புது வரவு :
Home » » ஈரோட்டு சூரியன்(அம்மை அப்பன்)

ஈரோட்டு சூரியன்(அம்மை அப்பன்)


இன்றுமுதல்

பகுத்தறிவு பகலவன் வெண்தாடி வேந்தன் 
ஈரோடு ராமசாமி பெரியாரின் வாழ்க்கை வரலாறு எனது நடையில்...

            ஈரோட்டு சூரியன் 
                                                                (புதன் தோறும்)



                    மானமும் அறிவும் மனிதனுக்கு அழகு
ஈ.வெ.ராமசாமி பெரியார்
(பிறப்பு:17.09.1879-இறப்பு:24.12.1973)
அம்மை அப்பன்

வேங்கட நாயக்கர்
நல்ல காளை;
செய்ததென்னவோ
தச்சனுக்கு கையாள் வேலை;
சின்னத்தாயம்மைக்கு
கல் சுமக்கும் வேலை;
அம்மைக்கு ஓரணா
அவருக்கு ஈரணா
இதுதான் கூலி;
இருவரும் யோசித்தனர்
ஓர் நாழி;

சேர்த்த செல்வத்தில்
மாட்டுவண்டி வாங்கினர்..
மாடுகள் வாங்கி பூட்டினர்;
வாடகைக்கு ஓட்டினர்;

வருவாய் உயர்ந்தது..
இருவாய் மலர்ந்தது;
இன்னுமோர் விடியல்
புலர்ந்தது;

மாடுகளை விற்றனர்;
மளிகைக் கடை பெற்றனர்;
ஆள் வைத்து நெல் குத்தி
அரிசிக் கடை ஆரம்பம்;
அக்கடை கொடுத்தது
பேரின்பம்;

பெரியாரின் பெற்றோர்
(வெங்கட நாயக்கர்-சின்னத்தாயம்மை)

உழைத்ததை
உள்ளூர் வாரச்சந்தைக்கு
கொண்டுபோய் சேர்க்க
உழைப்பு இவர்களை
செல்வத்திடம்
கொண்டு போய் சேர்த்தது;

தாயம்மை
சுத்தமாக பொருளைச் செய்தது
நாயக்கர்
மொத்தமாக விற்பனை செய்தது
மளிகைக் கடையை
மண்டிக்கடையாக்கியது..

தினக்கூலி
வண்டிக்காரனாகி
மளிகைக் கடைத் திறந்து
பின்னதைத் துறந்து
மண்டிக்கடைத் தொடங்க,
செல்வம் நீராய் ஊறின;
இருவர் தம் வாழ்க்கை
மாறின;

உழைப்பாலே
உயர்ந்தோம் என்று
உணராமல்
திருமாலே உயர்த்தினார்
என்றுதான் நம்பினர்..

பெரியாரின் தந்தை
(வெங்கட நாயக்கர்)
வைணவ பக்தி
இருவரையும் ஆட்கொண்டது..
திருமாலிடம் உருகினர்;
பக்தியைப் பருகினர்;

இருவருக்கும் எழுந்தது
அறம் புரியும் எண்ணம்;
தினம் புரியும் வண்ணம்;

திருப் பணியெனக் கருதி
ஒரு பணியென செய்தனர்..

தாயம்மை தாயானார்..
குழந்தைகள்
இரண்டு பிறந்தன;
இடைவெளி விட்டு
இரண்டும் இறந்தன;

இன்பத்தை
தொலைத்தனர்;
துன்பத்தில்
திளைத்தனர்;

பத்துவருட காலம்
வாரிசுக்கான வாசல்
திறந்திடவில்லை;
மனமது வருத்தப்பட
மறந்திடவில்லை;

இருவர் தம் மனதில்
எழுந்தன துயரம்;அது
ஏழு பனை மர உயரம்;

பெரியாரின் தாயார்
சின்னத்தாயம்மை

பாகவதர்களுக்கு
பணிவிடை செய்தும் பலனில்லை;
ராமாயணங்கேட்டும் பயனில்லை;

திருமாலை
திருநாளாய்க் கொண்டாடியும்
தினமும் விரதமிருந்தும்
தாயம்மை தாயாகவில்லை..
இறைவனிடம் வேண்டினால்
குழந்தை பிறக்கும் என்பது
மூடத்தனமென்று எடுத்துச் சொல்ல
அப்போது அங்கே யாருமில்லை..

தாயம்மை என்பது
பேருக்கு மட்டும்தானா..
உண்மையாகாதா..
ஏக்கம் அவரை
அரவணைத்தது..
துன்பம் துணக்கு வந்தது..

அடுத்த ஆண்டிலேயே
அழகிய ஆண் குழந்தையை
தாயம்மை ஈன்றெடுக்க
ஈரோடே இனித்துப் போனது;
அக் குழந்தையின் பெயர்
கிருஷ்ணசாமி என்று ஆனது;

---------------------------------------
                                   (ஈரோட்டு சூரியன் உதிக்கும்)


வாசித்து விட்டீர்களா..உயிரைத் தின்று பசியாறு..க்ரைம்(அத்தியாயம்-1) க்ரைக்..க்ரைம்..க்ரைம்

Download As PDF
Share this article :
புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

30 comments:

  1. பெரியாரின் வரலாற்றை அறிய நல்ல வாய்ப்பு தோழரே....
    தொடருங்கள்.... தொடர்கிறேன்...

    ReplyDelete
  2. பெரியாரின் வரலாறும், அவர்தம் கருத்துக்களையும் படித்து வியந்திருக்கிறேன் கவிஞரே... ஆனால் உங்களின் கவித்துவமான வரிகளில், எளிய, இனிய தமிழில் படிக்கையில் இன்னும் இனிப்பாக இருக்கிறது. தவறாமல் படிக்கிறேன். நல்லதொரு விஷயத்தைக் கையிலெடுத்திருக்கும் தங்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  3. அருமையான, பயனுள்ள பதிவு.
    பெரியார் இல்லையேல் தமிழகத்தில் விழிப்புணர்வு வந்திருக்காது.
    பெரியார் ஒரு மாமனிதர்.
    உங்களுக்கு எங்களது மனப்பூர்வ வாழ்த்துகள்.

    ReplyDelete
  4. /தமிழ் வாசி/
    முதல் வருகைக்கும் தொடர விரும்பியதற்கும் நன்றி..

    ReplyDelete
  5. /கணேஷ்/

    ஆமாம் ஐயா.. பெரியாரின் கருத்துகள் ஆன்மீக வாதிகளும் ஒத்துக்கொள்ளும்படிதான் இருக்கும்..வியக்கும்படியான கருத்துகள்தான் அவரின் கருத்துகள்..நீங்களும் வியந்திருக்கிறீர்கள்..மகிழ்ச்சி..உங்களது வாழ்த்துக்கு மிக்க நன்றி..

    ReplyDelete
  6. /ரத்தனவேல்/
    நிச்சயம் ஐயா பெரியார் இல்லையேல் தமிழகத்தில் விழிப்புணர்வு வந்திருக்காது என்பதை யாரும் மறுக்க முடியாது..வாழ்த்துக்கும் கருத்துக்கும் நன்றி..

    ReplyDelete
  7. சிறப்பான முயற்சி தொடருங்கள் தொடருகின்றேன் எனக்கும் பெரியாரை பிடிக்கும்

    ReplyDelete
  8. அழகு..கவிதை வடிவில் பெரியவரின் வரலாறு - தொடரட்டும் வாழ்த்துக்கள் - காத்திருக்கிறேன் அடுத்த உதயத்துக்கு

    ReplyDelete
  9. மாப்ள கவிதை வழி பெரியாரின் வரலாரை சொல்வது அழ்கா இருக்குய்யா..தொடர்கிரேன்!

    ReplyDelete
  10. மது,

    ஈரோட்டுச் சூரியன் வரலாறு உங்கள் கவித்துளியால் இனிக்கிறது.

    வளரட்டும் விரைவாய்.

    ReplyDelete
  11. வருகைக்கும் கருத்துக்கும் விருப்பத்திற்கும் நன்றி..

    / K.s.s.Rajh/மனசாட்சி/தனசேகரன்/விக்கி/சத்ரியன்/

    ReplyDelete
  12. வைக்கம் வீரர் அவர்
    நற் செயலில் சூரர்
    சமூகத்தை உளி கொண்டு
    செதுக்கிய மொழி பிரியர்...
    முரட்டுக் கிழவர் பொய்
    புரட்டு செய்வோருக்கு பகைவர்...
    அந்த ஈரோட்டுச் சிங்கம்
    மனிதநேயம் உள்ள எவனும்
    மறக்க முடியாத நல்மனிதர்.

    அவரின் வரலாற்றைப் புத்துக்கவிதையில்
    வடிக்கும் உங்களின் பணி அருமை,
    பாராட்டுக்களும் நண்பரே!

    ReplyDelete
  13. ஈரோட்டு பகுத்தறிவு சூரியன் கதையை,
    கவிதை நடையில் எங்கள் ஈரோட்டு கவிஞர்,எழுதுவதுதான் சிறப்பு,
    தொடருங்கள் தொடர்கிறோம்.....

    ReplyDelete
  14. /தமிழ் விரும்பி/

    ஆமாம் தோழர் யாரும் மறக்கவும் மறுக்கவும் முடியாத மாமனிதர்தான் பெரியார்..வருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றி..

    ReplyDelete
  15. /வீடு/

    ஆமாம் தோழர் ஐயா பிறந்த மண்ணில் நாமும் பிறந்தோம் என்பதை நினைத்து பெருமிதம் கொள்வோம்..அவரது வாழ்வியலை சொல்ல வேண்டுமென்பது நீண்ட நாளைய ஆசை..
    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..

    ReplyDelete
  16. கவிதை வழியாக பெரியார் வாழ்க்கையை சொல்வது அழகு, அருமையான மாற்று சிந்தனை வாழ்த்துக்கள்...!!!

    ReplyDelete
  17. கவிதை வரிகளில் பெரியார் , தொடருங்கள் தொடர்கிறேன்...........

    ReplyDelete
  18. எனக்கும் பெரியாரைப் பற்றி அறிய ஆவல் நிறைய உண்டு தொடருங்கள் ஆவலோடு காத்திருக்கிறேன் .

    ReplyDelete
  19. எளிய நடை,
    கவிதைக்குள் கதை.
    அடுத்ததை எதிர்பார்க்கிறோம்.

    ReplyDelete
  20. எனக்கும் பிடித்த வரலாற்றுத் தொடர்.அடுத்த பதிவுக்காய் ஆவல் மதுமதி !

    ReplyDelete
  21. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..
    /சி.பி/நாஞ்சில் மனோ/எனக்கு பிடித்தவை/சசிகலா/சுவடுகள்/ஹேமா/

    ReplyDelete
  22. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..
    /சி.பி/நாஞ்சில் மனோ/எனக்கு பிடித்தவை/சசிகலா/சுவடுகள்/ஹேமா/

    ReplyDelete
  23. Theriyatha arputha unmaigal Pudukavithaiyai...
    Arumai. Thodarkiren.

    TM 11.

    ReplyDelete
  24. அழகிய நடையில்
    அய்யாவின் வரலாறு
    அருமை,அருமை,
    மிகமிக அருமை.
    தொடருங்கள் ...
    தொடருங்கள் ...
    தொடர்கிறேன்,
    தொடர்கிறேன்.

    ReplyDelete
  25. அய்யாவப்பத்தி நெறைய எழுதுங்க பாஸ்....அய்யா ,சாக்ரடீஸ் போல தத்துவ ஞானி கிடையாது.அவர் கடவுள் இல்லை என்று சொன்னதுக்கும் அய்யா சொன்னதுக்கும் நிறைய வேறுபாடு உள்ளது.இங்குள்ள தீண்டாமை,மூட நம்பிக்கையில் வெறுத்து போயிதான் இதற்கெல்லாம் காரணம் கடவுளும் ,சம்பிரதாயமும் தான் என்று கொதித்தெழுந்தார்.எந்த கால கட்டத்தில் இவ்வாறு சொன்னார் என்பதையும் எழுதுங்கள்...

    ReplyDelete
    Replies
    1. நிச்சயம் தோழர்..தாங்கள் குறிப்பிட்டுச் சொன்னதை குறிப்பிடத் தவறமாட்டேன.தங்கள் வரவுக்கு நன்றி.

      Delete
  26. முதலில் கவிஞர் மதுமதிக்குப் பாராட்டுகள்;வாழ்த்துகள்.தலைவர் பெரியாரின் வாழ்க்கை வரலாற்றை பலர் மரபுக்கவிதையில் வடித்துள்ளனர்.புதுக்கவிதையில் எழுத்தாளர் பிரபஞ்சன்`ஈரோடு தமிழர் உயிரோடு’எனும் தலைப்பில் எழுதினார்.தாங்களும் புதுக்கவிதையில் அந்தப் புரட்சிக்கரரை வடித்துள்ளீர்கள்.ஒரிரு வார்த்தைகளில் அமைந்த பாக்கள் அருமை;மரபில் வரும் எதுகை மோனையும் உங்களுக்கு இயல்பாய் வருகிறது.படிக்கப் படிக்க இனிக்கிறது.தொடர்ந்து படிக்க மனம் துடிக்கிறது.பல நூற்றாண்டு அடிமைத் தனத்தை அடியோடு புரட்டிப்போட்ட தலைவர் உலகில் தந்தை பெரியார் மட்டுமே.எல்லா எழுத்து,ஊடக வழிகளிலும் பெரியார் வாழ்க்கை,தொண்டு தலைமுறை தலைமுறையாக தமிழனுக்குச் சொல்லப்படவேண்டும்.அதில் ஓர் கவிப்பணியாக உங்களின் பங்களிப்பைப் பாராட்டுகிறேன்.தொடர்ந்து படிப்பேன்.நண்பர்களுக்குப் பரிந்துரைக்கிறேன்.

    இப்பதிவில் ஒரு திருத்தம்:தந்தை பெரியாரின் தந்தையார் பெயர் வெங்கட்ட நாயக்கர்.முதல் வரியில் வேங்கட நாயக்கர் என்றும்,ஒளிப்படங்களில் வெங்கட நாயக்கர் என்றும் உள்ளது.

    ReplyDelete
    Replies
    1. தங்களின் முதல் வருகை இது என்று நினைக்கிறேன்.. நன்றி.ஆம்..தாங்கள் சொன்னதைப் போலவே பெரியாரின் சமூகத்தொண்டை தலைமுறை தலைமுறையாக தமிழனுக்குச் சொல்லப்படவேண்டும்.அந்நோக்கத்தை மனதில் வைத்தே நானும் இதை எழுத ஆரம்பித்தேன்.என்னைப் பாராட்டியதோடு விட்டுவிடாமல் என்னை ஊக்கப் படுத்தியதற்கும் நன்றி..தாங்கள் சொன்ன திருத்தத்தை செய்துவிட்டேன்..நன்றி.

      Delete
  27. வாசிப்பதற்கும் நேசிப்பதர்க்கும் அருமையான எழுத்துக்கள் ...உங்கள் முயற்சி அருமை

    ReplyDelete

கருத்துரைப் பெட்டியில் இடும் கருத்துகளுக்கு கருதிட்டவரே பொறுப்பாவர்..

Search This Blog

Email Subscribers

புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

Followers

Popular Posts

Google+

Tips Tricks And Tutorials

TNPSC - முக்கிய வினா-விடைகள்

எழுதிய மாத நாவல்கள் சில

 
Support :
Written by Madhumathi Published by www.madhumathi.com