புது வரவு :

காதலித்தல் தவறில்லை

                                                       இளமையில்
                                                       பிச்சை போட்டதை 
                                                       நினைத்துக் கொண்டே
                                                       முதுமையில்
                                                       பிச்சையெடுத்துக் கொண்டிருக்கின்றனர்
                                                       சில மூதாட்டிகள்..

காதல்,காதல் ஜோடி,காதலர் தினம்,கடற்கரை,லவ்வர்ஸ்

                                                        இறந்து போன
                                                        தன் தந்தையை
                                                        நினைத்துக் கொண்டே
                                                        தன் நண்பனின் 
                                                        தந்தையின் சவத்தைப் பார்த்து
                                                        அழுது புலம்புகின்றனர்
                                                        பல நண்பர்கள்..

                                                        உழைத்தால் பலனுண்டு
                                                        என்றும் தெரிந்தும் கூட
                                                        உழைக்க விரும்பாமல்
                                                        உறங்கிக் கொண்டே இருக்கிறார்கள்
                                                        எதிர்கால இந்தியாவைத் தாங்கும்
                                                        சில தூண்கள்..


                                                       விளை நிலத்தை வீடாக்கினால்
                                                       உண்ண உணவில்லை..
                                                       தெரிந்து கொண்டே-மண்ணை  
                                                       மனையாக்கிக் கொண்டே இருக்கிறார்கள்
                                                       பல விவசாயிகள்..

                                                      குடி குடியைக் கெடுக்கும்
                                                      படித்துக் கொண்டே
                                                      குடித்துக் கொண்டிருக்கிறான்
                                                      குடிமகன்..

                                                      கல்வியின் அருமையை
                                                      அறிந்தும் கூட
                                                      கல்வி கற்க அனுப்பாமல்
                                                      வாரிசுகளை
                                                      கல் தூக்க அனுப்புகிறார்கள்
                                                      பல பாமரர்கள்.. 


                                                     காதலித்தல் தவறில்லை..
                                                     வாதாடிய மகள்கள்.,
                                                     காதலித்தல் தவறென
                                                     வாதாடிக் கொண்டிருக்கிறார்கள்
                                                     தத்தம் மகள்களிடம்..
                                                    -----------------------------------------------

Download As PDF
Share this article :
புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

19 comments:

  1. அனைத்தும் மிக அழகான கருத்துக்கள்.
    நல்ல பதிவு. பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

    // காதலித்தல் தவறில்லை..
    வாதாடிய மகள்கள்.,
    காதலித்தல் தவறென
    வாதாடிக் கொண்டிருக்கிறார்கள்
    தத்தம் மகள்களிடம்..//

    இது ரொம்ப ஜோராக உள்ளது. ;)))))

    ReplyDelete
  2. வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி ஐயா....

    ReplyDelete
  3. அழகான கருத்தாழமிக்க கவிதை பகிர்ந்த உமக்கு நன்றிகள் சகோதரரே

    ReplyDelete
  4. நலம்தானே நண்பா? முதல் பாராவும், கடைசிப் பாராவும் மட்டுமே தனித்துப் படித்தால் தனிக் கவிதைகளாக அமைந்துள்ளன. மொத்தமாக இதைப் படித்தாலும் ரசனைக்குக் குறைவில்லை. பிரமாதம் கவிஞரே...

    ReplyDelete
  5. உண்மைகள் உரைக்க கூறும் கவிதை

    ReplyDelete
  6. இதைத்தான் வாழ்க்கை வட்டம் என்பது.தீதும், நன்மையும் றிப்பீட்டு. கவிதைக்குள் நல்ல கருத்துகள் பொதிந்துள்ளது. வாழ்த்துகள் சகோதரா.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
  7. சக்கர ஓட்டமாக
    எண்ணங்களும் மாறிக்கொண்டு தான் இருக்கின்றன
    ஓர் நாள் நமக்கு சரி என தோன்றியது
    பின்னோர் நாளில் தவறென தோன்றத்தான்
    செய்கிறது..

    அருமையான கவிதை நண்பரே..

    உங்களுடைய பதிவுகள் என்னுடை டஷ்போர்டில்
    வரவில்லையே .. நண்பரே....

    ReplyDelete
  8. kavithai nadappai
    pesiyathu!
    nantru!

    ReplyDelete
  9. //இளமையில்
    பிச்சை போட்டதை
    நினைத்துக் கொண்டே
    முதுமையில்
    பிச்சையெடுத்துக் கொண்டிருக்கின்றனர்
    சில மூதாட்டிகள்.//

    எல்லாமே உண்மைதான் சகோதரா...

    ReplyDelete
  10. சூப்பர் அண்ணா மிக ரசித்தேன், என்ன அண்ணாவை காணவே கிடைக்குதில்ல றொம்ப வேலையோ????

    ReplyDelete
  11. கவிதை வரிகள் ஒவ்வொன்றும் அருமை. முத்தான கருத்துக்கள்.வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  12. நல்ல கவிதை,வாழ்துக்கள்.முன் நடந்ததை நினைத்து இப்போது பயணிக்கிற வாழ்க்கை/

    ReplyDelete
  13. அனைத்தும் ஒரு வித தாக்கத்தை ஏற்படுத்தி போகின்றன ,..
    வாழ்த்துக்கள் தோழரே

    ReplyDelete
  14. அருமையான வரிகள்....உணரும் படியாக இருந்தது..

    ReplyDelete
  15. வாழ்வின் நிதர்சனத்தை அழகாக சொல்லியுள்ளீர்கள். ரசித்தேன்.

    ReplyDelete
  16. தவறென்று தெரிந்தும் செய்துதான் கொண்டிருக்கிறோம் தவறுகளை.அருமையாகச் சொல்லியிருக்கிறீர்கள் மதுமதி !

    ReplyDelete
  17. தப்பில்லை எனச் செய்வோரின் தப்பை உணர்த்திய வரிகள் அருமை சகோதரம்..

    ReplyDelete
  18. தவறெனத் தெரிந்தும் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறோம் .

    ReplyDelete

கருத்துரைப் பெட்டியில் இடும் கருத்துகளுக்கு கருதிட்டவரே பொறுப்பாவர்..

Search This Blog

Email Subscribers

புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

Followers

Popular Posts

Google+

Tips Tricks And Tutorials

TNPSC - முக்கிய வினா-விடைகள்

எழுதிய மாத நாவல்கள் சில

 
Support :
Written by Madhumathi Published by www.madhumathi.com