வேட்கை வேகம் எடுக்கிறது - மதுமதி.காம்
புது வரவு :
Home » , , , , , » வேட்கை வேகம் எடுக்கிறது

வேட்கை வேகம் எடுக்கிறது


எல்லாம்
முடிந்துவிட்டது என்று
அவன் நினைக்கும்போதுதான்
எல்லாம் ஆரம்பிக்கிறது..

சின்னதாகப் பேசுகிறான்
பெரிதாக பொருள்படுகிறது..
பெரிதாக பேசுகிறான்
சிறிதாகவே பொருள்படுகிறது..

இழப்பதற்கு
ஒன்றுமில்லை என்று
அவன் நினைக்கும்போதுதான்
நானிருக்கிறேன் என்று
அவ்வப்போது
ஞாபகப் படுத்துகிறது
அவன் உயிர்.

போராடினால் உண்டு
பொற்காலம் என்பதை
வேத வாக்காக
எடுத்துக் கொண்டவன்
அவ் வாக்கியத்தின் அர்த்தம்
அறியாமலேயே போய்விடுகிறான்..

ஓடிக் கொண்டேயிரு
இலக்கை அடையலாம்
யாரோ சொல்ல
ஓட ஆரம்பித்தவன்
ஓடிக் கொண்டேயிருக்கிறான்..
இலக்கை மறந்துவிட்டான்..

வாழ்ந்து முடிந்தவர்கள்
வரிசையாய்
சென்றுகொண்டே இருக்கிறார்கள்
இவன் எப்படி வாழப்போகிறான் என
சில பேரை பரிதாபமாக பார்த்தபடி..

ஆனால் ஒன்று
பலமுறை
செத்தவனுக்கு
ஒரே ஒரு முறையாவது
வாழ வேண்டும் என்ற
வேட்கை
வேகமெடுக்கவே செய்கிறது..
Download As PDF
Share this article :
புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

18 comments:

 1. // வாழ்ந்து முடிந்தவர்கள்
  வரிசையாய்
  சென்றுகொண்டே இருக்கிறார்கள்
  இவன் எப்படி வாழப்போகிறான் என
  சில பேரை பரிதாபமாக பார்த்தபடி..//


  எத்தனைப் பொருள் பொதிந்த வரிகள்!
  உண்மைகள்!
  தங்கள் கவிதைகள் ஒவ்வொன்றும்
  தனக்கெனத் தனித் தகுதி பெற்றவை!
  அதில் ஐயமிலலல!


  சா இராமாநுசம்

  ReplyDelete
 2. என்ன அருமையான வரிகள். பலமுறை செத்தவனுக்கு ஒருமுறையேனும் வாழ வேண்டுமென்ற வேட்கை வேகமெடுக்கவே செய்கிறது... இந்த வரிகளை இன்னும் அசை போட்டு ரசித்தபடி இருக்கிறேன். சிறு இடைவெளிக்குப் பின் வந்தாலும் நிறைவான பா வழங்கினீர் கவிஞரே...

  ReplyDelete
 3. நிறைய அர்த்தங்கள் பொதிந்த வரிகள்
  அசத்தல் கவிதை சார்

  ReplyDelete
 4. //எல்லாம் முடிந்துவிட்டது என்று
  அவன் நினைக்கும்போதுதான்
  எல்லாம் ஆரம்பிக்கிறது.//

  உண்மைதான்.
  இதைத்தான்‘இது முடிவின் ஆரம்பம் அல்ல. ஆரம்பத்தின் முடிவு’என்று காலம் சென்ற சர்ச்சில் சொன்னதாக நினைவு.
  கவிதைக்குப் பாராட்டுக்கள்!

  ReplyDelete
 5. செமையான வரிகள் பாஸ்!

  //அதிலும் இந்த வரிகள்
  ஓடிக் கொண்டேயிரு
  இலக்கை அடையலாம்
  யாரோ சொல்ல
  ஓட ஆரம்பித்தவன்
  ஓடிக் கொண்டேயிருக்கிறான்..
  இலக்கை மறந்துவிட்டான்..//

  எனக்கு மிகப் பிடிச்சிருக்கு!

  ReplyDelete
 6. தோல்வியை ருசித்தவனுக்கே வெற்றியின்
  சுவையை ருசிக்க ஆசை இருக்கும் என்பதை
  அழகாக சொல்லும் வரிகள்...

  ReplyDelete
 7. ஆனால் ஒன்று
  பலமுறை
  செத்தவனுக்கு
  ஒரே ஒரு முறையாவது
  வாழ வேண்டும் என்ற
  வேட்கை
  வேகமெடுக்கவே செய்கிறது
  >>>>
  அந்த வேகத்துலதான் அவன் வாழ்க்கையே அடங்கியிருக்கு சகோ

  ReplyDelete
 8. ஒவ்வொன்றும் அருமையான வரிகள். அர்த்தமுள்ளவை...

  ReplyDelete
 9. ஆனால் ஒன்று
  பலமுறை
  செத்தவனுக்கு
  ஒரே ஒரு முறையாவது
  வாழ வேண்டும் என்ற
  வேட்கை//
  தோல்விக்கு பின் வெற்றி போல உற்சாக மூட்டும் வரிகள் அருமை சகோ .

  ReplyDelete
 10. போராடினால் உண்டு
  பொற்காலம் என்பதை
  வேத வாக்காக
  எடுத்துக் கொண்டவன்
  அவ் வாக்கியத்தின் அர்த்தம்
  அறியாமலேயே போய்விடுகிறான்..

  சொல்ல வார்த்தைகள் இல்லை
  அருமையான கவி அண்ணா

  ReplyDelete
 11. அருமையான கவிதை - விசயமுள்ள கவிதை

  ReplyDelete
 12. வாழ்ந்து முடிந்தவர்கள்
  வரிசையாய்
  சென்றுகொண்டே இருக்கிறார்கள்
  இவன் எப்படி வாழப்போகிறான் என
  சில பேரை பரிதாபமாக பார்த்தபடி..//அருமையான கவி

  ReplyDelete
 13. ஆழமான வரிகள் சகோதரா.
  வேதா. இலங்காதிலகம்.

  ReplyDelete
 14. ஃஃஃஃஃஞாபகப் படுத்துகிறது
  அவன் உயிர்.ஃஃஃஃ

  அதன் பெறுமதியை உணர்ந்ததால் தான் வாழ வேண்டியிருக்கிறது சகோ..

  ReplyDelete
 15. //ஓட ஆரம்பித்தவன்
  ஓடிக் கொண்டேயிருக்கிறான்..
  இலக்கை மறந்துவிட்டான்..//

  அனுபவித்து எழுதியிருக்கீங்கண்ணே..! கவிதை அசத்தல்..!:)

  ReplyDelete

கருத்துரைப் பெட்டியில் இடும் கருத்துகளுக்கு கருதிட்டவரே பொறுப்பாவர்..

Search This Blog

Total Pageviews

Email Subscribers

புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

Followers

Recent Post

Popular Posts

Google+

Tips Tricks And Tutorials

TNPSC - முக்கிய வினா-விடைகள்

Random Posts

Best Blogger Tips

எழுதிய மாத நாவல்கள் சில

 
Support :
Written by Madhumathi Published by www.madhumathi.com