புது வரவு :
Home » , , , , » பொருத்துக! பொதுத்தமிழ் இலக்கணம் - TNPSC - IV - VII - II - II A

பொருத்துக! பொதுத்தமிழ் இலக்கணம் - TNPSC - IV - VII - II - II A

   

    TNPSC     

பொதுத்தமிழ் பாடத்திட்டம்

இலக்கணம்

                                                        

1.பொருத்துக                                                                                           www.madhumathi.com


 

 1.பொருத்தமான பொருளைத் தேர்வு செய்தல் 

2.புகழ் பெற்ற நூல் நூலாசிரியர்கள்

 

 1.பொருத்தமான பொருளைத் தேர்வு செய்தல்

           கொடுக்கப்பட்டிருக்கும் சொல்லுக்கு பொருத்தமான பொருளைத் தேர்ந்தெடுத்து பொருத்த வேண்டும்.

 

 உதாரணம்:

                                                    மாருதம் - குதிரை                                          
                                                    தவ்வை - மூங்கில் 
                                                    புரவி      -  காற்று
                                                    வேய்    -   மூதேவி


விடை:                        

                                              www.madhumathi.com                                                    மாருதம் -  காற்று                                       
                                                    தவ்வை - மூதேவி 
                                                    புரவி      -  குதிரை
                                                    வேய்    -   மூங்கில்
                   

2.புகழ் பெற்ற நூல் நூலாசிரியர்கள்

           நூலின் பெயர் கொடுக்கப்பட்டிருக்கும் அந்நூலை இயற்றிய ஆசிரியரைத் தேடிப் பொருத்த வேண்டும்.  

 உதாரணம்:

                                                     பாண்டியன் பரிசு - பாரதியார்
                                                    இயேசு காவியம் - புலவர் குழந்தை
                                                    குயில்பாட்டு -  பாரதியார்  
                                                    இராவண காவியம்    -  கண்ணதாசன்

    

விடை:                                                   
                                                    பாண்டியன் பரிசு - பாரதிதாசன் 
                                                    இயேசு காவியம் - கண்ணதாசன்
                                                    குயில்பாட்டு -  பாரதியார்  
                                                    இராவண காவியம்    -  புலவர் குழந்தை 

                                    

                                              www.madhumathi.com

       எனவே மேற்கண்ட வினாக்களுக்கு எளிதாக விடையளிக்க வேண்டுமெனில் நிறைய சொற்களையும் அவற்றிற்கான பொருளையும் நிறைய நூல்களையும் அதன் ஆசிரியர்களையும் தெரிந்திருத்தல் அவசியமாகும்.

 

எந்தப் புத்தகத்தில் படிக்கலாம்?

             ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரையிலான தமிழ்ப்பாடப் புத்தகத்தில் மொழிப்பயிற்சி பகுதியில் கொடுக்கப்பட்டிருக்கும் அருஞ்சொற்பொருளை அறிக என்ற பகுதியை மட்டும் படித்தாலே பொருத்தமான பொருளை எளிதாகக் கண்டறியலாம்.

              அதே போல ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரையிலான தமிழ்ப்பாடப் புத்தகத்தில்  கொடுக்கப்பட்டிருக்கும்  செய்யுள், கவிதைகள், கதைகள் மற்றும் உரைநடைத்தொகுதிகளின் ஆசிரியர்களை நன்கு படித்து அறிந்து கொண்டாலே  நூலை எழுதிய நூலாசிரியரை எளிதாகத் தேடிப் பொருத்தலாம்.                                www.madhumathi.com

Download As PDF
Share this article :
புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

1 comment:

கருத்துரைப் பெட்டியில் இடும் கருத்துகளுக்கு கருதிட்டவரே பொறுப்பாவர்..

Search This Blog

Email Subscribers

புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

Followers

Popular Posts

Google+

Tips Tricks And Tutorials

TNPSC - முக்கிய வினா-விடைகள்

எழுதிய மாத நாவல்கள் சில

 
Support :
Written by Madhumathi Published by www.madhumathi.com