புது வரவு :
Home » » செங்கொடி வணக்கம்..

செங்கொடி வணக்கம்..
மங்களம்பாடி
மக்கள் மன்றத்தைச் சார்ந்தவள்
செங்கொடி;
சட்டமன்றத்துக்கும்
பாராளுமன்றத்துக்கும்
கொடுத்தாள் மரண அடி;

செங்கொடி..
தூக்கு கயிற்றைப் பறிக்க
தன்னுயிரை துச்சமாய் எண்ணி
தன்னையே எரித்துக்கொண்ட
காஞ்சிபுரத்து கன்னி;

அடுத்தவர் உயிரைக் காக்க
தன்னுயிரரை காணிக்கையாக்கும் வெறி
தமிழினத்துக்கு மட்டும்தான்
உண்டு என்பதை உலகத்திற்கு
மீண்டும் ஒருமுறை உணர்த்தியிருக்கிறாள்
செங்கொடி...

மற்ற மன்றங்கள்-ஆளும்
கட்சிக் கொடியை எரித்து
போராடுகிறார்கள்..
மங்களம்பாடி
மக்கள் மன்றத்தின்
செங்கொடி
தன்னையே
எரித்து போராடுகிறாள்..

மத்திய அரசே!
தூக்குத் தண்டனையை
உடனே ரத்து செய்!
மூன்று உயிரை காப்பாற்ற
முப்பது உயிர்களை
காணிக்கை கேட்காதே!

யாருக்கும் தெரியாமல்
கொலை செய்பவனைக்கூட
தேடிப்பிடித்து
சிறையிலடைக்கிறார்கள்..
உலகமறிய
மூன்று கொலைகளைச் செய்ய
முடிவெடுத்திருக்கிறார்களே
இவர்களுக்கு
யார் தண்டனை கொடுப்பது?

ஒருவேளை
இந்த மூன்று பேரையும்
தூக்கிலிட்டால்
1991 ல்
உயிரிழந்தவர்கள்
உயித்தெழுவார்கள் என்று
மத்திய அரசு
நம்புகிறது போலும்!                 30-Aug-11Download As PDF
Share this article :
புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

கணித பாடத்திட்டம்

Search This Blog

Email Subscribers

புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

காலமும் வேலையும்

எண்ணியல்

Followers

மீ.சி.ம

Popular Posts

சராசரி

Google+

Tips Tricks And Tutorials

வயது கணக்கு

TNPSC - முக்கிய வினா-விடைகள்

எழுதிய மாத நாவல்கள் சில

 
Support :
Written by Madhumathi Published by www.madhumathi.com