புது வரவு :
Home » , , , » டி.என்.பி.எஸ்.சி - ரத்தான குரூப்-2 தேர்வுக்கு மறுதேர்வு அறிவிப்பு

டி.என்.பி.எஸ்.சி - ரத்தான குரூப்-2 தேர்வுக்கு மறுதேர்வு அறிவிப்பு

           வணக்கம் தோழமைகளே.. சென்ற மாதம் நடந்த குரூப் 2 தேர்வுக்கான வினாத்தாள் ஈரோட்டிலும் தருமபுரியிலும் வெளியானதைத் தொடர்ந்து அந்த தேர்வு செல்லாது எனவும் அதற்கான மறுதேர்வு நடத்தப்படும் என்றும் விரைவில் அதற்கான தேதி அறிவிக்கப்படும் என்றும் தேர்வாணையம் அறிவித்திருந்தது.அதன் படி மறு தேர்வுக்கான தேதியை தேர்வாணையம் நேற்று அறிவித்தது.

         இது குறித்து நேற்று இரவு அதிகாரப்பூர்வமான அறிவிப்பை டி.என்.பி.எஸ்.சி செயலாளர் டி.உதயசந்திரன் நேற்று இரவு வெளியிட்டார்.

         கடந்த ஆகஸ்டு மாதம் 12 ந்தேதி காலையிலும் பிற்பகலிலும் நடத்தப்பட்ட ஒருங்கிணைந்த சார்நிலை பணியாளர்களுக்கான எழுத்து தேர்வு சில காரணங்களால் ரத்து செய்யப்பட்டது.இதற்கான மறு தேர்வு வருகின்ற நவம்பர் மாதம் 4 ந்தேதி(ஞாயிறு) காலையும் பிற்பகலும் நடைபெறும்..

       ஏற்கனவே விண்ணப்பித்தவர்கள் மட்டுமே மறு தேர்வுக்கு அனுமதிக்கப்படுவார்கள்..தேர்வுக்கு விண்ணப்பித்து அன்றைய தினம் தேர்வில் பங்கு கொள்ளாதவர்களும் கூட இந்தத் தேர்வில் பங்கு கொள்ளலாம்.விண்ணப்பதாரர்கள் மறு தேர்விற்கென்று விண்ணப்பப்க் கட்டணம் எதுவும் செலுத்த வேண்டாம்.  தேர்வுக் கூடம் குறித்த விபரங்கள் மாவட்ட நிர்வாகத்துடன் கலந்து ஆலோசித்து முடிவு செய்து விரைவில் வெளியிடப்படும் என்று அந்த அறிக்கையில் கூறியிருந்தார்.


            இதற்கிடையில் இந்த மாதம் இறுதியில் பத்தாம் வகுப்பு கல்வித்தகுதிக்கான கிராம நிர்வாக அலுவலருக்கான எழுத்துத்தேர்வு நடைபெற்வுள்ளது.அடுத்தடுத்து தேர்வுகள் நடக்கவுள்ளதால் இன்னும் தாமதிக்கமால் படிக்க ஆரம்பியுங்கள்..

        எனவே தேர்வு ரத்தானதே என்ற மனவருத்தத்தை விட்டொழித்துவிட்டு மீண்டும் எழுதத் தயாராகுங்கள்.சென்ற முறை நடந்தது போல அல்லாமல் இந்த முறை மிகவும் சிறப்பாகவும் மிகுந்த பாதுகாப்போடும் நம்பிக்கையாகவும் தேர்வு நடத்தப்படும் என்று எதிர்பார்க்கலாம்.

            குரூப் 2 தேர்வானது நகராட்சி கமிஷ்னர், தலைமைச் செயலக உதவிப்பிரிவு அதிகாரி, சார்-பதிவாளர், உதவி தொழிலாளர் ஆய்வாளர், இளநிலை வேலைவாய்ப்பு அதிகாரி, உள்ளாட்சி கணக்கு தணிக்கை உதவி ஆய்வாளர், கூட்டுறவு சங்கங்களின் முதுநிலை ஆய்வாளர், வருவாய்துறை உதவியாளர் உட்பட 3,631 காலியிடங்களை நிரப்புவதற்கான தேர்வாகும்.

                        தேர்வில் வெற்றி பெற நல் வாழ்த்துகள்..
  
                                                                                                                                            அன்புடன்
Download As PDF
Share this article :
புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

10 comments:

 1. அன்பின் மதுமதி - தகவல்கள் தேடி பிடித்து அருமையாக வெளியிடுவது நல்ல செயல். பகிர்வினிற்கு நன்றி - எழுதும் நண்பர்கள் அனைவருக்கும் நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

  ReplyDelete
 2. இந்த தேர்வுக்கான வினா தாள் எங்கே கிடைக்கும் ?

  ReplyDelete
 3. பலருக்கும் பயனுள்ள, தன்னம்பிக்கை தரும் விதத்தில் செய்தியைப் பகிர்ந்திருக்கிறீர்கள். பகிர்வினுக்கு மிக்க நன்றி.

  ReplyDelete
 4. பகிர்வுக்கு நன்றி..சார்

  ReplyDelete
 5. அறிந்து கொண்டேன். பகிர்ந்தமைக்கு நன்றி. தொடருங்கள்.

  ReplyDelete
 6. ஆகா தமிழ் மணமா அல்லது சாக்கடை மணாமா திரும்பிய திசை எல்லாம் கோப்பி பேஸ்ட் பதிவுகள். தமிழ்மணம் அண்ணாக்கள் சொல்வார்கள் நாங்கள்தான் தமிழில் பெரிய லாடு லபக்குதாஸ், இன்லி, தமிழ் வெளி, டாப் டென் ஐயாமார்கள் அமைதியா ஆர்ப்பாட்டம் இல்லாமல் இருகிறார்கள். என்பா இஸ்கு உங்களிடம் பதிவிடும் பதிபவர்கள் நடத்தும் குடிமி சண்டை தெரியாதா? இந்த டுபுக்குகள் சொல்வார்கள் கோப்பி பேஸ்ட் பண்ணி எழுதினால் உடனே நீக்கி விடுவோம், தமிழ் மணத்தில் வெளிவரும் ஒரு சில பதிவுகள் தவிர எல்லோரும் காப்பி தான். எல்லா பதிபவர்களும் ஏதோ நிருபர்கள் வைத்து செய்தி போடுவது போல். இது மட்டுமல்லாது பதிவை வெளியிடும்போதே சொல்வார்கள் தனிப்பட்ட தாக்குதல், மத சம்மந்தமாக தாக்குதல்கள் கூடாது என்று ஆனால் அங்கே மதங்களை இழிவுபடுத்தி எழுதப்படும் விசயங்களும், தமிழர்களுக்குள்ளே சண்டையை உண்டாக்கும் விடயங்களுமே அதிகம். இந்த நாற்றம் பிடித்த திரட்டியில் எழுத நீயா நானா என்று போட்டி வேறு.

  ReplyDelete
 7. நட்சத்திர பதிவராக கலக்குகிறீர்கள் வாழ்த்துக்கள் :)

  ReplyDelete
 8. உங்கள் பகிர்வுக்கு நன்றி...


  நன்றி,
  மலர்
  http://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

  ReplyDelete

கருத்துரைப் பெட்டியில் இடும் கருத்துகளுக்கு கருதிட்டவரே பொறுப்பாவர்..

கணித பாடத்திட்டம்

Search This Blog

Email Subscribers

புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

காலமும் வேலையும்

எண்ணியல்

Followers

மீ.சி.ம

Popular Posts

சராசரி

Google+

Tips Tricks And Tutorials

வயது கணக்கு

TNPSC - முக்கிய வினா-விடைகள்

எழுதிய மாத நாவல்கள் சில

 
Support :
Written by Madhumathi Published by www.madhumathi.com