வேர்ச்சொல்லை வைத்து வினைமுற்று,வினையாலணையும் பெயர்,தொழிற்பெயர் போன்றவை கண்டறிதல்
இந்தப் பகுதியிலிருந்து கேட்கப்படும் வினாக்களுக்கு எளிதாக விடையளிக்கலாம்.
இலக்கண குறிப்பை நன்றாக படித்திருப்பவர்களுக்கு இது இன்னும் எளிமையான பகுதி பாகம் 13 ல் நாம் வேர்ச்சொல்லை எப்படி கண்டறிவது என்பதைக் கண்டோம்.வேர்ச்சொல்லைக் காண் என ஐந்து வினாக்களைக் கேட்பது போல வேர்ச்சொல்லைக் கொடுத்து இதன் வினைமுற்றை கண்டுபிடி அல்லது வினையாலணையும் பெயரைக் கண்டுபிடி என்பதைப்போல வினாக்கள் அமையும்.
(எ.கா)
'படி' என்ற சொல்லின் தொழிற்பெயரைக் கண்டுபிடி
அ)படித்த ஆ)படித்துஇ) படித்தவன் ஈ)படித்தல்
விடை:ஈ.படித்தல்
'தல்' எனும் விகுதி வந்தால் தொழிற்பெயர் என்பதை பாகம் 12 ல் நாம் பார்த்தோம்.
படித்த என்ற சொல்லின் விகுதி 'அ' என்பதால் அது பெயரெச்சம்.படித்து என்ற சொல்லின் விகுதி 'உ' என்பதால் அது வினையெச்சம்.இவ்விரண்டையும் பாகம் 15 ல்பார்த்திருக்கிறோம்.
படித்தவன் என்ற சொல் வினையாலணையும் பெயர்..இதை பாகம் 17 ல் பார்த்திருக்கிறோம்.
கீழே அட்டவணை கொடுத்துள்ளேன்.அதைப் போல நீங்களும் அட்டவணை தயாரித்து பயிற்சி எடுத்துக் கொள்ளுங்கள்.
வேர்ச்சொல் | பெயரெச்சம் | வினையெச்சம் | வினையாலணையும் பெயர் | வினைமுற்று | தொழிற்பெயர் | row 1, cell 1 | row 1, cell |
தா | தந்த | தந்து | தந்தவன் | தந்தான் | தருதல் | ||
செல் | சென்ற | சென்று | சென்றவன் | சென்றான் | செல்தல் | ||
உண் | உண்ட | உண்டு | உண்டவன் | உண்டான் | உண்ணல் | ||
காண் | கண்ட | கண்டு | கண்டவன் | கண்டான் | காணுதல் | ||
கூறு | கூறிய | கூறி | கூறியவன் | கூறினான் | கூறுதல் |
பதிவை பகிர்ந்து கொள்ளுங்கள் படிப்பவர்களுக்கு பயன்படட்டும்..
------------------------------------------------------------------------------------------------------------

பதிவை தரவிறக்கம் செய்ய கீழே உள்ள இணைப்பில் செல்லவும்.
டி.என்.பி.எஸ்.சி - வீடியோ பதிவுகளைக் காண இங்கே செல்லவும்..
ஐயா வணக்கம், :)
ReplyDeleteஒரு வாரம் ஊர் சுற்ற சென்றுவிட்டதால் சரிவர வர இயலவில்லை. மன்னிக்கவும்.
விடுபட்ட பாடங்களை படித்துவிட்டேன். மிகவும் சுலபமாக இருந்தது. தங்கள் சேவை தொடர வாழ்த்துக்களும் விருப்பங்களும் :)
மிக்க நன்றி :)
தொடரும் தங்களுக்கு நன்றி..
ReplyDeleteMIGAVUM NANTRI ANNA
ReplyDeleteDear Mr. Madhumathi, your TNPSC blogs are very much useful for the Gr-IV competitions, i am also a user to used your blog.
ReplyDeletethank u very much friend and continue to your service..well..
by Ramesh.M
ஐயா,
ReplyDeleteஉங்கள் சேவைக்கு மிக்க நன்றி.
உங்கள் அடுத்த பதிவிற்காக காத்துகொண்டு இருக்கிறேன்.
வல்லினம் மிகும்/மிகா இடங்கள், இது எவ்வகை வாக்கியம், விடைக்கேற்ற வினா முதலியவற்றையும் விளக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
By,
சிவா
intha varam ethum update seithirukirerkala? enaku pakam 21 aduthathaka ethum view akavilai
ReplyDeleteநன்று
ReplyDelete