புது வரவு :
Home » » உயிரைத்தின்று பசியாறு-அத்தியாயம்-4

உயிரைத்தின்று பசியாறு-அத்தியாயம்-4

                     உயிரைத் தின்று பசியாறு
                                               (க்ரைம்..க்ரைம்..க்ரைம்)

                            அத்தியாயம்-4
"...த...ர்..."
ஸ்ருதியின் நீளமான சத்தத்தைக் கேட்ட மதர் மரியா அவசரமாய் எழுந்தரித்து டேபிள் டிராயரிலிருந்த டார்ச்சை எடுத்து உயிர்ப்பிக்க...உள்ளே இருந்து ஓடி வந்தாள் ஸ்ருதி.

"என்னம்மா...என்ன ஆச்சு?"
பதற்றமாய் கேட்க,
"மதர்...இந்தக் குழம்புல பல்லி செத்துக்கிடக்கு.ந்..நீங்க ஒண்ணும் சாப்பிடலையே"
"இன்னும் சாப்பிடலம்மா"
சொன்ன மரியா டார்ச் வெளிச்சத்தை சமையலறையை நோக்கி பரப்பிவிட்டு சமையற்கட்டிற்குள் நுழைய, அவரைப் பின்தொடர்ந்தாள் ஸ்ருதி. குழம்புப் பாத்திரத்தில் வெளிச்சத்தை நிரப்பி பார்த்தார்.பல்லி ஒன்று மிதங்கிக்கொண்டிருந்தது.
"மை குட்னஸ்"
      சொல்லி விட்டு ஸ்ருதியைப் பார்த்து சிரித்தார்..பிறகு சொன்னார்.
 "பாத்தியா ஸ்ருதி..நீ ஒருவேளை வராம இருந்திருந்தா..உன்னை இங்கே அனுப்பிய கடவுளுக்கு தான் மொதல்ல நன்றி சொல்லனும்"
      கால் மணி நேரத்தில் அந்த உணவை அப்புறப்படுத்தி பாத்திரங்களை கழுவி வைத்தாள் ஸ்ருதி..திடீரென்று செத்துப்போன மின்சாராம் உயிர்பெற்றது.
"மதர் கொஞ்சம் இருங்க நான் பக்கத்துல இருக்கிற ஹோட்டல்ல டிபன் வாங்கிட்டு வந்துடுறேன்"
            ஸ்ருதி அறைய விட்டு நகர முற்பட,
"வேண்டாம்மா இப்பவே டைம் ஆச்சு.நீ மொதல்ல உன் ரூமுக்கு கிளம்பு.நான் பாத்துக்கிறேன். 
"நான் கிளம்பிட்டா நீங்க தண்ணிய குடிச்சு வயித்த ரொப்பிக்குவீங்க..இருங்க மதர் பத்து நிமிசத்துல வந்துடுறேன்"
      மதரின் பதிலை எதிர்பார்க்காமல் அறையை விட்டு வெளியேறியவள் பத்து நிமிடங்களில் நான்கு இட்லிகளோடு வந்தாள்.
"இட்லியே கிடைச்சிருச்சு மதர்"
"எதுக்கும்மா உனக்கு இவ்வளவு சிரமம்"
"இதுல சிரமம் ஒண்ணுமில்லை மதர்"
        என்றவள் இடது மணிக்கட்டைத் தூக்கி மணிபார்த்துவிட்டு,
"சரி மதர் நான் கிளம்பறேன்"
"சரிம்மா கிளம்பு..வாசல்லயே ஆட்டோ பிடிச்சுக்கோ இனிமேல் நைட் டைம்ல தனியா வர்றதை விட்டுது"
"சரி மதர்"
        சொன்னவள் அவசரமாக இல்லத்தைவிட்டு வெளியேறினாள்.
வாசல் வந்து காத்திருந்து ஆட்டோ பிடித்து ஹாஸ்டல் வந்து சேர பத்தரை மணி ஆகியிருந்தது..அறைக்குள் நுழையும்போது அவளது செல்போன் ஆர்ப்பரித்தது.
             அழைப்பு எண்ணைப் பார்த்து புன்னைகைத்தவள் காதில் வைத்து "ஹலோ" என்றாள்..
"எங்கே இருக்கீங்க ஸ்ருதி"
"ஹாஸ்டல்லதான்..என்ன இந்த நேரத்துல போன்"
"ஒண்ணுமில்லை ஸ்ருதி ஒரு முக்கியமான விசயத்தைப் பத்தி உங்ககிட்ட பேசணும்"
"முக்கியமான விசயமா"
"ஆமா..எனக்காக ரெண்டு மணிநேரம் நாளைக்கு ஒதுக்க முடியுமா"
"நாளைக்கா?ஆபிஸ் இருக்கே"
"பர்மிஸன் போட்டுட்டு வரமுடியுமா"
"வந்தே ஆகனும்ன்னா பர்மிஸன் போடுறேன்"
"தாங்க்ஸ் ஸ்ருதி"
"எங்க மீட் பண்ணலாம்"
"நாளைக்கு காலைல பத்து மணிக்கு கிண்டி சில்ரன்ஸ் பார்க் வந்துடுறீங்களா 
 "சரி வரேன்"
          சொன்னவள் போனை வைத்தாள்.

               காலை பத்துமணி.
              சில்ரன்ஸ் பார்க்கில் காத்திருந்த ஸ்ருதி யோசித்துக் கொண்டே யிருந்தாள்..
'எதற்காக இந்த சந்திப்பு'
'என்ன முக்கியமான விசயம்"
               யோசித்துக் கொண்டிருக்க "ஸ்ருதி"என்ற அழைப்பு அவளது யோசனையை கலைத்தது.அழைப்பைக் கேட்டு திரும்ப,அங்கே ஆறடியில் அழகான மதன் நின்றிருந்தான்.மீசை வைத்த மாதவனை ஞாபகப் படுத்தினான்.அவனைப் பார்த்து புன்னைகைத்தாள்.
"ரொம்ப நேரமா காத்திருக்கிங்களா"
"இல்லை மதன் நானும் இப்பத்தான் வந்தேன்"
"அந்த ஆலமர நிழலுக்கு போயிடலாமா ஸ்ருதி"
"ஓ..யெஸ்"
           இருவரும் நகர்ந்து ஆலமரத்தடியில் போடப்பட்டிருந்த சிமெண்ட் பெஞ்சில் அமர்ந்தனர்.
"என்ன மதன் என்ன முக்கியமான விசயம்"
                   இடது புறமாய் அமர்ந்திருந்த மதனைப் பார்த்து கேட்டாள் ஸ்ருதி.மதன் பேசவில்லை..
"என்ன மதன் ஏதோ முக்கியமான விசயம் பேசனும்ன்னு சொல்லி வரச் சொல்லிட்டு அமைதியா இருக்கீங்க"
       மதன் புன்னகைத்தான்.பெங்களூரை பூர்வீகமாக கொண்டவன்.சென்னையில் தனியாய் தங்கியிருப்பவன் தற்போது ஒரு தனியார் நிறுவனத்தில் நல்ல உத்தியோகம் பார்ப்பவன்.அந்த நிறுவனத்துக்கு நன்கொடை வசூலிக்க ஸ்ருதி ஒரு முறை சென்றிருந்த போது ஏற்பட்ட பழக்கம் தான் இன்று இவர்களை பூங்கா வரை கொண்டு வந்திருக்கிறது..
"மதன் ..என்ன மௌன விரதம் இருக்கீங்களா.."
"அப்படியெல்லால் ஒண்ணுமில்லை ஸ்ருதி"
"பின்னே பேசுங்க"
"நீங்க யாரையாவது லவ் பண்றீங்கள ஸ்ருதி"
           பட்டென்று கேட்டான்.சற்றும் எதிர்பார்க்காத ஸ்ருதி சுதாரித்துக்கொண்டு சொன்னாள்.
"இ.இல்லை மதன்"
'"------------------------------------------------"
               ஸ்ருதி சொல்ல நீண்டதொரு பெருமூச்சை விட்டான் மதன்.
"என்ன மதன் யோசிக்கிறீங்க"
"ஸ்ருதி..காதலைப் பத்தி என்ன நினைக்கிறீங்க"
"ம்..காதல்..காதல்.."
            என்றபடி மதனைப் பார்த்தாள்.
"சொல்லுங்க ஸ்ருதி"
"காதலுங்கிறது சிலருக்கு இனிப்பு,சிலருக்கு கசப்பு.இன்னும் சொல்லனும்ன்னா,
சிலருக்கு காதலால வாழ்வு கிடைக்கும் சிலருக்கு சாவுதான் கிடைக்கும்" 
         சொன்ன ஸ்ருதியையே பார்த்த மதன்,
"காதலால உங்களுக்கு என்ன கிடைக்கும்ன்னு எதிர்பாக்குறீங்க ஸ்ருதி"
"ப்ளீஸ் மதன்.. சுத்தி வளைச்சு பேசாதீங்க..எதுவா இருந்தாலும் நேராவே சொல்லலாம்"
 "----------------------------------------------------"
            மதன் சொல்ல ஸ்ருதியின் முகம் லேசாய் சிவக்க ஆரம்பித்தது..
------------------------------------------------------------------------------------------------------------ 
                                                                                                     (முகம் தொடர்ந்து சிவக்கும்)

ஐந்தாவது அத்தியாயம் வாசிக்க இங்கே செல்லுங்கள்.
----------------------------------------------------------------------------------------------------------------------------------
இந்த அத்தியாயத்தை தரவிறக்கம் செய்ய கீழே உள்ள இணைப்பில் செல்லவும்.
-----------------------------------------------------------------------------------------------------------------------------------
Download As PDF
Share this article :
புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

35 comments:

 1. தோழர் கதாபாத்திரங்கள் அதிகரிக்க அதிகரிக்க மனமும் திக்திக் திகதிக் ஆகுது....

  ReplyDelete
 2. தளத்தின் புது சட்டை நல்லா இருக்கு....

  ஆனால் கருப்பு வண்ணம் அதிகமாக ஆக்கிரமிக்கிறதே... உங்களுக்கு பிடித்த வண்ணமா?

  ReplyDelete
 3. நேற்று எதிர்பார்த்தது.
  ஓ.கே.
  இன்று படித்தாகிவிட்டது.

  ReplyDelete
 4. செம சுவாரஸ்யம். தொடர்கிறேன். போன தொடரையும் வாசித்தாயிற்று.

  தமஓ 4.

  ReplyDelete
 5. சென்னை பித்தன்..

  நன்றி ஐயா..

  ReplyDelete
 6. தமிழ்வாசி பிரகாஷ்..

  அப்படியா தோழர்..
  தளம் அணிந்திருக்கும் புதுச்சட்டை பிடித்திருக்கிறதா?
  நானும் கருப்புச் சட்டைக்காரன் என்பதால் தளத்திற்க்கும் அந்நிறத்திலேயே அணிவித்தேன்.

  ReplyDelete
 7. சென்ற பகுதியைத் தவறவிட்டதால் அதையும் படித்துவிட்டு இதைப் படித்‌தேன். டபுள் ட்ராக்கில் வெகு சுவாரஸ்யமாய் நகர்கிறது கதை. அடுத்த பகுதிக்கு இன்னும் ஆறுநாள் காத்திருக்கணுமான்னு எனக்குத் தோணுறது உங்களின் வெற்றி! வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 8. சொல்லிடங்கள சொல்லலியா காத்திருக்கிறோம்

  ReplyDelete
 9. கொஞ்சம் தாமதமாகிவிட்டது மன்னிக்கவேண்டும் பாஸ்.
  கதையில் மேலும் மேலும் சுவாரஸ்யம் அதிகரிக்கின்றது.அடுத்த பகுதிக்கு வெயிட்டிங்

  ReplyDelete
 10. சுவாரசியமான பதிவுக்கு என் வாழ்த்துகள்.

  ReplyDelete
 11. முன்னைய பகுதிகளை இப்போதுதான் படிக்கிறேன்.நல்லாயிருக்கு

  ReplyDelete
 12. //மதன் சொல்ல ஸ்ருதியின் முகம் லேசாய் சிவக்க ஆரம்பித்தது//
  ஸ்ருதியின் முகம் சிவந்தது கோபத்தாலா அல்லது வெட்கத்தாலா என அறிய ஆவலுடன் காத்திருக்கிறேன்.

  ReplyDelete
 13. கணேஷ்..

  சென்ற அத்தியாயம் தாங்கள் வாசிக்கவில்லையா?சரி இப்போது வாசித்துவிட்டீகள்..மகிழ்ச்சி.தங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி..

  ReplyDelete
 14. மதன் என்ன சொன்னான்???அறியக் காத்திருக்கிறேன் ஆவலுடன்.......

  ReplyDelete
 15. சசிகலா..

  வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..

  ReplyDelete
 16. k.s.Rajh..

  வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..

  ReplyDelete
 17. தனசேகரன்..

  வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..

  ReplyDelete
 18. ரியாஸ்..
  படித்துவிட்டீகளா.. நன்றி..

  ReplyDelete
 19. நடனசபாபதி..

  அப்படியா ஐயா மகிழ்ச்சி.
  வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..

  ReplyDelete
 20. சி.பி..
  மதன் என்ன சொன்னான்???அறியக் காத்திருக்கிறேன் ஆவலுடன்.......

  விடை 6 வது அத்தியாயத்தில்..
  வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..

  ReplyDelete
 21. ஆவலுடன் காத்திருக்கிறேன்.

  ReplyDelete
 22. நானும் வாசிக்கிறேன் மதுமதி !

  ReplyDelete
 23. நல்லாயிருக்கு

  ReplyDelete
 24. மதி சகோ ,
  உங்களுக்காக ஒரு இனிய ஆச்சர்யம்
  என் வலைப்பூ 'நட்புக்காக' இடுகையில்
  காத்திருக்கிறது.

  ReplyDelete
 25. veedu..

  நன்றி தோழர்..

  ReplyDelete
 26. ஹேமா..

  மகிழ்ச்சி சகோ..

  ReplyDelete
 27. விக்கி..
  மாலதி..நன்றி..

  ReplyDelete
 28. ஸ்ரவாணி..

  கண்டேன் மழிந்தேன்..

  ReplyDelete
 29. தொடர்கதை 4 பாகமும் படித்தேன். ரொம்ப நல்லா சுவாரசியமா இருக்கு. நன்றி. தொடருங்கள் மதுமதி சார்.

  ReplyDelete
 30. வருகைக்கும் வாசித்ததற்கும் மிக்க நன்றி தோழர்..மகிழ்ச்சி..

  ReplyDelete
 31. சுவாரசியமாக இருக்கிறது.

  ReplyDelete
 32. இமா..

  அப்படியா சகோதரி..மகிழ்ச்சி..

  ReplyDelete

கருத்துரைப் பெட்டியில் இடும் கருத்துகளுக்கு கருதிட்டவரே பொறுப்பாவர்..

Search This Blog

Email Subscribers

புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

Followers

Popular Posts

Google+

Tips Tricks And Tutorials

TNPSC - முக்கிய வினா-விடைகள்

எழுதிய மாத நாவல்கள் சில

 
Support :
Written by Madhumathi Published by www.madhumathi.com