புது வரவு :
Home » , , , , » காதல் கவிதை | இறகாக பற! இலையாக மித! இசையாக ஒலி! | மதுமதி கவிதைகள் | madhumathi kavithaigal

காதல் கவிதை | இறகாக பற! இலையாக மித! இசையாக ஒலி! | மதுமதி கவிதைகள் | madhumathi kavithaigal

  • நீ என்னை
         நினைத்து முடிக்கும்
        அந்த நொடிலியிலிருந்து
        உன்னை நான்
        நினைக்க ஆரம்பித்துவிடுகிறேன்..

  • நீயும் நானும்
        சேர்ந்திருக்கிறோம்..
        இந்த நிமிஷங்கள்
        இல்லாமற்போகலாம்..

        இந்த நினைவுகள்
        பத்திரமாகவே பாதுகாக்கப்படுகின்றன..

  • தனிமையில் சந்தித்து
        பேசலாம் வா என்கிறாய்..
        சந்திக்காமலேயே
        தனிமையில்
        பேசிக்கொண்டுதானே இருக்கிறோம்!..
  • இரவில்
        உன் வீட்டில்தான்
        படுத்துக் கொள்கிறாய்..
        என் வீட்டில் 
        உறங்கிப் போகிறாய்!..
        ஆச்சர்யமே ஆச்சர்யப்படுகிறது!
 

  • உறங்க ஆயத்தமாகும்போது
        உனை மறக்க
        ஆயத்தமாகிவிடுகிறேன்..
        உன் ஞாபகம் வந்தால்
        இரவு பகலாகிவிடுகிறது..
 
  • இரவானால் போதும்
        படுக்கையில் படுத்துக்கொள்கிறேன்..
        ஏனென்றால்
        உறக்கம் வரவில்லை என்றாலும்
        கனவு வந்துவிடுகிறது.. 
        கனவுக்கும் முன்னதாக 
        நீ  வந்து நின்று விடுகிறாய்! 

  • கனவில் வந்து 
          கதவைத் தட்டாதே!
          சத்தத்தில் உறக்கம் கலைந்து
          கனவு காணாமற்போகிறது.
          கனவின் கதாநாயகி
          நீயும் காணாமற்போகிறாய்....
          இனிமேல் 
         கனவில் வந்தால் 
         கதவைத் தட்டாதே!
         மனக்கதவை 
         நானே திறந்து வைக்கிறேன்.. 
         காற்றாக வா!
         இறகாக பற!
         இலையாக மித!
         இசையாக ஒலி!
 
  • எத்தனை நாட்கள் கனவில் வாழ்வது
           நிகழ்வில் வாழலாம் என்றாய்..
           திருமணத்தை
          தள்ளி வைத்துக் கொள்ளலாம் என்றேன்..
          ஏனென்றால்
          எப்போது உனை பார்ப்பேன்..
          எப்போது உன்னுடன் பேசுவேன்..
          என எனக்குள் எழும்
          ஏக்கங்களெல்லாம்
          ஏமாற்றம் அடைந்துவிடும்..
 

 
Download As PDF
Share this article :
புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

26 comments:

  1. இன்றைய தேதியில் நிறைய திருமணங்கள் தள்ளித்தான் வைக்கப்படுகின்றன...அடுத்த பிறவி வரையில்! காரணம் காதல் பன்மையாகிவிட்டதனால்!

    நெஞ்சில் இதம்..வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தோழரே..

      Delete
  2. உறங்க ஆயத்தமாகும்போது
    உனை மறக்க
    ஆயத்தமாகிவிடுகிறேன்..
    உன் ஞாபகம் வந்தால்
    இரவு பகலாகிவிடுகிறது..

    ரசனை மிகும் வரிகள் அழகு.

    ReplyDelete

  3. நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஒரு கவிதையா ! தொடரட்டும் !

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி ஐயா.

      Delete
  4. //இரவானதும்
    உன் வீட்டில்தான்
    படுத்துக் கொள்கிறாய்..
    என் வீட்டில்
    உறங்கிப் போகிறாய்!..//
    மிகவும் ரசித்த வரிகள்.

    ReplyDelete
    Replies
    1. ரசித்து சென்றதற்கு நன்றி..

      Delete
  5. உள்ளார்ந்த காதலின் மகத்துவம் சொல்லும் கவிதை
    அருமையிலும் அருமை.இந்த் சுகத்தைத்தான்
    கொஞ்சம் நாள் அனுபவிக்கட்டுமே
    மனம் தொட்ட பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஐயா..

      Delete
  6. அருமையாக உள்ளது அண்ணா...

    காதலின் ஆழம் கண் கூடு...................

    ReplyDelete
    Replies
    1. நன்றிம்மா எஸ்தர்..

      Delete
  7. ///இரவானதும்
    உன் வீட்டில்தான்
    படுத்துக் கொள்கிறாய்..
    என் வீட்டில்
    உறங்கிப் போகிறாய்!..//
    மிகவும் ரசித்த வரிகள்.//

    அருமையான சொல்லாடல் எதார்த்தத்தின் எல்லையில்
    ரசிக்க வைக்கிறது உங்கள் கவிதை

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரி..

      Delete
  8. ரசிக்க வைக்கும் வரிகள்...

    /// உறங்க ஆயத்தமாகும்போது
    உனை மறக்க
    ஆயத்தமாகிவிடுகிறேன்..
    உன் ஞாபகம் வந்தால்
    இரவு பகலாகிவிடுகிறது..///

    நன்றி...

    ReplyDelete
  9. கவிதை தெரிந்தவர்களெல்லாம் பாராட்டி விட்டபின் நான் சொல்ல என்ன மீதம் இருக்கிறது கவிஞரே... நீண்ட நாளுக்குப் பின் கவிதை தந்தாலும் அருமையான ரசனைக்கு விருந்தாய்த் தந்திட்டீர். நன்று.

    ReplyDelete
    Replies
    1. மகிழ்ச்சி தலைவரே..

      Delete
  10. அனைத்து வரிகளும் மிக அருமை...பகிர்வுக்கு நன்றி...

    நன்றி,
    மலர்
    http://www.tamilcomedyworld.com (100% காமெடி மட்டும் : தமிழ் காமெடி, டிவி நிகழ்சிகள், திரைப்படங்கள்)

    ReplyDelete
  11. மிக அருமையான கவிதை .......உங்கள் பகிர்வுக்கு நன்றி....

    நன்றி,
    பிரியா
    http://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

    ReplyDelete
  12. Replies
    1. மகிழ்ச்சி சகோதரி..

      Delete
  13. அன்பின் மதுமதி - கவிதையும் மறுமொழிகளும் படித்தேன் இரசித்தேன். கவிதை நன்று - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
  14. உண்மையான காதலின் வாசம் ஒவ்வொரு வரிகளிலும் எதிரொலித்துக்கொண்டே இருக்கிறது.... காதலியின் நினைவுகளை உண்டு, அவள் மீதுள்ள ஏக்கங்களை உடலுக்கு வலுவாக்கி...... அவளுடன் தனக்கே தனக்கென்று சிருஷ்டித்த உலகில் அவளுடன் சந்தித்து பேசி மகிழ்ந்து கொண்டாடி நிஜ உலகத்திற்கு வந்தால் வெறுமை அங்கே அவளில்லாத இடத்தில் கெக்கலிக்கிறது.....

    ஒருவரை கனவிலும் கற்பனையிலும் தேவதையாக நினைத்து நொடிகளெல்லாம் அற்புதமாய் கரைத்துக்கொண்டு காதல் ஏக்கத்தில் நொடிகளெல்லாம் யுகங்களானாலும் காதலியை காணாத ஏக்கமே ஒருவித சந்தோஷ உணர்வை தருவதாக சொல்லிச்செல்லும் கவிதை வரிகள் மிக மிக அழகு.....

    கற்பனையிலும் கனவிலும் சேர்ந்திருக்கும் நிமிடங்கள் நிஜத்தில் இல்லையென்பது தான் இங்கு ஹைலைட்.....
    தனிமையில் சந்தித்து பேசுவதை விரும்பும் காதலிக்கு உணர்த்தும் வரிகளாய் தனிமையில் ” தான் “ மட்டும் அவளை நினைத்து உருகி உருகி மனம் கரைவதைத்தான் இத்தனை அழகிய வெளிபாடாக வந்திருக்கிறது....

    தன்னை மறந்து கண்மூடி உறக்கம் இமைகளை அழுத்தும்வரை காதலியின் நினைவுகளின் ஸ்பரிசத்தில் கட்டுண்டு இருப்பதையும் அவள் நினைவுகளின் தாக்கத்தில் விழிப்பு வந்துவிட்டால் கண்ணை உறுத்தாத வெளிச்சத்துடன் பகலாகி மனம் முழுக்க பிரகாசமாகிவிடுவதை கவிதை வரிகளாய் வரைந்தது மிக அருமை....

    இரவானதும் அவள் வீட்டில் படுத்து.... ஸ்தூல உடலை அவள் வீட்டில் இருப்பதாகவும் அவள் ஆன்மா இவன் அடுத்து இருப்பதைப்போல உறங்கிப்போவதென்னவோ என் வீட்டில் தான் என்று ரசனையுடன் எழுதி இருப்பது வாசிக்க மிக அழகு.... மனம் ஒன்று சேர்ந்துவிட்டால் தூரம் ஒரு பொருட்டல்ல....காணாமல் இருப்பது பெரும் பிரயத்தனம் அல்ல... என்பதை சொல்லிச்செல்லும் வரிகள் மிக அற்புதம்...

    திருமணம் நடந்துவிட்டால் இதெல்லாம் சாத்தியமா?? ஹுஹும்... ஆஹா.... என்ன கரெக்டா சொல்லி இருக்கீங்கப்பா.... திருமணம் ஆகிவிட்டால் வாழ்க்கை இயந்திரமயமாகி நேசத்திற்கும் ஏக்கத்திற்கும் அன்புக்கும் கூட அல்லல்படத்தான் வேண்டும். அரக்கபரக்க எழுந்து வேலைக்கு ஓடி வாழ்க்கையை வேகமாக வாழ்ந்து குழந்தைகள் பெற்று அவர்கள் கவலையில் தங்கள் நேசத்தை மறந்து நாட்கள் வெகு வேகமாக வருடங்களாகி எங்கே போனது நேசம் என்று யோசிக்கவைத்துவிடும் அளவுக்கு நேசம் இரண்டாம்பட்சமாகி பொறுப்புகள் தலையை அமிழ்த்திவிடும் என்பதாலேயே திருமணம் தள்ளி வைத்துக்கொள்ளலாம் என்றும்....

    திருமணம் ஆகிவிட்டால் 24 மணி நேரமும் கண் எதிர்லயே மனைவி இருப்பதால் காணவேண்டும் என்று துடிக்கும் மனதின் எதிர்ப்பார்ப்புகளும்.... பேச வேண்டும் என்று காத்திருக்கும் நொடிகளின் ஏக்கங்களும் கிடைக்கவே கிடைக்காது என்று ரசித்து எழுதிய கவிதை வரிகள் மிக அருமை மதுமதி....

    கவிதைக்கு பொருத்தமான மிக அழகிய பெண்ணின் முகத்தை மெல்லிய கொடியும், மலரும், பட்டாம்பூச்சியுமாக அசத்தலான படம்பா....

    அழகிய கவிதை வரிகளுக்கு அன்புவாழ்த்துகள்....

    ReplyDelete
    Replies
    1. அடடே.. அக்கா உங்களது பின்னூட்டத்தை இப்போதே பார்த்தேன்.. ஆறு வருடங்கள் ஆகிவிட்டது.. மன்னிக்கவும் அக்கா.. பின்னூட்டம் பிரமாதம்..

      Delete
  15. ovorun varikalaium rasithu padithen mikavum arumai

    ReplyDelete

கருத்துரைப் பெட்டியில் இடும் கருத்துகளுக்கு கருதிட்டவரே பொறுப்பாவர்..

Search This Blog

Email Subscribers

புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

Followers

Popular Posts

Google+

Tips Tricks And Tutorials

TNPSC - முக்கிய வினா-விடைகள்

எழுதிய மாத நாவல்கள் சில

 
Support :
Written by Madhumathi Published by www.madhumathi.com