புது வரவு :
Home » , » பயணங்கள் முடிவதில்லை..

பயணங்கள் முடிவதில்லை..

மழையின் போது
வெயிலை நோக்கி ஒரு பயணம்..
வெயிலின் போது
மழையை நோக்கி ஒரு பயணம்..
பயணங்கள் முடிந்தபாடில்லை..
மழையும் வெயிலும் தீர்ந்தபாடில்லை..




இரவின் போது
பகலை நோக்கி ஒரு பயணம்..
பகலின் போது
இரவை நோக்கி ஒரு பயணம்..
பயணங்கள் முடிந்தபாடில்லை..
இரவும் பகலும் தீர்ந்தபாடில்லை..

துன்பத்தின் போது
இன்பத்தை நோக்கி ஒரு பயணம்..
இன்பத்தின்போது
துன்பத்தை நோக்கி ஒரு பயணம்..
பயணங்கள் முடிந்தபாடில்லை..
இன்பமும் துன்பமும் தீர்ந்த்பாடில்லை

ஆண்மைக்காக
பெண்மை தேடி ஒரு பயணம்
பெண்மைக்காக
ஆண்மை தேடி ஒரு பயணம்
பயணங்கள் முடிந்தபாடில்லை
ஆண்மையும் பெண்மையும் தீர்ந்தபாடில்லை..
---------------------------------------------------------------------
Download As PDF
Share this article :
புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

8 comments:

  1. வாழ்க்கைப் பயணம் மட்டும் ஒருநாள் முடிந்துவிடும்! ஆனால், வாழ்க்கை முழுவதும் தேடலுடன் தொடரும் பயணங்கள் முடிவதில்லை! அதிலும் சுவாரஸ்யம் இருக்கத்தானே செய்கிறது! உங்கள் சொல்லாடல் பிரமாதம் கவிஞரே...

    ReplyDelete
  2. மாப்ள தேடல் இருக்கும் வரைக்கும் தானே வாழ்கை!

    ReplyDelete
  3. பயணங்கள் தொடர்ந்து கொண்டேயிருக்கின்றன..தேவைகள், தேடல்கள் தீர்ந்துவிடாததால்! அருமை!

    ReplyDelete
  4. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
    /நண்டு@நொரண்டு/கணேஷ்/விக்கி/ஜீ/

    ReplyDelete
  5. பயணத்தின் சிறப்பையும் , எதிர்பார்ப்பின் தேவையும் இன்றைய சூழலுக்கு தகுந்த மாதிரி கவிதை புனைந்த உங்களுக்கு பெரிய நன்றிகள் கவிஞரே ..

    ReplyDelete
  6. வாழ்க்கையில் பயணங்கள் நிச்சயம் தேவை.அதுதான் வாழ்வை நகர்த்தும் சுவாரஸ்யம் !

    ReplyDelete
  7. மழையின் போது
    வெயிலை நோக்கி ஒரு பயணம்..
    வெயிலின் போது
    மழையை நோக்கி ஒரு பயணம்..


    மனம் இங்கு வந்தால் அங்கு செல்வதும் அங்கு சென்றால் கவனம் இங்கு வருவதும் ஒரு குழப்பத்தின் அடையாளமே

    கவிதை அருமை நண்பரே

    ReplyDelete

கருத்துரைப் பெட்டியில் இடும் கருத்துகளுக்கு கருதிட்டவரே பொறுப்பாவர்..

Search This Blog

Email Subscribers

புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

Followers

Popular Posts

Google+

Tips Tricks And Tutorials

TNPSC - முக்கிய வினா-விடைகள்

எழுதிய மாத நாவல்கள் சில

 
Support :
Written by Madhumathi Published by www.madhumathi.com