புது வரவு :
Home » , , , , , » விஸ்வரூபம் தொலைக்காட்சியில் வெளியீடு-தியேட்டர் அதிபர்கள் அதிர்ச்சி

விஸ்வரூபம் தொலைக்காட்சியில் வெளியீடு-தியேட்டர் அதிபர்கள் அதிர்ச்சி

        துப்பாக்கி பிரச்சனையைத் தொடர்ந்து கமலஹாசன் இயக்கி தயாரித்து நடித்திருக்கும் விஸ்வரூபம் படமும் இசுலாமியப் பிரச்சனையை சந்திக்குமா அல்லது எவ்விவித பிரச்சனையும் இல்லாமல் வெளியாகுமா என எதிர்பார்ப்பு கூடிக்கொண்டேயிருந்தாலும் அப்படத்தைப் பார்க்கும் ஆவலும் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.இப்படம் வரும் பொங்கலுக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.'விஸ்வரூபம்' வெளியாகும் அதே நாளில் அந்த படத்தை டெலிவிஷனில் ஒளிபரப்ப கமல்ஹாசன் முயற்சி செய்து வருகிறார் என்ற பத்திரிக்கை செய்தி இப்போது பரப்பரப்பாக திரையுலக வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.

       திருட்டு விசிடியை ஒழிக்க பலர் பல முயற்சியை மேற்கொண்டாலும் கமலஹாசன் புதுவித முயற்சி ஒன்றை மேற்கொள்கிறார் ‘விஸ்வரூபம்’ படம், ஹாலிவுட்டுக்கு இணையான தொழில்நுட்பத்துடன், பிரமாண்டமாக தயாராகி இருக்கிறது. முதல்முறையாக, ‘ஆரோ 3டி’ என்ற தொழில்நுட்பம், இந்த படத்தில் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. கமல்ஹாசனுடன் ஆன்ட்ரியா, பூஜாகுமார் ஆகிய இருவரும் கதாநாயகிகளாக நடித்து இருக்கிறார்கள். 

         தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில் படம் தயாராகி இருக்கிறது. அடுத்த மாதம் (ஜனவரி) 11–ந் தேதி படத்தை திரைக்கு கொண்டுவர கமல்ஹாசன் திட்டமிட்டு இருக்கிறார்.‘விஸ்வரூபம்’ படம் வெளியாகும் அதே நாளில், அந்த படத்தை டி.டி.எச். சேவை மூலம் டெலிவிஷனில் ஒளிபரப்ப கமல்ஹாசன் முயற்சி செய்து வருகிறார். டெலிவிஷனில் ஒளிபரப்புவதன் மூலம் திருட்டு வி.சி.டி.யை ஒழிக்க முடியும் என்றும், தியேட்டர்களுக்குப் போய் படம் பார்க்காதவர்களையும் படம் பார்க்க வைக்க முடியும் என்றும் அவர் கருதுகிறார். இதற்காக, டி.டி.எச். நிறுவனத்துக்கு வினியோக முறையில், குறிப்பிட்ட தொகைக்கு படத்தை விற்பதற்கு பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இந்த புதிய தொழில்நுட்பம் நடைமுறைக்கு வந்தால், குடும்பத்தினர் அனைவரும் வீட்டில் இருந்தபடியே புதிய படங்களை பார்க்கலாம்.          இந்த விவகாரம் பற்றி தயாரிப்பாளர்களிடமும், தமிழ் பட உலகின் பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்களிடமும் விளக்கி, அவர்களின் ஆதரவை பெறுவதற்காக, கமல்ஹாசன் தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபைக்கு (பிலிம்சேம்பர்) வந்தார். தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் எஸ்.ஏ.சந்திரசேகரன், தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை (பிலிம்சேம்பர்) பொருளாளர் கே.எஸ்.சீனிவாசன், தென்னிந்திய நடிகர் சங்க தலைவர் சரத்குமார், தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளன (பெப்சி) தலைவர் அமீர் ஆகியோருடன் பல தயாரிப்பாளர்களும் கலந்து கொண்ட அந்த கூட்டுக் கூட்டத்தில், கமல்ஹாசன் தனது புதிய தொழில்நுட்ப முயற்சியை விளக்கி பேசினார். இதுபற்றி திரையுலகின் அனைத்து பிரிவினருடன் கலந்து பேசி முடிவு செய்யலாம் என்று கூட்டு கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

           கமலஹாசனின் டி.டி.எச். சேவை மூலம் டெலிவிஷனில் படத்தை ஒளிபரப்பும் முயற்சிக்கு தியேட்டர் அதிபர்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார்கள். ‘‘இந்த பிரச்சினை பற்றி விவாதிப்பதற்காக, தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்களின் அவசர கூட்டம் சென்னையில், நாளை (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு நடக்கிறது. கூட்டம் முடிந்தபின், எங்கள் முடிவை அறிவிப்போம்’’ என்று சங்கத்தின் பொதுச்செயலாளர் பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

                கமலஹாசன் தரப்பில் விளக்கம் சொல்லப்பட்டாலும் திரையரங்க உரிமையாளர்கள் இதற்கு உடன் படுவார்களா எனத் தெரியவில்லை.அவர்களின் முடிவுக்காக கமலஹாசன் மட்டுமல்லாமல் மொத்த திரையுலகமும் காத்துக்கிடக்கிறது.
Download As PDF
Share this article :
புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

4 comments:

 1. படம் ரொம்ப அசத்தலாக இருக்கும் என்று சொல்லுங்க... ம்ம்ம்ம் இப்பவே பார்க்க ஆவலாக உள்ளது.

  ReplyDelete
 2. //துப்பாக்கி பிரச்சனையைத் தொடர்ந்து கமலஹாசன் இயக்கி தயாரித்து நடித்திருக்கும் விஸ்வரூபம் படமும் இசுலாமியப் பிரச்சனையை சந்திக்குமா அல்லது எவ்விவித பிரச்சனையும் இல்லாமல் வெளியாகுமா என எதிர்பார்ப்பு கூடிக்கொண்டேயிருந்தாலும் அப்படத்தைப் பார்க்கும் ஆவலும் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது//
  உண்மை தாங்க. ஒரே ஆவலா இருக்கு. இப்படியே போனா இந்த இஸ்லாமியர்கள் என்னை தமிழ் பட பைத்தியம் ஆக்கிடுவாங்க போலிருக்கு.

  ReplyDelete
 3. படம் வெளிவரும் "அந்த தேதியில் அந்த நேரத்தில்" தமிழ்நாடு முழுவதும் மின்சார்ம் இருந்தால்!

  அந்த மூன்று மணி நேரம் தமிழ்நாடு முழுவதும் மின்சாரம் இருந்தால் மக்களுக்கு எது "உயிர் மூச்சு" மற்றும் "மருந்து" என்பதை அரசு நன்றாக புரிந்து கொண்டது என்று தான் அர்த்தம்..!

  ReplyDelete
 4. விஸ்வரூபம் வெளியாகும் அந்த 3 மணிநேரமும்..மின்சாரம் தடைபடாது ! # நம்பிக்கைதானே வாழ்க்கை!

  ReplyDelete

கருத்துரைப் பெட்டியில் இடும் கருத்துகளுக்கு கருதிட்டவரே பொறுப்பாவர்..

Search This Blog

TNPSC - கணித பாடத்திட்டம்

Email Subscribers

புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

Followers

சராசரி கணக்கு - அடிப்படை

Popular Posts

மீ.சி.ம- மீ.பொ.வ

Google+

Tips Tricks And Tutorials

எண்ணியல் - அடிப்படை

TNPSC - முக்கிய வினா-விடைகள்

எழுதிய மாத நாவல்கள் சில

 
Support :
Written by Madhumathi Published by www.madhumathi.com