புது வரவு :
Home » , , , , , » ஜாதி மறுப்பு-மத மறுப்புத் திருமணம் செய்துகொள்ள விருப்பமா?

ஜாதி மறுப்பு-மத மறுப்புத் திருமணம் செய்துகொள்ள விருப்பமா?

    முன்பெல்லாம் ஒரு குழந்தை பிறந்தவுடனேயே இந்த குழந்தை இன்னாருக்குத்தான் மண முடிக்கவேண்டும் முடிவு கட்டி விடுவார்கள். அதன் படி தாய்மாமன்களைத் தாண்டிதான் ஆணையோ பெண்ணையோ மாற்றிடத்தில் மணம் முடிக்கமுடியும்.இல்லையேல் மாமன்மார்கள் போர்க்கொடி தூக்கிவிடுவார்கள்.மாமன் மகளோ மகனோ இருந்தால் அவர்களுக்குத்தான் பெண்ணையோ ஆணையோ மணமுடிக்கவேண்டும்.இது எழுதப் படாத சட்டமாகவே இருந்தது.

                மாமன் மகளுக்கு சொத்து இல்லை அழகில்லை ஆதலால் எனக்கு வேண்டாம் என்று ஏதாவொரு அத்தைமகன் சொல்லி அந்தப்பெண்ணை நிராகரித்தால் அந்தப் பெண்ணை அடுத்த குடும்பத்திற்கு கட்டிக்கொடுக்கலாம்.இப்படியாக அந்த வழக்கம் கொஞ்சம் கொஞ்சமாய்த்தான் மாறியது.இன்றைக்கு சொந்தத்தில் திருமணம் செய்பவர்களுக்கு குழந்தை பிறந்தால் அது மாற்றுத்திறனாளியாக வாய்ப்புள்ளது என்ற மருத்துவ உண்மையை அனைவரும் அறிந்ததால் அதை பெரும்பாலும்  தவிர்க்க ஆரம்பித்துவிட்டார்கள்.


                         ஒரு ஜாதியில்  பிறந்தால் அதே ஜாதியில் தான் திருமணம் செய்ய வேண்டும் என்றொரு எழுதப்படாத சட்டம் ஒன்று அனைத்து ஜாதியிலும் இருக்கிறது.எல்லாத்தையும் தூக்கி தூரப் போட்டுவிட்டு இன்றைய உலகம், இன்றைய தலைமுறை சென்று கொண்டிருக்கிறது. ஏராளமான காதல் திருமணங்கள் என்ணற்ற கலப்புத் திருமணங்கள் என்று சமூகம் மாறி வருகிறது.ஆனாலும் ஜாதிவாரி, மதவாரியான திருமணங்கள்தான் சிறந்ததென பெற்றோர்கள் எதிர்பார்க்கிறார்கள். அதற்கு வேறொரு காரணம் உண்டு. இன்றைய சூழ்நிலையில் தனக்கு பிடிக்கவில்லையென்றாலும் பெற்றோருக்குப் பிடித்துவிட்ட காரணத்தால் தனக்குப் பிடிக்காத மாப்பிள்ளையின் மனவியாகி வேண்டா வெறுப்பாய் வாழ்பவர்களின் எண்ணிக்கையும், சொத்து கிடைக்காது உயிருக்கு உத்திரவாதம் இருக்காது என்று ஜாதிகள் பயமுறுத்துவதால் தங்கள் கல்யாணத்தை கனவில் மட்டுமே நடத்திவிட்டு அடுத்த திருமணத்திற்கு தயாராகிற காதல் ஜோடிகளின் என்ணிக்கையும் அதிகரித்துக்கொண்டுதான் இருக்கிறது.

                              ஜாதிகள் ஒரு பக்கம் இளசுகளை வதைபடுத்தினால் இன்னொரு பக்கம் ஜாதகம் என்றொரு கொடிய மிருகம் தன் கோரப்பற்களைக் காட்டி பயமுறுத்துகிறது.உனக்கு 6 ல் செவ்வாய் தோஷம் இருக்கிறது 8 ல் செவ்வாய் தோஷம் இருக்கும் பையனைப் பார்த்துதான் கட்டி வைக்கவேண்டும் என்று மாப்பிளையைத் தேடி அம்மாக்கள் அலைய,செவ்வாய் தோஷத்தோடு மாப்பிளை வருவான் என்று  எதிர்பார்த்து எதிர்பார்த்து அம்மா ஆகாமலேயே அம்மாவின் வயதைத்தாண்டி காத்திருக்கும் முதிர்கன்னிகள் எத்தனை பேர்.
          ஜாதி, மதம், ஜாதகம் பாராமல் காதல் திருமணம் புரிந்தவர்களில் 50 சதவீதம் பேர் சந்தோசமாக இப்பூவுலகில் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறார்கள்.அப்படியிருக்க பொருத்தம், ஜாதகம், ஜாதி, மதம் என அங்குலம் அங்குலமாக அலசி ஆராய்ச்சி செய்து மணமுடிக்கும் தம்பதிகள் 100 சதவீதம் சந்தோஷமாக வாழ வேண்டுமல்லவா?இல்லையே. அதுவும் 50 சதவீதம் தானே.அதே கலப்பு திருமணம் செய்து சந்தோசமாக வாழ்ந்து கொண்டிருக்கும் 50 சதவீதம் பேரில் 5 சதவீதம் பேராவது செவ்வாய் தோஷம் கொண்டவர்களாக இருக்கலாம் ஜாதகப்பொருத்தம் இல்லாதவர்களாக இருக்கலாம் ஆனாலும் அது அவர்களுக்கு தெரியாத காரணத்தினால் சந்தோஷமாக இருக்கிறார்கள்.அதற்காக அனைவரும் ஜாதியை விடுத்து, மதத்தைவிடுத்து, இனத்தை விடுத்து, ஜாதகத்தை விடுத்து, சொத்தை விடுத்து, சொந்தத்தை விடுத்து காதலித்து கலப்பு திருமணத்தை செய்யுங்கள் என்று சொல்லவில்லை.எல்லாவற்றையும் விடுத்து பிடித்தவனையோ பிடித்தவளையோ திருமணம் செய்கிறேன் என்று சொல்பவர்களை மேற்கண்டவற்றையெல்லாம் காட்டி அவர்களின் வாழ்க்கையை திசைதிருப்ப வேண்டாம் என்பதே நோக்கம்.கடந்த வாரத்தில் இதை முன்னிட்டு சில ஜாதிவெறியர்கள் கோரத்தாண்டவே ஆடியிருக்கிறார்கள்.
                 இதைப்பத்தி தனியாக இன்னொரு பதிவே போடலாம்.அதனால இப்போதைக்கு இத்தோடு முடித்துக்கொள்கிறேன்.. இந்த ஜாதகம், மதம், இனம், ஜாதி என எதுவும் சந்தோஷமான வாழ்க்கைக்கு உத்திரவாதம் இல்லை. சந்தோஷமான வாழ்க்கைக்கு உங்களுக்கு பிடித்த பொண்ணையோ பையனையோ கல்யாணம் பண்றதுதான்.
                       ஜாதி மதம் பார்க்காமல் அதையெல்லாம் தூக்கி எறிஞ்சிட்டு நல்ல வரனாகப் பாத்து கல்யாணம் பண்ணிக்கொள்ள விருப்பமா.. அதுதான் உங்க லட்சியா.. மாற்றுத்திறனாளியாக இருப்பதால் சொந்தங்கள் புறந்தள்ளிவிட்டார்களா? துணைய இழந்து வேறொரு துணை வேண்டும் என எதிர்பார்த்துக்கொண்டிருப்பவரா? ஜாதகம் பார்த்து பொருத்தம் பார்த்து மணமுடித்த துணையுடன் மணமுறிவு பெற்றவரா.. ஆமாம் என்றால் வாருங்கள்..உங்கள் விருப்பத்திற்கேற்ப கருத்தொருமிக்க துணையைத் தேர்ந்தெடுக்கலாம்..
---------------------------------------------------------------------------------------------------------
                  சிறப்புப் பிரிவுகள்
                            
                            மாற்றுத்திறனாளிகள்
                            மணமுறிவு பெற்றவர்கள்
                            துணைய இழந்தவர்கள்
-------------------------------------------------------------------------------------------------------------
                   
                          

Download As PDF
Share this article :
புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

22 comments:

  1. ஏன் மணம் புரிந்து கொள்ள வேண்டும்..கட்டாயமா என்ன? அது பரஸ்பர அடிமைத்தனம் ஆகாதா? தேவைப்பட்டால் ஒப்பந்தம் போட்டு சேர்ந்து வாழ்ந்து பார்ப்பது..பிடிக்கும்வரை தொடர்வது..பிரியும்நிலை வந்தால் சொத்துக்களையும்,,பாரங்களையும் பகிர்ந்து கொள்வது!

    ReplyDelete
    Replies
    1. தனது மகளையோ மகனையோ மணமுடிக்கச் சொல்லி கட்டாயப்படுத்துவது அவர்தம் பெற்றோர்தான். ஆனால் திருமணம் புரியலாமா வேண்டாமா என்பது அவரவர் விருப்பம்.யாரும் கட்டாயப்படுத்தமுடியாது.விருப்பமிருப்பவர்களே திருமணம் புரிந்து கொள்கிறார்கள்.விருப்பமில்லையென்றால் பிரிந்துகொள்கிறார்கள்.

      Delete
    2. அனைத்து வழிகாட்டலும் மேற்கொள்கையில்..திருமண அறிவுரை மட்டும் எவ்வாறு தவறாகும்? கலப்பு மணமும்..காதலும் பொருளாதார அடிப்படை அற்றது என்பது எவ்வாறு முழு உண்மை ஆகும்?

      Delete
    3. திருமண அறிவுரை மட்டும் எவ்வாறு தவறாகும்?-தவறாகாதே..

      கலப்பு மணமும்..காதலும் பொருளாதார அடிப்படை அற்றது என்பது எவ்வாறு முழு உண்மை ஆகும்?-ஆகாது

      அப்படியெல்லாம் எங்கும் குறிப்பிடவில்லையே..

      Delete
  2. வெவ்வேறு மதம், ஜாதியை சேர்ந்தவங்க கல்யாணம் கட்டிக்கிட்டு அவங்களுக்கு பிறக்கும் குழந்தைகள் புத்திசாலிகளா இருக்காங்கன்னு என் வீட்டுக்காரர் சொல்வார். இது உண்மையான்னு தெரியலை.

    எந்த ஜாதி, மதமா இருந்தால் என்ன? வாழ்க்கைத்துணை நல்லவங்களா இருந்தா போதும்ங்குறது என் தனிப்பட்ட கருத்து.

    ReplyDelete
  3. வெவ்வேறு மதம், ஜாதியை சேர்ந்தவங்க கல்யாணம் கட்டிக்கிட்டு அவங்களுக்கு பிறக்கும் குழந்தைகள் புத்திசாலிகளா இருக்காங்கன்னு என் வீட்டுக்காரர் சொல்வார். இது உண்மையான்னு தெரியலை.


    உண்மைதான் சகோதரி..

    ReplyDelete
    Replies
    1. இதுவரை பிறந்த உயரறிவு பிள்ளைகள் அனைவரும் கலப்பு மண தமபதியினருக்கு பிறந்தவர் தானா?

      Delete
    2. உயரறிவு என்பதை எவ்வாறு வகைப்படுத்துகிறீர்கள்..கலப்பு திருமண குழந்தைகள், உறவு முறை திருமண பிள்ளைகளைவிட புத்திசாலியாக இருக்கும் என ஆய்வு சொல்கிறது.

      Delete
  4. பணங்கள் சேராமல் இரு மனங்கள் சேர்ந்தால் சரி...

    ReplyDelete
  5. மிகவும் அற்புதமான் பதிவு, சாதி கலப்பு மணத்தை எதிர்த்து வரும் சாதியரசியல் வியாதிகளின் மூக்குடைக்கட்டும் இந்த மன்றல்

    ReplyDelete
  6. கலப்பு மண தம்பதியினர்..தங்கள் குழந்தைகளின் அட்மிஷனுக்கு இருவரில் எளிதான சாதியையும்..திருமணத்திற்கு..இருவரில் சாதகமான சாதியையும் தேர்ந்தெடுக்கிறார்கள் என்ற அனுமானம் ..நிலவுகிறதே..அது குறித்து? ( எரிச்சல கூட்ட அல்ல என் கேள்விகள்..மாற்று சிந்தனையாளர் பார்வையில் இருந்து எழும் கேள்விகள்...அதற்கு கட்டுரையாளரிடம் இருந்து விளக்கம் பெறவே!..பொறுக்கவும்!)

    ReplyDelete
    Replies
    1. கலப்புத்திருமணம் செய்து கொண்டால் தங்கள் விருப்பத்திற்கெல்லாம் குழந்தையின் ஜாதியை அடிக்கடி மாற்றிக்கொண்டிருக்க முடியாது.ஆரம்பத்தில் இருவரும் பேசி முடிவெடுத்து இருவரில் ஒருவரின் ஜாதியை குழந்தையின் ஜாதியாக பதியலாம். அதற்குப்பிறகு ஜாதியை மாற்றமுடியாது.அதைப்போல மனைவி கணவன் ஜாதியையோ கணவன் மனைவி ஜாதியையோ சட்ட ரீதியாக எந்த சூழ்நிலையிலும் பயன்படுத்த முடியாது.அவரவர் ஜாதிதான் அவரவருக்குப் பயன்படும்.

      Delete
  7. கலப்புமணம் செய்பவர்களும் ஜாதி பார்க்கிறார்கள்

    ReplyDelete
    Replies
    1. கலப்பு மணம் என்பதற்கு பொருளே இரு சமுதாயம் கலப்பதுதான் தோழரே.. ஒரே ஜாதியில் திருமணம் செய்தால் அதன் பெயர் கலப்புத் திருமணம் இல்லையே..சில காதல் மணம் ஒரே ஜாதியில் நடப்பதுண்டு அது அவர்களின் விருப்பத்தைச் சார்ந்தது.

      Delete
  8. உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

    மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2012/11/blog-post_17.html) சென்று பார்க்கவும்... நன்றி...

    ReplyDelete
  9. எல்லாம் சரிதான், பிறக்கும் குழந்தைகளைப் பற்றி சற்று சிந்திக்க வேண்டும்.



    கலப்புத் திருமணங்களால் மிகவும் பாதிக்கப் படுவது குழந்தைகளே.
    http://jayadevdas.blogspot.com/2012/11/blog-post_17.html

    ReplyDelete
  10. கலப்பு திருமணத்த பற்றி நீங்கள் கூறுவது தான் சரி காரணமென்ன? நீகளே அத்தாட்சி

    ReplyDelete
  11. திராவிடர் கழகம் வீரமணி அவர்களின் விதண்டாவாதம்: தந்தை பெரியார் கோள்கைக்கு மருத்துவர் அய்யா எதிரானவரா?

    http://arulgreen.blogspot.com/2012/12/Veeramani-doublespeak.html

    ReplyDelete
    Replies
    1. அன்பர் அருள்..பதிவை முதலில் படியுங்கள்..அதைச்சார்ந்து கருத்திடுங்கள்..பிறகு உங்கள் பதிவின் விளம்பரத்தை தாருங்கள்.::))

      Delete
  12. ஜாதி மதங்களை கண்டுகொள்ளாம கலப்பு திருமணங்களை ஊக்குவிக்கும் உங்களுக்கு பாராட்டுகள்.

    ReplyDelete
  13. kalappu manam seipavarkalin kulanthaikaluku iwith GOVT.AUTHORITY "NO CASTE" CERTIFICATE vazhanga vaendum..Appodhu than kadhal and kalappu thirumanangal 98% santosama irukum..ithu uruthi.. itharkaga makkal muyarsithal sathiyatra matrum mathamatra samugam viraivil uruvagum..

    ReplyDelete

கருத்துரைப் பெட்டியில் இடும் கருத்துகளுக்கு கருதிட்டவரே பொறுப்பாவர்..

Search This Blog

Email Subscribers

புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

Followers

Popular Posts

Google+

Tips Tricks And Tutorials

TNPSC - முக்கிய வினா-விடைகள்

எழுதிய மாத நாவல்கள் சில

 
Support :
Written by Madhumathi Published by www.madhumathi.com