டி.என்.பி.எஸ்.சி- பத்துப்பாட்டு நூல்களை அறியலாம் - மதுமதி.காம்
புது வரவு :
Home » , , , , » டி.என்.பி.எஸ்.சி- பத்துப்பாட்டு நூல்களை அறியலாம்

டி.என்.பி.எஸ்.சி- பத்துப்பாட்டு நூல்களை அறியலாம்

Written By Madhu Mathi on Wednesday, July 18, 2012 | 7/18/2012 03:24:00 PM

                            பத்துப்பாட்டு


திருமுருகாற்றுப்படை நக்கீரர்
பொருநராற்றுப்படை முடத்தாமக்கண்ணியார்
சிறுபாணாற்றுப் படை நல்லூர் நத்தத்தனார்
பெரும்பாணாற்றுப்படை உருத்திரங்கண்ணனார்
முல்லைப்பாட்டு நப்பூதனார்
குறிஞ்சிப்பாட்டு கபிலர்
பட்டினப்பாலை உருத்திரங்கண்ணனார்
மதுரைக்காஞ்சி மாங்குடி மருதனார்
நெடுநல்வாடை நக்கீரர்
கூத்தராற்றுப்படை பெருங்கவுசிகனார்

அகப்பாடல் - 3  
ஆற்றுப்படை நூல்கள் - 5
புறப்பாடல் - 1  
அகமும் புறமும் தழுவியது-1

அகப்பாடல் - 3 (இல்லறம், காதலன், காதலி)
    1. முல்லைப்பாட்டு -நப்பூதனார்
    2. குறிஞ்சிப்பாட்டு- கபிலர்
    3. பட்டினப்பாலை -கடியலூர் உருத்திரங்கண்ணனார்.

புறப்பாடல் - 1 (மன்னன், நாடு, கடவுள்)
    1. மதுரைக்காஞ்சி -மாங்குடி மருதனார்

ஆற்றுப்படை நூல்கள் - 5
   1. திருமுருகாற்றுப்படை- நக்கீரர்
   2.பொருநராற்றுப்படை -முடத்தாமக்கண்ணியார்
   3. சிறுபாணாற்றுப்படை- நல்லூர் நத்தத்தனார்.
   4. பெரும்பாணாற்றுப்படை- உருத்திரங்கண்ணனார்.
   5.கூத்தராற்றுப்படை(மலைபடுகடாம்)- பெருங்கவுசிகனார்.

அகமும் புறமும் தழுவியது - 1
    நெடுநல்வாடை- நக்கீரர்

பத்துப்பாட்டில் மிகப்பெரிய நூல் - மதுரைக்காஞ்சி
பத்துப்பாட்டில் மிகச்சிறிய நூல் - முல்லைப்பாட்டு

அகப்பாடல்கள் - விளக்கம்

1.முல்லைப்பாட்டு
       பத்துப்பாட்டில் இதில் பாட்டுடைத் தலைவன் பெயர் குறிப்பிடப்படவில்லை.

இதன் வேறு பெயர்: நெஞ்சாற்றுப்படை

2.குறிஞ்சிப்பாட்டு
       ஆரிய அரசன் பிரகதத்தனுக்கு தமிழின் சுவையை அறிவுருத்தும்பொருட்டு
கபிலரால் பாடப்பட்டது.

இதன் வேறு பெயர்கள் :
பெருங்குறிஞ்சி. காப்பியப்பாட்டு. உளவியல் பாட்டு

3.பட்டினப் பாலை
       கரிகாலச் சோழனின் பெருமையை கடியலூர் உத்திரங்கண்ணனால்
பாடப்பெற்றது.

      இதன் வேறு பெயர் வஞ்சி நெடும் பாட்டு.

“வேலினும் வெளிணிய கானம் அவன்
கோலினும் தண்ணிய தடமென் தோலோ”
“வான் பொளிணியினும் தான் பொளிணியா
மலை தலைய கடல்காவிரி”

புறப்பாடல்கள் விளக்கம்:
1.மதுரைக்காஞ்சி
      மதுரையை ஆண்ட நெடுஞ்செழியனுக்கு நிலையாமையை வலியுறுத்தும்
பொருட்டு மாங்குடி மருதனாரால் பாடப்பெற்றது.

வேறுபெயர்கள் :
முக்கூடல் தமிழ், தூடல் காஞ்சி, புறப்பாட்டு

“பெருகு வளமதுரைக் காஞ்சி” எனப் புகழ் பெற்றது.

ஆற்றுப்படை நூல்கள் விளக்கம்:

1.திருமுருகாற்றுப்படை

பாட்டுடைத்தலைவன் - முருகன்

வேறுபெயர்கள்:
முருகு - புலவர் ஆற்றுப்படை, கடவுள் பழம் பாட்டு.

சிறப்பு : இது பதினோறாம் திருமுறையில் சேர்க்கப்பட்டுள்ளது. தமிழில்
தோன்றிய நீண்ட பக்திப்பாடல்.

2.பொருநராற்றுப்படை

        கரிகாலச் சோழனைப் பற்றி முடத்தாமக்கண்ணியாரால் பாடப்பெற்றது.

       சோழ நாட்டின் பெருமை, வளமை, காவிரியின் பெருமை ஆகியவற்றின்
பெருமை பற்றிக் கூறுகிறது.

       உணவு உண்ணும் முன் காக்கைக்கு சோறிடுவது பற்றி இந்நூலில்
கூறப்பட்டுள்ளது.

      ஒருவரியில் பாண்டியனின் வேப்பம் பூ கூறப்பட்டு உள்ளதால் இதனை
புறப்பாட்டாகவும் கொள்ளலாம்.

3. சிறுபாணாற்றுப் படை

          நல்லியகோடன் என்னும் குறுநில மன்னனை நத்தத்தனாரால் பாடப்பெற்றது.

        இதில் வரும் பாணன் ஏழு நரம்புகளை உடைய சிறிய யாழைப் பெற்றவன்.

“சிறுபடைக்கான சிறுபாணாற்றுப்படை” எனத்
தக்கையாப்பரணி கூறுகிறது.

“இன் குரல் சிறயாழ் இடவயின் தழீஇ”

4. பெரும்பாணாற்றுப்படை

      தொண்டைமான் இளந்திரையனை கடியலூர் உருத்திரங்கண்ணனால்
பாடப்பெற்றது.

     இதன் வேறு பெயர் பாணாறு .இதில் வரும் பாணன் 21 நரம்புகளுடைய
பெரிய யாழை உடையவன்.

5. கூத்தராற்றுப்படை - பெருங்கவுசிகனார் பாடியது.

அகமும் புறமும் தழுவியது

1.நெடுநல்வாடை

         தலையாங்கானத்துப் போரில் வென்ற பாண்டிய மன்னன் நெடுஞ்செழியனை நக்கீரர் பாடியது.

         வேறுபெயர்: புணையா ஓவியம்,சிற்பப்பாட்டு.
----------------------------------------------------------------------------------------------------------
பதிவை பகிர்ந்து கொள்ளுங்கள் படிப்பவர்களுக்கு பயன்படட்டும்
-----------------------------------------------------------------------------------------------------
இத்தோடு பதினெண் மேல் கணக்கௌ நூல்கள் முடிந்தன..அடுத்த பதிவில் பதினெண் கீழ்க்கணக்கு நூல்களைப் பார்க்கலாம்.
------------------------------------------------------------------------------------------------------
                                                                                                                                              அன்புடன்..இப்பதிவை தரவிறக்கம் செய்ய கீழுள்ள இணைப்பை சொடுக்கவும்..டி.என்.பி.எஸ்.சி - வீடியோ பதிவுகளைக் காண இங்கே செல்லவும்..
Download As PDF
Share this article :
புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

2 comments:

 1. தோடரட்டும் தகவல்கள்.!

  ReplyDelete
 2. ஐயா,

  எந்த எந்த தமிழ் நூல்கள் எல்லாம் இதுவரை நமக்கு கிடைக்கவில்லை, என்பதை கூறவும்.(Ex.அகத்தியம்)

  தெரிந்து கொள்ள ஆவலாக இருக்கிறது.

  Regards,
  Siva

  ReplyDelete

கருத்துரைப் பெட்டியில் இடும் கருத்துகளுக்கு கருதிட்டவரே பொறுப்பாவர்..

Search This Blog

Total Pageviews

Email Subscribers

புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

Followers

Recent Post

Popular Posts

Google+

Tips Tricks And Tutorials

TNPSC - முக்கிய வினா-விடைகள்

Random Posts

Best Blogger Tips

எழுதிய மாத நாவல்கள் சில

 
Support :
Written by Madhumathi Published by www.madhumathi.com