தமிழ்த்திரையுலகில் சில நடிகர்கள் வந்த வேகத்தில் காணாமல் போவதும் சில நடிகர்கள் இருபது முப்பது வருடங்களாக தொடர்ந்து மார்க்கெட்டில் இருப்பதும் ஆச்சர்யப்படும் விசயம் இல்லை. இது ஹீரோ நடிகர்களுக்கு மட்டுமல்லாது காமெடி நடிகர்களுக்கும் பொருந்தும். சில காமெடி நடிகர்கள் சில ஹீரோக்களை விட செல்வாக்கு பெற்றவர்களாகவும் ஹீரோவை விடவும் அதிக சம்பளம் பெற்று புகழிலும் ஓங்கியிருந்தனர். முன்னுதாரணமாக தமிழ் சினிமாவை முப்பது ஆண்டுகளாக தன் கைப்பிடியில் வைத்திருந்த கவுண்டமணியைச் சொல்லலாம். அவருக்கு அடுத்ததாக நகைச்சுவையில் தமிழ் சினிமாவை இருபது ஆண்டுகளாக தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்த நகைச்சுவை நடிகர் வடிவேலுதான் என்று சொன்னால் மிகையாகாது.
கவுண்டமணி அவர்கள் உச்சத்தில் இருக்கும்போது ஒரு படத்திற்கு இவ்வளவு சம்பளம் என்பதைத்தாண்டி ஒரு நாளைக்கு இவ்வளவு சம்பளம் என நிர்ணயித்து நடித்தவர்.அவரைப் போலவே வடிவேலுவையும் சொல்லலாம். வடிவேலுவின் கால்சீட் இருந்தால் போதும் ஒரு இயக்குனருக்கு தயாரிப்பாளர் கிடைத்துவிடுவார்.அந்தளவிற்கு தயாரிப்பாளர்களின் மனதிலும் ரசிகர்களின் மனதிலும் சிம்மாசனம் போட்டு அமர்ந்திருந்தவர் வடிவேலு.

பிரபலமான நடிகர்கள் அரசியலுக்கு வருவது என்பது தமிழ் சினிமாவில் சாதாரணமான விசயமாக இருந்தாலும் அதில் இருந்து விலகி இருந்த, இருக்கும் பிரபலங்கள் எத்தனையோ பேர். அப்படி அரசியலுக்குள் நுழைவதில் இரண்டு வகையுண்டு.ஒன்று சில வருடங்கள் திட்டம் போட்டு அதற்கென உழைத்து ரசிகர்களை ஒன்று திரட்டி முறையாக அறிவித்து களத்தில் இறங்குவது.மற்றொன்று,தனிப்பட்ட காரணத்திற்காகவும் தான் யார்?, தன் செல்வாக்கு என்ன என்பதை மற்றவருக்கு நிரூபிப்பதற்காகவும் யோசிக்காமல் திட்டமிடாமல் தடாலடியாக குதிப்பவர்கள்.அப்படி குதித்து பிறகு நீச்சலடிக்க சிரமப்பட்டு மெதுவாக கரையேறியவர்கள் உண்டு.அப்படி அவரமாக குத்தித்து இப்போது மெதுவாக கரையேறி வருபவர் நடிகர் வடிவேலு.

ஆளுங்கட்சியை பகைத்துக் கொண்ட காரணத்தினால் பட வாய்ப்புக்களை இழந்த வடிவேலு புதிய படத்தில் நடிக்கிறார் என்ற செய்தி அவ்வப்போது பத்திரிக்கையில் அடிபட்டது. இப்போது அது உண்மையென ஊர்ஜிதம் ஆகியிருக்கிறது.2 ஆண்டுகள் இடைவெளிக்குப்பின், அவர் மீண்டும் அரிதாரம் பூசியிருக்கிறார். இந்த படத்துக்கு, ‘ஜெகஜால புஜ பல தெனாலிராமன்’ என்று பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது. இதில், வடிவேல் இரட்டை வேடங்களில் நடிக்கிறார். இது, சரித்திர பின்னணி கதை. யுவராஜ் தயாளன் டைரக்டு செய்கிறார். ஏ.ஜி.எஸ். எண்டர்டைனர்ஸ் சார்பில் கல்பாத்தி அகோரம், கல்பாத்தி கணேஷ், கல்பாத்தி சுரேஷ் ஆகிய மூவரும் தயாரிக்கிறார்கள்.1,000 படங்களுக்கு மேல் வசனம் எழுதியவரும், 60 வருட சினிமா அனுபவம் உள்ளவருமான ஆரூர்தாஸ், இந்த படத்துக்கு வசனம் எழுதுகிறார். படப்பிடிப்பு, இன்று தொடங்குகிறது. இதற்காக, ஏ.வி.எம். ஸ்டூடியோவில் மிக பிரமாண்டமான தர்பார் அரங்கு போடப்பட்டு இருக்கிறது. அதில், வடிவேல் நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட உள்ளன.
வடிவேலு மார்க்கெட்டில் இல்லையென்றாலும் சின்னத்திரையில் வடிவேலுவின் நகைச்சுவைதான் பெருமளவில் குழந்தைகளையும் அவரது ரசிகர்களையும் மகிழ்வித்து வருகிறது. தொடர்ந்து அவர் பல படங்களில் நடித்து ஆபாசம், இரட்டை அர்த்த வசனங்கள் மற்றும் பிறர் மனதைப் புண் படுத்தாத நகைச்சுவையை மீண்டும் தமிழ் ரசிகர்களுக்குக் கொடுக்கட்டும்.

I agrer with u
ReplyDeleteEvery senyencce is correct n mice
வந்துட்டாரையா... வந்துட்டாரு வைகைப் புயல்...!
ReplyDeleteயதார்த்தமான நகைச்சுவையோடு விரைவில் வரட்டும்... எல்லோரும் விரும்புவதும் அதுவே...
நீங்களும் இந்த மாதிரிப் பதிவெல்லாம் எழுதக் கெளம்பிட்டீங்களா?!வாழ்க,வெல்க!
ReplyDeleteநடிகர் வடிவேலு மீண்டும் நடிக்கிறார் என்பது மகிழ்ச்சியான விஷயம்தான். தகவலைத் தந்த ஆசிரியருக்கு நன்றி!
ReplyDeleteவடிவெலுவாகவெ வரட்டும் காமடியில் கலக்கட்டும் வாழ்த்துக்கள்.
ReplyDelete