புது வரவு :

எட்டிப்பிடி! இதுவே ஏணிப்படி!

என்னது? 21 நாட்கள் ஊரடங்கா? வீட்டுக்குள்ளேயே என்ன செய்வது? சும்மாவே இருக்க முடியுமா? என்று யோசித்ததும் வடிவேல் காமெடி நினைவுக்கு வராதர்கள் இருந்திருக்க முடியாது.ஏன்னா சும்மா இருக்கிறது எவ்வளவு பெரிய கஷ்டம்ன்னு வடிவேலு சர்வசாதாரணமா சொல்லிட்டு போயிட்டாப்ல.

மருத்துவத் தொழில் சார்ந்தோர், காவல் துறையினர், அரசு ஊழியர்கள், மளிகைக் கடையினர், பால் விற்பனையாளர், காய்கறி மண்டியினர் தவிர ஏனைய மக்கள் என்ன செய்துகொண்டிருப்பார்கள்?.கிராமப்புற விவசாயத் தொழில் சார்ந்தோர் பணிபுரிந்த வண்ணம் தான் இருக்கிறார்கள்.

எப்படி நாள்களைத் தள்ளி இருப்பார்கள்? இன்னும் தள்ளப்போகிறார்கள்? 

1.செய்தித்தாள் வாசிப்பது
2.தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் பார்ப்பது
3.Netflix,Prime &Youtube களை பார்ப்பது
4.Face book Twitter களில் மூழ்கிக் கிடப்பது.
5.கைவினை பொருள்களைச் செய்வது
6.துணி தைக்க கற்றுக் கொள்வது
7.சமையல் கலையை கற்றுக்கொள்வது
8.Online Games, Cards, Carrom Board, Chess, தாயம், ஆடுபுலியாட்டம் விளையாடுவது,
9.புத்தகம் வாசிப்பது
10.கதை, கவிதை எழுதுவது,
11.சாப்பிடுவது - தூங்குவது 
12.இசை, யோகா உள்ளிட்ட பயிற்சி மேற்கொள்வது
13.போட்டித்தேர்வுக்கு தயாராவது


மேற்கண்ட வேலைகளைத்தான் ஊரடங்கு நாள்களில் பலரும் பெரும்பான்மையாக செய்துகொண்டிருக்கிறார்கள். இதில் கடைசி ஒன்றைத்தவிர மீதம் அனைத்தும் நடப்பை சரிகட்ட, இன்றைய நாளை எப்படியாவது கடந்தால் போதும் என்ற மனநிலையோடு நேரத்தை எப்படியாவது கழிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் நம்மை நாமே அவற்றில் ஆட்படுத்திக்கொண்டோம்.. இன்னும் சொல்லப்போனால் நிகழ்காலத்தைப் போக்குவதற்கு மட்டுமே அவற்றை பயன்படுத்திகொள்கிறோம்.இதில் ஈடுபட்டவர்களின் மனநிலை ஊரடங்கு எப்போது முடியும் என்னும் தேடலில் இருந்துகொண்டேதான் இருக்கும் என்பதில் ஐயமில்லை.

ஆனால் கடைசியாக சொல்லப்பட்ட, 'போட்டித்தேர்வுக்கு தயாராகுதல்' என்ற ஒன்று மட்டுமே எதிர்காலத்திற்காக திட்டமிட்ட ஒன்று. இவர்களுக்கு 21 நாட்கள் போதாது இன்னும் பல நாட்கள் ஊரடங்காக இருந்தாலும் அவர்களுக்கு அவை நன்றாகப் பயன்படும். UPSC தேர்வெழுதி IAS, IPS ஆக வேண்டுமென்ற கனவில் எத்தனை பேர்? SSC தேர்வெழுதி மத்திய அரசில் பணி புரிய வேண்டும் என்ற ஆசையில் எத்தனை பேர்? IBBS தேர்வெழுதி வங்கியில் பணியாற்ற வேண்டும் என்ற வேட்கையில் எத்தனை பேர்? TRB தேர்வெழுதி ஆசிரியராக வேண்டும் என்ற ஆசையில் எத்தனை பேர்? RRB தேர்வாகி ரயில்வேயில் பணியபுரிய வேண்டும் என்ற வெறியில் எத்தனை பேர்?





கடந்த காலங்களில் போட்டித்தேர்வெழுதி தோற்றுப்போய் தோற்றுப்போய்.. ஏற்பட்ட மன உளைச்சலில் எத்தனை பேர்  எட்டாக்கனியாக வெற்றியை அண்ணார்ந்து பார்த்துக்கொண்டிக்கிறார்கள்? அவர்கள் தயாராக்கிக் கொள்வதற்கான நேரம் இதுதான்.

"ஒரு மாசமாவது வீட்டில உக்கார்ந்து படிச்சா.. கன்பார்மா பாஸா ஆகிடுவேன்னு" நீங்கதான சொன்னீங்க..இப்போ படிக்கலாம் இல்லையா?

"பிராக்டிகல் இருந்ததால போன எக்ஸாம் நல்லா பண்ண முடியலன்னு சொன்னது நீங்க தானே".. இப்போ சும்மாதானே இருக்கீங்க படிக்கலாம் இல்லையா?

"நடப்பு நிகழ்வுகள் மட்டும் படிச்சிருந்தா கதையே வேற".. என்று கனத்த இதயத்தோடு எக்ஸாம் ஹால்ல இருந்து வீட்டுக்கு வந்தவங்க தானே நீங்க?நடப்பு நிகழ்வுகள் படிச்சாச்சா?

"பொருளாதாரம் எல்லாம் கொஞ்சம் டைம் எடுத்து படிக்கணும் அப்போதான் சரியா விளங்கும்ன்னு சொன்னது யாரு"? இப்போ விளங்குதா?

"சயின்ஸ்க்கு மட்டும் சாலிடா ஒன் மந்த் ஒதுக்கினா போதும் அசால்ட்டா அடிச்சிடலாம்".. ஒன் மந்த் போதுமா? இன்னும் வேணுமா?

"கணக்கெல்லாம் செம ஈஸிதான். ஆனா டைம் பத்த மாட்டேங்குது.. வீட்டுல உக்கார்ந்து நல்லா  பிராக்டிஸ் பண்ணி இருந்தேன் இந்நேரம் SBI ல PO வா உக்காந்திருப்பேன்".. என்னங்க பிராக்டிஸ் பண்ணியாச்சா? அடுத்த மாசம் Placement ஆயிடலாமா?

ஒரு வாரம் கிடைச்சா போதும் ஆன்லைன்ல உக்காந்து எல்லா மெட்டீரியலும் டவுன்லோடு பண்ணிடுவேன்னு சொன்னவங்கெல்லாம் கையத் தூக்குங்க.. டவுன்லோடு பண்ணியாச்சா? இல்லேன்னா சொல்லுங்க லிங்க் தரேன்..

மேல சொன்ன மாதிரி போட்டித்தேர்வு எழுதுறவங்களுக்கு இந்த மாதிரி மொத்தமா லீவ் கிடைக்குறது கஷ்டம்.அதனால நல்லா பயன்படுத்திக்கோங்க..

வழக்கமா நாம தோல்விய சந்திச்சா.. அந்த தோல்விக்கு நாம் பொறுப்பு ஏற்க மாட்டோம் இல்லையா? அது அப்படியாய்டுச்சு.. ஒரு வாரமா காய்ச்சல்ன்னு, பழிய வேற ஒண்ணு மேல தூக்கிப்போட்டுட்டு ஒதுக்கிங்குவோம்.. எக்ஸாமும் அப்படித்தான்.. ஒழுங்கா படிக்காம போய் எக்சாம் எழுதிட்டு செலக்ட் ஆகாம போனா, அதுக்கு இனிமே நீங்கதான் காரணம்..இனிமேல யார் மேலயும் பழிய தூக்கி போட முடியாது.. இந்த மாதியான மிகப்பெரிய வாய்ப்பு இனிமேல் வாழ்நாளில் கிடைக்காது.. எனவே இந்த நாட்களைப் பயன்படுத்தி தேர்வுக்கு தயாராகுங்கள்.. அரசுப் பணியை பெற்று வாழ்வில் இன்புறுங்கள்.. "எட்டிப்பிடி இதுதான் உனக்கு ஏணிப்படி" இதுக்கு மேல எப்படி சொல்ல..

போட்டித்தேர்வுகள் குறித்து நான் எழுதும் "எட்டிப்பிடி இதுதான் ஏணிப்படி" என்கிற புதிய தொடர் இந்தத் தளத்திலும் போட்டித்தேர்வுகளுக்கான பாடப்பகுதிகள்  வென்றுகாட்டு   என்ற இணைய தளத்திலும் தொடர்ந்து பதிவிடப்படும் . போட்டித்தேர்வர்கள் பயன்படுத்தி பயனடையுங்கள்... நன்றி!







Download As PDF
Share this article :
புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

4 comments:

  1. Super sir. Neenga sonnathu romba practicalana unmai sir. Intha story romba inspiring ah iruku sir. Intha time ah useful ah spent pannuven sir. Thank you sir. Correct timela solli irukeenga sir. Thank you sir

    ReplyDelete
  2. இது ஒரு முக்கிய பதிவு... பலருக்கும் பகிர்ந்து கொள்கிறேன்... நன்றி...

    ReplyDelete

கருத்துரைப் பெட்டியில் இடும் கருத்துகளுக்கு கருதிட்டவரே பொறுப்பாவர்..

Search This Blog

Email Subscribers

புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

Followers

Popular Posts

Google+

Tips Tricks And Tutorials

TNPSC - முக்கிய வினா-விடைகள்

எழுதிய மாத நாவல்கள் சில

 
Support :
Written by Madhumathi Published by www.madhumathi.com