புது வரவு :
Home » , , , » கருகிய ரூபாய் நோட்டுகள்

கருகிய ரூபாய் நோட்டுகள்


எத்தனை
ரூபாய் நோட்டுகள்
எரிந்துபோய்
தெருவில்
சாம்பலாகி சவமாய்
கிடக்கிறதெனத் தெரியவில்லை..

ஒரு கணக்காளரை
நியமித்திருந்தால் ஒருவேளை
கணக்கிட்டு சொல்லியிருப்பார்..
அதுவும் இப்போது இயலாது..
இலக்கங்கள் எல்லாம்
புகையைக் கக்கியபடி
கருகிப்போய்
உருகிப்போய் கிடக்கின்றனவே...

பட்டாசை வெடித்து
ரசிக்கும் குழந்தைகளின்
மகிழ்ச்சிக்குப் பின்னால்
கந்தக பூமியில் வாழும்
பல குழந்தைகளின்
வறுமையும்
உழைப்பும் இருக்கிறது
என்று நினக்கும்போது
எங்கோ வெடிக்கும்
பட்டாசின் சத்தம்
நெஞ்சறையைத் தாக்குகிறது..

அவர்களின் உழைப்பு 
வெடித்து சிதற சிதறத்தான்
அவர்களின் வறுமை
அகல ஆரம்பிக்கிறது
என நினைக்கும்போது
பட்டாசாய் மனம்
வெடிக்கத்தான் செய்கிறது.

இந்த தீபாவளியும்
வழக்கம்போல
செல்வந்த குழந்தைகளை
சந்தோஷப்படுத்திவிட்டும்
குடிசை வாழ்
குழந்தைகளை
குதூகலப்படுத்தாமலுமே
சென்றிருக்கிறது..

செல்வந்தனுக்கு
செலவென்பது
எறும்பு கடித்த மாதிரி..
குடிசைவாசிக்கு-அது
தேள் கடித்த மாதிரி..

குடிசைவாசிகளின் தீபாவளி
பட்டாசு வெடிப்பது அல்ல
யாரோ வெடிக்கும்
சத்தத்தை கேட்பதுதான்..
பணத்தை செலவிட்டு
பட்டாசைப் பற்றவைத்து-அது
வானத்தில்
வண்ணக்கோலமிட்டதைக் கண்டு
செல்வந்தன்
வீட்டுப் பிள்ளை பெற்ற
சந்தோசத்தை விட-அதை
எங்கோ நின்று
கண் கொட்டாமல் பார்த்த
குடிசைவாசி குழந்தைகளின்
குதூகலம் தான்
உண்மையான
தீபாவளிக் கொண்டாட்டமாய்ப் பட்டது.
                                *****

Download As PDF
Share this article :
புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

13 comments:

 1. அனுபவத்தில் விளைந்த கவிதை. உண்மையில் தோய்ந்த வரிகள் மனதைத் தொட்டன. நானும் வரிக்கு வரி ஆமோதிக்கிறேன் கவிஞரின் உணர்வுகளை.

  ReplyDelete
 2. கோடிகளை கொளுத்தி
  குதுகலித்து விட்டனர்
  மாடிகளெல்லாம் மகிழ்ந்தபோது
  குடிசையெல்லாம் இருண்டுதான் போனது
  மதுமதி சொன்னது போல்

  ReplyDelete
  Replies
  1. முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஐயா..

   Delete
 3. நாங்கள் பட்டாசே வாங்கவில்லை...

  முடிவில் சொன்ன வரிகள் உண்மை வரிகள்... மனம் கனத்த வரிகள்...

  ReplyDelete
  Replies
  1. அப்படியா.. மகிழ்ச்சி தலைவரே

   Delete
 4. உண்மையை சொல்லும் வரிகள்! அருமை!

  ReplyDelete
 5. உங்களுக்கு பிடித்த தளங்களை எளிதில் புக்மார்க் செய்யுங்கள் + உங்கள் தளத்திற்கு அதிக வாசகர்களை பெற,,, இணையுங்கள்,,,

  மிக வேகமான திரட்டி
  http://otti.makkalsanthai.com

  பயன்படுத்தி பாருங்கள் சகோ,, பிடித்திருந்தால் நமது நண்பர்களுக்கு தெரியபடுத்துங்கள்,,,,

  ReplyDelete
 6. நிதர்சனம்...

  ReplyDelete
 7. அண்ணா நூறு சதம் இன்றைய காலத்துக்கு ஏற்ப உரக்க சொல்லி இருக்குரிங்க அதற்காக என் நன்றி

  ReplyDelete
 8. நெற்றிப்பொட்டில் அடித்தாற்போல
  உண்மைகள் தோழர்...
  பலதரப்பட்ட கோணங்களுடன்
  சந்தோசங்களையும் துன்பங்களையும்
  பகிர்ந்துகொண்டு சென்றிருக்கிறது
  தீபாவளி....
  மீண்டும் அடுத்த ஆண்டின்
  துவக்கத்தை நோக்கி...

  ReplyDelete
 9. // குடிசைவாசிகளின் தீபாவளி
  பட்டாசு வெடிப்பது அல்ல
  யாரோ வெடிக்கும்
  சத்தத்தை கேட்பதுதான்..//

  சமுதாயச் சுற்று சூழலைக் கண்டு, வெடித்த பட்டாசே தங்கள் கவிதை மதுமதி!

  ReplyDelete

கருத்துரைப் பெட்டியில் இடும் கருத்துகளுக்கு கருதிட்டவரே பொறுப்பாவர்..

கணித பாடத்திட்டம்

Search This Blog

Email Subscribers

புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

காலமும் வேலையும்

எண்ணியல்

Followers

மீ.சி.ம

Popular Posts

சராசரி

Google+

Tips Tricks And Tutorials

வயது கணக்கு

TNPSC - முக்கிய வினா-விடைகள்

எழுதிய மாத நாவல்கள் சில

 
Support :
Written by Madhumathi Published by www.madhumathi.com