புது வரவு :
Home » » வாழ்க்கைத் துணை நலம்

வாழ்க்கைத் துணை நலம்


6.வாழ்க்கைத் துணை நலம்
51)
கணவனைப் புரிந்து
வருவாய் அறிந்து
இல்லறம் செய்பவளே
நல்லதோர் மனைவி;
வாழ்க்கையின் துணைவி;
குறள்-51
மனைக்தக்க மாண்புடையள் ஆகித் தற்கொண்டான்
வளத்தக்காள் வாழ்க்கைத் துணை.
---------------------------------------------
52)
நல்லதோர் மனைவி 
அமைந்தாலே போதும்
இல்லறம் செழிக்கும்;
அதை விட சிறப்பு
வேறென்ன இருக்கும்;
குறள்-52
மனைமாட்சி இல்லாள்கண் இல்லாயின் வாழ்க்கை
எனைமாட்சித் தாயினும் இல்.
--------------------------------------
53)
நல்ல மனையாள் அமைந்தால்
அனைத்தும் சிறக்கும்;
அமையாமற் போனால் 
வாழ்க்கையே வெறுக்கும்;
குறள்-53
இல்லதென் இல்லவள் மாண்பானால் உள்ளதென்
இல்லவள் மாணாக் கடை..
------------------------------------
54)
கற்பென்னும் நற்பண்பே
பெண்ணிற்கு வலிமை;
மற்றதெல்லாம்
அதைவிட எளிமை;
குறள்-54
பெண்ணின் பெருந்தக்க யாவுள கற்பென்னும்
திண்மையுண் டாகப் பெறின்.
---------------------------------------
55)
கடவுளை வணங்காது
கணவனை வணங்கும் பெண்
பெய்யென்று சொன்னால்
பெய்யும் மழை.
குறள்-55
தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை.
--------------------------------------



--------------------------------------
56)
கற்பையும் 
கணவனையும் காத்து
ஒழுக்க நெறி பார்த்து
வாழ்பவளே பெண்;
வாழாதவள் மண்;
குறள்-56
தற்காத்துத் தற்கொண்டான் பேணித் தகைசான்ற
சொற்காத்து சோர்விலாள் பெண்.
---------------------------------------------
57)
பெண்ணை சிறைபடுத்தி
பாதுகாப்பது சிறப்பல்ல
தன்னை முறைப்படுத்தி அவள் 
காத்துக் கொள்ளலே சிறப்பு.
குறள்-57
சிறைகாக்குங் காப்புஎவன் செய்யும் மகளிர்
நிறைகாக்குங் காப்பே தலை.
---------------------------------------
58)
இல்லறவாழ்வை 
இனிதாய் பெற்ற பெண்ணே
இவ்வுலகிலுள்ள
இன்பங்களையெல்லாம்
பெறுகின்ற பெண்..
குறள்-58
பெற்றார் பெறின்பெறுவர் பெண்டிர் பெருஞ்சிறப்பு
புத்தேளிர் வாழும் உலகு.
--------------------------------
59)
புகழைக் காக்கும்
மனைவி இல்லாதவன்
இகழ்பவனுக்கு முன்பு
கம்பீரமாக நடக்கத்
தகுதி இல்லாதவன்..
குறள்-59
புகழ்புரிந்த இல்லிலோர்க்கு இல்லை இகழ்வார்முன்
ஏறுபோல் பீடு நடை.
---------------------------
60)
நல்ல மனைவியே
இலவாழ்க்கைக்கு அழகு.
அவள் ஈன்ற பிள்ளை
அழகை அதிகரிக்கும் அணிகலன்.
குறள்-60
மங்கலம் என்ப மனைமாட்சி மற்றுஅதன்
நன்கலம் நன்மக்கட் பேறு. 
----------------------------------

Download As PDF
Share this article :
புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

26 comments:

  1. மிக மிக அருமையாக
    மிக மிக எளிமையாக
    மிக மிகச் சுவையாக
    சொல்லிப் போவது மனம் கவர்ந்தது
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தோழர்..

      Delete
  2. வணக்கம்
    மிகவும் அருமை மனையாளை பற்றி வள்ளுவர் கூறியதை எடுத்து சொன்னதற்கு!
    நன்றி

    ReplyDelete
  3. அருமை...அருமை...
    தொடருங்கள் ...

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தோழர்..

      Delete
  4. அருமை குரள் கவிதைகள்

    பாஸ் உங்கள் தளம் ஓப்பின் ஆக கொஞ்சம் லேட்டாகுது ஒரு வேளை எனக்கு மட்டும் தானா என்று தெரியவில்லை ஒருக்கா பாருங்கள்

    ReplyDelete
    Replies
    1. தெரியவில்லை தோழர் பார்க்கிறேன்..வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தோழர்..

      Delete
  5. அருமையான கட்டுரை.வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. கட்டுரை அல்ல தோழர்..அனைத்தும் குறட்பாக்கள்..

      Delete
  6. எல்லாமே மனைவிய பற்றிய குறளாக உள்ளது. இன்னும் எனக்கு தான் கல்யாணம் ஆகவில்லை...அருமையான குறள்.புரட்சியை பற்றிய குறள் இருந்தால் பகிரவும்...

    ReplyDelete
    Replies
    1. வாரம் ஒரு அதிகாரம் என எழுதிவருகிறேன் தோழர்..தொடர்ந்து வாசியுங்கள்..வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தோழர்..

      Delete
  7. கவிஞரே... மிக எளிமையாக அழகுத் தமிழில் சொல்லி வருகிறீர்கள். மிக ரசிக்கிறேன். முடித்ததும் கண்டிப்பாக புத்தகமாக வெளியிட ஏற்பாடு செய்யவும், எனக்குத் தகவல் தரவும் உங்ககிட்ட (உரிமையோட) வேண்டுகோள் விடுக்கிறேன். நன்றி.

    ReplyDelete
  8. நிச்சயம் ஐயா.. 133 அதிகாரமும் எழுதி முடித்தவுடன் புத்தகமாக வெளியிடுகிறேன்..அந்த விழாவில் நீங்கள் இல்லாமலா..கண்டிப்பாக எந்த நிகழ்வாக இருந்தாலும் தங்களை அழைக்கிறேன்..வருகைக்கும் ஆலோசனைக்கும் நன்றி..

    ReplyDelete
  9. திருக்குறளுக்கு மிக எளிதாக புரியும் வகையில் பதிவிட்டிருக்கீங்க. உங்கள் உழைப்புக்கு வணக்கங்கள் பகிர்விற்கு நன்றிகள்

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தோழர்..

      Delete
  10. எல்லாமே அருமையான விளக்கங்கள் எனினும்
    நான் மிக ரசித்தது முதலும் & முடிவும்.
    பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரி.

      Delete
  11. Naan Tirukkuralukku ethanaiyo uraigalai padithu irukkiren. Kadaisiyaga Sujatha eluthina onru ennai kavarnthathu. Ippo ungaludaiyathu. Ungal urai vithiyasamaga arumaiyaga ullathu Sir! Thodarungal. Kaaththirukkiren.

    TM 10.

    ReplyDelete
  12. Thangalukkum Thangal kudumpaththaarukkum enathu Iniya Pongal Vaalthukkal Sir!

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி தோழர்..மகிழ்ச்சி..உங்களுக்கும் எனது தமிழ் புத்தாண்டு பொங்கல் வாழ்த்துகள்..

      Delete
  13. ஆஹா... இது அருமையாக இருக்கிறது நண்பரே.. திருக்குறள் கவிதைகள் சூப்பர். வாழ்த்துக்கள். பொங்கல் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  14. பெண்களுக்குப் புத்தி சொல்வதுபோலவும் இருக்கு.
    மிக மிகச் சிறப்பு !

    ReplyDelete
  15. அன்பின் மதுமதி - அருமையான செயல் - வாழ்க்கைத் துணை நலம் - வசன கவிதையில் - பொருள் மாறாமல் - அருமை அருமை - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
  16. அன்பின் மதுமதி - வாழ்ழ்க்கைத் துணை நலம் பற்றி குறளாசான் கூறியதை - எளிய சொற்களால் - கவிஅதை நடையில் வடித்தமை நன்று - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
  17. ''புகழைக் காக்கும்
    மனைவி இல்லாதவன்
    இகழ்பவனுக்கு முன்பு
    கம்பீரமாக நடக்கத்
    தகுதி இல்லாதவன்..'' குறளின் பொருளை அப்படியே தந்திருக்கும் அருமையான வசன கவிதைகள்

    ReplyDelete

கருத்துரைப் பெட்டியில் இடும் கருத்துகளுக்கு கருதிட்டவரே பொறுப்பாவர்..

Search This Blog

Email Subscribers

புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

Followers

Popular Posts

Google+

Tips Tricks And Tutorials

TNPSC - முக்கிய வினா-விடைகள்

எழுதிய மாத நாவல்கள் சில

 
Support :
Written by Madhumathi Published by www.madhumathi.com