புது வரவு :
Home » , , » தீவிரவாதிகளும் மிதவாதிகளும்

தீவிரவாதிகளும் மிதவாதிகளும்

        தீவிரவாதம் என்ற சொல் தான் இன்றைக்கு உலகளவில் மனித இனத்தை அச்சுறுத்திக்கொண்டிருக்கிறது எனக்கூட சொல்லலாம்.தீவிரவாதம் என்ற வார்த்தையைக்கூட நாளைய தலைமுறை தெரிந்துகொள்ளக்கூடாது என அகராதியில் இருந்து கூட நீக்கும் அளவிற்கு அதனால் மனிதம் பாதிப்புக்குள்ளாகி வருகிறது. அந்த வகையில் தீவிரவாதம் என்ற சொல் ஏதோ தீய சொல்லாகவே மாறிவிட்டது. தீவிரம் என்பது தூய தமிழ்ச் சொல் இல்லையென்றாலும் முனைப்பு என்பதன் பொருளைச் சொல்லும் தற்கால தமிழ்ச் சொல்லே ஆகும்.தீவிரவாதி என்பதற்கு சரியான பொருள் என்னவென்று பார்க்கும்போது வழக்கத்திற்கு விடவும் எடுத்துக்கொண்ட காரியத்தில் முனைப்போடும் கடுமையாகவும் செயல்படுவவன் என்றே பொருள்.வாதம் செய்பவன் வாதி.அந்த வாதத்தை தீவிரமாய்ச் செய்பவன் தீவிரவாதி.

              தீவிரமாய் எதை ஒருவன் செய்கிறானோ அவன் தீவிரவாதி. ஒரு வாதத்தை தீவிரமாய் மேற்கொண்டாலும் சரி, ஒரு பெண்ணை தீவிரமாய்க் காதலித்தாலும் சரி, ஓரு நாட்டின் செயல்பாடுகள் குறித்து தீவிரமாய் எதிர்த்தாலும் சரி, ஒரு நாட்டையே அழிக்க தீவிரமாய் செயல்பட்டாலும் சரி அனைவருமே தீவிரவாதிகள் தான்.ஆனால் இதை முறையாக வகுத்து இனம் காணும் போது ஒரு சமுதாயத்தையோ அல்லது இனத்தையோ அழிக்க முற்பட்டு, அந்நாட்டின் இறையாண்மையை இழித்து, மோசமான மனித வாழ்வாதாரத்திற்கு வித்திடும் தலைமறைவாளர்களே தீவிரவாதிகள் என்ற சொல்லுக்கு பொருத்தமானவர்கள் என்ற நிலை ஆகிவிட்டது.
    
      அவர்களை கெட்ட தீவிரவாதிகள் என்றே வகைப்படுத்தவேண்டும்.ஆனால் தீவிரவாதம் என்றாலே கெட்டவர்கள் என்ற பொருளே முன் வந்து நிற்கிறது. ஆகையால் வேறெந்த தீவிரமான செயலை செய்பவனையும் நாம் தீவிரவாதி என்று அழைக்க விரும்புவதில்லை.இந்த வகையில் அவர்களுக்கு மட்டுமே அந்த வார்த்தை சொந்தமாகிப் போனது.நாமும் அந்த வார்த்தையை அவர்களுக்காக விட்டுக்கொடுத்து அவர்களைச் சுட்டிக்காட்ட மட்டுமே அதைப் பயன்படுத்தி வருகிறோம்.

                  வெள்ளையன் நம்மை ஆண்டு கொண்டிருந்த போது அவனை நாட்டை விட்டு விரட்ட திட்டம் தீட்டி அதனை தீவிரமாய்ச் செயல்படுத்த முயன்ற நம் நாட்டு  போராளிகளை இன்றும் நாம் தீவிரவாதிகள் என்றுதான் அழைத்துக்கொண்டிருக்கிறோம் தெரியுமா?

                      

         ஆங்கிலேயன் நம்மை அடிமைப்படுத்திக்கொண்டிருந்த போது ஆங்காங்கே விடுதலைக்கான குரல் ஒலித்தாலும் ஒன்று சேர்ந்து ஒலித்தாலே சத்தம் பெரிதாகும் என்ற அடிப்படையில் 1885 ஆம் ஆண்டு ஓய்வு பெற்ற ஆங்கில அதிகாரியான ஆலன் ஹ்யூம் அவர்களின் ஆலோசனைப்படி காங்கிரஸ் என்ற அமைப்பு ஏற்படுத்தப்பட்டது.(ஆங்கிலேயனை வெளியேற்ற ஏற்படுத்தப்பட்ட அமைப்புக்கு ஆங்கிலேயரே ஆலோசனைக் கொடுத்தார்).

                     ஆரம்பகாலத்தில் காங்கிரஸில் நடுத்தர, உயர்தர, படித்த வர்கத்தினரே இருந்தனர்.(சுதேந்திரநாத் பானர்ஜி, தாதாபாய் நௌவ்ரோஜி, பெரோஷா மேத்தா, கோபால கிருஷ்ண கோகலே, எம்.ஜி.ரானடே)இவர்கள் ஆங்கிலேயர்கள் விரைவில் சுதந்திரம் தருவார்கள் என்றெண்ணி அவர்கள் மீது நம்பிக்கை வைத்து காத்திருந்தனர்.தங்களின் கோரிக்கைகளையும் வாதங்களையும் அமைதியான முறையில் மனுக்கள் மூலம் நிறைவேற்றிக்கொண்டனர்.ஆங்கில அரசு கருணை முறையில் சுதந்திரம் வழங்கும் என்று நம்பிக்கொண்டிருந்தனர்.இந்தப் போக்கு காங்கிரஸில் இருந்த இளைய தலைமுறையினருக்கு (பால கங்காதர திலகர், பிபின் சந்திரபால், லாலாலஜபதிராய், அரவிந்த் கோஷ்) சுத்தமாய் பிடிக்கவில்லை. இது அரசியல் பிச்சை போல் உள்ளது என சாடினர்.

     கருணை முறையில் நாம் எதற்காக சுதந்திரத்தை எதிர்பார்த்து காத்திருக்கவேண்டும் சுதந்திரம் என்பது நமது உரிமை, தீவிரமாய் வெள்ளையனை எதிர்த்தாலொழிய அவன் சுதந்திரம் தர மாட்டான் என தீவிரமாக இளைய தலைமுறையினர் தீவிரமாய் களத்தில் இறங்கினர்.அந்தவகையில் சுரேந்திரநாத் பானர்ஜி, தாதாபாய் நௌவ்ரோஜி, பெரோஷா மேத்தா, கோபால கிருஷ்ண கோகலே, எம்.ஜி.ரானடே போன்றோர் மிதவாதிகள் எனவும் பால கங்காதர திலகர், பிபின் சந்திரபால், லாலாலஜபதிராய், அரவிந்த் கோஷ் போன்றோர் தீவிரவாதிகள் எனவும் அழைக்கப்பட்டனர்.

                              வெள்ளையனை எதிர்க்கும் போராட்டத்தில் இருவருக்கும் கருத்து வேறுபாடுகள் ஏராளம் இருந்தன. 1907 ம் ஆண்டு சூரத் மாநாட்டில் அடுத்த காங்கிரஸ் தலைவரைத் தேர்ந்தெடுக்கும் போது மோதல் ஏற்பட்டது.இதனால் காங்கிரஸ் இரண்டு குழுக்களாக பிரிந்தது.மிதவாதிகளுக்கு கோபால கிருஷ்ண கோகலே தலைவராகவும் தீவிரவாதிகளுக்கு பாலகங்காதர திலகர் தலைவராகவும் திகழ்ந்தார்.பிறகு 1916 ம் ஆண்டு மீண்டும் இரு குழுக்களும் இணைந்து செயல்படத்துவங்கின.
                         
       அந்த வகையில் இன்றும் நாட்டு விடுதலைக்கு தீவிரமாய்ச் செயல்பட்ட   பால கங்காதர திலகர், பிபின் சந்திரபால், லாலா லஜபதிராய், அரவிந்த் கோஷ் போன்றோரை தீவிரவாதிகள் என்றே வகைப்படுத்துகிறோம்.தீவிரவாதி என்ற சொல்லுக்கான பொருள் முற்றிலும் இன்று மாறுபட்டிருப்பதால் வருகின்ற தலைமுறையினர் தீவிரவாதிகள் என்ற தலைப்பில் சுதந்திர போராட்ட வீர்களைப் படிக்கும் போது அவர்கள் மீது தவறான பார்வை விழ வாய்ப்பிருக்கிறது.ஆனால் இன்று வரை நம் சுதந்திரப் போராட்ட வரலாற்றுப் புத்தகங்களில் மிதவாதிகள் தீவிரவாதிகள் என்ற சொல்லாட்சியே பயன்படுத்தப்பட்டு வருகிறது.

                
Download As PDF
Share this article :
புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

15 comments:

  1. தெரிந்து கொள்ள வேண்டிய செய்தி! தீவிரவாதம் என்ற சொல்லைப் பற்றி ஆய்வு அருமை!

    ReplyDelete
  2. விளக்கமான அலசல்... நன்றி...

    ReplyDelete
  3. நன்றி....தெரிந்து கொண்டேன்

    ReplyDelete
  4. தீவிரவாதி என்ற சொல்லை கொத்துக்கறியாக்கி விட்டார்கள். தீவிரவாதி என்ற சொல்லை தீவிரமாக ஆராய்ந்ததால் நீங்களும் தீவிரவாதியே!

    தீவிரவாதி என்ற சொல்லுக்கு மாற்றமாக பயங்கரவாதி என்ற சொல்லை பாவிக்கலாமே!

    ReplyDelete
    Replies
    1. /தீவிரவாதி என்ற சொல்லை தீவிரமாக ஆராய்ந்ததால் நீங்களும் தீவிரவாதியே!/

      ஹாஹாஹா..நன்றாகச் சொன்னீர்கள்..

      பயங்கரவாதியா? பயங்கரமாயிருக்கே..

      Delete
  5. அருமை கவிஞரே ,
    நமது தலைவர்களை தீவிரவாதிகள் என்றழைக்காமல் தீவிர தேசியவாதிகள் என்று அழைக்கலாம் அல்லது
    கொள்கைகளுக்காக மக்களை கொல்பவர்களை தீவிரவாதிகள் என்றழைக்காமல் பயங்கரவாதிகள் என்று அழைக்கலாம்.
    சிந்திக்கதெரியாத ஊடங்களால்தான் இந்த பிரச்சனை ஏற்ப்பட்டுள்ளது.

    ReplyDelete
  6. ஆழமான அலசல் தோழரே...

    ReplyDelete
  7. Super Anna.. We misused that word for our great warrior Nethaji also..

    ReplyDelete

கருத்துரைப் பெட்டியில் இடும் கருத்துகளுக்கு கருதிட்டவரே பொறுப்பாவர்..

Search This Blog

Email Subscribers

புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

Followers

Popular Posts

Google+

Tips Tricks And Tutorials

TNPSC - முக்கிய வினா-விடைகள்

எழுதிய மாத நாவல்கள் சில

 
Support :
Written by Madhumathi Published by www.madhumathi.com