புது வரவு :
Home » , , , » சரக்கு வெலை ஏறிப்போச்சுங்க மாமோவ்-அம்மணியும் சின்ராசும்

சரக்கு வெலை ஏறிப்போச்சுங்க மாமோவ்-அம்மணியும் சின்ராசும்

                                                                                                 தமிழ்மண நட்சத்திர இடுகை-1                                                                                                                         10.09.2012

"அம்மணி.. அம்மணியோவ்"

         அழைத்துக்கொண்டே  அருக்காணி வந்தாள்.

"வாங்க்கா..எப்புடி இருக்கீங்க.எப்ப வந்தீங்க?
"காலையில நேரமா வந்தேன் அம்மணி"

 "வூட்ல எல்லாம் எப்படி இருக்காங்க? "

"எல்லாம் நல்லா இருக்காங்க அம்மணி"

"புளியம்பட்டி பக்கமெல்லாம் மழையா"

 "ஆமா அம்மணி..முந்தா நாளு ரெண்டு ஒலவு மழை இருக்கும்..அடிச்ச அடியில நம்ம வழைத்தோப்பே ஒரு ஆட்டம் போட்டுச்சு.அப்பறம் பொழுதான சொல சொலன்னு ஊத்திகிட்டுதான் இருக்கு..ஆமா தெங்க போயிட்டான் சின்ராசு ஆளைக்காணோம்"

"காலையிலயே களை எடுக்க  பொம்பள ஆளுங்க வந்துடுவாங்கன்னு கோழி கூப்பிடவே காட்டுக்கு போயிட்டாப்பிடிங்க்கா"

"ஏனுங்க்கா..பழைய சோறு கரைக்கட்டுமா"

"இல்ல அம்மணி இப்பத்தான் மச்சாண்டாரு வூட்டுல குடிச்சுபோட்டு வந்தேன்..அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம்.. உங்கிட்ட ஒரு சந்தேகம் கேக்கலாமுன்னு வந்தேன்"

"கேளுங்க்கா என்ன சந்தேகம்?"

"இல்ல அம்மணி என் மூத்த பொண்ணுக்கு மாப்பிளை பாத்துட்டு இருக்கிறோம்.அவ என்னடான்னா நான் டி.என்.பி.எஸ்.சி பரிட்சையில பாஸ் பண்ணிட்டுதான் கல்யாணம் பண்ணிக்குவேங்கிறா..சரின்னு விட்டேன்.போன மாசம்  நடந்த பரிட்சை பிரமாதமா எழுதினேன்னு சொன்னா.இதுல கொஸ்டின் பேப்பரு அவுட் ஆயிடுச்சு பரீட்சை செல்லாதுன்னு திடீர்ன்னு கவுர்மெண்டு  சொல்லிப்போடுச்சாம்.. மாத்து பரிட்சை வெக்கப்போறாங்களாம்.அதனால மறுபடியும் உக்காந்து படிக்க ஆரம்பிச்சிட்டா..அதான் அம்மணி உங்கிட்ட இதைப்பத்தி கேட்டுட்டு போலாமுன்னு வந்தேன்.இந்த டி.என்.பி.எஸ்.சிய நம்பி படிக்கலாமா வேண்டாமா ஒண்ணும்புரியல.பொண்ணு இதை நம்பி கண்ணாலத்தையே தள்ளி போட்டுட்டு வர்றா"

"ஆமாங்க்கா.. ஈரோட்டுலதான் கொஸ்டின் பேப்பர் அவுட்டாயிடுச்சின்னு பேப்பர்ல படிச்சேன்.. கொஞ்ச நாளைக்கு முன்னாடி வரைக்கும் இப்படிதான் ஊழல் நடந்துட்டு இருந்துச்சு.அப்புறம் எல்லாத்தையும் கண்டு பிடுச்சு சரி பண்ணிதான் பரிட்சை வச்சாங்க..ஆனாலும் இப்பவும் இதே மாதிரி ஆனதால படிச்சிட்டு இருக்குற பசங்களுக்கு நம்பிக்கை இல்லாம போயிடுச்சுங்கறது உண்மைதான்.இனிமேல் அப்படி நடக்காதுங்க்கா..தைரியமா புள்ளைய படிக்கச் சொல்லுங்க ..இந்த மாசம் 30 ம் தேதி மணியாரர் பரீட்சை இருக்குது அது முறைப்படி எந்த பிரச்சனையும் இல்லாம நடக்கும்.அப்புறம் கேன்சல் செஞ்ச குரூப் 2 பரிட்சையும் உடனே நடக்கப்போகுது அதையும் எழுதச்சொல்லுங்க. இனிமேல் எந்த பிரச்சனையும் வராது.நல்லா பரிட்சை எழுதினவங்க கண்டிப்பா பாஸாகிடலாம்.அதனால மனச வுடாம புள்ளைய படிக்கச் சொல்லுங்க..தமிழ் நாட்டுல மட்டும் இதை நம்பியே 5 லட்சம் புள்ளங்க இருக்குதுங்க்கோவ்.. அதனால கவர்மெண்ட் இனிமே நடத்துற பரிட்சையில் அதிக கவனம் செலுத்தும்ன்னு நம்புவோம்"

"சரி அம்மணி நாம் கிளம்புறேன்..பதினோரு மணி பஸ் வந்துடும் அதுல போனா வூட்டுக்கிட்டயே இறங்கிக்குவேன்"

"சரிங்க்கா..மாமனையும் புள்ளைங்களையும் விசாரிச்சேன்னு சொல்லுங்க"
          என்று அம்மணி சொல்ல தலையாட்டியபடி அருக்காணி நகர,அடுத்த ரெண்டாவது நிமிடத்தில் தன் டிவிஎஸ் 50 வந்து இறங்கினான் சின்ராசு.

"ஏனுங்க மாமா அதுக்குள்ள வந்துட்டீங்க"

"ஏ அம்மணி நீதான் சீக்கிரம் வந்துடுங்க மாமா..அந்தியூருக்கு கட்டுச்சோத்து விருந்துக்கு போலாமுன்னு சொன்னே"

"ஆமா மாமா மறந்தே போயிட்டேன்"

"சரி கிளம்பு..ஏ அம்மணி டிவிஎஸ் லயே போயிடலாமா"

"வேற எதுல மாமா போறது..நாம என்ன பிரதமரா உடனே ஹெலிகாப்டர புடிச்சு போறதுக்கு"

"என்ன அம்மணி சொல்றே..முதலமைச்சர்தானே ஹெலிகாப்டர்ல "போவாங்க..இதென்ன பிரதமர்ன்னு சொல்றே"

"அதான் மாமா நேத்து 100 வது ராக்கெட்டை நம்மாளுங்க பறக்கவிட்டாங்கில்ல"

"ஆமா"

"அதை நேர்ல பாக்க ஏரோபிளான்ல வந்து சென்னையில இறங்கின பிரதமரு  அப்புறம் அங்கிருந்து கஹெலிகாப்டர்ல் ஏறி ஹரிகோட்டா போனாராம்.அதைச் சொன்னேன்."

"ஓ..அப்படியா.ஜனாதிபதி கூட சென்னைக்கு வந்துட்டு போனதா சொன்னாங்களே"


"ஆமாம் மாமா..சென்னையில இருக்குற ஐகோர்ட்டு ஆரம்பிச்சு 150 வருஷம் ஆகிடுச்சாம்.அதுக்கான விழாவுல கலந்துக்க வந்தாரு நம்ம ஜனாதிபதி"

"வெள்ளக்காரங்க ஆரம்பிச்சதுதானே அம்மணி அந்த கோர்ட்டு "

"ஆமா மாமா..1858 ல் கம்பெனிக்கிட்ட இருந்து வெள்ளக்காரங்க ஆட்சிய கைப்பற்றி 1861 ம் வருசம் இந்திய நீதி மன்ற சட்டத்தை இயற்றி அது பிரகாரம் 1862 ம் வருசம் மெட்ராஸ்ல்  ஐகோர்ட்டு அமைச்சாங்க.. இந்த வருசத்தோட 150 வர்ருசம் முடிஞ்சு போச்சு அதைக் கொண்டாடத்தான் ஜனாதிபதி வந்துட்டு போனாரு"

"என்ன அம்மணி வரலாறெல்லாம் மனப்பாடமா சொல்ற"

"என்ன மாமா இப்படி சொல்லிப்போட்டீங்க..பத்தாங்கிளாஸ்ல நான் வரலாறுல 90 மார்க் வாங்கியிருக்கிறேன் சும்மாயில்ல"

 "அத வுடு அம்மணி மறுபடியும் கூடங்குளம் பத்தி பரபரப்பு ஆரம்பிச்ச்டுச்சே"

"ஆமா மாமா உதயகுமார் தலைமையில மறுபடியும் போராட்டம் ஆரம்பிச்சிடுச்சு..ஆயிரக்கணக்கான மக்கள் ஒண்ணு திரண்டு அணு உலையில் எரிபொருள் நிரப்பக்கூடாதுன்னு  கோரிக்கைய முன் வச்சு போராட ஆரம்பிச்சுட்டாங்க..பயங்கர போலீஸ் அந்தப் பகுதியில் குவிஞ்சிருக்காங்களாம்"

"கூடங்குளத்துனால மக்களுக்கு நன்மையா தீமையான்னு ஒண்ணுமே புரியலையே அம்மணி"

"ஆமா மாமா..ரெண்டு தரப்புலயும் நியாயம் இருக்குற மாதிரியே இருக்குது"

"ஆமா அம்மணி  அந்த பட்டாசு ஆலை அதிபர கைது பண்ணிட்டாங்களா"

"ம்..அது நேத்தே..மதுரையில இருந்தாராம்.புடிச்சு விசாரணை நடத்திட்டு இருக்காங்க"

"அப்படியா"

"ம்..மாமா முக்கியமான விசயத்தை சொல்லாம வுட்டுட்டேனே..சரக்கு வெலை ஏறிப்போச்சாம்.ஒரு பாட்டிலுக்கு 5 ரூவாயில இருந்து 45 ரூவா வரைக்கும் ஏத்திப்போட்டாங்களாம்"

"அதைப் பத்தி எனக்கென்ன அம்மணி கவலை..நான் இது வரைக்கும் அந்த கருமாந்திரத்தை மோந்து பார்த்துது கூட கெடையாது"

"அப்படியா..நீங்க கவலைப் படற மாதிரி இன்னொரு விசயத்தை சொல்லட்டுமா"

"அதென்ன அம்மணி"

"அடுத்த வாரத்துல இருந்து பெட்ரோல் வெலை ஏறப்போகுதாம்"

"என்ன அம்மணி சொல்றே"

"ஆமா மாமா.. பெட்ரோல் கம்பெனிக நட்டத்துல ஓடுதான்.அதனால அடுத்த வாரம் வெலைய ஏத்தப் போறோமுன்னு பெட்ரோலிய மந்திரி ஜெயபால் ரெட்டியே அறிவிச்சிட்டுட்டாரு"

          முகம் சோர்ந்து போன சின்ராசு,

"ஏற்கனவே வெலை ஏத்திப்போட்டாங்கன்னு இத்தனை நாள இந்த டிவிஎஸ் 50 யை கட்டாந்தரையில கட்டி வச்சிருந்தேன்.போனா போகட்டும்ன்னு இந்த ஒரு மாசமா எடுத்து ஓட்டிட்டு இருக்கிறேன்.மறுபடியும் வெலை ஏத்தறாங்களா..சரி ஆயிரம் ரெண்டாய்ரத்துக்கு வண்டிய வித்துட்டு கம்முன்னு இருந்துக்கலாம் இல்லையா அம்மணி"

"ஆமா மாமா எனக்கும் அதுதான் தோணுது..சரி மாமா வண்டிய எடுங்க கட்டுச்சோத்து விருந்துக்கு போயிட்டு வந்துட்டு அப்புறமா வித்துப்போடலாம்"

         என்று சொல்லி அம்மணி ஏறி அமர இருவரையும் சுமந்தபடி அந்த டிவிஎஸ் 50 கிளம்பியது.  
--------------------------------------------------------------------------------------------------------------
Download As PDF
Share this article :
புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

24 comments:

  1. தலைப்பைப்பார்த்ததும் திகிலுடன் வாசிக்க ஆரம்பித்தேன்.அருமையான நாட்டுநடப்புகளை சுவாரஸ்யம் குறையாமல் நகைசுவை மிளிர அருமையாக பதிந்துள்ளீர்கள் சகோ.

    //"ம்..மாமா முக்கியமான விசயத்தை சொல்லாம வுட்டுட்டேனே..சரக்கு வெலை ஏறிப்போச்சாம்.ஒரு பாட்டிலுக்கு 5 ரூவாயில இருந்து 45 ரூவா வரைக்கும் ஏத்திப்போட்டாங்களாம்"

    "அதைப் பத்தி எனக்கென்ன அம்மணி கவலை..நான் இது வரைக்கும் அந்த கருமாந்திரத்தை மோந்து பார்த்துது கூட கெடையாது"// இப்படி எல்லா ரங்கமணிகளும் இருந்துவிட்டால் நாடு எப்படி இருக்கும்!!!

    ReplyDelete
  2. முக்கியமான அத்தனை தகவல்களையும், அம்மணி, சின்ராசு இவர்களின் பேச்சின் ஊடே தெரிந்துகொள்ள வைத்தமைக்கு நன்றி! அவர்களை அடிக்கடி பேச சொல்லுங்கள். நாங்களும் நாட்டு நடப்புகளை அந்த வெள்ளந்தியான தம்பதிகள் மூலம் தெரிந்துகொள்கிறோம். பதிவுக்கு நன்றி!

    ReplyDelete
  3. நாட்டு நடப்பு அலசல்
    வழக்கம்போல் அருமையிலும் அருமை
    நம்மிடவும் ஒரு வண்டி இருக்குது
    போற போக்கைப்பாத்தா நாமலும்
    வித்துத் தொலைக்கவேண்டியதுதான்னு
    நினைக்கிறேன்
    மனம் கவர்ந்த பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. ஒரு பாட்டிலுக்கு 5 ரூவாயில இருந்து 45 ரூவா வரைக்கும் ஏத்திப்போட்டாங்களாம்"
    >>>
    எம்புட்டு முக்க்கியமான விசயத்தை பத்தி இந்த சகோ சொல்லியிருக்க் பாரேன்.இனி குடிக்காரங்கலாம் குடிக்க ரோசனை பண்ணுவாங்கக்கா.

    போடி கூறு கெட்டவளே, 500ரூவா ஏறுனாலும் புள்ளாஇ குட்டிகளை பட்டினி போட்டுக்கூட குடிப்பானுக.

    ReplyDelete
  5. அடடா...ரொம்ப வருத்த மான செய்தி...விலை ஏறிடுச்சே

    ReplyDelete
  6. சரிதான்... நானும் வண்டிய வித்துப்போட்டு ஒரு குதிரைய வாங்கி ஓட்டிரலாமான்னு பாக்கறேன்... அம்மணியும் சின்ராசுவும் நாட்டு நடப்புகளை அருமையா அலசிட்டாங்க. சூப்பருங்கோ.

    ReplyDelete
  7. எப்படியும் எவனும் குடிக்காம இருக்கப்போறதில்லை

    ReplyDelete
  8. நட்சத்திர வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  9. சரிதான்... நானும் வண்டிய வித்துப்போட்டு ஒரு குதிரைய வாங்கி ஓட்டிரலாமான்னு பாக்கறேன்.//ஹை..அண்ணா...சென்னை வீதியில் மர்வான் அல்ஷகப்
    குதிரையில் வலம் வருவதை கற்பனை பண்ணிப்பார்க்கிறேன்.ஹா ஹா..

    ReplyDelete
  10. உரையாடல் மூலம் பல தகவல்களை சொல்லி விட்டீர்கள் சார்... (இது போல் எழுதுவதென்பது கொஞ்சம் சிரமம் தான்)

    ReplyDelete
  11. மண்வாசனை மணம் பரப்பிவிட்டது..ஆனந்தம்!

    நன்று..வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  12. தமிழ் மண நட்சத்திரம் என்பது எவ்வளவு பெரிய விஷயம்? அதை சொல்ல மாட்டீர்களா டிஸ்கியில் அல்லது முதலில்? எதேச்சையாய் பார்த்து விட்டு உள்ளே வந்தேன்

    வாழ்த்துக்கள் நட்சத்திரம் !

    ReplyDelete
  13. நட்சத்திர வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  14. நாட்டு நடப்புக்களை கிராமியவாசனையில் சேர்த்து கொடுத்தமைக்கு மிக்க நன்றி!

    இன்று என் தளத்தில்!
    பாதைகள் மாறாது! சிறுகதை
    http://thalirssb.blogspot.in/2012/09/blog-post_10.html



    ReplyDelete
  15. நட்சத்திர வாழ்த்துகள்

    ReplyDelete
  16. தகவல் களஞ்சியமான உரையாடல்

    ReplyDelete
  17. தமிழ்மண நட்சத்திர வாழ்த்துக்கள் கவிஞரே..

    ReplyDelete
  18. நட்சத்திர வாழ்த்துகள் சார்..

    ReplyDelete
  19. அம்மணி தினம் டிவியில் சீரியல் பார்க்காமல் நியூஸ் மட்டும் பார்க்கிறார்போல. நல்ல கற்பனை.
    சகாதேவன்

    ReplyDelete
  20. அம்மணியும் சின்ராசும் பேசும் போது
    எல்லாமே புட்டு புட்டு வருதே சூப்பர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

    ReplyDelete
  21. நட்சத்திர வாழ்த்துகள் தோழரே....

    உரைநடை பாணியில் நாட்டு நடப்புகளைச் சொல்லிப்போகும் பாணி நன்று!

    ReplyDelete
  22. அன்பின் மதுமதி - தமிழ் மண நட்சத்திரமாக ஒளிர்வதற்கு நல்வாழ்த்துகள் - அம்மணீ சின்ராசு - நாட்டு நிலைமையினை அலசி ஆய்வது நன்று. நட்புடன் சீனா

    ReplyDelete

கருத்துரைப் பெட்டியில் இடும் கருத்துகளுக்கு கருதிட்டவரே பொறுப்பாவர்..

Search This Blog

Email Subscribers

புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

Followers

Popular Posts

Google+

Tips Tricks And Tutorials

TNPSC - முக்கிய வினா-விடைகள்

எழுதிய மாத நாவல்கள் சில

 
Support :
Written by Madhumathi Published by www.madhumathi.com