முடிகிறது. இந்நேரத்தில்தான் பதிவர் சந்திப்பு அவசியமானது என்பது எனது கருத்து. வலையுலகத்திற்கும் முகநூலுக்குமான வித்தியாசத்தை உணர வைக்கும் தருணம் இது. அதே நேரத்தில் பல பேர் கலந்து கொள்வார்கள், சில பேர் கலந்து கொள்வார்கள் என்பது இங்கு முக்கியமில்லை. எத்தனை பேர் வந்தாலும் சந்திக்கலாம். எண்ணிக்கை முக்கியமில்லை சந்திப்புதான் முக்கியம் என்று மெட்ராஸ்பவன் சிவக்குமார் அடிக்கடி சொல்லுவார்.
எனவே பல பதிவர்களின் எதிர்பார்ப்பு பதிவர் சந்திப்பை நோக்கி உள்ளதால் இந்த ஆண்டும் பதிவர் சந்திப்பு நடத்தலாம் என்ற பேச்சு எழுந்துள்ளது.சென்ற ஆண்டு நடத்திய அதே குழு இதற்கான ஆலோசனை கூட்டத்தை நடத்தியுள்ளது. வரும் ஆலோசனைக் கூட்டங்களில் பதிவர்கள் கலந்து கொள்ளலாம்.
இது குறித்து வரும் நாட்களிலும் ஆலோசனைக் கூட்டங்கள் நடைபெறும்.அதில் பதிவர்கள் கலந்து கொண்டு கருத்துக்களைப் பகிரலாம்.கூட்டம் நடக்கும் இடம், நாள் குறித்து நாளை அறிவிக்கப்படும்.
பதிவர்கள் குடும்ப உறவைப் போன்றவர்கள்தான் மாற்றுக்கருத்தில்லை. ஆதலால் இந்த வருடமும் பதிவர் திருவிழாவை நடத்துவோம்.. சந்திப்போம்.. உறவை போற்றுவோம்..
மகிழ்ச்சிடன்
சந்திப்புக்கள் தொடரட்டும். பாராட்டுக்கள். வாழ்த்துகள்.
ReplyDeleteநிச்சயம் தொடரும் ஐயா..
Deleteசந்திப்பு தொடரட்டும்
ReplyDeleteவாழ்த்துக்கள்
மகிழ்ச்சி தோழரே..தொடரலாம்.
Deleteஅன்பின் மதுமதி - பதிவர் சந்திப்பு நிச்சயம் அவசியம் - அதுவும் சென்ற முறை நடத்திய பதிவர் சந்திப்பு, இது வரை நடந்த மற்ற பதிவர் சந்திப்புகளை விட, அதிகம் பதிவர்கள் கலந்து கொண்டு பெருமையுடன் மகிழ்ச்சியுடன் நடத்திய சந்திப்பு. வந்திருந்த அனைத்துப் பதிவர்களும் ஒருமித்த குரலில் சிறந்த சந்திப்பு எனப் பாராட்டியமை இன்றும் மனதில் நிற்கிறது. இவவாண்டும் சிறந்த முறையில் நடத்த வேண்டுகிறேன். நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
ReplyDeleteஉண்மைதான் ஐயா.. இந்த முறையும் உங்கள் ஆதரவோடு சிறப்பாய் நடக்கும்..
ReplyDeleteபதிவர் சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்தது ...அனைவரின் ஒத்துழைப்போடு சிறப்பாக நடத்துவோம்...
ReplyDeleteஆமாம் தோழரே..
Deleteதொடரும் பதிவர் சந்திப்புகளுக்கு
ReplyDeleteசிறப்பு வாழ்த்துகள்..!
மகிழ்ச்சி அம்மா..
Deleteகடந்தாண்டு நடந்த பதிவர் சந்திப்பு முதல்முறை என்பதால் அதிகம் பேர் கலந்துகொண்டனர்.... ஆனால் இந்த வருடமும் அத்தனை பேர் கலந்துகொள்வார்களா என்பது சந்தேகமே.... தாங்கள் கூறியபடி பலர் முகனூல் பக்கம் போனதும் ஒரு காரணம்... வெளியூர் பதிவர்களில் சிலர் நேரமின்மை மற்றும் பயணம் செய்ய முடியாஇ காரணமாக வர முடியாமல் போகலாம்.... ஆகபே புதியவர்கள் தவிர்த்து மற்றவர்கள் கலந்துகொள்ளாமல் போகும் வாய்ப்பு அதிகம்...
ReplyDeleteஎதற்கும் யார் யார் வருவார்கள் என்பதை முன்கூட்டியே மின்னன்சல் மூல் கேட்டுத் தெரிந்துகொள்ளுதல் நலம்.....
ஆமாம் நண்பா..அப்படியே செய்யலாம்..
Deleteகண்டிப்பாக சந்திப்பு தொடர வேண்டும்... எந்த நாள் என்பதை முதலில் சொல்வது நல்லது; இல்லையெனில் உத்தேசமாகவாவது எந்த நாள், எங்கே... etc., என்பதை விரைவில் முடிவு செய்து தெரிவியுங்கள்... நன்றி...
ReplyDeleteஆலோசனைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்படும்..
Deleteமுதல் சந்திப்பு நிகழ்வில் இருந்து இன்னமும் மனம் நகர மறுக்கிறது. அதற்குள் அடுத்த சந்திப்பா சிறப்பு தான் . இனிதே தொடர்வோம்.
ReplyDeleteதொடர்வோம்.
Deleteஉங்கள் ஆர்வம் மற்றும் ஊக்கம் மிகப் பெரிது மதுமதி... நிச்சயம் இம்முறையும் சிறப்பாய் பதிவர் சந்திப்பை பதிவர்கள் அனைவரும் சேர்ந்து நடத்திவிடுவோம்
ReplyDeleteநிச்சயமாய் சீனு..
Deleteபதிவர் சந்திப்பு நிச்சயம் வேண்டும் மதுமதி ஸார்!போனமுறையை விட இந்த தடவை இன்னும் நிறைய பேரை சந்திக்க ஆவலாக இருக்கிறேன்.
ReplyDeleteபதிவர்கள் குடும்ப உறவைப் போன்றவர்கள்தான் - எங்களுக்கும் மாற்று கருத்தில்லை.
DD சொல்வதுபோல கொஞ்சம் முதலிலேயே சொல்லிவிடுங்கள்.
ஆமாம்மா..நீங்க சொல்றமாதிரியே செஞ்சுடலாம்.பெங்களூரிலிருந்து சென்றமுறை வந்ததைப் போலவே இந்த முறையும் வந்துவிடுங்கள்..
Deleteமது சொல்லிட்டா மாற்றுக் கருத்து உண்டா என்ன? அவசியம் நடத்திடலாம். இப்ப நானும் முழு உற்சாகத்தோட தயாரா இருக்கேன். அசத்திரலாம்! (மஞ்சுவின் மகன் பெயர் இபானேஷ் மது!)
ReplyDeleteஆமாண்ணே..நான் அவுங்க அண்ணன் அஞ்சானேஷ் பேரை போட்டுடுட்டேன்.
Deleteஎத்தனை பேர் கலந்து கொள்வார்கள் என்பது முக்கியம்
ReplyDeleteஇல்லை சந்திப்புத்தான் முக்கியம் என்பதையே நானும்
வரவேற்கின்றேன் .பதிவர்கள் நாம் நிட்சமாக சத்தியமாக
ஒரு குடும்பத்தைச் சார்ந்தவர்கள் என்பதில் மாற்றுக்
கருத்திற்கே இடமில்லை .இந்த வலைத் தளத்தில் நாம்
முதலில் உணர்வுகளால் ஒன்று பட்டவர்கள் எந்த வித
எதிர்பார்ப்புமின்றி ஒருவரை ஒருவர் சந்திக்காமலேயே
எமக்குள்ளே ஓர் உன்னதமான நட்பை வளர்த்துக் கொண்டோம்
இந்த நட்பு என்றென்றும் தொடர வேண்டும் சகோதரரே ,இதற்க்கு
ஒத்துழைப்பு வழங்கும் உங்களைப் போன்றவர்களுக்கு என்
நெஞ்சார்ந்த நன்றிகளையும் வாழ்த்துக்களையும் கூறிக்
கொள்வதில் பெருமை கொள்கின்றேன் .அடுத்த கட்ட சந்திப்பு
மிகச் சிறப்பாக அமையவும் என் வாழ்த்துக்கள் சகோதரரே !!....
மிக்க நன்றி பகிர்வுக்கு .
உண்மைதான் சகோதரி..உங்கள் கருத்திற்கும் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி..
Deleteசிறந்த முறையில் நடத்த வாழ்த்துகள் .
ReplyDeleteநடத்திடலாம் வாங்க..
Deleteநடத்தலாமா வேண்டாமா என்று ஆரம்பிக்க பொது தயக்கம் இருக்கதான் செய்யும் ஆனால் முடிவு செய்து ஆரம்பிக்கும் போது மழைத்துளி போல சிறிது சிறிதாக வந்து இறுதியில் கட்டுக்கடங்கா வெள்ளமாக மாறிவிடும். நல்லபடியாக நடக்க எந்து வாழ்த்துக்கள் & பாராட்டுக்கள்
ReplyDeleteஎனக்கும் கலந்து கொள்ள ஆசையாகத்தான் இருக்கிறது ஆனால் இப்போது என்னால் கலந்து கொள்ள இயலாது, நான் ரஜினி சொன்ன மாத்திரி நான் வருவேன் ஆனால் எப்ப வருவேன் என்று சொல்ல முடியாது. ஆனால் ஒரு நாள் கண்டிப்பாக வந்து கலந்து கொள்வேன்
வாங்க நண்பா..எப்போது வேண்டுமானாலும் வாங்க..கட்டாயம் சந்திப்போம்..
Deleteநிச்சயம் நடத்தலாம்.நிச்சயம் அனைவரது ஆதரவும் கிடைக்கும்
ReplyDeleteநடத்திடலாம் கோகுல்..
Deleteநடத்தலாம் சகோ! அப்போதான் எல்லாரையும் பார்க்கும் வாய்ப்பு கிடைக்கும்..,
ReplyDeleteசென்ற வருடம் போல இந்த வருடமும் உறவுகளை சந்திக்க ஆர்வமாக இருக்கிறேன் . கூட்டங்கள் ஏதுமிருப்பின் தெரியப்படுத்தவும் . அன்புடன் அனந்து ..
ReplyDeleteகல்யாணம்னாலும், கருமாதினாலும், சொந்த பந்தங்களுக்குள்ளேயே நாலு பிரச்சினை, 10 பேருக்குள்ளே கருத்து வேறுபாடு, ரெண்டு மூனு கோஷ்டி மோதல், அடிதடி, வாதம், விவாதம் இதெல்லாம் வரத்தான் செய்யும். நம்மல்லாம் தமிழர்களாச்சே! :) பதிவர் சந்திப்பு மட்டும் அதற்கு எப்படி விதிவிலக்காகும்?
ReplyDeleteபதிவர் சந்திப்பை ஒரு தமிழனா, தமிழ் குடும்பமாக "பெரிய கண்ணோட்டத்தில்" பார்க்கணும்!
தமிழ் பதிவர்கள் சந்திப்பு நிச்சயம் தமிழை நீடூழி வாழவைக்கும், தமிழை சந்தோசப்படுத்தும், அதனால் நிச்சயம் அது அவசியமே!
இவ்வாண்டும் தமிழர்களின் பதிவர்கள் சந்திப்பு சிறப்பாக நடந்து முடிய வாழ்த்துக்கள்!
-வருண்
"எத்தனை பேர் வந்தாலும் சந்திக்கலாம். எண்ணிக்கை முக்கியமில்லை சந்திப்புதான் முக்கியம்" தொடரட்டும் இப்பணி
ReplyDeleteகலந்துகொள்ள ஆவலோடு இருக்கிறேன்
ReplyDeleteஅன்பின் மதுமதி - செப்டம்பர் முதல் தேதி சென்னையில் வடபழனியில் மாபெரும் பதிவர் சந்திப்பு ஏற்பாடு செய்யப் பட்டிருக்கிறது என அறிந்தேன். மிக்க ம்கிழ்ச்சி - ஆனால் நானும் என் துணைவியும் ( இருவருமே பதிவர்கள் ) தற்போது அயலகத்தில் இருக்கிறோம் - செப்டம்பர் இறுதியில் தான் தாயகம் திரும்புகிறோம். சந்திப்பு சிறப்புடன் நடை பெற நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
ReplyDeleteபின் தொடர்வதற்காக
ReplyDeleteஇந்த ஆண்டு பதிவர் சந்திப்பு உண்டா மது?
ReplyDelete