புது வரவு :

TNPSC உருவாகக் காரணமென்ன?

1929 ஆம் ஆண்டு சென்னை மாகாண சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட ஒரு சட்டத்தின் மூலம் ஒரு தலைவர் மற்றும் இரண்டு உறுப்பினர்களை கொண்டு உருவாக்கப்பட்டதுதான்  The Madras Service Commission.

மாநில மறுசீரமைப்புக்குப் பின் 1957
ஆம் ஆண்டு இது மதராசு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (Madras Public Service Commission) என்று பெயர் மாற்றம் செய்யப்பெற்று, சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படத் தொடங்கியது. 

1969 ஆம் ஆண்டு சென்னை மாநிலம் என்பது தமிழ்நாடு என மாற்றம் பெற்ற  இவ்வாணையம் ”தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்” என்று பெயர்மாற்றம் செய்து கொண்டது.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (Tamil Nadu Public Service Commission- TNPSC) என்பது தமிழக அரசுப் பணிக்குத் தேவையானவர்களைத் தகுந்த போட்டித் தேர்வுகள் வாயிலாகத் தேர்வு செய்ய ஏற்படுத்தப்பெற்ற ஒரு அரசு சார்ந்த அமைப்பு சுதந்திரமான ஆகும். 

இந்த தேர்வாணையமே இந்தியாவில் மாநில அளவில் உருவாக்கப்பெற்ற முதல் தேர்வாணையமாகும். 

மதராஸ் தேர்வாணையம் உருவாக என்ன காரணம்?

 1923 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் அரசு இந்தியக் குடிமைப்பணியாளர்களின் ஊதிய விகிதத்தை ஆய்வுசெய்யும் பொருட்டு, ஒரு பொதுப்பணியாளர் தேர்வுக் குழுவை ஏற்படுத்தியது. 

லீ பிரபுவை தலைவராகக்கொண்டு அமைக்கப்பட்ட இந்தக்குழு, நான்கு ஆங்கிலேயர்களையும் நான்கு இந்தியர்களையும் உறுப்பினர்களாகக் கொண்டது. 

இந்தியக் குடிமைப்பணி, இந்தியக் காவல் பணி ஆகியவற்றில் இந்தியர்களுக்கான இடம் குறித்தும் இந்தக் குழு ஆய்வு மேற்கொண்டது. 

பதினைந்து ஆண்டுகளில் இந்தியக் குடிமைப்பணியில் இந்தியர்களின் பங்கெடுப்பு ஐம்பது விழுக்காடாகவும், இருபத்தைந்து ஆண்டுகளில் இந்தியக் காவல் துறையில் இந்தியர்களின் பங்கெடுப்பு பதினைந்து விழுக்காடாகவும் அமையும் வகையில் இந்தியர்களின் பங்கெடுப்பு விகிதத்தை இந்த லீ குழு நிர்ணயித்தது.

தங்களுக்கு சரியெனப்படும் வகையில், பொதுப்பணிகளுக்கான பணியாளர்களை தெரிவு செய்தல், ஒழுங்கமைத்தல் ஆகியவை குறித்து முடிவெடுக்கும் அதிகாரம் பெரும்பாலும் தொடர்புடைய மாகாண அரசுகளிடமே வழங்கப்பட்டது. மேற்படி விருப்பார்ந்த அதிகாரத்தினைக்கொண்டு, மதராஸ் மற்றும் பஞ்சாப் மாகாணங்கள் தங்களுக்கென தனியான தேர்வாணையங்களை அமைப்பதற்கான முயற்சிகளை முன்னெடுத்தன. அதன் படி உருவானதுதான் இந்தத் தேர்வாணையம். ..

தமிழ்நாடு தேர்வாணையத்தின் நோக்கம் மற்றும் குறிக்கோள்கள் என்னவென்று தேர்வாணையம் குறிப்பிட்டுள்ளதைப் பார்ப்போம்..





நோக்கம்

இந்திய அரசமைப்புச் சட்டத்தில் வகை செய்யப்பட்டுள்ளதற்கு இணங்க, சுதந்திரமானதும், பாரபட்சமற்றதும் ஒழுக்க நெறியின்பாற்பட்டதும், செயல்திறன் மிக்கதும், அரசு அன்றாடம் எதிர்கொள்ளும் புதிய சவால்களைச் சந்திக்கும் திறன் கொண்டதும், பொதுமக்களின் வளர்ந்து வரும் எதிர்பார்ப்புகளுக்கு ஈடுகொடுக்கும் வகையிலும், குறிப்பாக விளிம்புநிலை மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையிலுமான திறன் மிக்க அரசுப் பணியாளர்களை உருவாக்கி வளர்த்திடுவதே தேர்வாணையத்தின் முதன்மையான நோக்கம்.

குறிக்கோள்

மேலும் தேர்வாணையம் கீழ்க்காணும் குறிக்கோள்களைத் தன்னகத்தே கொண்டு பயணித்து வருகிறது.

    தகவல் தொழில் நுட்ப வளர்ச்சியின் துணை கொண்டு, மாநில குடிமைப் பணிகளுக்கான தெரிவு முறை சுதந்திரமானதாகவும், நேர்மையானதாகவும், வெளிப்படையானதாகவும் இருப்பதை உறுதி செய்தல்.

    காலத்திற்கேற்ப தெரிவு முறைகளை மேம்படுத்துதல்.

    அரசுப் பணியாளர்களின் பணி நிலைகள் குறித்து அவ்வப்போது அரசுக்கு தக்க ஆலோசனை வழங்குதல்.

    அரசுப் பணியாளர்களின் நலன்களையும், நேர்மைத் திறனையும் தொடர்ந்து பாதுகாத்தல்.

தேர்வாணையம் முறையான பாடத்திட்டங்களை வகுத்து, ஆண்டு திட்டங்களைத் தயாரித்து வழங்கி, முறையான, திறமையான பணியாளர்களை தேர்ந்தெடுப்பதற்காக, பணியின் தரத்திற்கேற்ப, கல்வி தகுதிகளை நிர்ணயம் செய்து, சிறப்பான முறையில் தேர்வுகளை ஆண்டுதோறும் தவறாமல் நடத்தி வருகிறது..

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் குரூப்1 குரூ 2 மற்றும் குரூப் 4 உள்ளிட்ட தேர்வுகளை நடத்தி பல தேர்வுகளை நடத்தி தமிழக அரசுத்துறைகளுக்கு தேவையான பணியாளர்களை தேர்ந்தெடுத்துக் கொடுக்கிறது.

அடுத்த பதிவில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வுகளைப் பற்றி பார்ப்போம்.
Download As PDF
Share this article :
புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

Search This Blog

Email Subscribers

புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

Followers

Popular Posts

Google+

Tips Tricks And Tutorials

TNPSC - முக்கிய வினா-விடைகள்

எழுதிய மாத நாவல்கள் சில

 
Support :
Written by Madhumathi Published by www.madhumathi.com