புது வரவு :
Home » » அறன் வலியுறுத்தல்

அறன் வலியுறுத்தல்

4)அறன் வலியுறுத்தல்


31)
சிறப்பையும்
செல்வத்தையும்
அறமே கொடுக்கும்..
மற்றவை
அதைக் கெடுக்கும்..
குறள்-31
சிறப்புஈனும் செல்வமும் ஈனும் அறத்தினூங்கு
ஆக்கம் எவனோ உயிர்க்கு.
---------------------------------
32)
அறம் செய்வதைப்போல
சிறந்தது எதுவுமில்லை..
அதைச் செய்யாமல் 
இருப்பதைப் போல
குற்றமும் எதுவுமில்லை..
குறள்-32
அறத்தினூங்கு ஆக்கமும் இல்லை அதனை
மறத்திலின் ஊங்கில்லை கேடு.
-------------------------------------------------
33)
இயன்றவரை
இருக்குமிடமெல்லாம்
இடைவெளியில்லாமல்
இன்பமுற அறம்
செய்தல் வேண்டும்..
குறள்-33
ஒல்லும் வகையான் அறிவினை ஓவாதே
செல்லும்வாய் எல்லாம் செயல்.
----------------------------------------------------
34)
குற்றமில்லா
மனதைக் கொள்வதே அறம்..
குற்றத்தை
குடி வைத்துக்கொண்டு
செய்வதெல்லாம்
ஆடம்பரம்..
குறள்-34
மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்துஅறன்
ஆகுல நீர பிற.
----------------------
35)
பொறாமை
ஆசை
கோபம்
கடுஞ்சொல்
இந்நான்கையும்
தூரத்தில் 
தூக்கி எறிவதே அறம்..
குறள்-35)
அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்
இழுக்கா இயன்றது அறம்.
-----------------------------------------
36)
இருக்கும் காலத்தில்
அறத்தைச் செய்தால்
இறக்கும் காலத்தில்
கூட வந்து நிற்கும் ..
குறள்-36
அன்றறிவாம் என்னாது அறஞ்செய்க மற்றது
பொன்றுங்கால் பொன்றாத் துணை.
----------------------------------------------------------
37)
பல்லக்கில்
அமர்ந்திருப்பவனையும்
தூக்கிச் செல்பவனையும்
பார்த்தாலே தெரியும்
அறத்தின் பயன் புரியும்..
குறள்-37
அறத்தாறு இதுவென வேண்டா சிவிகை
பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை.
------------------------------------------------------------
38)
அனுதினமும்
செய்த அறமே
பிறவித் துன்பமெனும்
வழியடைக்கும்
கல்லாக மாறி நிற்கும்..
குறள்-38
வீழ்நாள் படாஅமை நன்றாற்றின் அஃதொருவன்
வாழ்நாள் வழியடைக்குங் கல்.
--------------------------------------------------
39)
அறநெறியில் 
வாழ்வதே இன்பம்.
பிற வழியில் 
வருவது துன்பம்-அது
புகழைத் தராது. 
குறள்-39
அறத்தான் வருவதே இன்பம் மற்றெல்லாம்
புறத்த புகழும் இல.
-----------------------------
40)
ஒருவன்  வாழ்நாளில்
செய்ய வேண்டியது
அறச் செயல்..
செய்யக் கூடாதது
பழிச் செயல்.
குறள்-40
செயற்பால தோறும் அறனே ஒருவர்க்கு
உயற்பால தோறும் பழி.
--------------------------------------                                முகப்பு
                                                                            அறத்துப்பால்
Download As PDF
Share this article :
புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

1 comment:

  1. அன்பின் மதுமதி - அறனை அழகாக வலியுறுத்தும் கவிதைகள் - அருமை அருமை - நல்வாழ்த்துகள் மதுமது - நட்புடன் சீனா

    ReplyDelete

கருத்துரைப் பெட்டியில் இடும் கருத்துகளுக்கு கருதிட்டவரே பொறுப்பாவர்..

Search This Blog

Email Subscribers

புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

Followers

Popular Posts

Google+

Tips Tricks And Tutorials

TNPSC - முக்கிய வினா-விடைகள்

எழுதிய மாத நாவல்கள் சில

 
Support :
Written by Madhumathi Published by www.madhumathi.com