புது வரவு :
Home » » A வகை காதலர்களே..

A வகை காதலர்களே..

    காதல்.. தமிழர் தம் இலக்கியத்திலும் வாழ்க்கை முறைதனிலும் இன்றியமையாத இடத்தைப் பிடித்துள்ளது. சங்க காலத்தில் தலைவனும் தலைவியும் காதல் செய்ததைத்தான் அக இலக்கியங்களாக இன்று படித்து மகிழுகிறோம்.முற்காலத்தில் வீரத்திற்கு எப்படி முக்கியத்துவம் கொடுத்தார்களோ அதைப்போலவே காதலுக்கும் முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார்கள் சங்கத்தமிழர்கள். இன்று நாம் கொண்டாடிக்கொண்டிருக்கிறோமே காதலர் தினம் என்று. அதனைவிடவும் பண்டைக் காலத்தில் காதலுக்கென பெரும் விழாவே நடத்தியிருக்கிறார்கள் பழந்தமிழர்கள். காதலைப் பாடாத கவிஞன் அரைக் கவிஞன் என்று கூடச் சொல்லலாம். அந்தக் காதல் திருவிழாவைப் பற்றி வேறொரு பதிவில் பார்ப்போம். இப்போது இன்றைய காதலுக்கு வருவோம்.

           ஆணும் பெண்ணும் காதலிக்கும் முறைகளின் அடிப்படையில் காதலை இரு வகையாகப் பார்க்கலாம்..

அவையாவன..

A வகை காதல் - உள்ளத்தை தூக்கி தூரமாய் வைத்துவிட்டு உடலால் காதலிப்பது
B வகை காதல்   - உடலைத் தூரமாய் வைத்துவிட்டு உள்ளத்தால் காதலிப்பது
                  
      A பிரிவு காதலர்களே நிகழ்காலத்தில் அதிகம் காணப்படுகிறார்கள் என்பதைவிட  இந்த வகை காதலைச் செய்யவே காதலர்கள் விரும்புகிறார்கள் என்று சொல்லலாம்.உள்ளங்கள் இணைவது காதலா உடலால் இணைவது காதலா என பட்டிமன்றம் வைத்தால் எதுவும் வெற்றி பெறாது.உள்ளத்தால் இணைந்து பின் உடலால் இணைந்ததே சிறப்பான காதல் என விடை வரலாம்.ஆயினும் மங்கல் நாணை சூடிக்கொள்ளும் காதலர்களே உடலால் காதல் கொள்ளமுடியும் என்பது நமது மரபு..ஆனாலும் அந்த மரபு இன்று மலையேறி போய்விட்டது.மங்கல நாணுக்கும் முன்பாகவே புணர்தல் தொழிலை மேற்கொள்ளவே விருப்பம் கொள்கிறார்கள்.

                இப்படித்தான் காதலிக்கவேண்டும் என்று காதலுக்கோ காதலிப்பவர்களுக்கோ எந்த இலக்கணமும் வரையறுக்கப்படவில்லை. ஆனாலும் சில கட்டுப்பாடுகளை காதலர்கள் வைத்துக்கொள்ள தவறுவதில்லை. ஆனால் இன்று வேண்டுமென்றே கட்டுகளை கழற்றிப் போட்டுவிடுகிறார்கள் என்று சந்தேகங்கொள்ள வேண்டியுள்ளது. காதலர்கள் திருமணத்திற்கு முன்பாக காமங்கொள்வது  தவறு என்று சொல்லப்பட்டதன் பின்னணி எதுவென தெரிந்து கொள்ளுதலும் அவசியம்.

               காதலிக்கும் ஆண்தான் தனக்கு மங்கல நாணைச் சூடுவான் என்று காதலி நம்பினாலும் அது நடக்குமா நடக்காதா என்பதை காலமே பதிலைச் சொல்கிறது. அது நம்பிக்கைதானொழிய உத்திரவாதம் இல்லை.எனவே காதலுனும் காதலியும் புணர்தல் தொழிலை மேற்கொண்டபின் காதல் கைகூடாமற்போனால் என்னவாவது. ஆணுக்கும் பெண்ணுக்கும் உயர்ந்த சொத்து கற்பென்றுதானே சொல்லி வருகிறோம்.அதை அவர்தன் வாழ்க்கைத் துணையிடம் மட்டுமே இழக்க முடியும்.அது அங்கே பொய்த்து வாழக்கைத்துணையை ஏமாற்றும் பொருட்டாகிவிடுகிறது.ஆனால் அதைப்பற்றியெல்லாம் இன்றைய காதலர்களுக்கு கவலையிருக்கிறதா என்றேத் தெரியவில்லை.


                ஒரு இளைஞன் தனது இளமை தீர்ந்து போவதற்குள் குறைந்த பட்சம் மூன்று காதலை சந்தித்து விடுகிறான்.திரிஷா இல்லையென்றால் திவ்யா என்ற ரீதியில் பயனப்படுகிறது இன்றைய தலைமுறை. "கேர்ள் பிரெண்ட் இல்லா வாழ்க்கை வேஸ்ட் அல்லவா" என்று இளைய தலைமுறையை உற்சாகப்படுத்த வாலி சொன்ன வரிகளை வாழ்க்கைத் தத்துவமாக சிலர் எடுத்துக்கொள்கிறார்கள். தனியாக ஒரு கல்லூரி மாணவன் இரு சக்கரவாகனத்தில் சென்றால் இழுக்கு என்றாகிவிடுகிறது. காதலியை தயார் செய்துகொண்டுதான் வாகனத்தையே சிலர் வாங்குறார்கள். சிலர் காதலிக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு மட்டுமே வாகனத்தை வாங்குகிறார்கள்.

                 B பிரிவு காதலர்களைப் பற்றி எங்கேயும் எந்தக் குற்றச்சாட்டும் வருவதில்லை.அவர்களின் எண்ணம் முழுக்க முழுக்க இருவருக்குமான திருமண நாளையே எண்ணிப்பார்த்துக் கொண்டிருக்கும் என்பது என் கருத்து. தங்கள் காதல் கைகூடவில்லையென்றால் எதையும் செய்யும் துணிச்சலை அவரவர் மீது வைத்திருக்கும் காதல் கொடுத்திருக்கிறது என்று சொல்லலாம். இந்த வகையான காதலர் மீது சமுதாயம் கோபம் கொளவதில்லை.தாங்கள் காதலர்கள் என உலகுக்கு தெரிவிக்க விரும்பாதவர்கள் இவர்கள். காதலிக்கிறேன் பேர்வழி என்று முகத்தை முற்றிலும் கறுப்புத் துணியால் போர்த்திக்கொண்டு காதலனுடன் கட்டிதழுவியபடி இரு சக்கர வாகனத்தில் செல்ல முடியாவதவளல்ல, செல்ல விரும்பாதவள் இந்த வகையான காதலி.

                      ஆனால் A பிரிவு காதல் தனக்கென எந்த கடிவாளத்தையும் போட்டுக்கொள்ளாமல் பயணித்துக்கொண்டிருக்கிறது. அந்தப் பயணம் எதை நோக்கியது என்பதை அவர்தம் இளமையிடமும் காலத்திடமும்  கொடுத்திருக்கிறார்கள். இந்த வகை காதலர்களின் உரையாடலில் பொதுவாக தங்களது திருமணம் குறித்த பேச்சுகள் இருப்பதில்லை.தாங்கள் இருவரும் உடலால் இணைய எப்போதும் தயார் என்ற மனநிலையில் இருக்கிறார்களா என்று சந்தேகிக்கும் அளவிலேயே இவர்களது செயல்பாடுகள் இருக்கிறது.தங்கள் காதலை அடுத்தக் கட்டத்திற்கு அழைத்துச் செல்ல காதல் தேவதையாலும் காமத்தை அடுத்தக் கட்டத்திற்கு எடுத்துச் செல்ல காம தேவதையாலும் நியமிக்கப் பட்டவர்கள் என்ற ரீதியில்தான் இவர்களின் போக்கு இருக்கிறது.

                        A பிரிவு காதலர்களே உள்ளத்தால் இணையாமல் உடலால் மட்டும் இணைகிறீர்கள் என்று சொல்லவில்லை.அதற்கென இடம்பொருள் ஏவல் இருக்கிறது என்பதை நினைவுபடுத்துகிறேன்.

தாம்வீழ்வார் மென்தோள் துயிலின் இனிதுகொல்
தாமரைக் கண்ணான் உலகு

      தாம் விரும்பும் காதலியின் மெல்லிய தோள்களில் துயிலும் இன்பத்தைப் போல திருமாலின் உலகமாகிய வைகுந்தத்தில் பெறும் இன்பமும் இனிதாக இருக்குமோ!..

           என்று வள்ளுவரே சொல்லியிருக்கிறார்..வள்ளுவன் சொன்னது உண்மைதானா என சோதித்துப்பார்க்கும் காதலர்களே..  பொதுமக்கள் வந்து செல்லும் கடற்கரையிலும் பூங்காக்களிலும் காதலின் தோளில் ஊஞ்சலாகிக்கொண்டோ காதலியின் மடியில் படுத்து துயில் கொள்வதைபோல நடித்து இன்பம் கொள்ளுதலோ வேண்டாமே.. அதற்கு ஆளில்லாத தனியிடத்தை வேண்டுமானாலும் பயன்படுத்திக்கொள்ளுங்கள். உங்களுக்கு அந்நேரம் மிகுந்த இன்பத்தை கொடுக்கலாம்.ஆனால் அதைப்பார்க்கும் பொது மக்களுக்கு உங்களைப் போன்றோரின் மீதான மரியாதையை அக்கணமே இழக்கச் செய்யும்.காதலை ஆதரிக்கத் தயாராக இருக்கும் ஒரு சில பெற்றோருக்கும் காதலின் மீது தீராத கோபத்தை அது வரவழைக்கும். சொன்னால் உங்களுக்கு புரியாது..

               ஒரு தடவை மாலை மூன்று மணிக்கு உங்கள் அக்கா,  தங்கை, அண்ணன், அம்மா, அப்பாவோடு கடற்கடை செல்லுங்கள். அங்கே கொஞ்சி விளையாடும் காதலர்கள் இருக்கும் இடமாக அழைத்துச் செல்லுங்கள். உங்கள் குடும்பத்தாரின் முகத்தை அப்போது பாருங்கள்.எத்தனை அருவருப்பு அவர்களின் முகத்தில் குடியேறியிருக்கும் என்று தெரியும்..

               காதல் காதலர்களால் கௌரவிக்கப்படுகிறது. பிறர் காதலை காறித்துப்புவதற்கும் புகழ்ந்து போற்றுவதற்கும் காதலர்களே காரணகர்த்தாக்கள் என்பதை மறந்திட வேண்டாம்..
Download As PDF
Share this article :
புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

20 comments:

  1. பொது இடங்களில் இதே சங்கடங்கள் தான் தினமும்...

    இன்னும் நாகரீகம் தேவை உணர்வார்களா காதலர்கள்...

    ReplyDelete
    Replies
    1. வாய்ப்பு குறைவுதான்..

      Delete
  2. பத்து வருடம் முன்பே இப்படி இருந்தது... இப்போது கேட்கவா வேண்டும்...? கொடுமை... குறளோடு நல்ல விளக்கம்... நன்றி...

    ReplyDelete
    Replies
    1. கொடுமைதான் என்ன செய்வது..

      Delete
  3. உண்மையான காதல் இருக்கும் இடத்தில் இது போன்ற அசிங்கங்கள் நிகழாது . தானாய் திருந்த வேண்டும் . இவர்களை என்ன செய்ய முடியும்.

    ReplyDelete
    Replies
    1. நம்மால் ஒன்றும் செய்ய முடியாது..தானாகத்தான் திருந்த வேண்டும்..

      Delete
  4. அன்றைய காதலுக்கும் இன்றைய காதலுக்கும் ஏணி வைத்தால் கூட எட்டாது..

    ReplyDelete
  5. இப்படிப்பட்ட சிலபேரால் உண்மையான காதலுக்கே அர்த்தம் இல்லாமல் போய்விடுகிறது உங்களின் விளக்கத்துக்கு நன்றி

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான் தோழரே.. நன்றி..

      Delete
  6. அன்று காதல் /இன்று காமம்/ நாளை மோதல் / இப்படித்தான் சொல்லணும்

    ReplyDelete
    Replies
    1. தங்களின் கருத்துக்கு நன்றி..

      Delete
  7. இன்றைய காதல் அந்த ஒரு அழகிய அனுபவத்தையே கொச்சைப்படுத்தி விடுகிறது.அருமை

    ReplyDelete
  8. காதல் பற்றிய ஆய்வு கலக்கல் மதி!

    ReplyDelete
  9. இனியேனும் இப்படி நடக்காமலிருந்தால் சரி! சொல்லி வைப்போம் நம்பிக்கையுடன்! இனிவரும் தலைமுறையில் மாற்றம் வந்தால் சரி! நன்றி!

    ReplyDelete
  10. மிகவும் அருமையான கட்டுரை!B வகையினர் 1000-க்கு ஒருவர் கூட இல்லைங்கறது தான் கொடுமையான விஷயம். சமுதாயத்தில் முன்னோடியாக விளங்க வேண்டியவர்கள் கூட இப்படி A வகையினராய் நடந்து கொள்வதைப் பார்க்கும் போது மிகவும் வருத்தமாக உள்ளது.

    ReplyDelete
  11. இதயத்தில் தொடங்கி கண்களில் முடியும் காதல்?!
    அன்பின் ஐந்திணை!

    ReplyDelete
  12. முக அழகைப் பார்க்காமல் அக அழகால் வரும் காதல் திருமணமும், பணத்தைப் பார்க்காமல் நல்ல மனத்தை பார்க்கும் நிச்சயித்த திருமணமும் கண்டிப்பாய் நல்லதொரு பல்கலைக் கழகமாய் அக்குடும்பத்தை மாற்றும் என்பது தான் என் கருத்து அண்ணா!

    ReplyDelete
  13. கண்டும் காணாமல் போகவேண்டிய கால கட்டம்...!

    ReplyDelete
  14. நல்ல அறிவுரை !

    ReplyDelete

கருத்துரைப் பெட்டியில் இடும் கருத்துகளுக்கு கருதிட்டவரே பொறுப்பாவர்..

Search This Blog

Email Subscribers

புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

Followers

Popular Posts

Google+

Tips Tricks And Tutorials

TNPSC - முக்கிய வினா-விடைகள்

எழுதிய மாத நாவல்கள் சில

 
Support :
Written by Madhumathi Published by www.madhumathi.com