அம்மணியும் சின்ராசும் - மதுமதி.காம்
புது வரவு :
Home » , » அம்மணியும் சின்ராசும்

அம்மணியும் சின்ராசும்

Written By Madhu Mathi on Saturday, November 26, 2011 | 11/26/2011 11:40:00 AM

"அம்மணி அம்மணி"       
        சின்ராசு அழைத்துகொண்டே வர
"ஏனுங்க மாமா..இதோ வந்துட்டேனுங்க"
          என்றபடி வந்தாள் அம்மணி.
"ஏ புள்ள பேப்பர படிச்சியா?"
"இல்லீங் மாமா..அதுக்குள்ளதான் நீங்க புடிங்கீட்டீங்களே..ஏன் ஏதாவது முக்கிய சேதியா?"
         என்றபடி சின்ராசுவின் அருகில் அமர்ந்தாள் அம்மணி..
"முக்கியச் செய்தியெல்லாம் ஒண்ணுமில்ல புள்ள..தமிழ்நாட்டுல பலத்த மழை கொட்டுமாம் வானிலை மையம் அறிவிச்சிருக்கு"
"ஏனுங்க மாமா அண்ணாந்து பாத்தா நம்முளுக்கே தெரியுது இதை வானிலை மையம் சொல்லிதான் தெரியணுமா..வட கெழக்கு பருவ மழ ஆரம்பிச்சிருச்சு மாமா பின்ன மழ வராமயா இருக்கும்..அவுங்க மழை கொட்டும்ன்னு பள்ளிகோடத்துக்கு லீவு விட்டாலே போதும் ஒரு பொட்டு தண்ணி நெலத்துல உழுவாது ..ம்..இன்னைக்காவது அவுங்க சொன்னபடி மழ கொட்டுதா இல்ல தூத்த போடுதான்னு பாக்கலாம்..அத வுடுங்க இந்த கனிமொழிக்கு சாமீன் தள்ளி வச்சுட்டாங்களாம்"
"அட ஆமாம் புள்ள அதத்தான் எதிர்கட்சிகாரங்க மட்டுமில்லாம ஆளுங்கட்சி கட்சி,பொதுமக்கள்ன்னு எல்லாரும் எதிர்பாத்தாங்க..ஆனா மனு விசாரணையை 28ந்தேதிக்கு தள்ளி வச்சிட்டாங்களாம்.."
 "அட அப்படியா மாமா.ஜாமீனு கெடைக்குமா"
 "என்ன புள்ள இப்படி கேட்டுபுட்ட...எனக்கு மட்டும் என்ன தெரியும் அது என்ன கேசு எதை நோக்கி போகுதுன்னு ஒரே கொழப்பமா இருக்குது..ஜாமீனு கெடைக்கும்ன்னு செல பேரு சொல்றானுங்க..கெடைக்காதுன்னு செல பேரு சொல்றானுங்க ஒண்ணுமே புரியல அம்ம்ணி..28ந் தேதி பாப்போம்..என்னதான் ஆகும்ன்னு.."
"ஏனுங்க மாமா கரண்டு சார்ஜ் சொல்றேன்னாங்களே"
"ம்.. சொல்லியிருக்காங்க..ஆனா இன்னும் முடிவா சொல்லல..50 யூனிட் வரைக்கும் 65 பைசாவும் 100 யூனிட் வரைக்கும் 75 பைசாவும் கொடுத்தோமில்லையா..இனிமேலு 100 யூனிட்டுக்கு 1.50 ரூபா வசூலிக்கறதாவும் 200 யூனிட்டுக்கு மேல போனா மொதல் 50 யூனிட்டுக்கு 75 பைசா கொடுத்தோமுல்ல இனிமே அது 2 ரூபாயாவும் அதிகரிக்குமாம்"
"அய்யய்யோ அப்படின்னா ஆறு மணிக்கே சாப்புட்டு முடிச்சிட்டு லைட்ட ஆப் பண்ணிப்புடுனுங்க மாமா.. கரண்ட் பில்ல நம்மனால கட்டமுடியாது..ஏற்கனவே பால் வெல ஏறிப் போச்சு.."
''அம்மணி.. நாம கரெண்ட கட் பண்ணவே வேண்டாம்"
"ஏனுங்க மாமா''
"அட அரசாங்கமே தெனமும் நாலு மணிநேரம் கரெண்ட கட் பண்ணிடுவாங்க'
  என்று சின்ராசு சிரிக்க,
"உங்களுக்கு ஊமக்குசும்புதான் மாமா''
          என்ற அம்மணியிடம்"
"இங்கப்பாரு அம்மணி ரம்மி வெளயாடப் போகாதீங்க போலீசு புடிச்சுக்கும்ன்னு சொல்லுவியே இனிமே புடிக்க மாட்டாங்க"
"என்ன மாமா சொல்றீங்க"
"அட ஆமா அம்மணி பணத்த பந்தயங்கட்டி ரம்மி ஆடினாக்கூட அது சூதாட்ட்மில்லைன்னு ஐகோர்ட்டு சொல்லீருச்சு"
"அட கெரவத்தே அப்ப ஆளுங்க அங்கங்க ஒரு கை போட்டுருவாங்க போலிருக்கே..சேரி அத விடுங்க மாமா வேற ஒண்ணுமில்லயா"
"வேற..எதிர்கட்சிங்க 4வது நாளா பாராளுமன்றத்துல அமளியாம்"
"வேற சேதிய சொல்லுங்க மாமா''
"வேற சேதியா"
"எதோ சரத்குமார் பத்தி சொன்னீங்களே"
"அதுவா..தி.மு.க வும் விஜயகாந்த் கட்சியும் நடந்துக்குற முறை சரியில்லயாம்"
"இத தெரிஞ்சிக்க சரத்த்குமாருக்கு இவ்ளோ நாள் ஆயிருக்கு..விஜயகாந்துகோட கூட்டணி போட்டுத்தான் எம்.எல்.ஏ ஆனாரு. அப்பத் தெரியில அவருக்கு அப்பவே தெரிஞ்சிருந்தா கூட்டணிய ரத்து பன்ணியிருப்பாரா அட ஏன் மாமா..வேற ஏதாவது சொல்லுங்க"
"அவ்வளவுதான் அம்மணி பெருச இன்னைக்கும் ஒண்ணுமில்ல..
 ம் ..சொல்ல மறந்துட்டேன்னே நேத்து நடந்த டெஸ்டு கிரிக்கெட்டுல நம்ம அஸ்வின் 5 விக்கெட்டு எடுத்ததோட மொதமுறையா செஞ்சுரியும் அடிச்சிருக்காராம்"
''அப்படியா மாமா..அந்த தம்பிக்கு இதுதான் மொத மேட்சு..எல்லாம் பொண்டாட்டி வந்த நேரம் மாமா''
"உன்னைக்கூட தான் கல்யாணம் பண்ணினேன் அப்படி எதுவும் நல்லது நடக்கல''
        என்று சின்ராசு சொல்லி சிரிக்க முகத்தைத் திருப்பிக் கொண்டு போனாள் அம்மணி..
................................................................................................................................................................
   என்ன அன்பரே..படிச்ச விசயம் பிடிச்சுதா..அப்புறம் என்ன உங்களோட கருத்தை பதிச்சுட்டு மறக்காம வாக்க பதிவு பண்ணுங்க..இது இன்னும் நாலு பேரை போய்ச்சேரட்டும்..
Download As PDF
Share this article :
புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

11 comments:

 1. செய்தி தொகுப்பு அருமை நண்பரே

  எனது தளம் வந்து கருத்திட்டமைக்கு மிக்க நன்றி

  தமிழ் மணம் முதல் வாக்களித்தேன் .

  உங்கள் தளத்தில் உள்ள தமிழ் மணம் ஒட்டு பட்டையில் நீங்களும் வாக்களிக்கலாம் .

  ReplyDelete
 2. தொடர்ந்து நமது தளம் வாருங்கள்

  படியுங்கள் கருத்திடுங்கள் பிடித்திருந்தால் வாக்களியுங்கள்
  நன்றி

  ReplyDelete
 3. நண்பரே.... கிராமத்து உரையாடல் மூலம் நாட்டுநடப்பை அருமையா அலசியிருக்கிங்க... நல்ல பகிர்வு....


  நம்ம தளத்தில்:
  "வொய் திஸ் கொலவெறி டி" - Why This Kolaveri Di

  ReplyDelete
 4. /M.R/தமிழ்வாசி/
  வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..

  ReplyDelete
 5. தோழர்,
  அருமையான பதிவு..
  தொடர்ந்து வருகிறேன்

  ReplyDelete
 6. நாட்டு நடப்புகளை சுவையாய் சொல்லி இருக்கிறீர்கள்.
  வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 7. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..
  /சூர்யாஜீவா/நண்டு@நொரண்டு/சிவகுமாரன்/

  ReplyDelete
 8. நாட்டுநடப்புகள் , நாட்டுப்புற நடையில் தெரிந்து கொள்வது
  சுவையாக உள்ளது. ஓட்டு அளித்து விட்டேன். தொடருங்கள் தயவு செய்து.

  ReplyDelete
 9. /ஸ்ரவாணி/

  நன்றி சகோ..தொடர்கிறேன்..

  ReplyDelete
 10. வழக்கம் போல - அன்றாட நிகழ்வுகள் - சித்தரைக்கும் விதம் அருமை - நல்வாழ்த்துகள் -நட்புடன் சீனா

  ReplyDelete

கருத்துரைப் பெட்டியில் இடும் கருத்துகளுக்கு கருதிட்டவரே பொறுப்பாவர்..

Search This Blog

Total Pageviews

Email Subscribers

புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

Followers

Recent Post

Popular Posts

Google+

Tips Tricks And Tutorials

TNPSC - முக்கிய வினா-விடைகள்

Random Posts

Best Blogger Tips

எழுதிய மாத நாவல்கள் சில

 
Support :
Written by Madhumathi Published by www.madhumathi.com