தமிழ் சினிமாவை தாங்கிப் பிடித்துக்கொண்டிருப்பது பாடல்கள் தான் என்றால் அது மிகையாகாது.தமிழில் முதல் பேசும் படமான காளிதாஸ் 1931 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எச். எம். ரெட்டி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் பி. ஜி. வெங்கடேசன், டி. பி. ராஜலட்சுமி மற்றும் பலரும் நடித்துள்ளனர். இத்திரைப்படத்தில் கிட்டத்தட்ட ஐம்பது பாடல்கள் இடம்பெற்றிருந்தன.அத்தனைப் பாடல்களையும் நமது முன்னோர்கள் ரசித்து மகிழ்ந்திருக்கிறார்கள்.அதற்குக் காரணம் தமிழர்களின் தாய்மார்கள் தாய்ப்பாலோடு தாலாட்டையும் ஊட்டி வளர்த்திருந்ததுதான்.
ஆகவே இன்றையத் தமிழனாலும் இசையின்றி வாழமுடிவதில்லை.உலகத்தின் எந்த மூலையில் தமிழன் இருந்தாலும் இசையோடுதான் வாழ்ந்து கொண்டிருக்கிறான். காட்டிலும் வீட்டிலும் வாய் வழியாக ஒலித்த பாடல் பின்பு பதியப்பெற்று திரைப்படங்களின் வாயிலாகவும் ஒலிபெருக்கியின் வாயிலாகவும் கேட்பதற்கிணங்க மறு வடிவம் பெற்றது.பல்வேறு மொழி திரைப்படங்களில் பாடல்களே இல்லாத போதும் பாடல்களை விடுத்து தமிழனால் திரைப்படம் எடுக்க முடிவதில்லை.அந்தளவிற்கு பாடல் தமிழனின் ரத்தத்தில் ஊறியிருக்கிறது.
சில பாடல்களைக் கேட்கும்போது அழுகிறோம் , ஆராதிக்கிறோம், எங்கேயோ பறக்கிறோம்.. சில பாடல்கள் ஏதோவொரு சந்தர்ப்பத்தில் நாம் அழுததையோ, சிரித்தைதையோ, கடந்த கால காதலையோ ஞாபகப்படுத்தும்.அந்த நிமிடங்களில் உண்மையில் மனம் கரைந்து போகிறது.70, 80 வயதைத் தாண்டிய பலரையும் எம்.எஸ் விஸ்வநாதனின் இசையும் சௌந்திரராஜனின் குரலும் இன்னும் மகிழ்ச்சியாக உலவ வைத்துக் கொண்டிருக்கிறது என்றால் அது உண்மை.இசை உயிரை காக்கவும், போக்கவும் வலிமை பெற்றது.
தன்னை உருக்கிய இசையமைப்பாளரை தெய்வத்திற்கு சமமாகவும் பல ரசிகர்கள் உயர்ந்த்திப் பிடிக்கிறார்கள்.
சமீபத்தில் இணையத்தில் உலவிக்கொண்டிருந்த போது ஒரு காணொளி கண்ணில் பட்டது.அதைப் பார்த்தவுடன் மனம் கொஞ்சம் தளர்ந்துதான் போனது.பல இசையமைப்பாளர்கள் பிறரது இசையை காப்பியடித்து இங்கே புகழடைகிறார்கள் என பல கிசுகிசுக்கள் வந்ததுண்டு.அதை கண்டு பிடித்து அலசி ஆராய்ந்த இந்த காணொளியைப் பார்த்தபோது பல இசையமைப்பாளர்கள் என் மனதை விட்டு மெதுவாக இறங்கிக்கொண்டார்கள் என்பது உண்மை.அவர்களின் உண்மையான உழைப்பில் எழுந்த பாடல்கள் கூட அவருடையதுதானா என்ற சந்தேகப்பார்வையும் இந்தக் காணொளி ஏற்படுத்திவிட்டது.இந்தக் காணொளியை பலர் பார்த்திருக்கக்கூடும் பார்க்காதவர்களுக்காக இதை இங்கே பகிர்கிறேன்.

மேலே கண்ட ஒவ்வொரு பாடலும் அந்தந்த இசையமைப்பாளரின் புகழை ரசிகர்கள் மத்தியில் ஓங்கச் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது. 'இந்தப் பூவுக்கும் வாசம் உண்டு' பாடலை நான் அடிக்கடி முணுமுணுப்பது உண்டு.அதன் இசை என்னோடு கலந்த ஒன்று.இளையராஜாவின் இசையில் வந்த பிரமாதமான கம்போஷிங்கில் அதுவும் ஒன்று என்ற உண்மை இங்கே பொய்யாகும் போது மனம் ஒரு கனம் மௌனமாகிறது.ஒரு சில இசையமைப்பாளரைத் தவிர பிறர் முழுப்பாடலையும் அப்படியே காப்பியடிக்காதது சிறு ஆறுதல்.
இங்கேயும் காப்பி தானா...? ஒரு வாரமாக எனது பதிவு உட்பட காப்பி பற்றி தான் பகிர்வுகளே... வீட்டில் காஃபி குடிக்க கூட விருப்பமில்லை... ஹிஹி...
ReplyDeleteபழைய பாடல்கள் vs புதிய காப்பி பாடல்கள்... என்னிடம் ஒரு தொகுப்பே உண்டு... நேரம் கிடைக்கும் போது வரிகளோடு + இசையோடு பதிவிடுகிறேன்...
அப்படியா..இடுங்கள் தலைவரே..
Deleteகாணொளி முழுவதும் பார்த்தேன்... அடப்பாவிகளா என்று சொல்லவைத்தது...
ReplyDeleteஅதுக்காக அவுங்கள் பாவிங்கன்னு சொல்லவேண்டாம் ஸ்கூல் பையரே..
Deleteயம்மாடி.....
ReplyDeleteவேறென்ன சொல்றது..
Deleteஇளையராஜா சிறந்த படைப்பாளி அதனால்தான் பெரும்பாலும் அவர் இசையை காப்பியடிக்கிறார்கள்
ReplyDeleteவீடியோவைப் பாக்காமலேயே கருத்தைச் சொல்லாதீங்க ஐயா..பாத்துட்டு யார் யாரைப் பாத்து காப்பியடிச்சாங்கன்னு சொல்லுங்க..
Deleteப்ச்ச்ச்ச் ஒண்ணும் சொல்றாதுக்கில்ல. ஆனா, இருக்குற 7 ஸ்வரத்துக்குள்ளதானே எல்லா பாடல்களும் வந்தாகனும். அதனால, காப்பி போல தோணுதோ!?
ReplyDeleteவீடியோவைப் பாருங்க..
Deleteஇதுக்கெல்லாம் இன்னொரு பேரும் வைச்சிருப்பாங்க அவங்க-இன்ஸ்பிரேஷன்
ReplyDeleteஅப்படித்தான் கோகுல் சிலர் சொல்றாங்க..
Deleteகாப்பி அடிக்காத ஆளையே பார்க்க முடியாதோ இந்த காலத்தில்
ReplyDeleteதெரியலையேங்க..
Deleteஇந்த தொகுப்பை கேட்டதிலிருந்து இனி எந்த பாடலை கேட்டாலும் இதுவும் சொந்தமா இல்லை காப்பியான்னு மனசுக்குள் எழுவதை தடுக்கமுடியாது :-(
ReplyDeleteஉண்மைதான்..
Deleteம்ம் இது ஒரு இன்பிரேசன் போலத்தான்!ம்ம் பகிர்வுக்கு நன்றி சார்!
ReplyDeleteஇருக்கலாம் போங்க..
Deleteஇந்த பூவுக்கும் வாசம் உண்டு பாடல் முழுமையான COPY அல்ல.
ReplyDeleteபல்லவி மட்டும் தான் copy செய்யப்பட்டுள்ளது.
இரண்டாவது இந்த விடயம் 1997ம் ஆண்டே எனக்கு தெரியும். இணையத்தில் பிரபலமாக இருந்தது. உங்களுக்கு இப்போதுதான் தெரியும் என்பது அதிசயமாக இருக்கின்றது.
ராஜா மட்டுமல்ல மெல்லிசை மன்னரும் இதில் கில்லாடிதான். சுட்டு தள்ளியிருக்கின்றார்.
ஆமாம் தோழரே..இணையத்தில் அதிகமாக உலவுவதில்லை..
Deleteகாப்பி அடிப்பதைப் பற்றி நம்மிடம் சரியான புரிதல் இல்லை நண்பரே. ஒரே மெட்டை பயன்படுத்துவதே காப்பி என்ற வகையில் வரும்.ஒரே தாளம் கொண்ட பல பாடல்கள் இருக்கின்றன. அவர்கள் அதையும் காப்பி லிஸ்டில் சேர்த்து விட்டார்கள். எம் எஸ் வி, இளையராஜா போன்றவர்கள் பெரும்பாலும் அதிரடியாக காப்பி அடிப்பதில்லை என்பதே உண்மை. ரகுமான் கூட உலக இசையின் சில கூறுகளை மட்டுமே பயன்படுத்துகிறார். ஹாரிஸ் ஜெயராஜ் பல ஆங்கில பாடல்களை நகல் எடுப்பவர். தேவாவைப் பற்றி சொல்லவே வேண்டாம்.பெரிய இசை அமைப்பாளர்கள் இது போன்று திருடுவதில்லை.
ReplyDeleteஉண்மைதான் தோழரே..
Deleteஉண்மைதான் அண்ணா எத்தனையோ புது பாடல்களை கேட்டு விட்டு அது ஏற்கனவே கேட்ட மாதிரி இருக்கே என்று நினைச்சு குழம்பியிருக்கன்....
ReplyDeleteஆமாம் எஸ்தர்..எப்படி இருக்கேம்மா..ரொம்ப நாளாச்சு..
Deleteஇசை என்றாலே "காப்பியை" தவிர்க்க முடியாது என நம்புகிறேன். தேவா எதையுமே தன் ஒரிஜினல் இசையாக சொல்லிக்கொண்டு அலைவதில்லை. ஆனால் எம் எஸ் வி, இளையராஜ, ரகுமான், ஹரீஸ் ஜெயராஜ் யாவருமே இதற்கு விதிவிலக்கல்ல என்பது தெரியும் (உங்க வீடியோவை அனலைஸ் செய்யாமலே சொல்கிறேன்).
ReplyDeleteஆனால் அதை அவர்கள் தேவாபோல் ஒத்துக்கொள்ளுவதில்லை. காரணம்? அவங்களுடைய "ஒரிஜினல் க்ரியேஷன்" களும் ஓரளவுக்கு கனிசமாஅக உண்டு என்பதால், இருந்தாலும் "காப்பியடிப்பதை தவிர்க்க முடியாது" னு அவர்ள் ஒத்துக்கொள்ள்லாம். அப்படி செய்வதில்லை!
காப்பினா எனக்கு கமலஹாசன் ஞாபகம்தான் வருது. அவரை மேதை என்று சொல்லாத மேதைகளும் உண்டா என்ன? Has he ever admitted that he does copy others?
நீங்களும் போட்டு இசையமைப்பாளர் காப்பிகளைத்தான் விமர்சிச்சிக்கிட்டு இருக்கீங்க! Next time you could write about Kamalahasan's copy creations when time permits! People like Sujatha, and the whole brahmin media never addressed this ever and dare to criticize this "genius" as he LACKS any original thinking. If someone brings it up, then he will be labelled as "kamalhasaan hater" by his worshipers.
Now you reveal the "copying skills" of Music directors. For that, you should be labelled as WHAT?