புது வரவு :
Home » , , , » டி.என்.பி.எஸ்.சி - விண்ணப்பத்தை நிரப்புவது எப்படி- பாகம்-3

டி.என்.பி.எஸ்.சி - விண்ணப்பத்தை நிரப்புவது எப்படி- பாகம்-3

டி.என்.பி.எஸ்.சி (tnpsc) தேர்வில் எளிதாக வெற்றி பெறுவது எப்படி பாகம்-3

         டி.என்.பி.எஸ்.சி (tnpsc) தேர்வில் எளிதாக வெற்றி பெறுவது எப்படி பாகம் - 2 ல் குறிப்பிட்டதைப் போல செய்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன்..சரி இப்போது தேர்வுக்கான விண்ணப்ப படிவத்தை நாம் நிரப்பியாக வேண்டும்..

  www.tnpscexams.net சுட்டியில் சென்று தேர்வுக்கான விண்ணப்பத்தை நீங்கள் நிரப்ப வேண்டும்.

தேர்வுக்கான விண்ணப்பத்தை நிரப்புவது எப்படி:

        நாம் நேற்று பார்த்த அந்த விண்ணப்பத்தை போலவேதான் இந்த விண்ணப்பத்தையும் நிரப்ப வேண்டும்.விண்ணப்பத்தின் ஆரம்பத்திலேயே  one time registration செய்திருக்கிறீர்களா என்று கேட்கும் ஆம் என்று டிக் செய்யவும்.அதன் பிறகு நேற்றைய விண்ணப்பத்தை பூர்த்தி செய்தாற்போல உங்களது விபரங்களை ஒவ்வொன்றாக இதில் பூர்த்தி செய்யவும்.அந்த விண்ணப்பத்தில் கேட்டிருந்த விபரங்களை விட இங்கே நிறைய விபரங்களை பூர்த்தி செய்யவேண்டும். உதாரணமாக நீங்கள் அரசியல் கட்சியை சேர்ந்து ஏதேனும் போராட்டத்தில் கலந்து கொண்டீர்களா? உங்கள் மீது ஏதேனும் வழக்குள்ளதா? இந்த தேர்வை எத்தனையாவது முறை எழுதுகிறீர்கள் போன்ற விபரங்களும் கேட்கப்பட்டிருக்கும்..நீங்கள் இரண்டாவது முறையாக இந்த தேர்வை எழுதுகிறீர்கள் என்றால் உங்களது முந்தைய தேர்வின் பதிவெண்ணும் தேர்வு எழுதிய வருடமும் குறிப்பிடப் படவேண்டும். 

           ஏற்கனவே one time registration நீங்கள் செய்திருப்பதால் இந்த விண்ணப்பத்தை நிரப்புவதில் உங்களுக்கு சிரமம் இருக்காது என்று நினைக்கிறேன்.அனைத்தையும் சரியாக நிரப்பி  submit செய்துவிடுங்கள் அவ்வளவுதான்..

         இப்போதை தேர்வாணைய அறிவிப்பின் படி தேர்வு அறிவிக்கப்பட்டுள்ள  குரூப் 4 மற்றும் குரூப் 8 தேர்வுகள் எழுத குறைந்த பட்ச கல்வித் தகுதி பத்தாம் வகுப்பு தேர்ச்சிதான்..அதனால் பட்டபடிப்பு படித்தவர்கள் தேர்வை சாதாரணமாக எடை போட்டுவிட வேண்டாம்.

         ஐ.ஏ.எஸ் முதனிலைத் தேர்வில் வென்றவர் கூட குரூப் 4 ல் தோற்றுப் போயிருக்கிறார்கள்..அதற்காக அந்தளவுக்கு கடினமானதாக இருக்குமா என்று அர்த்தமில்லை..

      தேர்வு கடினம் என்றால் என்ன பொருள் 80 சதவீதம்  படித்துவிட்டு தேர்வெழுத செல்வோம்.நாம் படித்ததிலிருந்தே கேள்விகள் கேட்கப்பட்டிருந்தால் தேர்வு எளிதானது ஆகிவிடும்.அதே படிக்காத இருபது சதவீதத்திலிருந்து பத்து சதவீதத்திற்கு மேல் கேள்விகள் கேட்கப் பட்டால் அந்த தேர்வு கடினமானதாக போய்விடும்..அவ்வளவுதான்.எனவே  என்ன பாடத்திட்டத்தை தேர்வாணையம் சொல்லியிருக்கிறதோ அதை முழுமையாக படித்துவிட்டு தேர்வு எழுத சென்றால் தேர்வு எளிமையானதே.ஆனால் நாம் யாரும் முழுமையாக படிப்பதில்லை.காரணம் சரியான திட்டமிடுதல் இல்லாதது தான்.வரும் பதிவுகளில் எப்படி திட்டமிட்டு படிப்பது என்பதை தெளிவாக காண்போம்..

          இப்போது அறிவித்திருக்கும் பணிகளில் தட்டச்சு படித்தவர்களுக்கென கிட்டத்தட்ட 4000 இடங்கள் ஒதுக்கப் பட்டுள்ளது.பொதுவாக தட்டச்சு படித்தவர்களுக்கான காலியிடங்கள் குறைவாகவே அறிவிக்கப்படும் . இப்போது அறிவித்திருக்கும்  எண்ணிக்கை கூடுதலானதுதான்.மட்டுமின்றி சுருக்கெழுத்து படித்தவர்களுக்கென  1000 க்கும் மேற்பட்ட காலி இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன்.இந்த இரண்டையும்  படித்திருப்போர் குறைவான சதவீத்த்தினர்தான்.ஆகவே அவர்கள் இந்த தேர்வில் சுமாரான மதிப் பெண்களை பெற்றால் கூட தேர்வாகி விடுவார்கள் என்றே எதிர்பார்க்கப் படுகிறது.எனவே தட்டச்சு மற்றும் சுருக்கெழுத்து படித்த நண்பர்கள் இதுவரை தேர்வுகள் எழுதாமலிருந்தாலும் இப்போது அறிவித்துள்ள தேர்வை எழுதுங்கள்.

          அதுமட்டுமின்றி நில அளவர் பதவிக்கு 326 காலியிடங்களும் வரைவாளர் பதவிக்கு 402 பதவிக்கு காலியிடங்களும் அறிவிக்கப் பட்டிருக்கின்றன.       

          போட்டித் தேர்வுக்கு தயாராகிக் கொண்டிருக்கும் தோழர்களே..நேரத்தை தள்ளிப் போடாமல் உடனே தேர்வுக்கு விண்ணப்பம் செய்யுங்கள் இன்னும் இருப்பது 65 நாட்கள்தான் அதற்குள் அனைத்தையும் படித்திட வேண்டும்.

         சரி நண்பர்களே நான் சொன்னதைப் போல உடனே விண்ணப்பம் செய்துவிட்டு படிக்க ஆரம்பியுங்கள்..இந்த குரூப் 4 தேர்வுக்கு உண்டான பாடத்திட்டம் என்னவென்றும் அதை எப்படி படிப்பது என்றும் நாளை பார்க்கலாம்.

 பதிவை பகிர்ந்து கொள்ளுங்கள் படிப்பவர்கள் பயனடையட்டும்.

                                                                                                                                            அன்புடன்
இப்பதிவை தரவிறக்கம் செய்ய கீழே உள்ள இணைப்பில் செல்லவும்..

Download As PDF
Share this article :
புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

2 comments:

  1. பத்தாம் வகுப்பு படித்தவர்களே தேர்வெழுதலாம் இது போன்ற பல அனைவருக்கும் பயன் படும்படி பதிவைத் தந்தது குறித்து மகிழ்ச்சி .

    ReplyDelete
  2. ஐயா வனக்கம் , எனது பெயர் சபரி கீதன் தங்கள் தொடரின் வாசகன் தங்களின் பதிப்பு டி.என்.பி.சி படிப்பவர்களுக்கு மிகுந்த பயனுள்ளதாகும் இறுதி பதிப்பு பார்தேன். அகரவரிசைப் படி சொற்களை சீர் செய்வது எப்படி?பாகம்-9 அதில் ஆயுத எழுத்து எவ்வாறு பயன் படுத்துவது என்று கூறவில்லை எனவே அடுத்த பதிவில் அதனை கூறுமாறு கேட்டுக் கொள்கிறேன். இருப்பினும் எனக்கு தெரிந்த வரையிலும் முயற்ச்சி செய்துள்ளேன் தங்களின் கருத்தினைக் கூறவும். ( ஆயுத எழுத்து எங்கு பயன் படுத்துவது என்று தெரியாமல் இறுதியாகக் கூறியுள்ளேன் ) நன்றி விடை : எத்தன்,எண்,எல்லை,எலி,கிழமை, எஃகு

    ReplyDelete

கருத்துரைப் பெட்டியில் இடும் கருத்துகளுக்கு கருதிட்டவரே பொறுப்பாவர்..

கணித பாடத்திட்டம்

Search This Blog

Email Subscribers

புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

காலமும் வேலையும்

எண்ணியல்

Followers

மீ.சி.ம

Popular Posts

சராசரி

Google+

Tips Tricks And Tutorials

வயது கணக்கு

TNPSC - முக்கிய வினா-விடைகள்

எழுதிய மாத நாவல்கள் சில

 
Support :
Written by Madhumathi Published by www.madhumathi.com