வான் சிறப்பு - மதுமதி.காம்
புது வரவு :
Home » » வான் சிறப்பு

வான் சிறப்பு

அதிகாரம்-2


வான் சிறப்பு


 11)
நிற்காமல் பெய்து
உலகத்தின்
தாகத்தையே தணிப்பதால்
மழையும்
அமிழ்தம் போன்றதுதான்..     
குறள்-11
வான்நின்று உலகம் வழங்கி வருவதால்
தான்அமிழ்தம் என்றுஉணரற் பாற்று.
---------------------------------                    
12)
உணவிற்கு தானே 
உயிரைக் கொடுக்கும்;
உயிர்களுக்கு தன்னையே 
உணவாய்க் கொடுக்கும்;
மழை..
குறள்-12
துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
துப்பாய தூவும் மழை.
--------------------------------
 13)
உலகில் மழை 
பெய்யாமல் நின்றிருந்தால்
உப்புத் தண்ணீருக்கு நடுவில்
சிக்கியுள்ள உயிர்களை
பசியே கொன்றிருக்கும்..
 குறள்-13
விண்ணின்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து
உள்நின்று உடற்றும் பசி.
--------------------------------------
 14)
மழை பெய்யும் பணியை
வானமது நிறுத்தினால்
ஏர் ஓட்டும் பணியை
உழவன் நிறுத்துவான்.
குறள்-14
ஏரின் உழாஅர் உழவர் புயலென்னும்
வாரி வளங்குன்றிக் கால்.
-------------------------
 15
பருவத்தே பெய்யாமல்
வாழ்க்கையைக் கெடுப்பதும் மழை..
மீண்டும் பெய்து கெட்டவர்களை
வளமாக்குவதும் மழை..
குறள்-15
கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே
எடுப்பதூஉம் எல்லாம் மழை.
------------------------------------------------
16)
மண்ணிலிருந்து 
மழையது வராமல் போனால்
மண்ணிலிருந்து
புல் கூட வராமல் போகும்..
குறள்-16
விசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கே
பசும்புல் தலைகாண்பு அரிது.
---------------------------------------------
 17)
கடல் மீண்டும் ஆவியாகி
மழையைப் பொழியாவிடில்
கடலும் குட்டையாகும்..
குறள்-17
நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலி
தான்நல்கா தாகி விடின்.
---------------------------------------
 18)
மழையது பெய்யாமல்
பூமி வறண்டு போனால்
மூத்தோருக்குச் செய்யும்
பூஜைகளும் வறண்டு போகும்..
குறள்-18
சிறப்பொடு பூசனை செல்லாது வானம்
வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு.
----------------------------------- 
19)
வானம் பொய்த்தால்
இப் பூவுலகில்
தானம் தவம் இரண்டும் 
பொய்த்துப் போகும்.
குறள்-18
தானம் தவமிரண்டும் தங்கா வியனுலகம்
வானம் வழங்காது எனின்.
-------------------------------
20)
மழை பெய்யாது போனால்
அகிலமும் அழிந்து போகும்
மனித ஒழுக்கமும் 
ஒழிந்து போகும்.
குறள்-20
நீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும்
வானின்று அமையாது ஒழுக்கு.
----------------------------------------
                                                                         முகப்பு
                                                                அறத்துப்பால்
Download As PDF
Share this article :
புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

2 comments:

 1. அன்பின் மதுமதி - அருமையான வசனக் கவிதை. - படித்தேன் - இரசித்தேன் - மகிழ்ந்தேன் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

  ReplyDelete
 2. "மழை பெய்யாது போனால்
  அகிலமும் அழிந்து போகும்
  மனித ஒழுக்கமும்
  ஒழிந்து போகும்"
  அழுத்தம் திருத்தமான அழகிய பொருள்

  ReplyDelete

கருத்துரைப் பெட்டியில் இடும் கருத்துகளுக்கு கருதிட்டவரே பொறுப்பாவர்..

Search This Blog

Total Pageviews

Email Subscribers

புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

Followers

Recent Post

Popular Posts

Google+

Tips Tricks And Tutorials

TNPSC - முக்கிய வினா-விடைகள்

Random Posts

Best Blogger Tips

எழுதிய மாத நாவல்கள் சில

 
Support :
Written by Madhumathi Published by www.madhumathi.com