துப்பாக்கியைத் தொடர்ந்து விஸ்வரூபம் கமல் அதிர்ச்சி - மதுமதி.காம்
புது வரவு :
Home » , , , , » துப்பாக்கியைத் தொடர்ந்து விஸ்வரூபம் கமல் அதிர்ச்சி

துப்பாக்கியைத் தொடர்ந்து விஸ்வரூபம் கமல் அதிர்ச்சி

       மலஹாசன் அதிக பொருட்செலவில்  தயாரித்து இயக்கியிருக்கும் படம் விஸ்வரூபம். இந்தப் படமே தமிழ் ரசிகர்கள் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் தமிழின் அடுத்த பிரம்மாண்டப் படம். இந்தப் படத்திற்கு சென்ஸார் போர்டு யு/ஏ சான்றிதழ் கொடுத்திருக்கிறது. வரிச்சலுகை எதுவும் கொடுக்கப்படவில்லை. அது குறித்து கேட்டபோது சலுகை முக்கியமில்லை.படத்தின் கருதான் முக்கியம் என்று சொன்னதாக செய்திகள் வெளியாயின.அப்படியானால் வலுவான கருவைப் பற்றி வளர்ந்திருக்கிறது விஸ்வரூபம்.படத்தின் கரு என்னவென்று  அப்படக்குழுவினர் சிலருக்கு மட்டும் தான் தெரியும்.படம் என்ன சொல்லப்போகிறது.எதைச் சார்ந்து இருக்கும் என்பதை படத்தின் டிரெயிலரை வைத்து கொஞ்சம் யூகிக்க முடியும்.தொடர்ந்து படத்தின் டிரெயிலர் வெளியானது. அதை உன்னிப்பாகப் பார்த்த பத்திரிக்கையாளர்கள் கமலிடம் இப்படம் இசுமாலாமியருக்கு எதிரானதா? மதத்தைப் பற்றியதா என்ற கேள்வியை முன் வைத்திருக்கிறார்கள்.படம் மதத்தை பற்றியதல்ல மனிதனைப் பற்றியது என்று பதிலைச் சொல்லியுள்ளார் கமலஹாசன்.


          ஆப்கன் தீவிரவாதிகளை மையப்படுத்தி எடுத்திருக்கும் இந்தத் திரைப்படம் சிறுபான்மையினரை புண்படுத்துவது போல் அமையாதா எனக்கேட்டதற்கு நம் ஊரில் மற்ற மதத்தினர் சிறுபான்மையினர் உலகம் முழுவதும் பார்த்தால் அவர்கள் தான் பெரும்பான்மையினர் என்று பதிலளித்திருக்கிறார்.அது இசுலாமியர்கள் சம்பந்தப்பட்ட கதையாக இருக்கலாம் என 1 சதவீதமாவது டிரெயிலரைப் பார்த்தவர்கள் யூகம் கொள்ளலாம்.ஆனால் அப்போது இசுலாமியத் தோழர்களோ இயக்கங்களோ அதைப் பெரிதாய் எடுத்துக்கொள்ளவில்லை. காரணம் அப்படத்தை பற்றி முழுமையாக எதுவும் தெரியவில்லை. அதேசமயம் துப்பாக்கி வெளியாகி இரண்டாவது நாளில் இசுலாமியர்களை தேசத்துரோகிகளாக படத்தில் சுட்டிக்காட்டிருக்கிறீர்கள் என்று இசுலாமியத் தோழர்களும் இயக்கங்களும் போர்க்கொடி தூக்கியது மட்டுமில்லாமல் சம்பந்தப்பட்டவர்களின் கவனத்தையும் அரசின் கவனத்தையும் ஈர்க்கும் விதமாக அப்படத்தின் நாயகனான விஜய் வீட்டு முன்னால் சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்குமாறு கோஷம் எழுப்பியுள்ளனர்.

         அதற்குபிறகு பட சம்பந்தப்பட்டவர்கள் போராட்ட குழுக்களை அழைத்து பேசி படத்தை திரையிட்டு காண்பித்திருக்கிறார்கள்.சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கப்படும் என்று சொல்லியிருக்கிறார்கள். இன்னும் நீக்கப்படவில்லையென்றே தெரிகிறது. சூட்டோடு சூடாக போராட்டக் குழுவினர் பார்வை கமலஹாசன் தயாரித்து இயக்கியிருக்கும் விஸ்வரூபம் படத்தின் மீது விழுந்திருக்கிறது.இ ணையத்தில் ஆங்காங்கு இச்செய்தி  வெளியானது.கமலஹாசனும் துப்பாக்கி இசுலாமியப் பிரச்சனைத் தூண்டும் என்று சற்றும் எதிர்பார்த்திருக்கவில்லை. இந்நிலையில் இசுலாமியர்களின் பெயரைப் பயன்படுத்தியதற்கே இவ்வளவு பிரச்சனை என்றால் விஸ்வரூபம் டிரெயிலரில் இசுலாமியர் சம்பந்தப் பட்ட காட்சிகளும் இடம் பெற்றிருக்கிறது.

                                                        விஸ்வரூபம் டிரெயிலர்


          இதற்கிடையில் ஆப்கானிஸ்தான் போரை மையமாக வைத்து கதை இருப்பதாகவும் இசுலாமியர்களை வன்முறையாளர்களாக சித்தரிக்கும் காட்சிகள் இருப்பதாகவும் தகவல்கள் வருகின்றன.எனவே விஸ்வரூபம் படத்தையும் கமலஹாசன் எங்களுக்கு முழுமையாகப் போட்டுக்காட்டவேண்டும் என்று தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகத்தலைவர் ரிபாயி சொல்லியிருக்கிறார்.இந்தப் பிரச்சனை குறித்து பேசத்தான் முதல்வரை கமலஹாசன் சந்தித்தாக செய்திகள் வெளியாயின.

                 இவ்வாறான சூழ்நிலை வரும் என்று கமலஹாசன் துளியும் எதிர்பார்க்கவில்லை. இந்தப் படத்தை சம்பந்தப் பட்ட இசுலாமிய குழுவினருக்கு போட்டுக் காட்டுவார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.அப்படி அவர்களுக்கு திரையிட்டு காட்டும் பட்சத்தில் ஆப்கானிஸ்தானியரை வில்லன்களாக படத்தில் சித்தரிக்கப்பட்டிருந்தால் அந்தக் காட்சிகளையும் நீக்கச் சொல்வார்களா அல்லது அதில் இந்திய இசுலாமியரை வன்முறையாளர்களாக சித்தரிக்கப்பட்டிருந்தால் அவற்றை மட்டும் நீக்கச் சொல்வார்களா எனப் புரியவில்லை.

                                 ஏனென்றால் துப்பாக்கி படத்தில் இந்திய இசுலாமியரையும் தீவிரவாதியாய்க் காட்டுகிறீர்கள் இது நியாயமா என்ற ரீதியில் தான் போராட்டம் எழுந்தது.ஒட்டுமொத்த இசுலாமியர்களையே தீவிரவாதிகளா சித்தரிக்ககூடாது என்பது போராட்டக்குழுவின் நோக்கமாக என்பது தெரியவில்லை.எது நடந்தாலும் இரு தரப்பினருக்கும் சாதகமாகவே நடக்கட்டும்.அமைதியான வழியில் நடக்கட்டும்.

          விஸ்வரூபம் படத்தை கமலஹாசன் மிகப்பெரிய பொருட்செலவில் எடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

Download As PDF
Share this article :
புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

13 comments:

 1. எதேனும் பிரச்சினை விஸ்வரூபமாக எடுக்காமல் வந்தால் சரி..!

  ReplyDelete
 2. படத்தை எடுக்கப் போட்ட பணம் என் னாவது............. அடத் தேவுடா..........

  ReplyDelete
 3. என்ன தப்பா எடுத்துட்டாங்க... உண்மைய சொல்லகூடாதா? விட்டா மும்பை தீவிரவாத தாக்குதல் நடத்திய கசாப்.... சாரி சாரி கண்ணன் அல்லது டேவிட் அல்லது ஜோஹிந்தர் சிங் என்று செய்து வாசிக்கணும் இல்லையென்றால் டிவி ஸ்டேஷன் முற்றுகை இடப்படும் எண்டு சொல்வார்கள் போல... எல்லா மதத்தை சேர்ந்த நல்லவர்களும் இருகிறார்கள் கெட்டவர்களும் இருகிறார்கள்... ஆனால் இத திவிரவாத செயல்களை மற்ற மத மக்கள் நியாய படுத்துவதில்லை... இவர்கள் ஏன் கசாப் தூக்கில் போட ஒரு போராட்டம் செய்ய கூடாது...

  ReplyDelete
  Replies
  1. சகோ...

   ஏனிந்த வெறுப்பு உங்களுக்கு...

   கசாப்க்கு எந்த இயக்கமாவது ஆதரவு கொடுத்திருக்கா?? அந்த அயோக்கிய தீவிரவாதியை சீக்கிரமா தூக்கில் போடுங்க, தூக்குதண்டனையை நிறைவேற்றுங்க, அதுவும் விரைவாக நிறைவேற்றுங்க என்றல்லவா நாங்களூம் சொல்லியிருக்கோம்... நம் நாட்டின் நீதித்துறையின் ஆமை வேகத்திற்கு என்ன செய்யலாம்னு சொல்லுங்க!

   வாசிக்க- http://www.kuttisuvarkkam.com/2012/07/blog-post.html

   Delete
  2. //விஸ்வரூபம் படத்தை கமலஹாசன் மிகப்பெரிய பொருட்செலவில் எடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.
   //

   படத்தை பற்றி தெரியாது சகோ...

   ஆனால் பணத்தை விட ஒற்றுமை, நாட்டின் நல்லிணக்கம், போன்றவை முக்கியம் தானே???? ஒரு குறிப்பிட்ட சாரரை மட்டும் தீவிரவாதியாக தொடர்ந்து சித்தரித்து வந்தால் அதனால் நாட்டில் ஏற்படும் குழப்பங்களுக்கும் அதை தொடர்ந்து ஏற்படும் பிரச்சனைகளுக்கும் முன்னால் இந்த பணம் ஒன்றும் பெரிதில்லையே...

   அடுத்தவரின் மனதை புண்படுத்தி தான் உலக அரங்கில் தன்னுடைய திறமைய நிரூபிக்க வேண்டுமா என்ன??? :-)))

   Delete
  3. arumaya sonneengga Annbhu...

   Delete
 4. இதற்கிடையில் ஆப்கானிஸ்தான் போரை மையமாக வைத்து கதை இருப்பதாகவும் இசுலாமியர்களை வன்முறையாளர்களாக சித்தரிக்கும் காட்சிகள் இருப்பதாகவும்///ஆப்கானை வைத்துபப்டம் எடுத்தால் இஸ்லாமியர்களை வன்முறையாளர்களாகத்தான் காட்டமுடியும்...ஆனால் துப்பாக்கி போன்ற முஸ்லீம்கள் சம்பந்தப்படாத படத்தில் காட்டுவதுதான் தவறு

  ReplyDelete
  Replies
  1. இலங்கைத்தமிழர்களை வைத்து படமெடுத்து எல்லோரையும் வன்முறையாளர்களா காட்டினால் ஓக்கேவா? கொஞ்சம் சிந்தித்து பேசுங்கய்யா!

   Delete
  2. துப்பாக்கி படத்தில் எல்லோரையுமா வன்முறையாளர்களா காட்டவில்லையே.வன்முறை செய்பவர்களை மட்டும் தான் வன்முறையாளர்களா காட்டியுள்ளார்கள்.உங்களையோ உங்க மாதிரி நல்லவங்களையோ இல்லை. இலங்கைத்தமிழர்களை அப்பாவிகளை ஏன் இதற்குள் கொண்டுவருகிறீர்கள்? அவர்கள் தங்கள்பாட்டில் இருக்கிறார்கள்.வன்முறை வாழ்க்கையை விரும்பாதோர்.

   Delete
 5. //இந்தப் படத்தை சம்பந்தப் பட்ட இசுலாமிய குழுவினருக்கு போட்டுக் காட்டுவார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.அப்படி அவர்களுக்கு திரையிட்டு காட்டும் பட்சத்தில் ஆப்கானிஸ்தானியரை வில்லன்களாக படத்தில் சித்தரிக்கப்பட்டிருந்தால் அந்தக் காட்சிகளையும் நீக்கச் சொல்வார்களா..//
  ஆப்கானிஸ்தானிய கொடூர வில்லன் மீது இந்திய இசுலாமியர்களுக்கு அப்படி ஒரு பாசம்.

  //ஒரு குறிப்பிட்ட சாரரை மட்டும் தீவிரவாதியாக தொடர்ந்து சித்தரித்து வந்தால்//
  ஒரு குறிப்பிட்ட சாரர் மட்டும் பெரும்பாலும் உலகம் முழுக்க தீவிரவாதியாக தொடர்ந்து இருந்து வருகின்றனர். உள்ளதை வைத்து தான் படம் எடுக்க முடியும். படத்துக்கெதிராக போராடி ஸ்ரண்ட் காட்டாம உண்மையிலேயே நல்ல நோக்கம் இருந்தால் தீவிரவாதிகளுக்கு நல்ல உபதேசம் செய்து நல்லவராக மாற்ற முயற்சிக்கலாம்.

  ReplyDelete
  Replies
  1. @குள்ளநரி
   ////ஒரு குறிப்பிட்ட சாரரை மட்டும் தீவிரவாதியாக தொடர்ந்து சித்தரித்து வந்தால்//-இது நான் சொன்னதுல?? ஓ நீங்க எனக்கு பதில் சொல்றீங்களா???

   சாரி! உங்களுக்கு பதில் சொல்லிட்டிருக்குற அளவுக்கு உங்கள மாதிரி வேல வெட்டி இல்லாம இல்ல ஹி..ஹி..ஹி...

   பட் உங்க அப்ரோச் எனக்கு பிடிச்சுருக்கு! நாளைக்கே உங்க சொந்த ப்ளாக்ல ஒரு போஸ்ட் போடுங்க... எப்படி இருக்கணும்னு நானே சொல்லிடுறேன்!

   ***தீவிரவாதிகளே! உங்களுக்கு குர் ஆன் இப்படியா தீவிரவாதம் பண்ண சொல்லி கொடுத்துச்சு? இப்படியே அடுத்தவன கொல்ல சொல்லுச்சு?? இதான் இஸ்லாம் காட்டிதந்த வழியா? உண்மையான முஸ்லீம்மாக இருக்க முயலுங்கள்****

   -இதான் கான்சப்ட்! நான் உபதேசம் பண்றத விட நீங்க பண்ணா நல்லா இருக்கும்! எங்கே நாளைக்கே ஒரு பதிவு போட்டு தாக்குங்க பாக்கலாம் :-)

   நல்லத நான் மட்டும் தான் செய்யணூமா என்ன :-) :-):-) குள்ளநரியும் செய்யலாம்! ஆல் தி பெஸ்ட்   Delete
 6. ஆரம்பம் ஆச்சா...? இனி 'ஹிட்' செய்து விடுவார்கள்...

  ReplyDelete
 7. சகோ.ஆமினா WELLDONE ........
  நல்லா கேட்டீங்க வேகாத நரிய ....எப்படி பம்முது பாருங்க நரி ..
  காவி போர்வைக்குள் சாதுக்களைப்போல ஒளிந்து கொண்டிருந்த [கொண்டிருக்கும்] பயங்கரவாதிகளைப்பற்றி படமெடுக்க "தில்" இருக்கா ??? நொண்டி நுங்கு எடுத்துடுவாங்க என்கிற பயமா ??
  கமலுக்கு பேதி புட்டுகிச்சி, முதல்வர பார்திருக்கார் ...ம்.. இவர் படமும்
  இப்படியே ஒருவேளை இருந்தால், ரிலீஸ் செய்ய விடக்கூடாது ..

  ReplyDelete

கருத்துரைப் பெட்டியில் இடும் கருத்துகளுக்கு கருதிட்டவரே பொறுப்பாவர்..

Search This Blog

Email Subscribers

புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

Followers

Recent Post

Popular Posts

Google+

Tips Tricks And Tutorials

TNPSC - முக்கிய வினா-விடைகள்

Random Posts

Best Blogger Tips

எழுதிய மாத நாவல்கள் சில

 
Support :
Written by Madhumathi Published by www.madhumathi.com