புது வரவு :
Home » , , , , , , » TNPSC - IV - திருத்தியமைக்கப்பட்ட பொதுத்தமிழ் பாடத்திட்டம் குறித்த விளக்கம்

TNPSC - IV - திருத்தியமைக்கப்பட்ட பொதுத்தமிழ் பாடத்திட்டம் குறித்த விளக்கம்

        வணக்கம் தோழர்களே! எப்படியிருக்கீங்க? பலமாதங்கள் கழித்து உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி..

                சில பல காரணங்களால் வலைப்பக்கம் வர முடியாமற்போனது. இனி தொடர்ந்து வலைப்பக்கத்தில் பயணிக்கலாமென இருக்கிறேன்..இத்தளத்தில் தொடர்ந்து தேர்வுகள் குறித்த பதிவுகள் எழுத வேண்டுமென தொடர்ந்து மின்னஞ்சலில் கேட்டுக்கொண்ட அன்பர்களுக்கு நன்றி! உங்கள் அழைப்பை தொடர்ந்து  தினமும் தேர்வு குறித்த பதிவுகள் எழுதலாம் என்றிருக்கிறேன்.. 




          விரைவில் நடைபெறவிருக்கிற குரூப் 4 தேர்வுக்காக பல பேர் தயாராகிக்கொண்டிருப்பார்கள்..அவர்களுக்கு இன்னும் கொஞ்சம் உதவும் வகையில் பொதுத்தமிழ்  பகுதியில் இடம் பெற்றுள்ள 1. இலக்கணம் 2. இலக்கியம் 3. தமிழறிஞர்களும் தமிழ்த்தொண்டும் ஆகியவை குறித்து விரிவாக பதிவிடலாம் என்றிருக்கிறேன். மேலும் காணொளி வாயிலாகவும் விளக்கி கூறலாம் என முடிவெடுத்திருக்கிறேன்.

        டி.என்.பி.எஸ்.சி  குரூப் 4 தேர்வுக்கு உற்சாகமாக படித்துக் கொண்டிருந்தவர்களை சற்று சோர்வடையச் செய்திருப்பது தேர்வு மாற்றம்தான். அதாவது குரூப் 4 தேர்விலேயே VAO தேர்வும் நடக்கவிருக்கிறது. புதிதாக இந்த வருடம் தேர்வெழுத வந்தவர்களை இது பாதிக்கவில்லை.கடந்த காலங்களில் தேர்வெழுதி VAO வாக தேர்வாகாமல் தொடர்ந்து, இந்த வருட தேர்வினை எழுதி வெல்லலாம் என கிராம நிர்வாகத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து படித்துக்கொண்டிருந்தவர்களுக்கு இது பெரிய ஏமாற்றம் தான்.புதிய தேர்வு மாற்றத்தை பார்த்து முந்தைய தேர்வுகளில் தோல்வியுற்றவர்கள், 'அடடா போன வருசமே ஒழுங்கா படிச்சு எழுதியிருந்தா தேர்வாகியிருக்கலாம் இப்படி ஆகும்ன்னு தெரியாமப் போச்சே' எனப் புலம்பிக்கொண்டிருக்கின்றனர்.

          தேர்வில் வெற்றி வாகை சூடவேண்டுமென்றால் உங்களுக்கு பொதுத்தமிழ்தான் கட்டாயம் கை கொடுக்கும் என்பதை மறந்து விடவேண்டாம் மறந்தும் இருந்துவிட வேண்டாம்.. எனவே பொதுத்தமிழ் பகுதிகளை சற்று ஆழமாக படித்துக்கொள்ளுங்கள் .. 1. இலக்கணம் 2. இலக்கியம் 3. தமிழறிஞர்களும் தமிழ்த்தொண்டும் என ஒவ்வொரு பிரிவிலிருந்தும் 35 வினாக்கள் எதிர்பார்க்கலாம்.இல்லையெனில் 'அ' பிரிவில் 40 வினாக்களும் 'ஆ' பிரிவில்  20 வினாக்களும் 'இ' பிரிவில் 40 வினாக்களும் கேட்கப்படலாம். மூன்று பிரிவுகளையும் நன்றாகப் படித்தால் மட்டுமே தேர்வாக முடியும்.வருடத்திற்கு வருடம் தேர்வெழுதுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டேயிருக்கிறது. என்பதை நினைவில் வைத்துக்கொண்டு படியுங்கள்.. முன்னதாக 100 மதிப்பெண்களுக்கான பொதுத்தமிழ் பாடத்திட்டத்தை ஒரு பார்வை பார்த்துவிட்டு இது குறித்த விளக்கமான பதிவிற்குச் செல்லலாம்..

 

பகுதி -அ 
இலக்கணம்
பகுதி -ஆ
இலக்கியம்
பகுதி -இ
தமிழறிஞர்களும் தமிழ்த்தொண்டும்



 பகுதி -அ
இலக்கணம்
 1 

பொருத்துதல்

1.பொருத்தமான பொருளைத் தேர்வு செய்தல்

2.புகழ்பெற்ற நூல் நூலாசிரியர்கள்


 2

தொடரும் தொடர்பும் அறிதல்

1.இத்தொடரால் குறிக்கப்பெறும் சான்றோர்

2.அடைமொழியால் குறிக்கப்பெறும் நூல்


3.

பிரித்தெழுதுக


 4

எதிர்ச்சொல் எடுத்தெழுதுதல்


 5

 பொருந்தாச் சொல்லைக் கண்டறிதல் 


 6

  பிழை நீக்கம்

சந்திப்பிழை நீக்குதல்

ஒருமை பன்மை நீக்குதல் 

மரபுப் பிழை நீக்குதல்

வழூஉச் சொற்ளை நீக்குதல்  

பிமொழிச் சொற்ளை நீக்குதல்


7.

 ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச்சொல் கண்டறிதல்


8

ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளை அறிதல்


9

 ஓரெழுத்து ஒரு மொழி உரிய பொருளை கண்டறிதல்


10

வேர்ச்சொல்லைத் தேர்வு செய்தல்


11

வேர்ச்சொல்லைக் கொடுத்து வினைமுற்று, வினையெச்சம், வினையாலணையும் பெயர் ,தொழிற்பெயர் போன்றவை கண்டறிதல்


12

அகரவரிசைப் படி சொற்ளை சீர்செய்தல்


13

சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடராக்குதல்


14

பெயர்ச்சொல்லின் வகையறிதல்


 15

இலக்கணக் குறிப்பறிதல்


16

விடைக்கேற்ற வினாவை தேர்ந்தெடுத்தல்


17

எவ்வகை வாக்கியமென  கண்டெழுதுதல்


 18

தன்வினை,பிறவினை ,செய்வினை, செயப்பாட்டுவினை போன்றவை கண்டறிதல்


 19

உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெடுத்து எழுதுதல் 


20

எதுகை மோனை இயைபு  இவற்றுள் ஏதேனும் ஒன்றைத் தேர்ந்தெடுத்து எழுதுதல் 




  பகுதி -ஆ
இலக்கியம்

1.

திருக்குறள் தொடர்பான செய்திகள், மேற்கோள்கள் தொடரை நிரப்புதல் (பத்தொன்பது அதிகாரம் மட்டும்)

அன்பு ,பண்பு ,கேள்வி , அறிவு , அடக்கம் , ஒழுக்கம், பொறை, நட்பு, வாய்மை, காலம், வலி, ஒப்புரவறிதல், செய்நன்றி, சான்றாண்மை,பெரியாரைத் துணைக்கோடல், பொருள் செயல்வகை, வினைத்திட்பம், இனியவை கூறல்.

2. அறநூல்கள் நாலடியார், நான்மணிக்கடிகை, பழமொழிநானூறு, முதுமொழிக்காஞ்சி, திரிகடுகம், இன்னா நாற்பது, இனியவை நாற்பது, சிறுபஞ்சமூலம், ஏலாதி, ஔவையார் பாடல்கள் தொடர்பான செய்திகள், பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் பிற செய்திகள்.
3 கம்பராமாயணம் - குறித்த செய்திகள் , மேற்கோள்கள், பா வகை, சிறந்த தொடர்கள்
4 புறநானூறு - அகநானூறு, நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, கலித்தொகை தொடர்பான செய்திகள், மேற்கோள்கள் அடிவரையறை, எட்டுத்தொகை, பத்துப்பாட்டு நூல்களில் உள்ள பிற செய்திகள்.
5 சிலப்பதிகாரம் - மணிமேகலை - தொடர்பான செய்திகள், மேற்கோள்கள், சிறந்த தொடர்கள் உட்பிரிவுகள் மற்றும் ஐம்பெரும் - ஐஞ்சிறு காப்பியங்கள் தொடர்பான செய்திகள்
6 பெரியபுராணம் - நாலாயிர திவ்வியப் பிரபந்தம் - திருவிளையாடற் புராணம் - தேம்பாவணி - சீறாப்புராணம் தொடர்பான செய்திகள்..
7
சிற்றிலக்கியங்கள்
திருக்குற்றாலக் குறவஞ்சி, கலிங்கத்துப்பரணி, முத்தொள்ளாயிரம், தமிழ்விடு தூது ,நந்தி கலம்பகம் விக்கிரமசோழன் உலா, முக்கூடற்பள்ளு, காவடிச்சிந்து, திருவேங்கடத்தந்தாதி, முத்துக்குமாரசுவாமி பிள்ளைத் தமிழ், பெத்தலகேம் குறவஞ்சி, அழகர் கிள்ளைவிடுதூது, இராஜராஜன் சோழன் உலா தொடர்பான செய்திகள்.

8

மனோன்மணியம் - பாஞ்சாலி சபதம் - குயில்பாட்டு - இரட்டுற மொழிதல்
(காளமேகப் புலவர் - அழகிய சொக்கநாதர் தொடர்பான செய்திகள் )

9
நாட்டுப்புறப்பாட்டு - சித்தர் பாடல்கள் தொடர்பான செய்திகள்

10

சமய முன்னோடிகள் அப்பர், சம்பந்தர், சுந்தரர், மாணிக்கவாசகர், திருமூலர், குலசேகர ஆழ்வார், ஆண்டாள்,  சீத்தலைச் சாத்தனார் எச்.ஏ கிருட்டிணப்பிள்ளை, உமறுப்புலவர் தொடர்பான செய்திகள், மேற்கோள்கள், சிறப்புப்பெயர்கள்



பகுதி -இ
தமிழறிஞர்களும் தமிழ்த்தொண்டும்

1 பாரதியார், பாரதிதாசன், நாமக்கல் கவிஞர், கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை தொடர்பான செய்திகள், சிறந்த தொடர்கள், சிறப்புப் பெயர்கள்
2. மரபுக்கவிதை, - முடியரசன், வாணிதாசன், சுரதா, கண்ணதாசன், உடுமலை நாராயணகவி, பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், மருதகாசி தொடர்பான செய்திகள், அடைமொழிப்பெயர்கள்.
3. புதுக்கவிதை - ந. பிச்சமூர்த்தி, சி.சு.செல்லப்பா, தருமு சிவராமு, பசுவய்யா, இரா. மீனாட்சி, சி. மணி, சிற்பி, மு. மேத்தா, ஈரோடு தமிழன்பன், அப்துல்ரகுமான், கலாப்பிரியா, கல்யாண்ஜி, ஞானக் கூத்தன், தேவதேவன், சாலை இளந்திரையன், சாலினி இளந்திரையன், ஆலந்தூர் மோகனரங்கன் - தொடர்பான செய்திகள், மேற்கோள்கள், சிறப்புத் தொடர்கள் மற்றும் எழுதிய நூல்கள்.
4. தமிழில் கடித இலக்கியம் - நாட்குறிப்பு - நேரு - காந்தி - மு.வ. - அண்ணா - ஆனந்தரங்கம் பிள்ளை நாட்குறிப்பு தொடர்பான செய்திகள்.
5 நாடகக்கலை - இசைக்கலை தொடர்பான செய்திகள்
6 தமிழில் சிறுகதைகள் தலைப்பு - ஆசிரியர் - பொருத்துதல்
7 கலைகள் - சிற்பம் - ஓவியம் - பேச்சு - திரைபடக்கலை தொடர்பான செய்திகள்
8 தமிழின் தொன்மை - தமிழ் மொழியின் சிறப்பு, திராவிட மொழிகள் தொடர்பான செய்திகள்
9 உரைநடை - மறைமலையடிகள், பரிதிமாற்கலைஞர், ந.மு.வேங்கடசாமி நாட்டார், ரா.பி. சேதுப்பிள்ளை, திரு.வி.க. வையாப்புரிப்பிள்ளை - மொழி நடை தொடர்பான செய்திகள்.
10 உ.வே. சாமிநாத ஐயர், தெ.பொ. மீனாட்சி சுந்தரனார், சி. இலக்குவனார் - தமிழ்ப்பணி தொடர்பான செய்திகள்.
11 தேவநேயப்பாவாணர் - அகரமுதலி, பாவலரேறு பெருஞ்சித்திரனார், தமிழ்த்தொண்டு தொடர்பான செய்திகள்
12 ஜி.யு.போப் - வீரமாமுனிவர் தமிழ்த்தொண்டு சிறப்புத் தொடர்கள்
13 பெரியார் - அண்ணா - முத்துராமலிங்கத் தேவர் - அம்பேத்கர் - காமராசர் - சமுதாயத் தொண்டு.
14 தமிழகம் - ஊரும் பேரும், தோற்றம் மாற்றம் பற்றிய செய்திகள்
15 உலகளாவிய தமிழர்கள் சிறப்பும் - பெருமையும் - தமிழ்ப் பணியும்.
16 தமிழ்மொழியில் அறிவியல் சிந்தனைகள் தொடர்பான செய்திகள்
17 தமிழ் மகளிரின் சிறப்பு - அன்னி பெசண்ட் அம்மையார், மூவலூர் ராமாமிர்தத்தம்மாள், டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி. விடுதலைப் போராட்டத்தில் மகளிர் பங்கு ( தில்லையாடி வள்ளியம்மை, ராணி மங்கம்மாள்)
18 தமிழர் வணிகம் - தொல்லியல் ஆய்வுகள் - கடற் பயணங்கள் - தொடர்பான செய்திகள்
19 உணவே மருந்து - நோய் தீர்க்கும் மூலிகைகள் தொடர்பான செய்திகள்
20சமயப் பொதுவுடைமை உணர்த்திய தாயுமானவர், இராமலிங்க அடிகளார், திரு.வி. கல்யாண சுந்தரனார் தொடர்பான செய்திகள் - மேற்கோள்கள்.

Download As PDF
Share this article :
புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

5 comments:

  1. sir they asking vao special questions in previous vao
    tamil 80 maths 20 vao 25 and gk 75
    but now what about vao 25 questions
    if new pattern may be possible to varied no of question in each section or vao only will come in section (c gk )
    if you know anything sir

    ReplyDelete
    Replies
    1. மாறுதல் ஏற்படும்.. ஆனால் தமிழில் மதிப்பெண் குறையவோ குறைக்கவோ வாய்ப்பில்லை.. கணிதத்தில் கேட்கப்படும் 25 கேள்விகளில் 15 யை குறைக்க வாய்ப்புண்டு.. அதே போல அறிவியல் பகுதியில் ஓரிரண்டு வினாக்களை குறைக்கலாம்

      Delete

கருத்துரைப் பெட்டியில் இடும் கருத்துகளுக்கு கருதிட்டவரே பொறுப்பாவர்..

Search This Blog

Email Subscribers

புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

Followers

Popular Posts

Google+

Tips Tricks And Tutorials

TNPSC - முக்கிய வினா-விடைகள்

எழுதிய மாத நாவல்கள் சில

 
Support :
Written by Madhumathi Published by www.madhumathi.com