புது வரவு :
Home » , » மலையாளியின் கொலவெறி

மலையாளியின் கொலவெறி

"ஏய்..அம்மணி!..அம்மணியோவ்..எங்க புள்ள போயிட்ட..அந்த பேப்பரைக் கொஞ்சம் கொண்டா சும்மா மேலோட்டம பாத்துபோட்டு கொடுக்குறேன்"
          கயித்துக் கட்டிலில் உட்கார்ந்திருந்த சின்ராசு சத்தம் போட,
"ஏனுங்க மாமா இப்படி கத்தறீங்க..எங்கியும் போவுல இங்கதான் இருக்கிறேன்..செத்த நேரம் பேப்பர் பாக்க வுடமாட்டீங்களே"
          என்று சலித்தபடி அருகாமையிலிருந்த ஓலைக் கொட்டாயிலிருந்து வெளியே வந்தாள் அம்மணி.. 
"ஆமா புள்ள ..நீ எழுத்துக்கூட்டி படிக்கறத்துக்குள்ள நாளைக்கு புது பேப்பரே வந்துடும்"
          சொன்ன சின்ராசு சிரிக்க,
"நானா எழுத்துக் கூட்டி படிக்கிறேன்..எட்டாவது பாஸாயிருக்கேன் மாமா..சும்மால்ல"
"நீ படிச்ச படிப்புதான் எனக்கு தெரியுமே..காலைல இருந்து பேப்பர கையில வச்சிருக்கே இன்னும் ஒரு பக்கம் படிச்சிருக்க மாட்டே"
"நான் எத்தனை பக்கம் படிச்சா உங்களுக்கென்ன மாமா ..உங்களுக்கு இப்ப பேப்பர்தான வேணும்..இந்தாங்க மொதல்ல புடிங்க..சீக்கிரம் படிங்க..படிச்சுப்போட்டு எல்லாத்தையும் எனக்கு சொல்லோனும் ஆமா"
          என்ற படி சின்ராசிடம் இன்றைய செய்தித்தாளை அம்மணி கொடுக்க அதை வாங்கிய சின்ராசு,பேப்பரை ஒரு பத்து நிமிடம் மேய்ந்துவிட்டு அம்மணியைப், பார்த்தான்..
"ஏனுங்க மாமா.ஆதுக்குள்ள படிச்சு முடிச்சுட்டீங்களா?"
"இரு புள்ள இப்பத்தான் மொத பக்கம் படிச்சிருக்கேன்"
"ஆமா மாமா நானும் அதப் படிச்சேன்..நம்ம முல்லை பெரியாறு அணைய கட்டினாரே அந்த வெளிநாட்டுக்காரு..அவர் பேரு என்னாது"
பென்னி குவிக்
"பென்னி குக்"
"ம்..அவருதான்..அவருக்கு ஒரு கோடி ரூவா செலவு பண்ணி மணிமண்டபம் கட்டுறாங்களாம்"
"ஆமா புள்ள தெம்பத்துக்காரங்க தண்ணி இல்லாம தவிச்சப்ப இவருதான் அங்க அணைய கட்டி தண்ணிய தேக்கி நம்மாளுக நாக்க நனைக்க வச்சாரு..அந்த நன்றிக்காகத்தான் இப்ப அவருக்கு ஒரு கோடி ரூவா செலவுல மணிமண்டபம் கட்டப்போறதா அம்மா அறிவிச்சிருக்காங்க புள்ள"
"அதுசரி மாமா..தெம்பக்கு மக்களோட பஞ்சத்த போக்குன மகராசந்தான் அவரு. 
அவரை கண்டிப்பா நாம நெனச்சு பாக்கோணும். இல்லைனா திங்கிற சோறு செரிக்காது..அரசாங்க பணம் பத்தலைன்னு தன்னோட சொந்த பணத்த செலவு பண்ணி அணைய கட்டினாருன்னு சொல்றாங்க..எல்லாம் சரிதான் மாமா..அவருக்கு மணிமண்டபம் கட்டனும்தான் வேண்டானு சொல்லலை..
அதுக்காக ஒரு கோடி ரூபா அதுக்கு செலவு பண்ணனுமா..பத்துலடசத்துல ஒரு மண்டபத்த கட்டிப்போட்டு மீதி தொண்ணூரு லட்சத்தை புயலால பாதிக்க பட்டாங்களே கடலூரு மக்களும் விவசாயிங்களும் அவுங்க வாழ்வாதாரத்துக்கு கொடுக்கலாமே"
"அவுங்களுக்கும் சில கோடி ஒதுக்கி இருக்காங்க புள்ள"
"ஒதுக்கி இருக்காங்க மாமா இல்லைன்னு சொல்லலை.. தனக்கு ஒரு கோடி ரூபாயில மணிமண்டபம் கட்டுறதுக்கு ஒருவேளை பென்னி குக் உயிரோட இருந்திருந்தா அவரே ஒத்துக்க மாட்டாரு..அந்த பணத்த ஏழைகளுக்கு செலவு பண்ணுங்கன்னு சொல்லியிப்பாரு"
              என்று வருத்தப்பட்ட அம்மணியைப் பார்த்த சின்ராசு..
"ஆமா அம்மணி நீ சொல்றது நாயமாத்தான் படுது..பத்துலட்சத்துல மண்டபம் கட்டிட்டு மீதிய இல்லாதவங்களுக்கு செலவு பண்லாம்..நாம பொலம்பி என்ன பண்றது"
"புயலால முந்திரி தோப்பு தென்னந்தோப்பு பலாதோப்புன்னு எல்லாம் அழிஞ்சு போயி நடு வீதியில உக்காந்து அழுதுட்டு இருக்காங்களே கடலூரு விவசாயிங்க அவுங்களுக்கு அரசாங்கம் என்ன மாமா பண்ணப்போவுது.."
"அதுக்கும் பணம் ஒதுக்கியிருக்காங்களாம்"
"என்ன பண்ணி என்ன மாமா ..அழிஞ்சதையெல்லாம் மீட்டெடுக்கணுன்னா எப்படியும் பத்து பதினஞ்சு வருசம் ஆகாதா?"
அழிந்த தென்னந்தோப்பு
"ஆமா புள்ள நெனச்சாலே பகீரிங்குது"
"அது வரைக்கும் அவுங்க என்ன பண்ணுவாங்க பாவம்..என்ன கேட்டா அரசாங்கம் மொதல்ல புயலால பாதிக்கப் பட்ட மக்களுக்கு கட்சி பாகுபாடில்லாம நிவாரணம் வழங்கிப்போட்டு அழிஞ்ச விவசாய நெலத்துல மறுபடியும் வெவசாயம் பண்ண ஏற்பாடு பண்ணிபோட்டுதான் வேற காரியமே பண்ணோனும்"
"ஆமா அம்மணி நீ சொல்றது சரிதான்"
                 அம்மணியின் முகத்திலிருந்த வருத்தம் சின்ராசின் முகத்துக்கும் தாவியது.
             அடுத்த பக்கத்தைப் புரட்டிப் பார்த்த சின்ராசு,
"இங்க பாத்தியா புள்ள..நக்கீரன் கோபாலு மேல கேசு போட்டிருக்காங்களாம்"
"இத மொதல்லயே பண்ணிப்போட்டு போகவேண்டியதுதான மாமா
அதவுட்டுப்போட்டு பத்திரிக்கை ஆபிஸ போட்டு அடிச்சு நொறுக்குறாங்க."
நக்கீரன் அலுவலகம்
"அதான் அம்மணி அம்மாவைப் பத்தி தப்பா நக்கீரன்ல எழுதிட்டாங்களாம்"
"ஆயிரந்தான் இருக்கட்டும் மாமா..பிரதமரையே தப்பா எழுதுறாங்க..அது அவுங்களோட பத்திரிக்கை சுதந்திரம் மாமா. அப்படி தப்பா எழுதியிருந்தா சட்டப்படி கோர்ட்டுல கேசு போட வேண்டியத்துதான்..இப்படியா பண்றது"
"அப்ப தனி மனித தாக்குதல் சரின்னு சொல்றியா?''

"தனி மனிதனை தாக்குறது சரின்னு சொல்றீங்களா"
"என்னால ரெண்டையுமே சரின்னு சொல்லமுடியாது புள்ள"
"ந்க்கீரன் மேல அம்மாவுக்கு கோவம்..அம்மா மேல நக்கீரனுக்கு கோபம்..இது எதுல போயி முடியுமோ அவுங்களுகுள்ள ஆயிரம் பிரச்சன இருக்கு புள்ள நமக்கு அவ்வளவா தெரியாது..சரி அத விடு..இங்கப்பாரு தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா அரசியல்ல குதிக்கிறாம்"
"குதிக்கட்டும் மாமா ..பாவம் அவரு மட்டும் என்ன பண்ணுவாரு இருவது வருமா சினிமா நடிச்சாச்சு,,வேற என்ன தொழில் மாமா தெரியும் ..பின்னாடி ரசிகர் மன்றம் இருக்குற தைரியம்..குதிக்கும்போது பாத்து குதிக்கட்டும் ஏன்னா நிறைய நடிகருங்க குதிக்கத் தெரியாம குதிச்சு அடிபட்டிருக்காங்க.."
"ஆமா புள்ள குதிச்சு போட்டு ஏறத்தெரியாம எத்தனை பேரு"
எம்.ஜி.ஆர்-என்.டி.ஆர்
"எல்லாம் அவுங்க அப்பா என்.டி.ராமாராவ் பண்ணின வேலை மாமா..அவரை பாத்துட்டு தெலுங்கு நடிகருங்க அரசியலுக்கு வர்றாங்க எம்.ஜி.ஆரைப் பாத்துட்டு தமிழ் நடிகருங்க முதலமைச்சர் ஆகணுமம்ன்னு நெனைக்கிறாங்க..
நடிகருங்க படற பாட்ட நெனச்சா எனக்கே சிரிப்பா இருக்குது..ங்..மாமா சினிமா நடிகருன்னு சொன்னவுடனே ஞாபகம் வந்துடுச்சி..ஏன் மாமா இந்த கொலவெறி நடிகருக்கும் பிரபல நடிகரின் மகளுக்கும் ஏதோ கிகிசுன்னு.."
 "அதுதான் இப்ப நாட்டுக்கு முக்கியமா..ஏன் அம்மணி"
"சரி மாமா அதை வுடுங்க..மலையால டிவி யில கொலவெறி பாட்ட கேட்ட பாடகர் கொலவெறி ஆயிட்டாருன்னு நேத்து சொன்னீங்களே அதக் கொஞ்சம் தெளிவா சொல்லுங்க"
"அதுவா அம்மணி..மலயால டிவி யில ஒரு பாட்டு நிகழ்ச்சி..அதுக்கு பேமசான பாடகரு ஜெயச்சந்திரன் நடுவரா போயிருக்காரு..அதுல ஒருத்தன் தனுசோட கொலவெறி பாட்ட பாடியிருக்கான்..அதைக் கேட்ட இவருக்கு கோவம் வந்துடிச்சி..இந்தமாதிரி பாட்டு பாட்றதாயிருந்தா நான் வீட்டுக்கு போறன்னு சேரை விட்டு எந்திருச்சிட்டாரு"
"யாரு மாமா அவரு..தமிழ்ல் என்ன பாட்டு படியிருக்காரு"
"என்ன புள்ள இப்படி கேட்டுப்போட்ட ராசாத்தி உன்ன காணாத நெஞ்சு அப்புறம் காத்திருந்து காத்திருந்து இன்னும் ஏகப்பட்ட பாட்டு பாடியிருக்காரு..நம்ம ஏ.ஆர் ரகுமானுக்கு நெஞ்சில் ஜில் ஜில் காதல் ஜில்ஜில்ன்னு ஒரு பாட்டு பக்கமா பாடியிருக்காரு"
                        மலையாள கொலவெறி
"அப்படியா நல்ல பாட்டு பாடினவருக்கு கொலவெறி பாட்டக் கேட்டா கொலவெறிதான் வரும்..அவர் பண்ணினது சரிதான்..சங்கீத போட்டியில இந்த பாட்டப் பாடினா நமக்கே கோவம் வருது"
"பின்ன"
"நதிகளை இணைக்க வேணுமுன்னு அப்துல் கலாம் பேசினாராம் பாரு"
"யாரு வேணா பேசலாம் மாமா..கேட்டு கேட்டு சலிச்சு போச்சு..எல்லா நதிகளும் தானா இணைஞ்சாதா உண்டு"
"ஆமாம் அம்மணி..ஆஸ்திரேலியா கிரிக்கெட்டுல இந்திய அணி தோத்துப் போச்சாம்"
"இதுல என்ன மாமா ஆச்சரியம் ஜெயிச்சாத்தான ஆச்சரியம்."
"வேகப்பந்து வீச்சு சரியில்லாததால தோல்வின்னு பிரபல வீரர்கள் கருத்து"
"இத பிரபல வீரர்கள் சொன்னாத்தான் தெரியுமா நம்ம புள்ளைங்களப் பத்தி நமக்கு தெரியாதா என்ன"
"ஆமா புள்ள..சரி நாட்டு நடப்ப பேசிட்டே இருந்தா நேரம் போறதே தெரிய மாட்டேங்குது....அந்த ரேஷன் கார்டை எடுத்துட்டு வா போய் பதிவு பண்ணிட்டு வந்திடுறேன்..இல்லைன்னா இந்தா மாசம் அரிசி வாங்க முடியாது"
"ஆமா மாமா மொதல்ல அதப் பாருங்க..கொஞ்சம் இருங்க அட்டைய எடுத்துட்டு வரேன்'
                என்று சொன்ன அம்மணி வீட்டிற்குள் நுழைந்தாள்..     
------------------------------------------------------------  வாசித்துவிட்டீர்களா.. உயிரைத் தின்று பசியாறு              க்ரைம்..கரைம்..க்ரைம்
Download As PDF
Share this article :
புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

27 comments:

  1. கவிஞரே... அரசியல்வாதி ஜெ.வையும் கட்சியையும் எவ்வளவு வேணா தாக்கலாம். ஆனா தனிமனிதரான ஜெ.வை கேவலப்படுத்தற மாதிரி தலைப்பு போடறது பத்திரிகை தர்மம்என்ன... மனுஷ தர்மத்துலயே சேர்த்தி கிடையாதுன்னு சின்ராசு மாமாகிட்ட சொல்லிப் போடுங்க. பென்னி குய்க் பத்தி அவரு சொன்ன விஷயம் நல்லாத்தேன் இருந்துச்சு. கொலைவெறி பாட்டை திரும்பத் திரும்பக் கேக்கறப்ப எனக்கே அதான் வருது. பாவம்... ஜெயச்சந்திரனுக்கு கோபம் வராதுங்களா..? பிரமாதமா எழுதியிருக்கீங்க...

    ReplyDelete
  2. பத்துலடசத்துல ஒரு மண்டபத்த கட்டிப்போட்டு மீதி தொண்ணூரு லட்சத்தை புயலால பாதிக்க பட்டாங்களே கடலூரு மக்களும் விவசாயிங்களும் அவுங்க வாழ்வாதாரத்துக்கு கொடுக்கலாமே"////

    ஹி..ஹி... மீதி தொண்ணூறு லட்சம் பெரும் தலை பாக்கெட்டுக்கு போயிரும்....

    ReplyDelete
  3. சங்கீத போட்டியில இந்த பாட்டப் பாடினா நமக்கே கோவம் வருது///

    ஹி..ஹி... ஆமாம்...

    ReplyDelete
  4. முதலாவதாக வந்து வாசித்து வாக்கிட்டு கருத்திட்டமைக்கு நன்றி..தனி மனித தாக்குதல் கூடாதுதான்..தனிமனிதனை அத்தனை பேர் தாக்குவதும் கூடாதுதான்.அம்மாமேல அவருக்கு புகைச்சல்..அவர் மேல அந்த அம்மாவுக்கு புகைச்சல்.என்ன பண்றது.சின்ராசு மாமாகிட்ட உங்க கருத்தை சொல்லிப் போடுறேனுங்க..ரொம்ப நன்றிங்க.

    ReplyDelete
  5. இயல்பான உரையாடலில் நாட்டு நடப்பு விஷயங்கள்.....
    பகிர்வு அருமை

    ReplyDelete
  6. மண்ணைப் பொன்னாக்கும் அந்த விவசாயிகளை அந்த
    மழையும் இந்த அரசும் மண்ணில் புதைத்து விட்டுத் தான்
    மறுவேலை பார்க்கும் போல ? பாவம் அவர்கள்.
    செஞ்சோற்றுக்கடன் , உப்பிட்டவரை .....
    எல்லாம் அகராதியில் இருந்து நீக்கி விட்டார்கள் போலும் ?
    நீங்கள் சொன்னது நியாயமான ஆதங்கம் .
    ஒரு வேளை அவரின் ஆவி கனவில் வந்து பயமுருத்துமோ என்னமோ ?
    யார் கண்டது ?
    ஏன் கொலைவெறி பாட்டைக் கேட்டு விவாகரத்து வெறி பிடித்து விட்டதா ?
    நிறைய சங்கதிகள் தாங்கி அருமையா கூவி இருக்குது உங்கள் கோழி.[சேவல் ?]
    நன்றியுடன் , வாழ்த்துக்களும் !

    ReplyDelete
  7. ஏழைகளுக்கு கொடுக்கலாம்னு நீங்க சொல்றது சரிதான் ஆனால் இந்த அரசியல் பன்னாடைகள் உட்கார 1000 கோடியில் கோட்டை, 450 கோடியில் செந்தமிழ் மாநாடு இவைகளை விட 5 மாவட்ட மக்களின் தாகம் தீர்த்த உன்னத ஆத்மா பென்னி குக்கிற்கு 1 கோடி என்ன 10 கோடியில் கட்டினால் கூட தவறே இல்லை என்பது என் கருத்து.....

    ReplyDelete
  8. /தமிழ்வாசி பிரகாஷ்/

    ஆமாம் தோழர்..அரசியல்வாதிகளிடம் பணம் கிடைத்தால் நீங்கள் சொல்வது போல நடக்கலாம்..

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..

    ReplyDelete
  9. /ஸ்ரவாணி/

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ..

    ReplyDelete
  10. ஸ்ரவாணி கூறியது...
    மண்ணைப் பொன்னாக்கும் அந்த விவசாயிகளை அந்த
    மழையும் இந்த அரசும் மண்ணில் புதைத்து விட்டுத் தான்
    மறுவேலை பார்க்கும் போல ? பாவம் அவர்கள்.
    செஞ்சோற்றுக்கடன் , உப்பிட்டவரை .....
    எல்லாம் அகராதியில் இருந்து நீக்கி விட்டார்கள் போலும் ?

    ஆமாம் சகோ..எனக்கும் அப்படித்தான் படுகிறது..

    ReplyDelete
  11. சசிகுமார் கூறியது...
    ஏழைகளுக்கு கொடுக்கலாம்னு நீங்க சொல்றது சரிதான் ஆனால் இந்த அரசியல் பன்னாடைகள் உட்கார 1000 கோடியில் கோட்டை, 450 கோடியில் செந்தமிழ் மாநாடு இவைகளை விட 5 மாவட்ட மக்களின் தாகம் தீர்த்த உன்னத ஆத்மா பென்னி குக்கிற்கு 1 கோடி என்ன 10 கோடியில் கட்டினால் கூட தவறே இல்லை என்பது என் கருத்து.....

    ஆம்..உங்களது ஆதங்கம் எனக்கு நியாயமாகத்தான் படுகிறது..தமிழகத்தின் அரசியல் வாதிகளால் கோடிகள் எல்லாம் கடைக் கோடியில் இருக்கும் மனிதர்களின் அத்தியாவசியத்திற்கு பயன்படாமல் அரசின் ஆடம்பரத்துக்கு பயன்படுகிறது என்று நினைக்கும்போது வேதனையாகத்தான் இருக்கிறது.வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..

    ReplyDelete
  12. பென்னி குயிக் அவர்களுக்கு மணிமண்டபம் கட்டுவது
    மிகவும் நல்ல விஷயம். இவ்வளவு மக்களுக்கு
    வாழ்வாதாரம் அளித்தவருக்கு செய்யலாம்.. ஆனால் இவ்வளவு
    பணம் அதற்கு தேவையா.. குறைத்துக்கொண்டு அதை வேறு நல்ல
    வழியில் உபயோகமாக்கலாம்.

    கொலைவெறி பாடல் முதல்முறையாக கடந்த வாரம் தான் முழுமையாக கேட்டேன். இசையை ஒருபுறம் ரசித்தாலும்..
    அங்கே தமிழ் மொழி கொலை செய்யப்பட்டிருப்பதை நினைத்து
    பொருமிக் கொண்டே தான் பாட்டைக் கேட்டேன்.

    ReplyDelete
  13. நண்டு @நொரண்டு -ஈரோடு கூறியது...
    அருமையான கதம்பம் .

    நன்றி தோழர்..

    ReplyDelete
  14. மகேந்திரன் கூறியது...
    பென்னி குயிக் அவர்களுக்கு மணிமண்டபம் கட்டுவது
    மிகவும் நல்ல விஷயம். இவ்வளவு மக்களுக்கு
    வாழ்வாதாரம் அளித்தவருக்கு செய்யலாம்.. ஆனால் இவ்வளவு
    பணம் அதற்கு தேவையா.. குறைத்துக்கொண்டு அதை வேறு நல்ல
    வழியில் உபயோகமாக்கலாம்.

    கொலைவெறி பாடல் முதல்முறையாக கடந்த வாரம் தான் முழுமையாக கேட்டேன். இசையை ஒருபுறம் ரசித்தாலும்..
    அங்கே தமிழ் மொழி கொலை செய்யப்பட்டிருப்பதை நினைத்து
    பொருமிக் கொண்டே தான் பாட்டைக் கேட்டேன்.

    ஆம் தோழர்..தமிழ் அதில் இல்லையென்று சொல்வதைவிட கொலை செய்யப்பட்டுள்ளது என்று சொல்லலாம்..நன்றி தோழர்..

    ReplyDelete
  15. தங்கள் பதிவுக்கு இப்போதுதான் வருகிறேன்.தலைப்பைப்பார்த்து ஏமாந்தது நிஜம்.

    ஒரு கோடி ரூபாய் செலவில் திரு பென்னி குக் அவர்களுக்கு மணி மண்டபம் கட்டுவதை விட ரூபாய் பத்து இலட்சத்தில் மண்டபம் கட்டிவிட்டு,மீதியை‘தானே’ புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவலாம் என்ற அம்மணியின் கருத்தோடு நானும் ஒத்து போகிறேன். அம்மணியும் சின்ராசும் நாட்டு நடப்பைப்பற்றி பேசுவதை படித்தாலே, ஒரு நாள் செய்தியை அறிந்து கொள்ளலாம் போலிருக்கிறது. தகவல்களை சுவாரஸ்மாய் கொடுத்தமைக்கு நன்றி.

    ReplyDelete
  16. Arumai Sir! Kalakkalo Kalakkal. Thodaravum!

    TM 11.

    ReplyDelete
  17. வே.நடனசபாபதி கூறியது...
    தங்கள் பதிவுக்கு இப்போதுதான் வருகிறேன்.தலைப்பைப்பார்த்து ஏமாந்தது நிஜம்.

    ஒரு கோடி ரூபாய் செலவில் திரு பென்னி குக் அவர்களுக்கு மணி மண்டபம் கட்டுவதை விட ரூபாய் பத்து இலட்சத்தில் மண்டபம் கட்டிவிட்டு,மீதியை‘தானே’ புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவலாம் என்ற அம்மணியின் கருத்தோடு நானும் ஒத்து போகிறேன். அம்மணியும் சின்ராசும் நாட்டு நடப்பைப்பற்றி பேசுவதை படித்தாலே, ஒரு நாள் செய்தியை அறிந்து கொள்ளலாம் போலிருக்கிறது. தகவல்களை சுவாரஸ்மாய் கொடுத்தமைக்கு நன்றி.

    வாருங்கள் ஐயா..உங்கள் வரவும் கருத்தும் மகிழ்ச்சி அளிக்கிறது..

    ReplyDelete
  18. துரைடேனியல் கூறியது...
    Arumai Sir! Kalakkalo Kalakkal. Thodaravum!

    TM 11.

    தொடருகிறேன் தோழர்..நீங்களும் தொடர்வது மகிழ்ச்சி அளிக்கிறது..

    ReplyDelete
  19. இந்தக் கொலைவெறி யாரையும்,எந்தமொழியையும் விட்டு வைக்கலயோ !

    ReplyDelete
  20. அனைத்து வசன கவிதைகளுமே எளிமையாகவும் தெளிவாகவும் உள்ளன.எனக்குப் பிடித்த மிக அருமையாக வள்ளுவ கவிதை இதோ.

    //கற்பையும்
    கணவனையும் காத்து
    ஒழுக்க நெறி பார்த்து
    வாழ்பவளே பெண்;
    வாழாதவள் மண்;//

    பணி தொடர வாழ்த்துகள்!.

    ReplyDelete
  21. பதிவு பகிர்ந்தமைக்கு மிக்க நனறி.

    ReplyDelete
  22. சின்ராசு மாமோய், கொஞ்சுத் தமிழுல அழகா செய்தி வாசிக்கிறீங்க.. ஏனுங்கம்மணி நாஞ்சொல்ரது சரிதானே..!:)

    ReplyDelete
  23. கொலைவெறி பாடல் தமிழை கொலை செய்தது ஒருபுறம் இருக்க ..இங்கே அரபு நாடுகளிலும் மொழிமாற்றம் செய்துபாடும் அளவுக்கு ,,,இதில் என்ன இருக்கிறது எனக்கு புரியவில்லை ...சகோ மதுமதி அவர்களே உங்கள் தளம் ...மற்றும் அனைத்து படைப்புகளும் அருமை ..வாழ்த்துக்கள் ..நன்றி ..யசோதா காந்த்

    ReplyDelete
  24. அன்பின் மதுமதி - நாட்டு நடப்பு வட்டார வழக்கில் பேசப்படுவது நன்று - கருத்துகளும் அருமை - சின்ராசு - அம்மணி கலக்கல் அருமை - நன்று நன்று - நல்வாழ்த்துகள் -நட்புடன் சீனா

    ReplyDelete
  25. சீனா..

    மிக்க நன்றி ஐயா..

    ReplyDelete
  26. நாட்டு நடப்பை சின்ராசு அம்மணி உரையாடல் மூலம் நகைச்சுவை உணர்வுடன் எடுத்துரைத்த விதம் அருமை! வறுமையில் வாடும் மனிதரைத் தவிக்க விட்டு விட்டு செத்துப் போனவர்களுக்கு மண்டபம் கட்டுவதற்கும் சிலைகள் வைப்பத்ற்கும் கோடி கோடியாய் செலவு செய்யும் நம்மை மிஞ்ச உலகில் எவருமில்லை.
    கொலைவெறிப்பாடலில் என்ன இருக்கிறது என்று எனக்கும் புரியவில்லை! என்னமோ இவருக்கு வந்த வாழ்வு!

    ReplyDelete

கருத்துரைப் பெட்டியில் இடும் கருத்துகளுக்கு கருதிட்டவரே பொறுப்பாவர்..

Search This Blog

Email Subscribers

புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

Followers

Popular Posts

Google+

Tips Tricks And Tutorials

TNPSC - முக்கிய வினா-விடைகள்

எழுதிய மாத நாவல்கள் சில

 
Support :
Written by Madhumathi Published by www.madhumathi.com