புது வரவு :
Home » , » தொலைந்துபோன பாஸ்போர்ட், கிரயப்பத்திரம் உள்ளிட்டவற்றை திருப்பப் பெறுவது எப்படி?

தொலைந்துபோன பாஸ்போர்ட், கிரயப்பத்திரம் உள்ளிட்டவற்றை திருப்பப் பெறுவது எப்படி?

                                                                                        
              விருந்தினர் பக்கம் பகுதிக்கு  மனைப் பட்டா, பாஸ்போர்ட், டெபிட் கார்டு, கிரயப் பத்திரம் போன்றவற்றை எப்படி பெறுவது என்பதனை பதிவாக எழுதியிருப்பவர்,  முகநூலில் தொடர்ந்து கருத்துக்களையும் கவிதைகளையும் பதிவு செய்து வரும் அன்புத்தோழர் சங்கர சுப்பிரமணியன் அவர்கள்.  -------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

கிரெடிட் கார்டு

யாரை அணுகுவது?

நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவை மையம்.

என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?

தொலைந்துபோன கிரெடிட் கார்டு தொடர்பான விவரங்கள்.

எவ்வளவு கட்டணம்?

ரூ.100 (நிறுவனத்துக்கேற்ப வேறுபடும்).

கால வரையறை: 

15 வேலை நாட்கள்.

நடைமுறை : 

கிரெடிட் கார்டு தொலைந்ததும் உடனடியாக வாடிக்கையாளர் சேவை மையத்துக்கு தகவல் அளித்து பரிவர்த்தனைகளை நிறுத்த வேண்டும். தொலைந்த கார்டுக்கு மாற்றாக வேறு கார்டு அளிக்கக் கோரினால் பதினைந்து வேலை நாட்களுக்குள் உங்களுக்கு அனுப்பி வைத்துவிடுவார்கள். அடையாளச் சான்று காண்பித்து வாங்க வேண்டும்..

-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

பாஸ்போர்ட்



யாரை அணுகுவது..?

மண்டல பாஸ்போர்ட் அலுவலகங்கள்.

என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?

காவல் துறை சான்றிதழ், பழைய பாஸ்போர்ட் நகல், 20 ரூபாய் முத்திரைத்தாளில் விண்ணப்பம்.

எவ்வளவு கட்டணம்?

ரூ.4,000.

கால வரையறை: 

இந்தியாவில் தொலைத் திருந்தால் 35-லிருந்து 40 நாட்கள்; வெளிநாட்டில் தொலைத்திருந்தால் அதிக காலம் எடுக்கும்.

நடைமுறை: 

பாஸ்போர்ட் தொலைத்த பகுதியில் உள்ள காவல் துறையில் புகார் அளித்து கண்டுபிடிக்கப்படவில்லை என்கிற சான்றிதழ் வாங்க வேண்டும். 20 ரூபாய் முத்திரைத்தாளில் தொலைந்த விவரங்களை பதிவு செய்துகொள்ள வேண்டும். இவற்றில் நோட்டரி பப்ளிக் ஒருவரின் கையெழுத்து பெற்று மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும். அதன் அடிப்படையில் அவர்கள் விசாரணை மேற்கொண்ட பிறகு நகல் பாஸ்போர்ட் அனுப்பி வைத்துவிடுவார்கள்.

-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

மனைப் பட்டா!

யாரை அணுகுவது..?

வட்டாட்சியர்.

என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்.?

நகல் பட்டா கோரும் விண்ணப்பம்.

எவ்வளவு கட்டணம்?

ரூ.20.

கால வரையறை: 

ஒரு சில நாட்களில் கிடைக்கக்கூடும்.

நடைமுறை: 

முதலில் தாசில்தாரிடம் மனு தர வேண்டும். அவர் பரிந்துரையின் பேரில் கிராம நிர்வாக அதிகாரி (வி.ஏ.ஓ.), வருவாய் ஆய்வாளரிடம் ஒப்புதல் பெற வேண்டும். இதன் அடிப்படையில் தாசில்தார் அலுவலகத்தில் விண்ணப்பித்தால் நகல் பட்டா கிடைத்துவிடும்.

-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

டெபிட் கார்டு!

யாரை அணுகுவது..?

சம்பந்தப்பட்ட வங்கியின் கிளை மேலாளர்.

என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?

கணக்குத் தொடர்பான விவரங்கள்.

எவ்வளவு கட்டணம்?

ரூ.100.

கால வரையறை: 

வங்கியைப் பொறுத்து ஓரிரு நாட்கள் அல்லது அதிகபட்சம் 15 நாட்கள்.

நடைமுறை: 

டெபிட் கார்டு தொலைந்தவுடன் அந்த வங்கி வாடிக்கையாளர் சேவை மையத்திற்கு தகவல் தெரிவித்து, அதன் மூலம் மோசடியான பரிவர்த்தனைகள் நடக்காதவாறு தடுக்க வேண்டும். அதற்குப் பிறகு சம்பந்தப்பட்ட கிளைக்கு கடிதம் மூலம் தெரியப்படுத்தி புது டெபிட் கார்டு வழங்குமாறு கோர வேண்டும்.

-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

கிரயப் பத்திரம்!

யாரை அணுகுவது..?

பத்திரப்பதிவு துறை துணைப் பதிவாளர்.

என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?

காவல் துறை கடிதம், பத்திரிகையில் வெளியிடப்பட்ட விளம்பரம், யாரிடமும் இருந்து ஆட்சேபனை வரவில்லை என்பதற்கான நோட்டரி பப்ளிக் ஒருவரின் உறுதிமொழி, சர்வே எண் விவரங்கள்.

எவ்வளவு கட்டணம்? 

ஆவணக் கட்டணம் 100 ரூபாய். இது தவிர, கூடுதலாக ஒவ்வொரு பக்கத்திற்கும் 20 ரூபாய்.

கால வரையறை: 

ஒரு சில நாட்களில் கிடைக்கக்கூடும்.

நடைமுறை: 

கிரயப் பத்திரம் தொலைந்த பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்து அவர்களிடமிருந்து சான்றிதழ் வாங்க வேண்டும். தொலைந்த விவரம் குறிப்பிட்டு பத்திரிகையில் விளம்பரம் செய்ய வேண்டும். இதற்குபிறகு சார்பு பதிவாளர் அலுவலம் செல்ல வேண்டும்.

Download As PDF
Share this article :
புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

18 comments:

  1. உபயோகமான தகவல்கள்

    ReplyDelete
  2. மிக உபயோகமான தகவல்கள் இதுபோல தொலைந்து போன காதலியை கண்டுபிடிக்க என்ன செய்யனும் தகவல் கிடைக்குமா? ஹீ..ஹீ

    ReplyDelete
    Replies
    1. ஹாஹாஹா.அதற்கென வல்லுனர் குழு அமைத்தால் கூட அவ்வாறான பதிவை சரியாக எழுத முடியாதுதான் தோழரே..

      Delete
  3. பயனுள்ள தகவல்கள் சார்... நன்றி...

    பகிர்கிறேன்...

    ReplyDelete
  4. பயனுள்ள தகவல்கள் இருவருக்கும் நன்றி.

    ReplyDelete
  5. பயனுள்ள தகவல்கள். நல்ல பகிர்வு.

    ReplyDelete
  6. பலருக்கும் பயன்படும் பதிவு..தோழருக்கு பாராட்டுகள்..

    ReplyDelete
  7. அனைவர்க்கும் பயனுள்ள தகவல் அளித்ததற்கு நன்றி.தொடரட்டும் உங்கள் சேவை

    ReplyDelete
  8. You are providing useful content. Really.

    But you made blunder in adsense issue.
    Probably you did not understand the importance of adsense.

    By :
    (A webmaster who understood the importance of Adsense.)

    ReplyDelete
    Replies
    1. I really didn't get u what u are trying to say...Moreover may I know who is this ...?Are you the one who commented in anonymous blanket ??Is this id urs which leads to tamilnadutalk.com seems to be fake id ...

      Delete
  9. பொதுமக்களுக்கு பயன்தரும் தகவல்கள்

    பகிர்வுக்கு மிக்க நன்றி !

    ReplyDelete
  10. \\ யாரை அணுகுவது..?

    வட்டாட்சியர்.

    என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்.?

    நகல் பட்டா கோரும் விண்ணப்பம்.

    எவ்வளவு கட்டணம்?

    ரூ.20.\\

    இருபது ரூபாயில ஆகிற காரியமா இது?!!

    By the by, சென்னையில் எங்க நண்பர் ஒரு பிளாட்டை வாங்கி நாலஞ்சு வருஷமா பட்டா [யாரை கேட்டாலும் தரமாட்டேன்கிரார்கலாம்] இல்லாம உலாத்திக்கிட்டு இருக்காரு, இதற்க்கு ஏதாவது வழியுண்டா?

    ReplyDelete
    Replies
    1. அரசுக் கட்டணம் 20 ரூபாய்..லஞ்சமா எத்தனை லட்சத்தை நீங்க கொடுத்தாலும் அதை கணக்குல சேத்தமுடியாது..

      உங்க நண்பர் வாங்கின பிளாட்டுல வில்லங்கம் இருக்குன்னு நினைக்கிறேன்..

      Delete

கருத்துரைப் பெட்டியில் இடும் கருத்துகளுக்கு கருதிட்டவரே பொறுப்பாவர்..

Search This Blog

Email Subscribers

புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

Followers

Popular Posts

Google+

Tips Tricks And Tutorials

TNPSC - முக்கிய வினா-விடைகள்

எழுதிய மாத நாவல்கள் சில

 
Support :
Written by Madhumathi Published by www.madhumathi.com