புது வரவு :
Home » , » சென்னை பதிவர் சந்திப்பு 2013 முக்கிய அறிவிப்பு

சென்னை பதிவர் சந்திப்பு 2013 முக்கிய அறிவிப்பு

வணக்கம் தோழமைகளே.. இன்னும் ஒருநாள்தான் இருக்கிறது சென்னையில் இரண்டாமாண்டு தமிழ் வலைப்பதிவர்களின் திருவிழா தொடங்கிவிடும்.இந்த விழாவிற்கு அயல்நாடுகளில் இருக்கும் பதிவர்கள் மற்றும் விழாவிற்கு கலந்து கொள்ள இயலாத பதிவர்களின் வாழ்த்துகள் வந்த வண்ணமே இருக்கிறது. இந்த விழாவை இன்னும் சிறப்பாக நடத்த வேண்டும் என்கிற வேட்கையை அது அதிகரிக்கிறது.

         இந்த மாபெரும் சந்திப்பில் கலந்து கொள்ள முடியாத அயல்நாட்டு பதிவர்கள் கூட பதிவர் சந்திப்பை குறித்து நல்லவிதமாகவும் ஆதரவாகவும் எழுதி வருவது கண்டு மகிழ்ச்சியடைகிறோம்.நன்றி.

         பதிவர்களுக்கு உணவு உட்பட சில ஏற்பாடுகள் செய்வதற்கு வசதியாக இந்த விழாவில் கலந்து கொள்ள விரும்பும் பதிவர்கள் எம்மை தொடர்பு   கொண்டு தங்கள் வருகையை உறுதிபடுத்துமாறு கேட்டுக்கொண்டோம். அதன்படி பதிவர்கள் உறுதிபடுத்தியிருக்கிறார்கள்.

அரங்கம்
அரங்கத்திற்கு வரும் வழிபூந்தமல்லி பகுதியிலிருந்து வருபவர்கள் 17 ம் எண் மற்றும் 25ஜி எண் கொண்ட பேருந்துகளில் ஏறி வடபழனி பேருந்து நிறுத்தத்தில் இறங்கி..கோடம்பாக்கம் நோக்கி 5 நிமிடங்கள் நடந்தால் இசைக்கலைஞர்கள் அரங்கம் வந்துவிடும்

சென்ட்ரல், அண்ணாசாலை போன்ற பகுதியிலிருந்து பதிவர்கள் 17 ம் எண் மற்றும் 25ஜி எண் கொண்ட பேருந்துகளில் ஏறி வடபழனிகமலா தியேட்டர் நிறுத்தத்தில் இறங்கவும்..

கோயம்பேட்டிலிருந்து வரும் பதிவர்கள் 27சி பேருந்தில் ஏறி வடபழனி கோயில் நிறுத்தத்தில் இறங்கி வரலாம்..இல்லையென்றால் ஷேர் ஆட்டோ ஏறியும் இறங்கலாம்..

அதிகாலை சென்னை வரும் தோழர்கள் மதுமதி மற்றும் அரசன் போன்றோரை தொடர்பு கொள்ளுங்கள்.. உங்களை அறைக்கு அழைத்துச் செல்வார்கள்..

பதிவர்களிடம் எதிர்பார்ப்பது என்ன?

1.அரங்கத்தில் புகைபிடித்தலை தவிர்த்துக் கொள்ளவும்.

2.மது அருந்திவிட்டு அரங்கிற்குள் நுழைவதை முற்றிலும் தவிர்த்துக் கொள்ளவும்.

3.பெண் பதிவர்களின் அனுமதியின்றி அவர்களை புகைப்படம் எடுப்பதை தயவுகூர்ந்து தவிர்த்துக் கொள்ளவும்.அனுமதியோடு புகைப்படம் எடுக்கும் பட்சத்தில் அவர்கள் அனுமதியில்லாமல் வலையில் பதிவதை தவிர்த்துக் கொள்ளவும்.

4.ஒவ்வொரு பதிவரும் சபை நாகரீகத்தை கடைபிடிக்கவும்.
Download As PDF
Share this article :
புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

4 comments:

 1. Every post ,posted in blogs, regarding the meet are standing examples for the care taken by the organisers of the Meet . Every small small items are dealt with so nicely. Now it is for the participants to adhere to the guidelines

  ReplyDelete
 2. நல்ல ஆலோசனைகள். வரும் வழியை காட்டியமைக்கும் நன்றி மது!

  ReplyDelete
 3. ரொம்ப நன்றிங்க. அப்போ இதுக்காகன்னு வாங்கி வச்ச சரக்க என்ன பண்றதுங்க?

  ReplyDelete
 4. மிக மிக அருமையான முன்னேற்பாடுகள். அரங்கம் நிறைய, சபை குழும, சந்திப்பு சிறக்க வாழ்த்துகள்.

  ReplyDelete

கருத்துரைப் பெட்டியில் இடும் கருத்துகளுக்கு கருதிட்டவரே பொறுப்பாவர்..

Search This Blog

Email Subscribers

புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

Followers

Popular Posts

Google+

Tips Tricks And Tutorials

TNPSC - முக்கிய வினா-விடைகள்

எழுதிய மாத நாவல்கள் சில

 
Support :
Written by Madhumathi Published by www.madhumathi.com