புது வரவு :
Home » , , , » TNPSC தேர்வுக்குத் தயாராகலாம் வாங்க!

TNPSC தேர்வுக்குத் தயாராகலாம் வாங்க!

வணக்கம் தோழர்களே.. எப்படியிருக்கீங்க? வருகிற ஆகஸ்டு மாதம் 25 ம் தேதி நடைபெற உள்ள குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பித்துவிட்டீர்களா? என்னது இன்னும் இல்லையா? இன்னும் நாட்கள் இருக்கிறதே ஒரு வாரத்திற்கு முன்னாடி விண்ணப்பிக்கலாம் என்று காத்திருக்கிறீர்களா? அது தவறு. தேர்வுக்கு விண்ணப்பிக்காதவர்கள் உடனே விண்ணப்பிக்கவும். தாமதமாக விண்ணப்பிப்பதால் தேர்வில் வெற்றி பெற்றாலும் முன்னுரிமையை இழக்கக்கூடும். எனவே தாமதிக்காமல் விண்ணப்பியுங்கள்.தேர்வு குறித்த பதிவுகளை எழுத போதுமான நேரம் கிடைக்கவில்லை.ஆகவே பதிவுகள் எழுதுவதை நிறுத்தியிருந்தேன்.தேர்வு குறித்த சந்தேகங்கள் மற்றும் பதிவுகள் பெற admin@madhumathi.com என்ற மின்னஞ்சலை தொடர்பு கொள்ளச் சொல்லியிருந்தேன்.வேலைப்பளுவின் காரணமாக கடந்த ஒரு மாதமாக அந்த மின்னஞ்சலை திறக்காமல் இருந்தேன்.இரண்டு நாட்களுக்கு முன் திறந்து பார்த்தால் 1200 அஞ்சல் வந்திருந்தது.பெரும்பான்மையான அஞ்சல்கள் பதிவுகள் கேட்டும், தொடர்ந்து தேர்வு குறித்த செய்திகளை பகிர்ந்து கொள்ள வேண்டியும் வந்திருந்தது.இந்தத் தளத்திற்கு இத்தனை வாசகர்களா என என்னால் நம்பவே முடியவில்லை.உங்கள் எதிர்பார்ப்பைப் போக்கும் வகையில் வேலைப்பளுவிற்கு மத்தியில் கிடைக்கும் நேரங்களில் தேர்வு குறித்த பதிவுகளை எழுதலாம் என இருக்கிறேன்.எதிர்வரும் பதிவுகளில் தேர்வுக்கு எப்படி தயாராகலாம்? என்ன படிக்கலாம்? பாடத்திட்டங்கள் குறித்த விளக்கம் என அனைத்தும் இடம் பெறும்.


இந்தத் தளத்தில் ஏற்கனவே வாசித்துக் கொண்டிருக்கும் பலர் மின்னஞ்சல் சந்தாதாரராக இருக்கிறார்கள்.அவர்களுக்கு இனி எழுதப்படும் புதிய இடுகைகள் அவர்களின் மின்னஞ்சலுக்கு வந்துவிடும்.இதுவரை 2509 வாசகர்கள் மதுமதி.காம் தளத்தின் இலவச மின்னஞ்சல் வாசர்களாக இருக்கிறார்கள்.புதிய பதிவுகளை உடனுக்குடன் பெற்று வருகிறார்கள்.நீங்கள் தளத்திற்கு புதியவராக இருந்தால் தொடர்ந்து எழுதப்படும் பதிவுகள் உங்களுக்குத் தேவைப்பட்டால் உங்கள் மின்னஞ்சலை கீழே இருக்கும் பெட்டியில் கொடுத்து பதிவு செய்துகொள்ளுங்கள்.எழுதப்படும் புதிய பதிவுகள் உங்கள் மின்னஞ்சலுக்கு உடனுக்குடன் வந்துவிடும்.பழைய பதிவுகள் வேண்டுவோர்  admin@madhumathi.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள்.
புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற


தேர்வுக்கு இன்னும் நாட்கள் இருக்கிறது என படிப்பதை தள்ளிப் போடாதீர்கள்.

படித்துக்கொண்டே இருந்தவர்களே இதுவரையில் தேர்வாகியிருக்கிறார்கள் என்பதை மறந்துவிட வேண்டாம்.

எல்லாம் படித்ததுதான்.ஆனால் அவற்றை அவ்வப்போது மறந்துவிடுகிறோம்.

படித்துக்கொண்டே இருந்தால் மறதியையே நாம் மறந்துவிடலாம்.

நிச்சயமாகத் தேர்வாவோம் என்ற நம்பிக்கையை மனதில் சுமந்தபடியே படியுங்கள்.

நம்பிக்கையை இழந்து படித்தால் படிப்பது ஒரு போது மனதில் நிற்பதில்லை.

தங்களை முழுதாய் அர்ப்பணிக்காமல் யாரும் தேர்வில் வென்றதில்லை.

தேர்வு முடியும் வரையிலும் அது குறித்த சிந்தனைகளிலேயே இருங்கள்.

பயணநேரங்களில் பாடல் கேட்பதைத் தவிர்த்துவிட்டு படித்ததை மனதிற்குள் நினைத்துப் பாருங்கள்

சந்தேகமானவற்றை அப்போதே குறித்துக்கொள்ளுங்கள்.வீடு திரும்பியவுடன் சந்தேகத்தை மறக்காமல் தீர்த்துக்கொள்ளுங்கள்.

நீங்களாகவே கேள்வி கேட்டு நீங்களாகவே பதிலைச் சொல்ல முயலுங்கள்.

புத்தங்களை தேடித் திரிவதற்கு முன்பாக கையில் இருக்கும் புத்தங்களை படித்து முடியுங்கள்.

சந்தை புத்தங்களுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை தூக்கியெறிந்துவிட்டு பள்ளிப் புத்தகங்களுக்கு முக்கியத்துவம் கொடுங்கள்.

ஓரளவு தெரிந்தவற்றை நன்றாகத் தெரிந்து கொண்டு அடுத்த பாடத்திற்குச் செல்லுங்கள்.


தேர்வுக்குத்   தயாராகலாம் வாங்க! பதிவுகள் தொடரும்..                                                                                                               மகிழ்ச்சியுடன்  மதுமதி                                                                                          Download As PDF
Share this article :
புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

23 comments:

 1. பயனுள்ள தகவல்கள் தோழரே

  ReplyDelete
  Replies
  1. மகிழ்ச்சி..

   Delete
  2. hi sir , tnpsc - excutive officer (gr vii),tamil valiyil payilvatharkana santru kal yaridam yantha madhiri format il vanka vendum ena theriya vendukiran,certificate num ketkirarkal evaru vankuvathu?,,, thayavu kurnthu thakaval matrum sample format um thara vendukiran,,,

   vivekanandan.v

   Delete
 2. தேவைப்படுவோருக்கு பயனுள்ள தகவல் சகோ!

  ReplyDelete
  Replies
  1. உங்களுக்கு தேவைப்படலைன்னு சொல்றீங்க..ரைட்

   Delete
 3. சேவை தொடர வாழ்த்துக்கள்...

  ReplyDelete
  Replies
  1. மகிழ்ச்சி தோழரே..

   Delete
 4. மீண்டும் பதிவிட்டதற்கு நன்றி... மேலும் எதிர் பார்க்கிறோம்.

  ReplyDelete
  Replies
  1. கட்டாயம் தொடரும்.

   Delete
 5. மிக்க நன்றி நண்பா

  ReplyDelete
  Replies
  1. மகிழ்ச்சி சகோதரி..

   Delete
 6. வழக்கம் போல் உங்கள் அதிரடியை தொடருங்கள் பதிவை படிக்க ஆவலுடன் இருக்கிறோம்.

  ReplyDelete
  Replies
  1. நான் தயார்..நீங்களும் தயாராக இருங்கள்..

   Delete
 7. Anna I am from Madurai. Enaku Tnpsc form fill panrathula confusion aguthu
  na b'coz antha form la Jathi Utpirivu Kekuranga enoda cast certificate la
  Hindu-Kodikalkarar nu iruku na but antha cast avanga kuduthurukura list la
  ila so na epdi na fill panrathu and avanga computer course pana certificate
  kekuranga naa computer la DCA muduchuruken na but naa paducha institute ah
  close panitanga so enkita certificate ila naa ipo epdi na certificate
  vangurathu and enaku tnpsc elutha payama iruku na because last time
  eluthunen 150 marks vangunen enoda friends, relatives ellarum nee select
  agalaya nu romba keli panranga na athanala intha time elutha vendam nu ipo
  varaikum apply panama iruken na but enaku eluthanum nu asaya iruku. Pls
  anna enaku udane reply panunga. Last time complete ah ungaloda blogs vachu
  than na paduchen seriously ungaloda blogs ellame romba romba useful ah
  irunthathu enakum en friendkum. intha thadavayum unga blog pathathuku apram
  than tnpsc ku apply pananum nu mudivu panen. Naa epdi padikanum nu enaku
  konjam guide panunga na pls.

  ReplyDelete
  Replies
  1. உங்களது தன்னம்பிக்கையை விட்டு விடவேண்டாம்.நீங்கள் தேர்வாகி அதிகாரி ஆகிவிட்டால் உங்களை கிண்டல் செய்தவர்களெல்லாம் உங்களைத் தேடி வந்து வாழ்த்து சொல்வார்கள் அதுதான் நிகழ்வு.ஆதாலால் கவலை வேண்டாம்.உங்கள் சாதியின் உட்பிரிவு இருக்கிறதே என்ன பிரச்சனை உங்களுக்கு?உடனே விண்ணப்பிக்கவும்..

   Delete
  2. Anna enoda jathi Hindu-Kodikalkarar. But TNPSC form online la fill panumpothu apdi oru jathi ila na nanum thedi pathuten. athan epdi fill panrathu nu theriala na ithanala naa exam elutha mudiatha na

   Delete
  3. உங்கள் சாதி இருக்கிறதே..ஏன் இத்தனைக் குழப்பம்.BC யைத் தேர்வு செய்யுங்கள்.உட்பிரிவிற்குள் செல்லுங்கள்
   sozhia vellalar inc-sozha vellalar/vetrilaikkarar/kodikkalkarar/keerakkarar

   இவ்வாறு இருக்கும்..இதை க்ளிக் செய்யுங்கள்.இதில் உங்கள் சாதியும் இருக்கிறதே..பிறகென்ன பிரச்சனை.

   Delete
  4. Sorry anna naa than saria pakala. thank u so much.

   Delete
 8. i need metrical anna ..mooupm@gmail.com ,i think this is my last exam becz i have lot of confident with u r blessing.

  ReplyDelete
  Replies
  1. admin@madhumathi.com தொடர்பு கொள்ளுங்கள் தோழரே..

   Delete
  2. Sir i want to prepare for group 2 exam. which subjects and which books should i prepare. pls give me a guidance sir

   Delete
 9. Thangaladhu pathivugal anaithum migavum payanullathaga

  irukkirathu, Mikka nandri, Thodarattum ungal pani. All the Best

  ReplyDelete
 10. ஐயா வணக்கம். நான் TNPSC CESE எழுதி உள்ளேன். இன்னும் ரிசல்ட் வரல. ஆனால் என்னுடைய சாதிச்சான்றிதல் தொலைந்து விட்டது.அதன் சீரியல் நம்பரையே விண்ணப்பத்தில் கொடுத்துள்ளேன். அதன் நகல் மட்டுமே என்னிடம் உள்ளது. புதிய சான்றிதலுக்கும் விண்ணப்பித்துள்ளேன். இதனால் ஏதேனும் பிரச்சனை உண்டாகுமா? தயவு செய்து பதில் கூறுங்கள்.

  ReplyDelete

கருத்துரைப் பெட்டியில் இடும் கருத்துகளுக்கு கருதிட்டவரே பொறுப்பாவர்..

Search This Blog

Email Subscribers

புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

Followers

Popular Posts

Google+

Tips Tricks And Tutorials

TNPSC - முக்கிய வினா-விடைகள்

எழுதிய மாத நாவல்கள் சில

 
Support :
Written by Madhumathi Published by www.madhumathi.com