புது வரவு :
Home » , » மௌனம் பேசிய மொழிகள்

மௌனம் பேசிய மொழிகள்

எழுதி முடித்த 
    எழுத்துக்களையே
    வெறித்த படி 
    பார்த்துக்கொண்டிருக்கின்றன
    கண்கள்..


கற்பனையோடு
    கட்டிப் புரண்டு 
    சண்டையிட்டுக்கொண்டு
    இருக்கிறது மனசு..


விற்பனையாகாத
    கற்பனைகளை
    வாங்கிக் கொள்ளும்
    ஆவலுடன்
    குப்பைத்தொட்டி.
.
மௌனம்...


மௌனம்
    பேசிய மொழிகள்
    கவிதைகள்..


காகிதத்தை
    உழுதுகொண்டே
    எழுத்துக்களை
    விதைக்கிறது
    எழுதுகோல்..


எழுதுகோலின்
    இரத்தத்தை உறிஞ்சி
    பசியாறிய பிறகே
    எழுத்துக்களை
    ஒவ்வொன்றாய்
    ஈன்றெடுக்கிறது
    காகிதம்.
.
இறக்கி வைத்த
    கற்பனைகளை-இனி
    சுமந்து கொண்டே
    இருக்கப் போகிறது
    என் கவிதைப் புத்தகம்..


         OOOOOO

என்ன அன்பரே..படிச்ச விசயம் பிடிச்சிருந்தா உங்களோட கருத்தை பதிச்சுட்டு மறக்காம வாக்க பதிவு பண்ணுங்க..இது இன்னும் நாலு பேரை போய்ச்சேரட்டும்..
Download As PDF
Share this article :
புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

19 comments:

  1. ////காகிதத்தை
    உழுதுகொண்டே
    எழுத்துக்களை
    விதைக்கிறது
    எழுதுகோல்/////

    உண்மையில் இந்தக் கவிதையை வர்ணிக்க என்னிடம் வார்த்தைகள் இல்லை மிகவும் ரசிக்க வைத்த வரிகள்...

    அன்புச் சகோதரன்...
    ம.தி.சுதா
    இந்த வார சினிமா செய்திகளின் தொகுப்பு (21.11.2011-27.11.2011)

    ReplyDelete
  2. அருமை
    அருமை

    ஆழ்ந்து படித்தேன்.
    தொலைந்துபோனேன்..

    ReplyDelete
  3. ////மௌனம்
    பேசிய மொழிகள்
    கவிதைகள்..
    ////

    சிறப்பான வரிகள் அருமையான பதிவு பாராட்டுக்கள் நண்பா

    ReplyDelete
  4. // இறக்கி வைத்த
    கற்பனைகளை-இனி
    சுமந்து கொண்டே
    இருக்கப் போகிறது
    என் கவிதைப் புத்தகம்..//

    எங்களின் மனமும்தான் நண்பரே...

    ReplyDelete
  5. நன்றி/.ம.தி.சுதா/நண்டு@நொரண்டு/முனைவர் குணசீலன்/k.s.s.ராஜ்/வீடு/

    ReplyDelete
  6. விற்பனையாகாத கற்பனைகள்- இந்த லைன் ரசிச்சு படிச்சேன்... அருமையா எழுதியிருக்கீங்க சகோ

    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  7. ந்ன்றி..ஆமினா

    ReplyDelete
  8. "எழுதுகோலின் இரத்தத்தை உறிஞ்சி
    பசியாறிய பிறகே எழுத்துக்களை
    ஒவ்வொன்றாய் ஈன்றெடுக்கிறது
    காகிதம்".

    அருமையான சிந்தனை

    ReplyDelete
  9. அழகிய வரிகள் கொண்ட கவிதை நண்பரே,ரசித்தேன்

    ReplyDelete
  10. இங்கே, நீங்கள் இறக்கி வைத்த கற்பனைகளை (கவிதைகளை)மிக ரசித்தேன்...

    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  11. விற்பனையாகாத
    கற்பனைகளை
    வாங்கிக் கொள்ளும்
    ஆவலுடன்
    குப்பைத்தொட்டி.
    .
    O மௌனம்


    அருமை.

    ReplyDelete
  12. //விற்பனையாகாத
    கற்பனைகளை
    வாங்கிக் கொள்ளும்
    ஆவலுடன்
    குப்பைத்தொட்டி.//

    சிலசமயம் அதிகமாகவே நிரம்பிடும்

    ReplyDelete
  13. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..
    /வியபதி/கௌசல்யா/M.R/லட்சுமி அம்மா/சி.பி.செந்தில்குமார்/

    ReplyDelete
  14. //இறக்கி வைத்த
    கற்பனைகளை-இனி
    சுமந்து கொண்டே
    இருக்கப் போகிறது
    என் கவிதைப் புத்தகம்//

    உங்கள் கவிதைப் புத்தகம் மட்டுமல்ல எங்கள் மனங்களிலும் உங்கள் கவிதை நிலைத்துவிட்டது.மேலும் மேலும் நீங்கள் கவி எழுதணும் நாங்க படித்து மகிழனும்.

    உயர்ந்த உள்ளமே உனக்கு ஓர் வாழ்த்து.

    ReplyDelete
  15. மகிழ்ச்சி..சித்தாரா மகேஷ்

    ReplyDelete
  16. இறக்கி வைத்த
    கற்பனைகளை-இனி
    சுமந்து கொண்டே
    இருக்கப் போகிறது
    என் கவிதைப் புத்தகம்..////
    அருமையான வரிகள்:)

    ReplyDelete
  17. நல்ல பகிர்வு .இன்றைய என் ஆக்கத்தினை நீங்கள் அவசியம்
    பார்க்க வேண்டும் என அன்போடு அழைக்கின்றேன் .மிக்க நன்றி
    சகோ பகிர்வுக்கும் ஒத்துளைப்புகளிக்கும் .

    ReplyDelete

கருத்துரைப் பெட்டியில் இடும் கருத்துகளுக்கு கருதிட்டவரே பொறுப்பாவர்..

Search This Blog

Email Subscribers

புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

Followers

Popular Posts

Google+

Tips Tricks And Tutorials

TNPSC - முக்கிய வினா-விடைகள்

எழுதிய மாத நாவல்கள் சில

 
Support :
Written by Madhumathi Published by www.madhumathi.com